Wednesday, 29 March 2017

பங்குனி உத்திரம்!

யுகாதி பண்டிகை!

யுகாதி சுலோகம்!

யுகாதி பண்டிகை அன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து ஸம்பத்தும் கிட்டும்.

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச | 
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||

யுகாதி கொண்டாட்டம்! 

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜோதிட ரீதியாக குரு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் அதிபதியாகவும் செவ்வாய் தெலுங்கு தமிழ் மராட்டியம் ஆகிய மொழிகளின் அதிபதியாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

தெலுங்கு மக்கள் தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் ஆந்திர மக்கள் செவ்வாயின் அதிக்கம் நிறைந்து காணப்படுகின்றனர். ஒல்லியான தேகம், முரட்டுதனம் கடின உழைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படுவது, அதிக காரம் மிகுந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவது செவ்வாயின் காரக குணங்களாகும்.

கன்னட மக்கள் அதேநேரம் கன்னடம் பேசுபவர்களும் கன்னடர்களும் சாத்வீகமானவர்களாகவும் இனிப்பு மற்றும் நெய் சேர்த்த காரம் குறைந்த உணவு உண்பவர்களாகவும் பருத்த தேகமுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

செவ்வாய் பகவான் தெலுங்கு வருடப்பிறப்பு எந்த தினத்தில் வருகிறதோ அந்த தினத்தின் கிரகம் அந்த வருடத்தின் ராஜாவாக அமைவார். 

அதே போன்று சித்திரை மாதம் பிறக்கும் நாளின் அதிபதியே அந்த வருடத்தின் மந்திரியாகும். 

இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.


உகாதி பச்சடி உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.

யுகாதி சுலோகம்!

யுகாதி பண்டிகை அன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து ஸம்பத்தும் கிட்டும்.

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச | 
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||

பஞ்சாங்கம் படித்தல்!

யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது. திருமலையில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

பங்குனி சௌபாக்ய கௌரி விரதம்!


லக்ஷ்மி பஞ்சமி!


பங்குனி சந்தான சப்தமி!


பெளமசதுர்த்தி!

சதுர்த்தி திதியும் செவ்வாய்கிழமையும் ஒன்றுசேரும் நாளுக்கு  பெளமசதுர்த்தி  என்று பெயர்

இன்று ஒரே படத்தில்  இருக்கும்  ஶ்ரீகணபதிமுருகனை  பூஜித்து  கொழுக்கட்டை யும்துவரம்பருப்பு  சுண்டலும்  நிவேதனம்  செய்துஸ்தோத்ரம்  சொல்லி  ப்ரார்தித்து  கொள்வதால் தீராத கடனும் தீரும்

கடன்  கொடுத்தவர்களால்  ஏற்படும்  தொல்லை  நீங்கும்.

அசோகாஷ்டமி!


ஸ்ரீ ராம நவமி!

காரடையான் நோன்பு!


முன்னோர் ஆசி தரும் கருடசேவை!

கருட சேவை வழிபாடு மிகுந்தபுண்ணியத்தைத் தரவல்லது. எனவேதான் பிரம்மோற்சவ நாட்களில் கருட சேவையை தரிசனம் செய்யவே அதிக பக்தர்கள் திரள்வார்கள். 

கருட சேவையை பக்தர்கள் மட்டுமின்றி, மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலை விட்டு நீங்கும் எல்லா ஆன்மாக்களும் இறைவன் காலடி நிழலில் இளைப்பாறும் பாக்கியத்தை எளிதில் பெற்று விட முடியாது.

கர்ம வினைகள் காரணமாக பல ஆத்மாக்களால் மோட்சத்தை எட்ட இயலாது. அத்தகைய ஆன்மாக்கள் தங்கள் துன்பங்கள், துயரங்களில் இருந்து விடுபட கருட சேவையை கண்டால் பலன் கிடைக்கும். எனவே ஆத்மாக்கள் கருட சேவை தினத்தன்று பூலோகம் வர கருடன், பெருமாளிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.

இந்த சலுகையை பயன்படுத்தி பித்ருக்கள், கருட சேவையை தரிசனம் செய்ய வருவார்கள். அப்போது அவர்கள் கருட சேவையைக் காண தம் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள் யாராவது வந்து இருக்கிறார்களா என்று தேடுவார்கள்.

நாம் கருட சேவையை காண சென்றிருந்தால் நம் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். மனம் குளிர நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள்.

எனவே கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் தரும் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியையும் நாம் எளிதில் பெற முடியும்.





மங்களம் தரும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் போற்றி!

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி 1
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே பொற்றி
ஓம் அரசிளங் குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆல்வாய்க் கரசியே போற்றி 10
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத் தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40
ஓம் கிளியெந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற் கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தாய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி 60
ஓம் தமிழர் குலச் சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடை யம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி யம்மையே போற்றி 70
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80
ஓம் பவள வாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டி மாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன் மயிலம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90
ஓம் மலயத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர் கோன் மகளே போற்றி
ஓம் மீனாக்ஷி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ் மொழி யம்மையே போற்றி
ஓம் வடிவழ கம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி



ஜ்வாலாமாலினி நித்யா! 14

ஜ்வாலாமாலினி நித்யா இந்த நித்யாதேவி பிரளய கால அக்னியைப் போன்ற தேக காந்தியும், புன்முறுவல் தவழும் ஆறு திருமுகங்களும், பன்னிரெண்டு திருக்கரங்களும் கொண்டருள்பவள். தன் திருக்கரங்களில் முறையே பாசம், கத்தி, வில், கதை, சூலம், வரத முத்திரை, அங்குசம், கேடயம், பாணம், அக்னி, மழுவோடு அபய முத்திரையையும் தரித்திருப்பவள். 

ஆற்றலின் வடிவமாகத் திகழ்பவள். பத்மம் எனும் தாமரையின் மேல் நின்ற திருக்கோலம் கொண்டவள். அன்னையின் திருமுடிகளில் ஒளிமிக்க ரத்னாபரணங்கள் இழைத்த மகுடங்கள் மின்னுகின்றன. செவிகளில் தோடுகளும், கழுத்தில் ரத்னங்கள் இழைக்கப்பட்ட பளிச்சிடும் பதக்கங்கள், காசு மாலை, தோள்வளை, கை வளையல்கள், பாதங்களில் தண்டை, கொலுசு என ஸர்வாபரணபூஷிதையாய் பேரழகு பூத்துக் குலுங்கும் வடிவினளாகத் திகழ்கிறாள் இந்த நித்யா தேவி.

அனைத்து உயிர்களுக்கும் ஆதார சக்தியாக ‘‘ஜ்வாலா’’ பீடத்தில் ஸித்திதா எனும் மாபெரும் சக்தியாகத் திகழ்ந்து அம்பிகையை ஒளி வடிவில் கண்டு மகிழும் ஞானிகளுக்கும், யம தர்மராஜனின் பாசக்கயிற்றில் சிக்கி ஜீவனை இழுக்கும்போது அன்னையின் பேரொளியில் கலந்திட விரும்பும் அன்பர்களுக்கும் அருள்பவள்.

இந்த அம்பிகையின் அருள் எனும் மழையால் நம் துயரங்களெல்லாம் தீயிலிட்ட பஞ்சு போலாகும். நம் வினைகளையெல்லாம் தீர்க்கும் வித்தகி. வேண்டும் வரங்களை வாரிவாரி வழங்கி நம்மை ஆட்கொள்ளும் நாயகி. வரப்ரசாதி. முறையான வழியில் நிறைந்த வருவாயும் லாபமும் அளிக்கக் கூடியவள் இத்தேவி. 

பகை என்று ஏதும் இல்லாததாக்கி அனைவரையும் வல்லமை உடையவராக்கும் சக்தி படைத்தவள். தன்னை நிகர்த்த சக்தி கூட்டங்கள் சூழ தன்னைப் பணிந்த அனைவரையும் இன்புற்று வாழ வரம் தரும் தேவியின் பாத கமலங்களை சரணடைவோம். பண்டாசுரனுடன் லலிதா தேவி நடத்திய யுத்தத்தில் இந்த நித்யா தேவி 100 யோஜனை விஸ்தாரம் நீளமும், 30 யோஜனை விஸ்தாரம் அகலமும் 30 யோஜனை விஸ்தாரம் உயரமும் உள்ள ஒரு நெருப்புக் கோட்டையை சிருஷ்டித்த வல்லமை மிக்கவள். 

அவ்வளவு வல்லமை மிக்க தேவியின் கருணை பக்தர்களுக்காக  எதைத்தான் செய்யாது?வழிபடு பலன்இந்த அம்பிகையைத் துதிப்போர்க்கு தனாகர்ஷணமும், ஸர்வ வசியமும், ஸ்த்ரீ புருஷ சேர்க்கையும், துக்க நாசனமும் சித்திக்கும். தாக்க வரும் தீமைகளும், விரோதங்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். சகல தேவதா ப்ரீதி சித்திக்கும்.

ஜ்வாலாமாலினி காயத்ரி
ஓம் ஜ்வாலாமாலின்யை 
வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

மூலமந்த்ரம்
ஓம் நமோ பகவதி ஜ்வாலாமாலினி
தேவ தேவி ஸர்வ பூத
ஸம்ஹாரகாரிகே ஜாதவேதஸி ஜ்வலந்தி
ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல
ப்ரஜ்வல ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ரரரரர
ரர ஜ்வாலாமாலினி ஹும்
பட் ஸ்வாஹா. 

த்யான ஸ்லோகங்கள் 
ஜ்வல ஜ்வல நஸம்காசாம் 
மாணிக்ய முகுடோஜ்வலாம்
ஷட் வக்த்ராம் த்வாதச புஜாம் 
ஸர்வாபரண பூஷிதாம்

பாசாங்குஸௌ கேட கட்கௌ 
சாப பாண கதா தரௌ
குவவந்நிவ சாபிநீ ததாநம் கரபங்கஜை:
ஸ்வஸமாநாபி ரபித: சக்திபி: 
பரிவாரிதாம்

சாருஸ்மித லஸத்வக்த்ர ஸரோஜாம்
 த்ரீஷணாத்விதாம்
த்யாத்வைவ முபசாரைஸ் 
தைரர்ச்சயேத்தாம்து நித்ய ச:
பாலாக்ஷாப்ஜ பவேந்த்ர 

விஷ்ணுநமிதாம் பட்கார 
வர்ணாத்மிகாம்
மாலாம் பக்த ஜனார்த்தி மங்களகராம் பாக்யப்ரதாம் ச்யாமளாம்
மூலாதாரகதாம், த்ரிலோக ஜனனீம் முக்திப்ரதான
 வரதாம்

ஜ்வாலாமாலினீம் நமாமி சிரஸாம் ஜாம்பூனதாபாம் சிவாம்.
த்யாயேத் தேவீம் மஹாநித்யாம் ஸ்வர்ணாபரண பூஷிதாம்
உத்யத் வித்யுல்லதா காந்தி ஸ்வணீம்ஸுக விராஜிதாம்
மஹா ஸிம்ஹாஸன ப்ரௌடாம்
 ஜ்வாலாமாலாம் கராவினீம்
அரிஸங்கௌ கட்க கைடௌத்ரி
ஸூலம் டமரும் ததா

பானபாத்ரம் ச வரதம் தததீ ஸத்ரு 
நாஸினீம்.
உத்யத் வித்யுல்லதா காந்தி 
ஸர்வாபரண பூஷிதாம்
மஹாஸிம்ஹாஸன ப்ரௌடாம்

 ஜ்வாலாமாலாம் கராகிணீம்
அரிஸங்கௌ கட்க கேடௌ 
த்ரிஸூலம் டமரும் ததா
பானபாத்ரம் ச வரதம் தததீம் 
ஸம்ஸ்மரேத் யஜேத்
யஸ்ய: ஸ்மரண மாத்ரேண
 பாலயந்தே பயாபஹ:

ஸுக்த ஜ்வாலாமாலினி 
நித்யா ஸ்லோகம்
 ஸுக்த ஸம்ஸ்துதாம் ஓளகார ப்ரக்ருதிக, அங்கதா கலாத்மிகாம்
ஜ்வாலாமாலினி நித்யா ஸ்வரூபாம் ஸர்வ ஸௌபாக்ய தாயக
சக்ர ஸ்வாமினீ ஆத்மாகர்ஷிணீ ஸக்தி ஸ்வரூபாம்

 வாஸுதேவ வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வமங்கள
தேவதாம் ஸாம்ராஜ்ய லக்ஷ்மி 
ஸ்வரூப ஜ்வாலாமாலினி
நித்யாயை நமஹ 

வழிபட வேண்டிய திதிகள்
ஸுக்ல பக்ஷ சதுர்த்தசி / க்ருஷ்ண 
பக்ஷ த்விதியை
(சதுர்த்தசி திதி ரூப ஜ்வாலாமாலினி நித்யாயை நமஹ)
நைவேத்தியம்

சத்துமாவு
பூஜைக்கான புஷ்பங்கள்
செவ்வரளி
திதிதான பலன்
சத்துமாவை தேவிக்கு நிவேதித்து தானம் அளித்தால் நோய் அகலும். சிவ கடாக்ஷம் கிட்டும்.
பஞ்சோபசார பூஜை

ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை கந்தம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை தூபம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை தீபம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நமஹ

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள் சற்றே முன்கோபம் உடையவர்கள். மனோ வசியமுடையவர்கள். பெரும்பாலும் நாத்திகர்கள். இயல்பாகவே நல்ல தோற்றப் பொலிவைக் கொண்டிருப்பவர்கள். தங்களுடைய செயல்கள் எல்லாவற்றையும் வெற்றிகரமாக நடத்திக் கொள்ளும் திறமையை இயல்பாகப் பெற்றிருப்பர். தங்களை எதிர்ப்பவர்களையும் பகைப்பவர்களையும் வென்று தம்முடைய ஆற்றலை எளிதாக வெளிப்படுத்தும் வெற்றியாளர்களாகத் திகழ்பவர்கள். 

யந்திரம் வரையும் முறைசந்தன குங்குமக் கலவையால் எட்டிதழ்கள், நான்கு வாயில்களுடைய இரு சதுரங்கள் கொண்ட யந்திரம் வரையவும். முக்கோண மூலைகளில் இச்சா, க்ரியா, ஞான சக்திகள் பூஜிக்கப்படவேண்டும். ஷட்கோண மூலைகளில் டாகினி, காகினி முதலிய ஆறாதார அம்பிகைகளையும், அஷ்ட கோணங்களில் தேவியின் சக்திகளான கஸ்மாரா, விஸ்வகபாலா, லோலாக்ஷீ, லோலஜீவிகா, ஸர்வபக்ஷா, ஸஹஸ்ராக்ஷீ, நி:ஸங்கா, ம்ஹ்ருதிப்ரியா, போன்ற சக்திகளையும் எட்டு தளங்களில் அசிந்த்யா, அப்ரமேயா, பூர்ணரூபா, துராஸதா, ஸர்வகா, ஸித்திரூபா, பாவனா, ஏகரூபிணி போன்ற சக்திகளையும் பக்தியுடன் த்யானித்து பூஜிக்க வேண்டும். 

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ  சதுர்த்தசி ஜ்வாலாமாலினி நித்யா துதி 
சதுர்த்தசியான பதினான்காய் நின்ற
தற்பரத்தி சிற்பரத்தி சற்கோணத்தில் 
குதித்தோடிப் போகாமல் எட்டில் சேர்ந்து
கும்பகமாய்த் தம்பணத்துள் கூட்டியாடி
விதியான பிரமலபி வளரவென்றும்
விளங்குவுமே செய்வதுதான் விந்தை தாயே
துதிக்கறியாப் பாலனெனைக் காத்தல் வேண்டும்
சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே. 

சற்கோணம் தேவி வீற்றிருக்கும் நவகோணம் ‘‘ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’ - அபிராமி அந்தாதி. நீ குடியிருக்கும் நவகோணத்தை விட்டு வந்து நான் செய்யும் அஷ்டாங்க யோகத்தில் சேர்ந்து உன் திருவடிகளில் என்னை சேர்த்துக் கொள் (அஷ்டாங்க யோகம் = யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், த்யானம், தாரணை, சமாதி)

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசி ஜ்வாலாமாலினி நித்யா துதி
சேமமது தரவெனக்கு நேரே வாவா
திரிபுரையே சாம்பவியே மணப்பது வாணி
காமனையும் வாமனையும் 
படைத்த தாயே

கன்னிகையே வளர்பிறையே கனக மாதா
நீ மறைவாய் நின்றதென்ன நினைவேயம்மா
நீடுழி காலமெல்லாம் நினைவேயாகி
க்ஷேமகலை போலாகி உருவம் காட்டும்
சோதி மனோன்மணி சுழிமுனை வாழ்வே. 

மாத்ருகா அர்ச்சனை
ஓம் ஜ்வாலின்யை நமஹ
ஓம் மஹாஜ்வாலாயை நமஹ
ஓம் ஜ்வாலாமாலாயை நமஹ
ஓம் மஹோஜ்வலாயை நமஹ
ஓம் த்விபுஜாயை நமஹ

ஓம் ஸௌம்ய வதனாயை நமஹ
ஓம் க்ஜான புஸ்தகதாரிண்யை நமஹ
ஓம் கபர்தின்யை நமஹ
ஓம் க்ருதாப்லாஸாயை நமஹ
ஓம் ப்ரஹ்மாண்யை நமஹ
ஓம் ஸ்வாத்ம வேதின்யை நமஹ

ஓம் ஆத்மஞானாயை நமஹ
ஓம் அம்ருதாயை நமஹ
ஓம் நந்தாயை நமஹ
ஓம் நந்தின்யை நமஹ
ஓம் ரோமஹர்ஷிண்யை நமஹ

ஓம் காந்த்யை நமஹ
ஓம் கால்யை நமஹ
ஓம் த்யுத்யை நமஹ
ஓம் மத்யை நமஹ
ஓம் பீக்ஷயேச்சாயை நமஹ
ஓம் விஸ்வகர்ப்பாயை நமஹ

ஓம் ஆதார்யை நமஹ
ஓம் ஸர்வ பாலின்யை நமஹ
ஓம் காத்யாயன்யை நம:நமஹ
ஓம் காலயாதாயை நமஹ
ஒம் குடிலாயை நமஹ

ஓம் அனிமேக்ஷிக்யை நமஹ
ஓம் மாத்ரே நமஹ
ஓம் முஹூர்த்தாயை நமஹ
ஓம் அஹோராத்ர்யை நமஹ
ஓம் த்ருட்யை நமஹ

ஓம் கால விபேதின்யை நமஹ
ஓம் ஸோமஸூர்யாக்னி மத்யஸ்தாயை நமஹ
ஓம் மாயாத்யாயை நமஹ
ஓம் ஸுநிர்மலாயை நமஹ
ஓம் கேவலாயை நமஹ
ஓம் நிக்ஷ்கலாயை நமஹ

ஓம் ஸுத்தாயை நமஹ
ஓம் வ்யாபின்யை நமஹ
ஓம் வ்யோமவிக்ரஹாயை நமஹ
ஓம் ஸ்வச்சந்த பைரவ்யை நமஹ
ஓம் வ்யோமாயை நமஹ

ஓம் வ்யோமாதீதாயை நமஹ

ஓம் பதேஸ்தீதாயை நமஹ
ஓம் ஸ்துத்யை நமஹ
ஓம் ஸ்தவ்யாயை நமஹ
ஓம் ந்ருத்யை நமஹ

ஓம் பூஜ்யாயை நமஹ
ஓம் பூஜார்ஹாயை நமஹ
ஓம் பூஜகப்ரியாயை நமஹ