மரங்களில் இறைத்தன்மை பொதிந்துள்ளதால் அவை பூசனைக்குரியதாகின்றன.ஒரு கோவிலைக் கட்டும்முன்பு அதன் மூலவழிபாடு ஒரு மரத்தின் கீழிருந்துதான்தொடங்குகிறது. எந்த மரத்தின் கீழிருந்து வழிபாடு தொடங்கியதோ அந்த மரம்அத் தலத்தின் தல
விருட்சமாகிறது.
சில இடங்கள் வனங்களாக இருந்து, அங்கு இறைவன் எழுந்தருளி அருட்காட்சிதந்தபின்னர் அவையும் திருத்தலங்களாகப் போற்றப்பட்டன. சிதம்பரம் எனப்படும்தில்லைவனம், மதுரை எனப்படும் கடம்ப வனம், திருநெல்வேலி எனப்படும்வேணு வனம் ஆகியவை இத்தகைய தலங்களே.
தலவிருட்சங்கள் என்பவை புல்லினம் முதல் பல வருடங்கள் நிலைத்து நிற்கும்மரங்கள் வரையிலான வெவ்வேறு தாவர இனத்தைச் சார்ந்தவை.
தாவரங்களின் பூ, பிஞ்சு, காய், கனி, வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களுமேமனிதனின் நோய்களைத் தீர்க்கும் தன்மை உடையனவாக விளங்குகின்றன.இறைவன் மனிதனுக்குப் பிறவிப் பிணி தீர்ப்பவனாய் இருப்பதுபோல்,தாவரங்களில் உறைந்து உடல் பிணியையும் தீர்த்தருளுகிறான் என்றநம்பிக்கையே, மரங்கள் வழிபாட்டுக்குரியனவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கானகாரணம் எனலாம்.
புல்வகையைச் சேர்ந்த தலவிருட்சங்கள் இருக்கும் தலங்கள் சில:
தர்ப்பைப்புல்- திருநள்ளாறு; கோரைப்புல்- திருச்சாய்க்காடு; விழல்- திருவிளநகர்.
செடி வகையைச் சார்ந்த தலவிருட்சங்கள் சில:
துளசி- திருவிற்குடி; அலரி- திருக்கரவீரம்; வீழிச்செடி- திருவீழிமிழலை.
கொடி வகைத் தலவிருட்சங்கள் சில:
முல்லை- திருக்கருகாவூர், திருமுல்லை வாயில்; மல்லிகை- திருச்சிக்கல்.
மரவகைத் தலவிருட்சங்கள் சில:
குருந்தமரம்- திருப்பெருந்துறை; வில்வமரம்- திருவையாறு; பனைமரம்-திருப்பனந்தாள்; புன்னை மரம்- திருநாரையூர், திருப்புகலூர்; ஆலமரம்-திருவெண்காடு.
இவ்வாறு ஒவ்வொரு தலத்துக்கும் மூர்த்திகளும் தீர்த்தங்களும் அமைந்திருப்பதுபோல் தலவிருட்சங்களும் அமைந்துள்ளன.
சந்தனம், தேவதாரு, கற்பகம், மந்தாரம், பாரிஜாதம் ஆகிய ஐந்தும்தேவதருக்களாகப் போற்றப்படுகின்றன. இவை கேட்டதைத் தரும் சக்திகொண்டவை.
விருட்சங்கள் இறைத்தன்மை பெற்றிருப் பதற்கான புராண வரலாறும்கூறப்படுகிறது.
ஒருசமயம் இந்திரன் கயிலை சென்றபோது சிவகணங்கள் தடுத்தன. அதனால்இந்திரன்
அக்னியை ஏவினான். அக்னி அந்தண உருக்கொண்டு ஈசனும் தேவியும்இருக்குமிடம் சென்றான். அக்னியைக் கண்டு கோபம் கொண்ட பார்வதிதேவி,
""இந்திரனின் ஏவலால் அனுமதியின்றி வந்தமையால் தேவர்கள் அனைவரும்பெண்களாகக் கடவது'' என்று சாபமிட்டாள். இதையறிந்து வருத்தமுற்ற தேவர்கள்தேவியைத் துதித்தனர். தேவி அவர்களுக்குக் காட்சி கொடுத்து,
""என் வாக்குபொய்க்காது. நீங்கள் அனைவரும் விருட்சங்களாகுக'' என்று கூறி மறைந்தாள்.அதன்படி தேவர்கள் விருட்சங் களாயினர். தேவப்பெண்கள் செடிகளாயினர்.ஊர்வசி, ரம்பை போன்றோர் பூமரங்களாயினர்.
தேவியின் வாக்குப்படி விஷ்ணு பகவான் அசுவத்த விருட்சமாகவும், சதாசிவன்வட விருட்சமாகவும், பிரம்மன் பேலா மரமாகவும், இந்திரன் மா மரமாகவும்,இந்திராணி மரா மரமாகவும் மாறினர்.
மரங்கள் நமக்குத் தேவையான பிராண வாயுவை வெளியிட்டு, நமக்குத்தேவையற்றதும் தீங்கு விளைவிப்பதுமான கரியமில வாயுவைஉட்கொள்கின்றன. மரங்களின் இச்செயல்மூலம் நம் ஆரோக்கியமும்,சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகின்றன. ஆகவே மரங்கள் போற்றிப்பாதுகாக்கப்படவேண்டியவை என்பதை அறிவியல்ரீதியாகவும் ஏற்று
க்கொள்ளவேண்டியுள்ளது.
க்கொள்ளவேண்டியுள்ளது.
No comments:
Post a Comment