பெங்களூரில் ஒரு ஆலயத்தில் 108 வினாயகர் சிலைகள் பிரமிட் போல நிறுவப்பட்டு உள்ள படியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அவற்றை ஆகம முறைப்படி 108 வினாயக உருவங்களுக்கு உண்டான மந்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அவை 108 பிள்ளையார் தத்துவத்தை பிரதிபலிக்கிறதாம். அதை 108 பிள்ளையார் ஆலயம் என்று கூறுகிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்னால் குமாரசாமி லேஅவுட் எனும் இடத்தில் கட்டிடங்கள் எழும்ப அங்கு சாலைகள் போடப்பட்டதாம். அப்போது சாலை அமைக்கும் ஒரு ஒப்பந்தக்காரரின் கனவில் வினாயகர் தோன்றி அங்கு தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறியதாகவும், அவரும் அவர் கனவில் வந்தது போலவே அங்கு ஆலயம் அமைத்ததாகவும் சிலர் கூறினார்கள்.
கர்னாடகத்தில் 108 வினாயகர் சிலைகளை கருவறை சன்னிதானத்தில் கொண்ட ஆலயம் வேறு எதுவுமே கிடையாது. அங்கு வருபவர்கள் பிராத்தனைகளை நிறைவேற அர்சிக்கும்போது 108 வினாயகருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்யும் விதமாக அந்த சிலைகளின் கீழ் மட்டத்தில் உள்ள மூல வினாயகருக்கே பூஜைகளை செய்த பின் அனைத்து வினாயகரின் சிலைக்கும் கற்பூர ஆரத்தியைக் காட்டுகிறார்கள்.
ஆலயம் செல்லும் வழி சற்று கடினமாக இருக்கிறது என்றாலும் குமாரசாமி லேஅவுட்டில் அந்த ஆலயம் செல்லும் வழியைக் கேட்டால் அங்கு செல்லும் வழியைக் கூறுகிறார்கள்.
இது போல 108 வினாயகர் சிலைகளைக் கொண்ட ஆலயம் ஒன்று கோயம்பத்தூர் அல்லது பழனியிலும் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment