Thursday, 25 February 2016

மகிமை பொருந்திய மகாமக குளம்



மகாமகத் தீர்த்தத்தை ஒருமுறை வணங்கினால் எல்லா தேவர்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மகாமகக் குளத்தை ஒருமுறை சுற்றிவந்தால் பூமியை நூறு முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தில் ஒருமுறை நீராடினால் கங்கைக்கரையில் நூறாண்டுகள் வாழ்ந்து மூன்று காலமும் நீராடிய பலன் கிடைக்கும்.

இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தின் வடபுறத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு தனது கோத்திரம், மனைவியின் கோத்திரம் உள்ளிட்ட ஏழு கோத்திரங்களை யும் சேர்ந்தவர்கள் (ஏழு தலைமுறைகளுக்கு) நற்கதி அடைவர். வடபுறத்திலுள்ள கிணற்றில் மகாமகத்தன்று காசியிலிருந்து கங்கை வருகிறது.

இங்கு இடப லக்னத்தில் பல குமிழிகள் ஏற்படுவதைக் காணலாம்.


கிருத யுகத்தில் பிரம்மன் தவம் செய்தமை யால் மகாமகக் குளத்திற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.

திரேதா யுகத்தில் பாவங்களைப் போக்கிய தால் பாபநோதம் என்று பெயர்.

துவாபர யுகத்தில் முக்தி அளித்ததால் முக்தி தீர்த்தம் என்று பெயர்.

கலியுகத்தில் நவகன்னியர் பூஜித்தமையால் கன்யா தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கொரநாட்டுக்கருப்பூர்) ஆகியவை அமிர்தம் பரவிய பஞ்ச குரோச தலங்களாகும்.

மகாமகக் குளத்திலுள்ள தீர்த்தங்கள்இந்திர தீர்த்தம்- வானுலக வாழ்வளிக்கும்.அக்கினி தீர்த்தம்- பிரம்மஹத்தி தோஷம் நீக்கும்.யம தீர்த்தம்- யம பயம் போக்கும்.நிருதி தீர்த்தம்- பூத, பிரேத, பிசாசு குற்றம் நீக்கும்.வருண தீர்த்தம்- ஆயுள் விருத்தி தரும்.வாயு தீர்த்தம்- பிணிகள் அகலும்.குபேர தீர்த்தம்- சகல செல்வங்களும் உண்டாக்கும்.ஈசான தீர்த்தம்- சிவனடி சேர்க்கும்.பிரம்ம தீர்த்தம்- பிதுர்களைக் கரையேற்றும்.கங்கை தீர்த்தம்- கயிலை பதவி அளிக்கும்.யமுனை தீர்த்தம்- பொன் விருத்தி உண்டாக்கும்.கோதாவரி தீர்த்தம்- இஷ்ட சித்தி உண்டாக்கும்.நர்மதை தீர்த்தம்- திடகாத்திரம் உண்டாக்கும்.சரசுவதி தீர்த்தம்- ஞானம் அருளும்.காவிரி தீர்த்தம்- புருஷார்த்தங்களை நல்கும்.குமரி தீர்த்தம்- அசுவமேத யாகப் பலன்களைக் கொடுக்கும்.பயோடிவி தீர்த்தம்- கோலாகலம் அளிக்கும்.சரயு தீர்த்தம்- மனக்கவலை தீர்க்கும்.கன்னிகா தீர்த்தம்- துன்பம் நீக்கி இன்பத்தைச் சேர்க்கும். (இதில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளனவாம்.)தேவ தீர்த்தம்- சகல பாவங்களும் போக்கி தேவேந்திர பதவியைத் தரும்.

இந்த மகாமக குளத்தை சீர்செய்தவர் ஸ்ரீகோவிந்த தீட்சிதர். அச்சுதப்ப நாயக்கரின் பெரும் முயற்சியால் இக்குளங்கள் வெட்டப் பட்டன. தீட்சிதரின் முயற்சியால் மகாமகக் குளத்தில் படித்துறைகள் அமைக்கப்பட்டன. மகாமக தீர்த்தம் தனிப்பட்ட ஒரு தீர்த்தமல்ல; இறைவனின் அனுக்ரகத்தைப் பெற பல புனித தீர்த்தங்கள் ஒன்றுசேர்ந்தது. ராஜகுரு கோவிந்த தீட்சிதர் காலத்தில்தான் கும்ப கோணம் மகாமகம் சிறப்பு பெற்று உலகப் புகழ்பெற்றது.எந்த பரிகாரங்கள் செய்தாலும் தீர்க்க முடியாத பழி பாவங்கள் இக்குளத்தில் நீராடுவதால் தீயிலிட்ட பஞ்சுபோல் பொசுங்கிவிடும். சித்திரை, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களில் நீராடுவது மிகவும் விசேஷம்.

No comments:

Post a Comment