பறவைகளுக்காக மட்டுமே ஆயிரக்கணக்கான கிலோ தானியங்கள் சிதறிக்கிடப்பதை நீங்கள் கண்டதுண்ட? அந்தத் தானியங்களை ஆயிரக்கணக்கான பச்சைக் கிளிகள் கொத்தித் தின்னும் காட்சியை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?
இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் இல்லை என்று பதிலளித்தால், உங்களை நாங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் அருகில் உள்ள பஞ்ச்குயான் மந்திர் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.
இங்கு அமைந்துள்ள ஹனுமன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்தக் கோயில் “பஞ்ச்குயான் ஹனுமன் மந்திர்” என்று பரவலாக அறியப்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான பச்சைக் கிளிகள் நாள்தோறும் வருகின்றன.
இந்தக் கோயில் வளாகத்திற்குள் சிறிய சிவன் கோயிலும் அமைந்துள்ளது. மனிதர்கள் மட்டுமல்லாது பச்சைக் கிளிகள் கூட கடவுள் மீது ஏராளமான பக்தி கொண்டிருப்பதை இங்கு காண முடியும். கடந்த பல வருடங்களாக பச்சைக் கிளிகள் இங்கு வருவதாகக் கோயிலில் வசிக்கும் துறவிகள் கூறுகின்றனர்.
நாள்தோறும் 4 ஆயிரம் கிலோ தானியங்கள் பச்சைக் கிளிகள் உண்பதற்காக பரப்பப்படுகின்றன.
பச்சைக் கிளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், 3,000 சதுர அடிபரப்பளவுள்ள கான்கிரீட் கூரையை சில பக்தர்களின் உதவியுடன் கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது. தினமும் காலை 5.30 முதல் 6.00 மணி வரையும், மாலை4 முதல் 5 மணி வரையும் கான்கிரீட் தளத்தின் மீது தானியங்கள் பரப்பப்படுகின்றன. சுமார் 1 மணி நேரத்தில் தானியங்கள் முழுவதையும் கிளிகள் தின்று விடுவதாக, கோயில் பணியாளர் ரமேஷ் அகர்வால் தெரிவித்தார்.
No comments:
Post a Comment