Monday, 27 February 2017

பஞ்சமுக அனுமன்!


ஓம் ஸ்ரீராமதூதாய, ஆஞ்சநேயாய,
வாயுபுத்ராய, மஹாபலாய,
ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, மஹா பலப்ரசண்டாய, பல்குணஸகாய,கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய, அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, 
துஷ்ட நிராலம்ப க்ருதாய,
ஸஞ்சீவிநீ ஸமாநயந ஸம்ர்த்தாய,
அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய,
தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய,
பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய,
ஷட்ப்ரயோகாங்க பஞ்சமுகி ஹநுமதே நம:


பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்க பஞ்சமுக அனுமன். 

அனுமனின் ஐந்து முகங்களான
கருடமுகம் பிணி நீக்கும்,
வராகமுகம் செல்வம் அளிக்கும்,
அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும்,
நரசிம்மமுகம் தீமையைப் போக்கும்,
ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், 
வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன்.


கிழக்கு முகம்-ஹனுமார்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.


தெற்கு முகம்-நரஸிம்மர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.


மேற்கு முகம்-கருடர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய
ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.



வடக்கு முகம்- வராஹர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய 
ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.


மேல்முகம்-ஹயக்ரீவர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய
ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.



ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி!

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.


No comments:

Post a Comment