வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் குரு புஷ்ய யோக நாளாகும்.
வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள்.
பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம்.
செல்வத்திற்கு அதிபதியான குரு பகவான் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார்.
இதுபோல இந்த சுபமான நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.
இந்த நாள் குரு புஷ்ய அமிர்தயோக காலமாகும்.
நம்முடைய எண்ணங்களை பிரார்த்தனைகளை அன்னை மகாலட்சுமியிடம் கூற ஏற்ற நாளும் நேரமும் வரும் வியாழக்கிழமை இணைந்து வந்துள்ளது.
முருகனுக்கு உகந்த பூசம் பொதுவாகவே பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அனைத்து மகான்களையும் வழிபட ஏற்ற நட்சத்திரம் பூசம். தை மாதத்தில் வருகிற பூசம் நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு விஷேசமானது.
பழனிமலையில் போகர் சித்தரை வழிபட ஏற்ற நட்சத்திரம் பூசம்.
சித்தர்களும், ஞானிகளும் ஜீவ சமாதி அடைய தேர்வு செய்யும் நட்சத்திரம் பூசம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பூசம் நட்சத்திரம் சனிக்கிழமையுடனோ அல்லது வியாழக்கிழமையுடனோ இணைந்து வருவது சிறப்பு. அன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்றோ, சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்றோ வழிபடலாம்.
புது தொழில் தொடங்கலாம்
குரு புஷ்ய யோக நாளில் புது கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டலாம். புது மந்திரம் கற்றுக் கொள்ளலாம். குருவிடம், ஆசிரியரிடம் புதிய பாடம் கற்றுக்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்கலாம். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகள் வாங்கலாம் இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். செல்வ வளமும் ஐஸ்வர்யமும் பெருகும். புது வாகனம் வாங்கலாம். புது வீடு, கடை வாங்க அட்வான்ஸ் கொடுக்கலாம்.
No comments:
Post a Comment