சர்வபூதமணி  மனோன்மணி பலப்பிரதமணி பலவிகரணி  கலவிகரணி காளி ரௌத்ரி கேட்டை வாமை என்ற ஒன்பது சக்திகளே நவசக்திகள் என்பது ஒரு கருத்து.

தீப்தை சூட்சமை ருஜை  பத்ரை விழத்யை விமலை அமோகை வித்யுதை சர்வதோக்யை என்பன நவசக்திகளின் பெயர்கல் என்பது இன்னொரு கருத்து. மகாசக்தியான பார்வதி தேவி எல்லா வகையான சக்தியாகவும் இருப்பவள். எனவே உமாதேவியை நவசக்திகளின் இருப்பிடமாக வழிபடுவது ஆகம நூல்களின் கருத்து. இப்படி ஒரே சமயத்தில் ஒன்பது சக்திகளையும் ஒன்பது வகையான மலர்களால் ஒன்பது அர்ச்சகர்கள் அர்ச்சிப்பார்கள். இது நவசக்தி அர்ச்சனையாகும்.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது தருமபுரம் ஆதீனம். ஆதீனத்தின் நிர்வாகத்தில் 27 தேவஸ்தானங்கள் இருக்கின்றன. தேவஸ்தானங்களில் இருக்கும் அம்பாளுக்கு தை வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.