Sunday, 28 February 2016

ஜெயஜெய தேவி!

 
 




ஜெயஜெய தேவி ஜெயஜெய தேவி 
துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்!  (2)

துர்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளே தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும் சர்வ மங்களம் கூடும்



ஜெயஜெய தேவி ஜெயஜெய தேவி 
துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்! 



பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்கும போட்டும் வெற்றி பாதையைக்  காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய்போல் நம்மைக் காப்பவளே 



ஜெயஜெய தேவி ஜெயஜெய தேவி 
துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்! 



சங்கு சக்ரம் வில்லும் அம்பும் மின்னும் வாளும்
வேலுடன் சூலமும் 
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் -- 

சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்


திங்களை முடிமேல் சூடி நிற்பாள் 

மங்கள வாழ்வையும் தந்திடுவாள்
மங்கையர்க்கரசியும் அவளே அங்கையர்கண்ணியும் அவளே 


ஜெயஜெய தேவி ஜெயஜெய தேவி 
துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்! 




No comments:

Post a Comment