ஆடி திருதியை வளம் தரும் ஸ்வர்ண கௌரி விரதம்!
செல்வங்களின் அதிபதியாக, இன்பங்களைத் தூய வழியில் துய்க்கும் பாக்யத்தை அருள்பவளாக விளங்குபவள் ஸ்வர்ணகௌரி. அவள் ஆனந்தம் என்னும் பெருங்கடலில் பொன்மயமான அழகிய மீன் மீது அமர்ந்து அருள்புரிகின்றாள். கரங்களில் தாமரை நீலோற்பவம், பூரண கலசம் ஆகிவயற்றுடன் நவரத்தின ஆபரணங்கள் நிறைந்த பெட்டியையும் கொண்டிருக்கிறாள். இவளை அஷ்ட லட்சுமிகளும் ஷோடச சரஸ்வதிகளும் அஷ்ட பைரவர்களும் போற்றிக் கொண்டாடுகின்றனர். கன்னிப் பெண்களான தெய்வங்கள் அறுபத்து நால்வர் சூழ்ந்துள்ளனர். இத்தகைய பல் வகை கணங்களால் கொண்டாடப்படும் தெய்வமாக ஸ்வர்ண கௌரி விளங்குகிறாள்.
சகல தெய்வங்களோடும் அருள்பாலிக்கும் ஸ்வர்ண கௌரி வீற்றிருந்து அருள்பாலிக்கும் மண்டலத்தை வழிபடுவதால் அரசனுக்கு நிகரான அதிகாரத்தையும் சுகமான வாழ்வையும் பெறலாம்.
தமது குல தெய்வம் இன்னதென்று அறியாதவர்களும் குல தெய்வத்தை மறந்து போனவர்களும் இவளை வழிபடுவதால் சகல மேன்மைகளும் அடைகின்றனர்

No comments:
Post a Comment