சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தி திதி வார்த்தா கௌரி விரதம். அக்ஷய திருதியைக்கு மறுநாள்.
வார்த்தா என்றால் செய்தி என்று அர்த்தம்.
மாலை 6 மணிக்கு மேல் சிவ பார்வதி படத்தை கிழக்கு முகமாக வைத்து அம்பாளுக்கு வலது புறம் நெய் தீபமும், இடது புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி முல்லை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
பழ வகைகளும், சத்து மாவும் நிவேதிக்க வேண்டும்.
பின்னர் ஆலயத்துக்கு சென்று அம்பாளையும், சிவபெருமானையும் தரிசிக்க வேண்டும்.
நிவேதனப் பொருள்களை நாமும் சாப்பிட்டு, பிறருக்கும் கொடுக்க வேண்டும்.
இந்த வார்த்தா கௌரி பூஜையை செய்வதால் நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்திகள் சீக்கிரம் வந்து சேரும்.
மகிழ்ச்சி உண்டாகும்.
இன்று விரதம் இருந்து சிவன் கோயில் சென்று பார்வதி தேவியை தரிசனம் செய்தால், திருமணம் கூடும்.
No comments:
Post a Comment