.யுகாதி புத்தாண்டு
கொண்டாட்டம்
யுகாதி புத்தாண்டு
பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் தங்கள்
வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பர். அதிகாலை எழுந்து தலைக்கு
குளித்து புத்தாடை அணிந்துகொண்டு வீட்டில் பெரியவர்களிடம் ஆசி பெறுவர் .. பின்னர்
யுகாதி ஸ்பெசல் இனிப்புகளை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி வாழ்த்துக்களை
பகிர்ந்து கொள்வார்கள்.
பானாக்கம்
என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும்
ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு
சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். கோடைகாலத்தில் உடலின் களைப்பை நீக்கி
குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். இது
அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.
உகாதி நாளன்று இந்த பானம் செய்யப்பட்டு விருந்தினர்களுக்கு அளிக்கப்படுவது
சிறப்பம்சமாகும்.
உகாதி
விருந்தில் இடம் பெறும் முக்கிய உணவு உகாதி பச்சடி. இதில் மாங்காய், வெல்லம்,
மிளகாய், புளி, வேப்பம்பூ,
உப்பு, என அறுசுவையும் கலந்து
செய்யப்படுகிறது. வாழ்க்கையானது இன்பம், துன்பம் நிறைந்தது
என்பதை உணர்த்தவே இதுபோன்ற உணவுகளை வருடத்தின் முதல்நாள் செய்யப்படுகிறது.
மராத்தியர்களின்
கொண்டாட்டம்
மக்கள் அதிகாலையில் எழ்ந்திருந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து வீட்டின்
முன்புறம் பல வர்ண பொடிகளால் "ரங்கோலி" என்று அழைக்கப்படும் கோலமிட்டு
வீட்டின் வாயிலில் மாவிலை தோரணங்களினால் அலங்கரிப்பர்.
வீட்டின் முன்புறம்
"குடி" என்று அழைக்கப்படும் ஒரு முளைக்கம்பின் மேல்புறம் ஒரு பித்தளை /
செம்பு / வெள்ளி சொமபினை கவிழ்த்தி வைத்து அதை பட்டு துணியினால் சுற்றி பூக்களால்
அலங்கரித்து நிறுத்தி வைத்து வழிபட்ட பின்னர் குடும்பத்தினருடன் அருகில் உள்ள
கோவிலுக்கு சென்று வழிபட்டு வேப்பிலை, சர்க்கரை கலந்த பிரசாதத்தை உண்பார்கள்.
வாழ்க்கை என்பது கசப்பும்
இனிமையும் கலந்து (சுக துக்கத்துடன்) இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பிரசாதம்
வழங்கப்படுகிறது. யுகாதி விருந்தில் பண்டிகையின் முக்கிய இனிப்பு பண்டமான
"புரண் போளி" இடம்பெறும் என்பது சிறப்பம்சமாகும்.
புத்தாண்டு தினத்தை
ஒட்டி வீட்டு பெரியவர்களை காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை
பெறுவது ஒரு முக்கிய சடங்காகும்.
No comments:
Post a Comment