பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்களின் சக்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில நேரங்களில் அதீத சக்தி உடனும் சில நேரங்களில் மிக குறைவான சக்தியுடனும் சில நேரங்களில் மிதமான சக்தியுடனும் இயங்கும். மண்சக்தி செல்வத்துக்குரியது.
பிரபஞ்சத்தில் மண் சக்தி அதீத ஆற்றலுடன் இயங்கும் பொழுது நாம் பொருட்களை வாங்குவது பணத்தை முதலீடு செய்வது பணம் சம்பந்தப்பட்ட பொருளாதார சம்பந்தப்பட்ட காரியங்களை தொடங்குவது போன்ற பணம் சம்பந்தப்பட்ட எந்த செயல் செய்தாலும் அது வெற்றியைத் தரும் (நல்ல பலனை கொடுக்கும்).
மண்சக்தி ஆற்றலுடன் இருக்கும் நேரத்தில் பணத்தை அதிகளவு ஈர்க்கவும் பெருக்கவும் முடியும். பஞ்சபூதங்களின் இயக்கத்தை சித்தர் பெருமக்கள் ஆராய்ச்சி செய்து, பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற வடிவில் கொடுத்துள்ளனர். இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தை நல்ல நோக்கத்தோடும், பிறர் நலனுக்காகவும் வாழும் நபர்களுக்கு மட்டுமே இதில் உள்ள ரகசியங்கள் புரியும். சித்தர்களின் படைப்புகள் அனைத்தும் மறை இலக்கியம் ஆகும். அதில் இருக்கும் உண்மை ரகசியம் மறைத்து சொல்லப்பட்டிருக்கும. சித்தர்களின் படைப்புகளை அறிந்து கொள்ள முயலும் நபர்களின் எண்ணத்திற்கு தகுந்தவாறு மட்டுமே கருத்துக்கள் புரிந்து கொள்ளப்படும்.
இந்தப் பதிவில் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் மண்சக்தி அதீத ஆற்றலுடன் இயங்கும் நேரத்தை கணக்கிட்டு குருஜி பிரம்மயோகி சத்ய தேவ் ரோஷன் அவர்கள் கொடுத்துள்ளார்.
இதில் உள்ள பதிவை ஒன்றுக்கு பலமுறை தெளிவாக புரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.
இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்,
1. தங்க நகைகள் வாங்குவது
2. நிலம், வீடு வாங்குவது அல்லது முன்பணம் செலுத்துவது
3. வாகனங்கள் வாங்குவது
4. கடனை அடைப்பது
5. முக்கியமான மளிகை சாமான் பொருட்கள் வாங்குவது
6. ஆன்லைனில் பணம் செலுத்தி பொருட்கள் வாங்குவது.
இந்த நேரத்தில் செய்யக்கூடாதவை
1. கடன் கொடுப்பதோ அல்லது கடன் வாங்குவதோ வேண்டாம்.
இந்த நேரத்தில் பொருளாதார சம்பந்தப்பட்ட வேண்டுதலை எப்படி நிறைவேற்றுவது.
பச்சை நிறம் உள்ள பிளாஸ்டிக் அல்லது மரப்பெட்டியில் அல்லது மூடி மட்டும் பச்சை நிறத்தில் உள்ள பெட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பச்சை நிறம் உள்ள துணியை வைக்க வேண்டும். பின்பு அதில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், வசம்பு கிராம்பு, பட்டை போன்ற வாசனைப் பொருட்களை வைத்து, அத்துடன் உங்களுடைய பொருளாதார வேண்டுதலை ஒரு வெள்ளை தாளில் பச்சை கலர் பேனா மை இல், எழுதி வைக்க வேண்டும். தினமும் இந்த பஞ்சபட்சி பண வசிய நேரத்தில் இந்த வேண்டுதலுக்காக பணத்தை சேமித்துக் கொண்டு வரலாம், இந்தப் பணம் பல மடங்காக பெருகும். உங்களுடைய பொருளாதார வேண்டுதலை நிறைவேற்றும் சூழ்நிலையை உருவாக்கும். இந்தப் பணத்தை உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் காரியத்துக்கு பயன்படுத்தலாம்.
பஞ்ச பட்சியின் பண வசிய நேரம்
Pancha Patchi Money Attraction Time
வளர்பிறை
1. திங்கள்
பகல் 10.12 am to 10.48 am (மொத்தம் 36 mins)
பகல் 2.48 pm to 3.36 pm (மொத்தம் 48 mins)
2. செவ்வாய்
பகல் 6.00 am to 6.36 am (மொத்தம் 36 mins)
பகல் 10.48 am to 11.36 am (மொத்தம் 48 mins)
3. புதன்
பகல் 10.12 am to 10.48 am (மொத்தம் 36 mins)
பகல் 2.48 pm to 3.36 pm (மொத்தம் 48 mins)
4. வியாழன்
பகல் 11.06 am to 11.42 am (மொத்தம் 36 mins)
பகல் 4.54 pm to 5.42 pm (மொத்தம் 48 mins)
இரவு 9.54 pm to 10.24 pm (மொத்தம் 30 mins)
5. வெள்ளி
பகல் 7.06 am to 7.54 am (மொத்தம் 48 mins)
பகல் 1.42 pm to 2.18 pm (மொத்தம் 36 mins)
இரவு 7.00 pm to 7.30 pm (மொத்தம்30 mins)
இரவு 9.30 pm to 9.54 pm (மொத்தம் 24 mins)
6. சனி
பகல் 8.54 am to 9.42 am (மொத்தம் 48 mins)
பகல் 3.48 pm to 4.24 pm (மொத்தம்36 mins)
இரவு 6.36 pm to 7.00 pm (மொத்தம் 24 mins)
7. ஞாயிறு
பகல் 6.00 am to 6.36 am (மொத்தம் 36 mins)
பகல் 10.48 am to 11.36 am (மொத்தம் 48 mins)
தேய்பிறை
1. திங்கள்
பகல் 6.42 am to 7.00 am (மொத்தம் 18 mins)
பகல் 11.42 am to 12.30 pm (மொத்தம் 48 mins)
இரவு 7.00 pm to 7.18 pm (மொத்தம் 18 mins)
இரவு 9.24 pm to 10.06 pm (மொத்தம் 42 mins)
2. செவ்வாய்
பகல் 1.12 pm to 1.30 pm (மொத்தம் 18 mins)
பகல் 3.36 pm to 4.24 pm (மொத்தம் 48 mins)
3. புதன்
பகல் 9.30 am to 10.18 am (மொத்தம் 48 mins)
இரவு 10.06 pm to 10.24 pm (மொத்தம் 18 mins)
4. வியாழன்
பகல் 8.36 am to 8.54 am (மொத்தம் 18 mins)
பகல் 1.48 pm to 2.36 pm (மொத்தம் 48 mins)
இரவு 6.18 pm to 7.00 pm (மொத்தம் 42 mins)
5. வெள்ளி
பகல் 7.36 am to 8.24 am (மொத்தம் 48 mins)
பகல் 3.18 pm to 3.36 pm (மொத்தம் 18 mins)
6. சனி
பகல் 6.42 am to 7.00 am (மொத்தம் 18 mins)
பகல் 11.42 am to 12.30 pm (மொத்தம் 48 mins)
இரவு 7.00 pm to 7.18 pm (மொத்தம் 18 mins)
இரவு 9.24 pm to 10.06 pm (மொத்தம் 42 mins)
7. ஞாயிறு
பகல் 1.12 pm to 1.30 pm (மொத்தம் 18 mins)
பகல் 3.36 pm to 4.24 pm (மொத்தம் 48 mins)
"குறிப்பு : மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள நேரம் அனைத்தும் சூரிய உதயம் காலை 6.00 am மற்றும் சூரிய அஸ்தமனம் 6.00 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் தினமும் மாறுபடும். நீங்கள் sunrise sunset ஆப் மூலம் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகும் நேரத்தை கணக்கிட்டு பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உதாரணமாக திங்கள் கிழமை அன்று சூரிய உதயம் காலை 6.30 am மணிக்கு என்று எடுத்து கொண்டால், கொடுக்கப்பட்டுள்ள பகல் நேரத்தில் அரை மணி நேரம் கூட்ட வேண்டும். "
பகல் 10.12 am to 10.48 am (மொத்தம் = 36 mins) (சூரிய உதயம் காலை 6.00 am என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
10.12 am + 30 minutes = 10.42 + 36 mins = 11.18 mins
பகல் 10.42 am to 11.18 am (மொத்தம் =36 mins) (சூரிய உதயம் காலை 6.30 am என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.)
அதே போன்று சூரிய அஸ்தமனம் 6.45 pm என்று எடுத்து கொண்டால், முக்கால் மணி 3/4 நேரம் கொடுக்கப்பட்டுள்ள இரவு நேரத்தில் கூட்ட வேண்டும்.
இரவு 7.00 pm to 7.30 pm (மொத்தம் =30 mins) (சூரிய அஸ்தமனம் 6.00 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
7.00 pm + 45 minutes = 7.45 + 30 mins = 08.15 mins
இரவு 7.45 pm to 8.15 pm (மொத்தம் =30 mins) (சூரிய அஸ்தமனம் 6.45 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது).
•உதாரணமாக திங்கள் கிழமை அன்று சூரிய உதயம் காலை 5.30 am மணிக்கு என்று எடுத்து கொண்டால், கொடுக்கப்பட்டுள்ள பகல் நேரத்தில் அரை மணி நேரம் கழிக்க வேண்டும்.
பகல் 10.12 am to 10.48 am (மொத்தம் =36 mins) (சூரிய உதயம் காலை 6.00 am என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
10.12 am - 30 minutes = 09.42 + 36 mins = 10.18 mins
பகல் 09.42 am to 10.18 am (மொத்தம் =36 mins) (சூரிய உதயம் காலை 5.30 am என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
•அதே போன்று சூரிய அஸ்தமனம் 5.45 pm என்று எடுத்து கொண்டால், 1/4 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ள இரவு நேரத்தில் கழிக்க வேண்டும்.
இரவு 7.00 pm to 7.30 pm (மொத்தம் =30 mins) (சூரிய அஸ்தமனம் 6.00 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது).
7.00 pm - 15 minutes = 6.45 + 30 mins = 07.15 mins
இரவு 6.45 pm to 7.15 pm (மொத்தம் =30 mins) (சூரிய அஸ்தமனம் 5.45 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.)
No comments:
Post a Comment