Monday, 8 January 2018

ஓம் ஸ்ரீ தத்தாத்ரேயா நமஹ.!

சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்திரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி . கர்த்தம பிரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந்த ரிஷிபத்தினியான இவர், கற்பிற் சிறந்த பதிவிரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ இராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது ,அத்திரி- அனசூயா ஆசிரமத் திற்குச் சென்று, இருவரையும் வணங்கியதாக, இராமாயணம் குறிப்பிடுகிறது.

ஒருமுறை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், அனசூயா தேவியின் கற்பினைச் சோதிக்கும் பொருட்டு,அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவளுக்கு மிகவும் கடினமான ஒரு சோதனையை ஏற்படுத்த, அனசூயா தன் கற்பின் வலிமையால் மூவரையும் சிறு குழந்தைகளாக மாற்றிவிட்டதாகவும், பின்னர் மும்மூர்த்திகளின் தேவியர்கள் வேண்டுகோளுக் கிணங்க, அவள் அவர்களை மன்னித்ததாகவும் புராணங் கள் குறிப்பிடுகின்றன. அனசூயா தேவி அந்த தெய்வீகக் குழந்தைகளை ஒன்று சேர்த்து எடுக்கவே, மூன்று முகங்கள், ஆறு கரங்களோடு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் அவதரித்தார்.

இவர் அனக தத்தர், அனகசுவாமி என்ற பெயர்களில், அனகா தேவி என்ற தேவியோடு காட்சியளிப்பதையும் காண முடியும். அனகா என்ற சொல் "பாவமற்ற' என்ற பொருளைத் தரும். அனகசுவாமியும் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் அவரது தேவியான அனகாதேவியும் நம் பாவங் களை முழுதாகக் களையும் கண்கண்ட தெய்வங் களாகப் போற்றி வணங்கப்படுகின்றனர்.

'அனுக்ரஹ ப்ரதாம் புத்திம், அனகாம் ஹரிவல்லபாம்,
அசோகாம் அம்ருதாம், தீப்தாம், லோகசோக விநாசினீம்.'

ஓம் ஸ்ரீ தத்தாத்ரேயா நமஹ.!




No comments:

Post a Comment