Saturday, 7 May 2016

அருள் மழை பொழியும் அஷ்டலட்சுமி வழிபாடு!


ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல் (தமிழில்)

உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி
உன்பாதம் சரணடைந்தோம் அஷ்டலக்ஷ்மி
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலெக்ஷ்மி
கலையாவும் நிறைந்தவளே அஷ்டலக்ஷ்மி
நிலையான அருட்செல்வம் அருள்பவள் அவளே
உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே (உலகெங்கும்)

ஸ்ரீ லக்ஷ்மி

பாற்கடலில் தேவர் அமுதம் கடையும் போது
பாரெல்லாம் வியந்திட நாரணி உதித்தாள்
நாரணனும் தேவியை மார்பினில் தாங்கி நின்றார்
பூரணியும் பூவுலகைக் காக்க வந்தாள்
அவளே ஸ்ரீ லக்ஷ்மி தேவி லக்ஷ்மி

1. ஸ்ரீ ஆதிலக்ஷ்மி

இரு கண்கள் திருக்கரங்கள் கொண்டவள் அவளே
இகபரசுகம் யாவும் கொடுப்பவள் அவளே
அபயம் அளிப்பவளே ஆதிலக்ஷ்மி அவளே
ஆபரணம் அணிந்த ஒளிக்கதிர் ராணி அவளே
எழில் மலரத் தோரணங்கள் சூழ்பவள் அவளே
அழகிய தாமரைமேல் வாழ்பவள் அவளே
மஞ்சள் நிறஉடை தரித்து மலர்மாலை அணிந்தவளே
மங்களம் நிறைந்தவளே வல்லமை மிகுந்தவளே
ஆதிலக்ஷ்மி அன்னை ஆதிலக்ஷ்மி

2. ஸ்ரீ சந்தானலக்ஷ்மி

ஜடாமகுடம் அணிந்து காட்சி தந்தாள்
அன்னை இடுப்பினில் சுகுமாரனை ஏந்தி நின்றாள்
வீரம் மிகுந்த அபயக் கரங்கள் இரண்டிலே
பூரணக் கும்பமும் வைரக் கங்கணமும் விளங்க
அழகிய மாதரும் தீ பமும் தாங்கியே
எழில் வெண் சாமரம் வீசியிருக்க
முத்திழைத்த உரையோடு துலங்கும்
சக்தியோடு எழில் ராணியாக
சந்தானலக்ஷ்மி அவதரித்தாள்
அவள் சந்தான சௌபாக்கியம் தந்திடுவாள்

3. ஸ்ரீ கஜலக்ஷ்மி

பொன்னிறக் குடம் தாங்கி வெண்ணிறயானை யிரண்டு
தன்னிரு துதிக் கையினால் அபிஷேக நீர் கொண்டு
அன்னைக்கு நீராட்ட அலங்கார தேவதையாய்
வெண்பட்டு புடவையுடன் காட்சி தந்தாள்
கரங்கள் நான்கும் உடையவளாம் கஜலக்ஷ்மி
திருக்கரத்தில் ஞானமுத்திரை உடையவளாம் கஜலக்ஷ்மி
இரவும் பகலும் துதிப்பவர்க்கே கஜலக்ஷ்மி
அரச போகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி

4. ஸ்ரீ தனலக்ஷ்மி

செல்வ திருமகளாம் மோகனவல்லி
எல்லோரும் கொண்டாடும் வேதவல்லி
எண் கரங்களில் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணிஸ்யாமாளை
வரத முத்திரை காட்டியே பொருள் செல்வம்
வழங்கிடும் அம்பிகை
மாமனோகர தேவி மார்பினில் ஒற்றைவடப் பொன்னட்டிகை
சிரத்தினில் மணி மகுடமும் தாங்கிடும் சிந்தாமணி - பல
வரங்கள் வழங்கிடும் ரமாமணி - அவள்
வரதராஜ சிகாமணி அவள்தான் தனலக்ஷ்மி

5. ஸ்ரீ தான்யலக்ஷ்மி

ஆற்றோரம் தன்னில் சுகாசனத்தில் அமர்ந்து
போற்று மன்பரைக் கண்டு மலர்ச்சியும் கொண்டுஎழில்
வாழை மரங்கள் மலர்தேன் பொழிந்து பூஜிக்க
ஆழ்கடல் அன்னையவள் காட்சி தந்தாள்
இடக்கை மேல்புறத்தில் செழுங்கரும்பை யேந்தி
இகத்தினில் நிலவளம் செழிக்க வந்தாள்
அவள்தான் தான்யலக்ஷ்மி! தான்யலக்ஷ்மி

6. ஸ்ரீ விஜயலக்ஷ்மி

சிங்கார முடிதனிலே அலங்காரக் கூந்தல்
செம்மேனியில் சிறந்த பொன்னாபரணங்கள்
அங்குச பாசமும் பல ஆயுதம் கையில் கொண்டு
செங்கோல் செலுத்தும் ராஜவடிவம் கொண்டாள்
அன்னையின் முகம் தன்னில் தவழ்ந்திடும்மந்தஹாசம்
அன்னைப் பறவை தாங்கும் அழகிய மலர்ப்பாதம்
அன்பரைக் காத்து நிற்கும் அவளது தாய்ப்பாசம்
துன்பங்கள் நேராமல் காத்திடும் அவள் நேசம்
விஜயலக்ஷ்மி தேவி விஜயலக்ஷ்மி !

7. ஸ்ரீ மகாலக்ஷ்மி

நிறைந்திடும் அழகோடு வளரும் பொன்மேனியாள்
அறம், பொருள், வீடு, இன்பம் தரும் நான்கு கரம் கொண்டாள்
அழகிய மலர் கொண்டு யானைகள் வணங்கி நிற்க
எழிலாக காட்சி தந்தாள் எங்கள் தாய்
சௌபாக்கியம் தரும் தெய்வம் தேவி லக்ஷ்மி
அபயக்கரம் நீட்டி அணைக்கும் மகாலக்ஷ்மி !

8. ஸ்ரீ வீரலக்ஷ்மி

ஒன்பது பனைமரங்கள் அடுத்து நிற்க தேவி
சிம்மாசனத்தின்மேல் அமர்ந்திருக்க
வெற்றி எட்டு கைகளிலும் சூலம் கபாலம் கொண்டாள்
நற்கதியும் நமக்கருள நானிலத்தில் அவதரித்தாள்
பொற்பதம் பணிந்தவர்க்கு பொன்னாவரம் தந்து
வெற்றியுடன் வாழவைப்பாள் வீரலக்ஷ்மி



வரவேண்டும் வரவேண்டும் அஷ்டலக்ஷ்மி
அருளைத் தரவேண்டும் தரவேண்டும் ஆதிலக்ஷ்மி
சந்ததியைத் தந்திடுவாய் சந்தான லக்ஷ்மி
எண்ணும் பல யோகங்கள் தருவாயே கஜலக்ஷ்மி
தனம் பெருக மனமும் மகிழ காண்பாராய் தனலக்ஷ்மி
மனம் குளிர நிலம் செழிக்க நீயருள்வாய் தான்யலக்ஷ்மி
கலைகளில் வெற்றிதனைக் காண அருள் விஜயலக்ஷ்மி
சகல சௌபாக்கியம் தந்திடு மகாலக்ஷ்மி
உலகெங்கும் வீரத்தை நீயருள்வாய் வீரலக்ஷ்மி
உன்நாமம் சொல்பவர்க்கு அருள்புரிவாய் அஷ்டலக்ஷ்மி

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி வருகை பாடல்

எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டுவகை நானறிந்தேன் கோலமயி லானவளே
வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லெட்சுமி
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்

சிந்தைனைக்குச் செவிசாய்த்துச் சீக்கிரமென் னில்லம்வந்து
உந்தனருள் தந்திருந்தால் உலகமெனைப் பாராட்டும்
வந்தமர்ந்து உறவாடி வரங்கள்பல தருவதற்கே
சந்தான லெட்சுமியே தான் வருவாய் இதுசமயம்

யானையிரு புறமும் நிற்கும் ஆரணங்கே உனைத்தொழுதால்
காணுமொருபோ கமெலாம் காசினியில் கிடைக்குமென்பார்
தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்தகஜ லெட்சுமியே
வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்

அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்
உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ
இன்றோடு துயர்விலக இனியதன லெட்சுமியே
மன்றாடிக் கேட்கிறேன் வருவாய் இதுசமயம்

எங்கள்பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும்
தங்கநிறக் கதிராகித் தழைத்துச் சிரிப்பவளே
பங்குபெறும் வாழ்க்கையினைப் பார்தான்ய லெட்சுமியே
மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்

கற்றுநான் புகழடைந்து காசியினில் எந்நாளும்
வெற்றியின்மேல் வெற்றிபெற வேணுமென்று கேட்கிறேன்
பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார்விஜய லெட்சுமியே
வற்றாத அருட்கடலே வருவாய் இதுசமயம்

நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால்
தஞ்சமென உனையடைந்தேன் தாமரைபோல் நிற்பவளே
அஞ்சாது வரம் கொடுக்கும் அழகுமகா லெட்சுமியே
வஞ்சமில்லா தெனக்கருள வருவாய் இதுசமயம்

ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும்
சூழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே
வாழும் வழிகாட்டிடவே வாவீர லெட்சுமியே
மாலையிட்டு போற்றுகிறேன் வருவாய் இதுசமயம்

அஷ்டலட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் அகில லட்சுமியை நம:
ஓம் அன்ன லட்சுமியை நம:
ஓம் அலங்கார லட்சுமியை நம:
ஓம் அஷ்ட லட்சுமியை நம:
ஓம் அமிர்த லட்சுமியை நம:
ஓம் அமர லட்சுமியை நம:
ஓம் அம்ச லட்சுமியை நம:
ஓம் அபூர்வ லட்சுமியை நம:
ஓம் ஆதி லட்சுமியை நம:
ஓம் ஆத்ம லட்சுமியை நம:

ஓம் ஆனந்த லட்சுமியை நம:
ஓம் இஷ்ட லட்சுமியை நம:
ஓம் இன்ப லட்சுமியை நம:
ஓம் இதய லட்சுமியை நம:
ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை நம:
ஓம் ஈகை லட்சுமியை நம:
ஓம் உண்மை லட்சுமியை நம:
ஓம் உதய லட்சுமியை நம:
ஓம் உத்தம லட்சுமியை நம:
ஓம் உபாசன லட்சுமியை நம:

ஓம் ஊர்ஜித லட்சுமியை நம:
ஓம் எட்டு லட்சுமியை நம:
ஓம் ஏக லட்சுமியை நம:
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை நம:
ஓம் ஒற்றுமை லட்சுமியை நம:
ஓம் ஒளிப்பிரகாச லட்சுமியை நம:
ஓம் ஓங்கார லட்சுமியை நம:
ஓம் ஒளதர்ய லட்சுமியை நம:
ஓம் ஒளஷத லட்சுமியை நம:
ஓம் ஒளபாஷன லட்சுமியை நம:

ஓம் கருணை லட்சுமியை நம:
ஓம் கனக லட்சுமியை நம:
ஓம் கபில லட்சுமியை நம:
ஓம் கந்த லட்சுமியை நம:
ஓம் கஸ்தூரி லட்சுமியை நம:
ஓம் சந்தான லட்சுமியை நம:
ஓம் சங்கு லட்சுமியை நம:
ஓம் சக்கர லட்சுமியை நம:
ஓம் சந்தோஷ லட்சுமியை நம:
ஓம் செல்வ லட்சுமியை நம:

ஓம் சரச லட்சுமியை நம:
ஓம் சகல லட்சுமியை நம:
ஓம் ஞான லட்சுமியை நம:
ஓம் தர்ம லட்சுமியை நம:
ஓம் தன லட்சுமியை நம:
ஓம் தவ லட்சுமியை நம:
ஓம் நவ லட்சுமியை நம:
ஓம் தான லட்சுமியை நம:
ஓம் வைர லட்சுமியை நம:
ஓம் நீல லட்சுமியை நம:

ஓம் முத்து லட்சுமியை நம:
ஓம் பவள லட்சுமியை நம:
ஓம் மாணிக்க லட்சுமியை நம:
ஓம் மரகத லட்சுமியை நம:
ஓம் கோமேதக லட்சுமியை நம:
ஓம் பதுமராக லட்சுமியை நம:
ஓம் வைடூர்ய லட்சுமியை நம:
ஓம் பிரம்ம லட்சுமியை நம:
ஓம் விஷ்ணு லட்சுமியை நம:
ஓம் சங்கர லட்சுமியை நம:

ஓம் சிவ லட்சுமியை நம:
ஓம் ஜோதி லட்சுமியை நம:
ஓம் தீப லட்சுமியை நம:
ஓம் தீன லட்சுமியை நம:
ஓம் தீர்த்த லட்சுமியை நம:
ஓம் திவ்விய லட்சுமியை நம:
ஓம் தான்ய லட்சுமியை நம:
ஓம் வீரலெட்சுமியை நம:
ஓம் வித்யா லட்சுமியை நம:
ஓம் புவ லட்சுமியை நம:

ஓம் விஜய லட்சுமியை நம:
ஓம் விபுல லட்சுமியை நம:
ஓம் விமல லட்சுமியை நம:
ஓம் ஜெய லட்சுமியை நம:
ஓம் கெஜ லட்சுமியை நம:
ஓம் வர லட்சுமியை நம:
ஓம் மஹா லட்சுமியை நம:
ஓம் வேணு லட்சுமியை நம:
ஓம் பாக்கிய லட்சுமியை நம:
ஓம் பால லட்சுமியை நம:

ஓம் பக்த லட்சுமியை நம:
ஓம் பாமா லட்சுமியை நம:
ஓம் புவன லட்சுமியை நம:
ஓம் புனித லட்சுமியை நம:
ஓம் புண்ணிய லட்சுமியை நம:
ஓம் பூமி லட்சுமியை நம:
ஓம் சோபித லட்சுமியை நம:
ஓம் ராம லட்சுமியை நம:
ஓம் சீதா லட்சுமியை நம:
ஓம் ஜெய லட்சுமியை நம:

ஓம் சித்த லட்சுமியை நம:
ஓம் சிங்கார லட்சுமியை நம:
ஓம் ஸ்வர்ண லட்சுமியை நம:
ஓம் நாக லட்சுமியை நம:
ஓம் யோக லட்சுமியை நம:
ஓம் போக லட்சுமியை நம:
ஓம் புவன லட்சுமியை நம:
ஓம் கோமள லட்சுமியை நம:
ஓம் மாத லட்சுமியை நம:
ஓம் பிதா லட்சுமியை நம:

ஓம் வைபவ லட்சுமியை நம:
ஓம் குரு லட்சுமியை நம:
ஓம் தெய்வ லட்சுமியை நம:
ஓம் தாமரை லட்சுமியை நம:
ஓம் நித்திய லட்சுமியை நம:
ஓம் சாந்த லட்சுமியை நம:
ஓம் பிரசன்ன லட்சுமியை நம:
ஓம்மங்களலட்சுமியை



ஸ்ரீ அஷ்டலட்சுமி 108 போற்றிகள்

ஓம் அகில லட்சுமியை போற்றி
ஓம் அன்ன லட்சுமியை போற்றி
ஓம் அலங்கார லட்சுமியை போற்றி
ஓம் அஷ்ட லட்சுமியை போற்றி
ஓம் அமிர்த லட்சுமியை போற்றி
ஓம் அமர லட்சுமியை போற்றி
ஓம் அம்ச லட்சுமியை போற்றி
ஓம் அபூர்வ லட்சுமியை போற்றி
ஓம் ஆதி லட்சுமியை போற்றி
ஓம் ஆத்ம லட்சுமியை போற்றி

ஓம் ஆனந்த லட்சுமியை போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியை போற்றி
ஓம் இன்ப லட்சுமியை போற்றி
ஓம் இதய லட்சுமியை போற்றி
ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை போற்றி
ஓம் ஈகை லட்சுமியை போற்றி
ஓம் உண்மை லட்சுமியை போற்றி
ஓம் உதய லட்சுமியை போற்றி
ஓம் உத்தம லட்சுமியை போற்றி
ஓம் உபாசன லட்சுமியை போற்றி

ஓம் ஊர்ஜித லட்சுமியை போற்றி
ஓம் எட்டு லட்சுமியை போற்றி
ஓம் ஏக லட்சுமியை போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை போற்றி
ஓம் ஒற்றுமை லட்சுமியை போற்றி
ஓம் ஒளிப்பிரகாச லட்சுமியை போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியை போற்றி
ஓம் ஒளதார்ய லட்சுமியை போற்றி
ஓம் ஒளஷத லட்சுமியை போற்றி
ஓம் ஒளபாஷன லட்சுமியை போற்றி

ஓம் கருணை லட்சுமியை போற்றி
ஓம் கனக லட்சுமியை போற்றி
ஓம் கபில லட்சுமியை போற்றி
ஓம் கந்த லட்சுமியை போற்றி
ஓம் கஸ்தூரி லட்சுமியை போற்றி
ஓம் சந்தான லட்சுமியை போற்றி
ஓம் சங்கு லட்சுமியை போற்றி
ஓம் சக்கர லட்சுமியை போற்றி
ஓம் சர்வ லட்சுமியை போற்றி
ஓம் சந்தோஷ லட்சுமியை போற்றி

ஓம் சரச லட்சுமியை போற்றி
ஓம் சகல லட்சுமியை போற்றி
ஓம் ஞான லட்சுமியை போற்றி
ஓம் தர்ம லட்சுமியை போற்றி
ஓம் தன லட்சுமியை போற்றி
ஓம் தவ லட்சுமியை போற்றி
ஓம் நவ லட்சுமியை போற்றி
ஓம் தான லட்சுமியை போற்றி
ஓம் வைர லட்சுமியை போற்றி
ஓம் நீல லட்சுமியை போற்றி

ஓம் முத்து லட்சுமியை போற்றி
ஓம் பவள லட்சுமியை போற்றி
ஓம் மாணிக்க லட்சுமியை போற்றி
ஓம் மரகத லட்சுமியை போற்றி
ஓம் கோமேதக லட்சுமியை போற்றி
ஓம் பதுமராக லட்சுமியை போற்றி
ஓம் வைடூர்ய லட்சுமியை போற்றி
ஓம் பிரம்ம லட்சுமியை போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியை போற்றி
ஓம் சிவ லட்சுமியை போற்றி

ஓம் ஜோதி லட்சுமியை போற்றி
ஓம் தீப லட்சுமியை போற்றி
ஓம் தீன லட்சுமியை போற்றி
ஓம் தீர்த்த லட்சுமியை போற்றி
ஓம் திவ்விய லட்சுமியை போற்றி
ஓம் தான்ய லட்சுமியை போற்றி
ஓம் வீர லட்சுமியை போற்றி
ஓம் வித்யா லட்சுமியை போற்றி
ஓம் விஜய லட்சுமியை போற்றி
ஓம் விபுல லட்சுமியை போற்றி

ஓம் விமல லட்சுமியை போற்றி
ஓம் ஜெய லட்சுமியை போற்றி
ஓம் வர லட்சுமியை போற்றி
ஓம் மஹா லட்சுமியை போற்றி
ஓம் வேணு லட்சுமியை போற்றி
ஓம் பாக்கிய லட்சுமியை போற்றி
ஓம் பால லட்சுமியை போற்றி
ஓம் பக்த லட்சுமியை போற்றி
ஓம் பாமா லட்சுமியை போற்றி
ஓம் புவன லட்சுமியை போற்றி

ஓம் புனித லட்சுமியை போற்றி
ஓம் புண்ணிய லட்சுமியை போற்றி
ஓம் பூமி லட்சுமியை போற்றி
ஓம் சோபித லட்சுமியை போற்றி
ஓம் ராம லட்சுமியை போற்றி
ஓம் சீதா லட்சுமியை போற்றி
ஓம் சித்த லட்சுமியை போற்றி
ஓம் சிங்கார லட்சுமியை போற்றி
ஓம் ஸ்வர்ண லட்சுமியை போற்றி
ஓம் நாக லட்சுமியை போற்றி

ஓம் யோக லட்சுமியை போற்றி
ஓம் போக லட்சுமியை போற்றி
ஓம் புவன லட்சுமியை போற்றி
ஓம் கோமள லட்சுமியை போற்றி
ஓம் மாதா லட்சுமியை போற்றி
ஓம் பிதா லட்சுமியை போற்றி
ஓம் குரு லட்சுமியை போற்றி
ஓம் தெய்வ லட்சுமியை போற்றி
ஓம் தாமரை லட்சுமியை போற்றி
ஓம் நித்திய லட்சுமியை போற்றி

ஓம் சாந்த லட்சுமியை போற்றி
ஓம் தந்திர லட்சுமியை போற்றி
ஓம் காக்கும் லட்சுமியை போற்றி
ஓம் ராஜ்ய லட்சுமியை போற்றி
ஓம் மோக்ஷ லட்சுமியை போற்றி
ஓம் பராக்கிரம லட்சுமியை போற்றி
ஓம் பிரசன்ன லட்சுமியை போற்றி
ஓம் மங்கள லட்சுமியை போற்றி.

 

 

No comments:

Post a Comment