Sunday, 11 August 2019

தாரை என்றால் என்ன?

1) அஸ்வினி-மகம்- மூலம்-கேதுவின் நட்சத்திரங்கள்

2) பரணி-பூரம்-பூராடம்- சுக்கிரன்

3) கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்—சூரியன்

4)ரோகிணி-அஸ்தம்-திருவோணம்- சந்திரன்

5) மிருகசீரிடம்-சித்திரை-அவிட்டம்- செவ்வாய்

6)திருவாதிரை-சுவாதி-சதயம்— ராகு

7)புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி— குரு

8) பூசம்-அனுசம்-உத்திரட்டாதி- சனி

9) ஆயில்யம்-கேட்டை-ரேவதி— புதன்

இப்போது உங்கள் நட்சத்திரமும் அதன் அதிபதி கிரகம் யார் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

இதுவரை உங்கள் நட்சத்திரத்தை கோயிலில் அர்ச்சனைக்கும், திருமணப் பொருத்தத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியிருப்பீர்கள்.

இப்போது முற்றிலும் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும் விதமான தகவல்களை அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.

இங்கே தாரை என்னும் விஷயத்தையும், உங்களுக்கு அனுசரணையான, ஆதரவான நட்சத்திரங்கள் எதுவென்றும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

தாரை என்றால் என்ன? தாரை என்றால் கொடுப்பது என்று பொருள்.

தாரைவார்த்து கொடுப்பது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது தம்மிடம் இருப்பதை அப்படியே அள்ளிக்கொடுப்பது என்று பொருள்.

அது நன்மையோ அல்லது தீமையோ தயவுதாட்சண்யம் பார்க்காது அப்படியே வாரிக் கொடுத்துவிடும்.

என்னென்ன தாரைகள் உள்ளது என பார்ப்போம்,

1 வது தாரை - ஜென்ம தாரை (உங்கள் ஜென்ம நட்சத்திரம்)

2 வது தாரை - சம்பத்து தாரை ( உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரம்)

3 வது தாரை - விபத்து தாரை —- மூன்றாவது நட்சத்திரம்

4 வது தாரை- ஷேம தாரை — நான்காவது நட்சத்திரம்

5 வது தாரை- பிரத்தியக்கு தாரை - 5 வது நட்சத்திரம்

6 வது தாரை - சாதக தாரை - 6 வது நட்சத்திரம்

7 வது தாரை- வதை தாரை -7 வது நட்சத்திரம்

8 வது தாரை- மைத்ர தாரை - 8 வது நட்சத்திரம்

9 வது தாரை- அதி மைத்ர தாரை - 9 வது நட்சத்திரம்.

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதன் இணை நட்சத்திரங்களையும் உங்கள் நட்சத்திரமாக கருதவேண்டும்.

உதாரணம்:- உங்கள் நட்சத்திரம் அசுவினி என்றால் மகம், மூலம் இவையும் உங்கள் நட்சத்திரமாகச் செயல்படும்.

அதாவது அசுவினி - ஜென்ம நட்சத்திரம்

மகம்- அனு ஜென்ம நட்சத்திரம்

மூலம்- திரி ஜென்ம நட்சத்திரம்

இப்படி உங்கள் நட்சத்திரமும் இணை நட்சத்திரங்களும் உங்களுக்கு செயல்படும்.

உங்கள் ஜென்ம, அனுஜென்ம,திரிஜென்ம நட்சத்திரங்களில் சந்திரன் பயணிக்கும் போது உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களை இதுவரை உணர்ந்திருக்க மாட்டீர்கள்.

அதை ஏதோ அன்றாட நிகழ்வு போல் கடந்திருப்பீர்கள்.

இனி கவனியுங்கள்..,

அந்த நாட்களில் படபடப்பு, பதட்டம், சட்டென்று உணர்ச்சிவசப்படுதல், சுள்ளென்ற கோபம் உருவாகுதல், எரிந்து விழுதல், அலைச்சல் அதிகரித்தல், தாகம்அதிகமாகுதல், அதிக சிறுநீர் வெளிப்பாடு, மாலை நேரத்தில் அமைதி திரும்புதல்., மகிழ்ச்சி வெளிப்படுதல். இது போன்றவை அன்றைய தினம் உண்டாகும்

No comments:

Post a Comment