Tuesday, 1 December 2015

பணம் உடையவர்க்கு ஆகாதது இல்லை



பழமொழி நானூறு 

121. பணம் உடையவர்க்கு ஆகாதது இல்லை


ஒல்லாத இன்றி உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க்கு
இடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
'
கடலுள்ளும் காண்பவே நன்கு'.




     
விளங்கும் நீர்ப் பெருக்கினையுடைய கடற்கரைக்குரிய நாட்டினனே! பொருள் உடையவர்களின் செயல்கள் எல்லாம், இடையிலே முடிதல் இல்லாமற் போகாமல், நல்லதாகவே முறையாக முற்றவும் நடந்து முடியும்; பொருள் வசதி இல்லாதவர்களுக்கோ அவர்கள் செயல்கள் எல்லாம் மிகவும் வருத்தத்துடனேயே நடந்து வரும்.

அதனால், பொருள்வளம் உடையவர், கடலினுள்ளே செல்பவரானாலுங் கூட, அங்கும் தமக்கு நன்மையான தக்க வசதிகளைச் செய்து கொள்ளக் கூடியவர்கள் என்று அறிவாயாக.




     
பொருள், வாழ்வுக்கு மிகவும் தேவை என்பதைச் சொல்வது இது. பொருள் உடையவர் காரியங்கள் நிறைவேறுவதும், பொருள் இல்லாதவர் காரியங்கள் தடைபடுவதும் உலக இயல்பு.

'கடலுள்ளும் காண்பவே நன்கு' என்பது பழமொழி.






 

No comments:

Post a Comment