கீழே உள்ள யந்திரத்தை நல்லநாளில் வெள்ளை விரிப்பு விரித்து அதில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து சிகப்பு மையால் எழுதவும்.பின்,அதற்கு பஞ்சோபசார பூஜை செய்யவும்.
பஞ்சோபசார பூஜை முறை :-
1.யந்திரத்திற்குச் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
2.யந்திரத்திற்குச் செந்தாமரை இதழ்கள் அல்லது மல்லிகை அல்லது பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்யவும்..
3.ஊதுவத்தி காண்பிக்கவும்.
4.கற்பூரம் காண்பிக்கவும்.
5.வெற்றிலை பாக்கு,பழம்,கற்கண்டு,தேங்காய் ,பால் நைவேத்யம் செய்யவும்.
பின்னர் யந்திரத்தை லேமினேட் செய்து கல்லாவில் வைத்துக்கொள்ளவும். பெரிய கம்பெனியாக இருந்தால் கேஷ் பாக்ஸ் அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ளப் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அளவிற்கு நிறைவாக வந்து கொண்டே இருக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் !!!
மேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம் ..
ரிசப லக்னம் ,கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்...
மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,
கடக லக்னத்துக்கு பழனி முருகன்,
சிம்ம லக்னத்துக்கு கழுகு படம் வைக்கலாம்
கன்னி லக்னத்தார் இரட்டை குதிரை ,இரட்டை தேவதைகள் படம் வைக்கலாம்..
துலாம் லக்னத்தார் திருச்செந்தூர் முருகன் படம் வைக்கலாம் ...அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம் வைக்கலாம் ..
விருச்சிகம் லக்னத்தார் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம் வைக்கலாம் ..அல்லது சிங்கம் படத்தை வைக்கலாம் . .
தனுசு லக்னத்தார் ....குருவாயூரப்பன் படம் க்கலாம்..பாலாம்பிகா படம் வைக்கலாம் ..கன்னியாகுமரி அம்மன் படம் வைக்கலாம் ..
மகரம் லக்னத்தார்,நின்ற கோலத்து பெருமாள் படம் வைக்கலாம் ..
கும்பம் லக்னத்தார் ,ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம் வைக்கலாம்...
மீனம் லக்னத்தார் ,திருப்பதி தங்ககோபுரம் படம் வைக்கலாம் ஆனந்த நிலையம் படம்...
.
10 ஆம் இடத்தில் எந்த கிரகம் பலமாக இருக்கிரதோ அதர் குறிய சின்னத்தை பயன்படுத்தினால் லாபம் உண்டாகும்.
No comments:
Post a Comment