கார்த்திகை மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தி மிகவும் மங்களகரமானது.
தசரா முடிவுற்று பத்து நாட்கள் கடந்தும் தீபாவளிக்குப் பத்து நாட்களுக்கு முன்பும் கொண்டாடப்படுவது இப்பண்டிகையே. கர்வா என்பது நீர் நிரம்பிய சிறு மண்பான்மையைக் குறிக்கும். சௌத் என்பது கார்த்திகை மாத கிருஷ்ணபட்சத்தின் நான்காவது தினத்தைக் குறிக்கும்.
தாலி பாக்கியம் நிலைக்கவும் கணவனின் நல்வாழ்வுக்காகவும் தாங்கள் அவன் மேல் வைத்துள்ள அன்பு ஈடுபாட்டுக்கு எடுத்துக்காட்டாகவும் பெண்கள் அனுசரிக்கும் இவ்விரதம் உத்திரபிரதேஷ் பஞ்சாப் ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட மானிலங்களில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு விதத்தில் நம் காரடையான் நோம்பு காமாட்சி பூஜை மாதிரிதான்.
முதல் நாள் இரவு கணவனை முன்னிருத்தி உதய சந்திரனை தரிசித்துவிட்டு விரதமேற்பார்கள். விரதமேற்குமுன் மருமகள் சாப்பிடுவதற்கு மாமியார் பிரத்யேகமாகச் சிற்றுண்டி தயாரிப்பார். பூந்தி லட்டு பாயசம் பிறைச்சந்திரன் வடிவிலும் மத்தியில் துளையுடன் நிலவைப் பார்க்கும் விதத்திலும் என பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் உலர்ந்த பழங்கள் இதில் இடம்பெறும். புடவை நகை போன்றவையும் தனியாக உண்டு. இதற்கு ‘செர்ஜி’ எனப் பெயர்.
சதுர்த்தி அன்று காலை சூரியன் உதிக்கும் முன்பே மாமியார் தயாரித்த உணவைச் சாப்பிட்டுவிட்டால் மறுபடியும் அன்றிரவு நிலவைப் பார்க்கும் வரை முழுப்பட்டினி தான். ஆனால் இதற்கும் ஒரு விதி விலக்கு உண்டு. கர்ப்பிணி பெண்கள் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதால் அவர்கள் தேனீர் சர்பத் போன்றவற்றை அருந்தலாம்.
திருமணத்துக்குப் பின் வரும் முதல் விரதம் என்றால் பெண் வீட்டிலிருந்து மாமியாருக்கு சம்பந்தி மரியாதையாக உப்பு இனிப்பு பணியாரங்கள் உலர்ந்த பழ வகைகள் துணிமணிகள் என வந்து சேரும். கூடவே பெண்ணுக்கு மங்கலப் பொருட்களுடன் புடவை நகைகல் முளைப்பாரி 15 மண் கெண்டிகள் சல்லடை முதலியன முறைப்படி வந்துவிடும். வசதியுள்ளோர் ஆண்டு தோறும் கூட அளிப்பது தொடரும். இதற்கு பாயா எனப் பெயர்.
பகல் பொழுதில் வினாயகர் சிவ பார்வதி கார்த்திக் ஆராதனையும் தேவி மகாத்மியம் உபன்யாசமும் நடைபெறும். கௌரி மாதாவின் பீடத்தின் முன்பு வாயகன்ற மூடியுடன் கூடிய பெரிய மண்பானையில் மாவிலைக் கொத்தைச் செருகி அதனுள் வீட்டிலேயே தயாரித்த அவல் போட்டு நீர் நிரப்பி வைப்பார்கள். அதன்மேல் இருக்கும் தட்டில் பூஜை சாமான்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் மங்கல திரவியங்களை வைத்து இந்தக் கர்வாவையே வினாயகராகப் பாவித்து ஆராதிப்பார்கள்.
அன்று விரதம் மேற்கொள்ளும் பெண்கள் உடுத்தும் புடவைக்கும் கட்டுப்பாடு உண்டு. செயற்கைப்பட்டு கூடாது. கருப்பு நீல நிறம் ஆகாது. இளஞ்சிவப்பு சிவப்பு அல்லது பச்சை நிற நூல் சேலையே அனுமதிக்கப்படும். அந்தி வேளையில் பெண்கள் கை கால்களில் மெஹந்தி இட்டவாறு சர்வாலங்கார பூஷிதையாக விளங்குவார்கள்.
நிலவு எழுந்தவுடன் நீர் நிறைந்த தட்டில் விழும் சந்திர பிம்பத்தையோ துப்பட்டா முந்தானை அல்லது சல்லடை வழியாகவோ நிலவை தரிசிப்பார்கள். பின்ன்ர் வேறு யாரையும் பார்க்காமல் கண்களை மூடியபடியே வந்து தங்கள் முன் நிற்கும் கணவன் முகத்தில் விழிப்பார்கள். அப்படி செய்தால் நீண்ட சௌபாக்கியவதியாகத் திகழலாம் என்பது நம்பிக்கை.
பிறகு இடது கையில் அகல் விளக்கு ஏந்தி வலக் கையால் சந்திரனை நோக்கி ஐந்து முறை அர்க்யம் தந்து தலைதாழ்த்தி வணங்கி இருந்த இடத்திலேயே பிரதட்ணம் செய்து ஆராதிப்பர். கணவன் தரும் துளசி தீர்த்தத்தை அருந்தி அவன் கையினால் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பர்.
இதற்கு பிண்ணனியாக ஒரு முக்கிய கதை உண்டு. கர்வா என்ற பெண்ணும் அவளது கணவனும் ஆதர்ச தம்பதிகள். கர்வா பதிவிரதா தர்மத்தை வழுவாது கடைபிடித்து வந்தாள் ஒரு நால் நதியில் நீராடும்போது கணவனை முதலி ஒன்று கவ்விக்கொண்டது. அதனிடமிருந்து மீள முடியாமல் அவன் உயிரழந்தான். அதைப் பொறுக்கமுடியாமல் துணியைக் கொண்டு முதலையை மரத்தில் கட்டினாள். அபராதி முதலையை தண்டித்து கணவனை உயிர்ப்பிக்கும்படி கடின விரதமிருந்து யமனை வேண்டினாள். அவன் முதலில் மறுத்தான் ஒரு பதிவிரதையின் சாபத்துக்கு பயந்து முதலையைக் கொன்று அவள் கணவனை உயிர்த்தெழ வைத்தது இந்தச் சங்கட சதுர்த்தி நாளில்தான். அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கை எந்தவிதத் தடங்கலுமின்றி சென்றதாம். அதனால் இவ்விரதத்துக்கு அவளது பெயரே நிலைத்துவிட்டது.
தசரா முடிவுற்று பத்து நாட்கள் கடந்தும் தீபாவளிக்குப் பத்து நாட்களுக்கு முன்பும் கொண்டாடப்படுவது இப்பண்டிகையே. கர்வா என்பது நீர் நிரம்பிய சிறு மண்பான்மையைக் குறிக்கும். சௌத் என்பது கார்த்திகை மாத கிருஷ்ணபட்சத்தின் நான்காவது தினத்தைக் குறிக்கும்.
தாலி பாக்கியம் நிலைக்கவும் கணவனின் நல்வாழ்வுக்காகவும் தாங்கள் அவன் மேல் வைத்துள்ள அன்பு ஈடுபாட்டுக்கு எடுத்துக்காட்டாகவும் பெண்கள் அனுசரிக்கும் இவ்விரதம் உத்திரபிரதேஷ் பஞ்சாப் ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட மானிலங்களில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு விதத்தில் நம் காரடையான் நோம்பு காமாட்சி பூஜை மாதிரிதான்.
முதல் நாள் இரவு கணவனை முன்னிருத்தி உதய சந்திரனை தரிசித்துவிட்டு விரதமேற்பார்கள். விரதமேற்குமுன் மருமகள் சாப்பிடுவதற்கு மாமியார் பிரத்யேகமாகச் சிற்றுண்டி தயாரிப்பார். பூந்தி லட்டு பாயசம் பிறைச்சந்திரன் வடிவிலும் மத்தியில் துளையுடன் நிலவைப் பார்க்கும் விதத்திலும் என பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் உலர்ந்த பழங்கள் இதில் இடம்பெறும். புடவை நகை போன்றவையும் தனியாக உண்டு. இதற்கு ‘செர்ஜி’ எனப் பெயர்.
சதுர்த்தி அன்று காலை சூரியன் உதிக்கும் முன்பே மாமியார் தயாரித்த உணவைச் சாப்பிட்டுவிட்டால் மறுபடியும் அன்றிரவு நிலவைப் பார்க்கும் வரை முழுப்பட்டினி தான். ஆனால் இதற்கும் ஒரு விதி விலக்கு உண்டு. கர்ப்பிணி பெண்கள் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதால் அவர்கள் தேனீர் சர்பத் போன்றவற்றை அருந்தலாம்.
திருமணத்துக்குப் பின் வரும் முதல் விரதம் என்றால் பெண் வீட்டிலிருந்து மாமியாருக்கு சம்பந்தி மரியாதையாக உப்பு இனிப்பு பணியாரங்கள் உலர்ந்த பழ வகைகள் துணிமணிகள் என வந்து சேரும். கூடவே பெண்ணுக்கு மங்கலப் பொருட்களுடன் புடவை நகைகல் முளைப்பாரி 15 மண் கெண்டிகள் சல்லடை முதலியன முறைப்படி வந்துவிடும். வசதியுள்ளோர் ஆண்டு தோறும் கூட அளிப்பது தொடரும். இதற்கு பாயா எனப் பெயர்.
பகல் பொழுதில் வினாயகர் சிவ பார்வதி கார்த்திக் ஆராதனையும் தேவி மகாத்மியம் உபன்யாசமும் நடைபெறும். கௌரி மாதாவின் பீடத்தின் முன்பு வாயகன்ற மூடியுடன் கூடிய பெரிய மண்பானையில் மாவிலைக் கொத்தைச் செருகி அதனுள் வீட்டிலேயே தயாரித்த அவல் போட்டு நீர் நிரப்பி வைப்பார்கள். அதன்மேல் இருக்கும் தட்டில் பூஜை சாமான்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் மங்கல திரவியங்களை வைத்து இந்தக் கர்வாவையே வினாயகராகப் பாவித்து ஆராதிப்பார்கள்.
அன்று விரதம் மேற்கொள்ளும் பெண்கள் உடுத்தும் புடவைக்கும் கட்டுப்பாடு உண்டு. செயற்கைப்பட்டு கூடாது. கருப்பு நீல நிறம் ஆகாது. இளஞ்சிவப்பு சிவப்பு அல்லது பச்சை நிற நூல் சேலையே அனுமதிக்கப்படும். அந்தி வேளையில் பெண்கள் கை கால்களில் மெஹந்தி இட்டவாறு சர்வாலங்கார பூஷிதையாக விளங்குவார்கள்.
அன்றைய தினம் கணவன்மார்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஊசியில் நூல் கோக்கக் கூடாது. துணி தைக்கக் கூடாது. கூரிய ஆய்தங்களையும் தீங்கு விளைவிக்கு உபகரணங்களையும் கையாளக் கூடாது. எந்த வித ஆபத்தும் அவர்களை அண்டக்கூடாது என்பதே இதன் நோக்கம்.
மாலையில் சந்திரன் உதயமவதற்கு ஒரு மணி நேரம் முன்பு திறந்தவெளி முற்றத்தில் பெண்கள் பிரம்புத் தட்டில் வைத்து பூஜிக்கப்பட்ட சாமான்களுடன் வட்டமாக நின்றுகொள்வர். ஒருவர் தட்டை மற்றவரிடம் ‘ சுகாசினி தேவி உன் கர்வா தட்டை என்னிடம் கொடு. என்னுடையதை வாங்கிக்கொள். விரதத்துக்கு உறுதுணையாக நம் கணவர்கள் இருக்கிறார்கள். கௌரி மாதா தீர்க்க சுமங்கலியாய் இருக்க வரம் அருள்வாய்” என்று பாடியவாறு அவர்களது தட்டு அவர்களிடம் வரும் வரை ஆறு முறை வட்டமிடுவர்.
வீரு குடியே கர்வாடா என்ற இப்பாடல் மிக இனிமையானது. ஏழாவது சுற்றில் பாடலைச் சற்று மாற்றி இத்துடன் கட்டுப்பாடுகள் அகலுகின்றன விரதத்தை முடித்து வைக்க கணவர்கள் வரட்டும் என்று பாடப்பட்டு தட்டுக்களைப் பரிமாறிக்கொள்வர். பிறகு உதயமாகும் நிலவைக் காண கூடுவர்.

கணவர்களும் அங்கு வந்துவிடுவர்.
பிறகு இடது கையில் அகல் விளக்கு ஏந்தி வலக் கையால் சந்திரனை நோக்கி ஐந்து முறை அர்க்யம் தந்து தலைதாழ்த்தி வணங்கி இருந்த இடத்திலேயே பிரதட்ணம் செய்து ஆராதிப்பர். கணவன் தரும் துளசி தீர்த்தத்தை அருந்தி அவன் கையினால் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பர்.
இதற்கு பிண்ணனியாக ஒரு முக்கிய கதை உண்டு. கர்வா என்ற பெண்ணும் அவளது கணவனும் ஆதர்ச தம்பதிகள். கர்வா பதிவிரதா தர்மத்தை வழுவாது கடைபிடித்து வந்தாள் ஒரு நால் நதியில் நீராடும்போது கணவனை முதலி ஒன்று கவ்விக்கொண்டது. அதனிடமிருந்து மீள முடியாமல் அவன் உயிரழந்தான். அதைப் பொறுக்கமுடியாமல் துணியைக் கொண்டு முதலையை மரத்தில் கட்டினாள். அபராதி முதலையை தண்டித்து கணவனை உயிர்ப்பிக்கும்படி கடின விரதமிருந்து யமனை வேண்டினாள். அவன் முதலில் மறுத்தான் ஒரு பதிவிரதையின் சாபத்துக்கு பயந்து முதலையைக் கொன்று அவள் கணவனை உயிர்த்தெழ வைத்தது இந்தச் சங்கட சதுர்த்தி நாளில்தான். அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கை எந்தவிதத் தடங்கலுமின்றி சென்றதாம். அதனால் இவ்விரதத்துக்கு அவளது பெயரே நிலைத்துவிட்டது.
ஆணோ, பெண்ணோ ஒருவரிடம் இருக்கவேண்டிய எட்டு செல்வங்கள் அஷ்டதனம் எனப்படும். அவை:
1. ரூபம் அல்லது அழகு
2. சம்பத்து (சொத்து முதலானவை)
3. வித்தை (பெற்றுள்ள திறமைகள்)
4. விவேகம் (அறிவுத்திறனும் பண்பும்)
5. குணம் (நற்குணம்)
6. தனம் (பொன், பொருள்)
7. குலம்
8. வயது (ஆயுள்).
No comments:
Post a Comment