ஒவ்வொரு தினத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
ஞாயிற்றுக் கிழமையும் சப்தமி திதியும் ஒன்று சேரும் தினத்தை பானு சப்தமி தினம்
என்பார்கள். இந்த தினம் சூரிய கிரகண நாளுக்கு சமமானது ஆகும்.
அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம்
செய்ய . கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
அதாவது நாளைய தினம் நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள்,
ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக்
காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.
ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம்
செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம்
பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு
பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் (கோதுமை தானம் செய்தால் பார்வை சரியாகும்) , சூரியனின் அருளைப் பெற்றுத்
தரும்.
No comments:
Post a Comment