Monday, 20 June 2016

சிந்தை குளிர வரமளிப்பாள் சித்ரா நித்யா!






திதி நித்யா தேவிகளில் கடைசி தேவியான சித்ரா நித்யா பால சூரியனைப் போன்ற தேக காந்தி கொண்டவள். பிறைச் சந்திரனை தரித்து சர்வ அலங்காரங்களுடனும் சகல லட்சணங்களுடனும் திருவருட்பாலிக்கிறாள். பாசம், அங்குசம், வரதம், அபயமுத்திரை தரித்து பட்டாடை அணிந்து முக்கண்ணியாய் காட்சியருள்கிறாள். கருணையே உருவான இந்த தேவி தாங்க முடியாத வேதனையில் வருந்தும் உயிர்களை அணைத்து ஆதரிப்பவள். நம் உள்ளத்தில் புகும் பயனற்ற தீய குணங்களை நீங்கி ஞான தீபத்தை ஏற்றுபவள். சோதனைகளை வென்று சாதனைகளைச் செய்ய திருவருள்புரிபவள். நம்பினோர்க்கு அபயம் அருளும் சம்பு மோகினி. ஜகன்மாதா.


அழகே வடிவாய் அருளே உருவாய் பிரகாசிக்கும் இந்த சித்ரா நித்யா தேவி சர்வானந்தமயீ. என்றும் நிலையானவள். கனவிலும் நினைவிலும் அடியவர் இதயத்தில் வீற்றிருந்தருள்பவள். அண்டங்கள் அனைத்திலும் தன் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள். நம் எண்ணத்திற்கு எட்டாத வஸ்து அவள். எண்ணிய எண்ணம் கடந்து நின்றாள் என்ற திருமூலர் வாக்குப்படி மனோவாசாம கோசரா என நம் மனதுக்கும் வாக்குக்கும் எட்டாதவள்.  யதோ வாசோ நிவர்த்தந்தே என்கிறது தைத்ரிய உபநிஷத்.  அவள் இப்படிப்பட்டவள்தான் என்று முழுக்க அறிந்தவர் யாருமில்லை.  மனத்தே ஒருவர் விழும்படி அன்று விள்ளும்படி அன்று என்றார் அபிராமி பட்டர்.

 சக்தியைப் பணிந்தால் சர்வமும் நிச்சயம். அன்னையே உன்னைப் போற்றுகிறோம். திருவருள் மழை பொழிக. நலமெல்லாம் அருள்க.

வழிபடு பலன்

தன ஆகர்ஷணம், நிதி லாபங்கள், புதையல் போன்ற திடீர் சம்பத்துக்கள் கிட்டும். சகல நன்மைகளும் மென்மேலும் விருத்தியாகும்.

சித்ரா காயத்ரி

ஓம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி பிரசோதயாத்.

மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் அம் ச்கெளம் சித்ராயை நம:

த்யான ஸ்லோகங்கள்

உத்யதாதித்ய ஸங்காஸம் நவரத்ன விபூஷணாம்
நவரத்ன கிரீடம் ச சித்ர பத்மாங்கு ஸோஜ்வலாம்
சதுர்புஜாம் த்ரிநயனாம் ஸுசின் முகஸன்முகீம்
ஸர்வானந்தமயீம் நித்யாம் ஸமஸ்தேப் ஸித தாயினீம்
சதுர்புஜாம் புஜை: பாசமங்குசம் சவராபயே
ததானாம் மங்கலாம் பத்மகர்ணிகாம் நவயெளவனாம்.


ஸுப்ராங்கீம் க்ஞானதாம் நித்யாம் விசித்ராம் குங்குமோஜ்ஜ்வலாம்
வரதாபய ஸோபாட்யாம் நாநா சஸ்த்ர தராம்க்வசித்
பாலார்க்க மண்டலாபாஸாம் சதுர்பா ஹும் த்ரிலோசனாம்
பாசாங்குஸெள ச வரம் சாபம் தாரயந் தீம் ஸிவாம் பஜே.


சித்ராம் ஸந்தத கமலவதனாம் மகுடத ராம் சித்ராம்பராலங்குதாம்
சித்ரூபாம் பரதேவதாம், ஸ்மித முகீம், சிந்தாகுல த்வம்ஸினீம்
அத்வைதாம்ருத வர்ஷிணீம் ஹரிஹர ப்ரம்ஹாதிபிர்வந்திதாம்
ஸத்யாம் ஸாமஜராஜ மந்தகமனாம் ஸர்வேச்வரீம் பாவயே.


ஸுத்தஸ்படிக ஸம்ஹாஸாம் பலாசகு ஸும ப்ரபாம்
நீலமேக ப்ரதீகாராம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் புஷ்ப பாணேஷு சாபினீம்
பாசாங்குச மோபேதாம் த்யாயேந் சித்ராம் மஹேஸ்வரீம்.


ஸ்ரீ ஸுக்த நித்யா ஸ்லோகம்

ஸ்ரீ ஸுக்த ஸம்ஸ்துதாம் அம்கார ப்ரக்ருதிக, பூர்ண கலாத்மிகாம்
ஸ்ரீ சித்ரா நித்யா ஸ்வரூபிணீம் ஸர்வாசார பரிபூரக சக்ர ஸ்வாமினீம் அம்ருதாகர்ஷிணீ சக்தி  ஸ்வரூபாம்
ஸ்ரீ புருஷோத்தம  வக்ஷஸ்த கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவதாம்
ஆரோக்ய லக்ஷ்மீ ஸ்வரூப சித்ரா நித்யாயை நம:


வழிபட வேண்டிய திதிகள்

ஸுக்ல பக்ஷ பவுர்ணமி ./ க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை. (பவுர்ணமி திதி ரூப சித்ரா நித்யாயை நம)

நைவேத்தியம் : பாயஸம்.

பூஜைக்கான புஷ்பங்கள் : பல நிற பூக்கள்.

திதி தான பலன் : இந்த அம்பிகைக்கு பாயஸம் நிவேதித்து தானம் செய்தால் பித்ருக்கள் ஆசி கிட்டும்.


பஞ்சோபசார பூஜை

ஓம் சித்ரா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் சித்ரா நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் சித்ரா நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் சித்ரா நித்யாயை நைவேத்தியம் கல்பயாமி நம:
ஒம் சித்ரா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:


இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்

இத்திதியில் பிறந்தவர்கள் அழகிய உடலமைப்பு கொண்டவர்கள். தேவர்களாலும் அந்தணர்களாலும் கொண்டாடப்படுபவர்கள். போக பாக்கியங்களை சலிக்கச் சலிக்க அனுபவிப்பவர்கள். தன் சுற்றத்தாரை ஆதரிப்பவர்கள். கருணையால் புகழ்பெறும் பேறு பெற்றவர்கள்.

யந்திரம் வரையும் முறை

சந்தனக் குங்கும கலவையால்  ஒன்பது கோணங்கள், வட்டம், எட்டிதழ்கள், பதினாறு இதழ்கள், முப்பத்தியிரண்டு இதழ்கள், நான்கு வாயில்களுடைய இரு சதுரங்கள் வரையவும். கீழ்க்காணும் தேவியின் சக்திகளை தியானித்து பூஜிக்கவும். பத்ரா, பவானீ, பவ்யாக்ஷீ, விஸாலாட்சீ, ஸுசிஷ்மிதா, ககுபா,
கமலாக்ஷீ, கல்பா போன்ற சக்திகளை எட்டிதழ்களிலும், கலா, பூரணி, நித்யா, அம்ருதா, ஜீவிதா, தயா, அஸோக, அமலா, பூர்ணா, புண்யா, பாக்யா, உத்யதா, விவேகா, விபவா, விஸ்வா, வினதா போன்ற சக்திகளை பதினாறிதழ்களிலும் தியானித்து பூஜிக்கவும். முப்பத்தியிரண்டு இதழ்களில் தேவியின் பாதுகாப்பு சக்திகளை தியானம் செய்து பூஜிக்கவும்.

இத்திதிகளில் செய்யத்தக்கவை

வேள்விகள், மங்களகரமான செயல்கள், தேவி உபாசனை, மனை சம்பந்தமான செயல்கள், திருமணத்திற்கான அணிகலன்கள் செய்தல், உடற்பயிற்சி வகுப்புகளில் சேர்தல் முதலியன.

அகத்தியர் அருளிய சுக்லபக்ஷ சித்ரா நித்யா துதி:
 
பெளரணையாய்க் கலைகள் பதினாறு மாகிப்
பார் நிறைந்து மதிவதனப் பால ரூபி
சவரணையாய் உலகனைத்துந் தாங்குஞ் சக்தி
தற்பரத்தி சிற்பரத்தி சராச ரத்தி
நவரத்ன பீடத்தில் நிறைந்து நின்ற
நாற்பத்து முக்கோண நவர சத்தி
சவரணையாய் கனகசபை தன்னில் வாழும்
சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே.


அகத்தியர் அருளிய கிருஷ்ணபக்ஷ சித்ரா நித்யா துதி

பவரணையில் பதினாறு கலையுமாகி
பார் நிறைந்த மதிவதன பாலரூபி
நவரத்தின பீடமதாய் வீற்றிருந்த
நாற்பத்தி முக்கோண நவரசத்தி
சவரணையாய் உலகளித்த தாயேஎன் மேல்
தற்பரையே சிற்பரையே சராசரத்தி
சுவரணையாய் பிள்ளை முகம் பார்த்துக்
காப்பாய் சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே.


கனல்கோடி ரவிகோடி காந்திகோடி
கண் கொள்ளா இடிகோடி மின்னல் கோடி
அனல்கோடி முகில்கோடி அனந்தம் கோடி
அண்ட யோசனை மூன்று லக்ஷம் கோடி
புனல்கோடி வினைகோடி பரமும் கோடி
புருவமையத்து அடியிலகு சிறு பெண் ஆத்தாள்
முனைகோடியாம் வாலாம்பிகையே தண்ணில்
முடிவணங்கி திருவடியைக் கும்பிட்டேனே.


மாத்ருகா அர்ச்சனை

ஓம் விசித்ராயை நம:
ஓம் சித்ரவஸனாயை நம:
ஓம் சித்ரிண்யை நம:
ஓம் சித்ரபூஷணாயை நம:
ஓம் அனுலோமாயை நம:

ஓம் ஆபஸந்தயே நம:
ஓம் மத்யமாயை நம:
ஓம் அநாமிகாத்மிகாயை நம:
ஓம் தேஜோவத்யை நம:
ஓம் பத்மகர்ப்பாயை நம:

ஓம் மந்தரேகாயை நம:
ஒம் கருணாவத்யை நம:
ஒம் விதூஷ்யை நம:
ஓம் மோலின்யை நம:
ஓம் வ்யக்தாயை நம:

ஓம் ஸுகேஸ்யை நம:
ஓம் ஸோமபாயை நம:
ஓம் ஸோமஸங்காஸாயை நம:
ஓம் வேதால்யை நம:
ஓம் தால சஞ்சிகாயை நம:

ஓம் ஸோமப்ரியாயை நம:
ஓம் ஸோமவத்யை நம:
ஓம் மந்த்ரபூதாயை நம:
ஓம் ணுயஜுக்ரியாய நம:
ஓம் ம்ருணால்யை நம:

ஓம் ருக்ப்ரதாயை நம:
ஓம் ஸக்தயே நம:
ஓம் விந்த்யாத்ரி ஸிகரஸ்திதாயை நம:
ஓம் கதின்யை நம:
ஓம் சக்ரிண்யை நம:

ஓம் பிம்பாயை நம:
ஓம் ரக்தோஷ்ட்யை நம:
ஓம் சாருஹாஸின்யை நம:
ஓம் வாக்பவாயை நம:
ஓம் சாருஜாயை நம:

ஓம் ரக்தாயை நம:
ஓம் ஸுப்ரஸிதாயை நம:
ஓம் ஸுலோசனாயை நம:
ஓம் கெளஸிக்யை நம:
ஓம் ககுத்யை நம:

ஓம் காமலோசனாயை நம:
ஓம் காமோத்ஸவயை நம:
ஓம் காமசாராயை நம:
ஓம் அகாமாயை நம:
ஓம் பூஜிதாயை நம:

ஓம் பராயை நம:
ஓம் நத்வாவலோகாயை நம:
ஓம் பூரஜிதே நம:
ஓம் ராஜ்யை நம:
ஓம் ஸுந்தர்யை நம:










No comments:

Post a Comment