வழிபட வேண்டிய திதிகள்!
ஸூக்ல பக்ஷ பஞ்சமி/க்ருஷ்ண பக்ஷ ஏகாதசி
எண்ணத்தாலேயே ரட்சிக்கும் குருவின் தீட்சை வஹ்னி வாஸினி நித்யாஇந்த அம்பிகை அக்னி மண்டலத்திலிருப்பதால் ‘வஹ்னிவாஸினி’ எனப்படுகிறாள். அக்னி மண்டலம் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு ‘‘குண்டலினி” வடிவத்தில் இத்தேவி உறைகிறாள். வஹ்னி எனும் பதம் மூன்று என்ற எண்ணிக்கையும் குறிக்கும்.
எனவே சூரிய கண்டம், அக்னி கண்டம், சந்த்ர கண்டம் என்ற மூன்றும் பஞ்சதசாக்ஷரியின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களையும் குறிக்கும். இத்தேவி அழகே உருவானவள். மஞ்சள் நிறப் பீதாம்பரப் பாவாடை அணிவதில் விருப்பமுள்ளவள். இவள் ‘சிதக்னி குண்ட ஸம்பூதை’ எனவும் போற்றப்படுபவள். இளம் வயது பருவமங்கையின் பொங்குமழகும், புன்சிரிப்பு தவழும் திருமுகமண்டலமும் கொண்ட தேவியிவள்.
ஒளிவீசும் பத்மராகக் கற்களால் ஆன கிரீடம் தரிப்பவள். நவரத்தினங்களால் ஆக்கப்பட்ட விஸ்தாரமான அணிகலன்களை அணிபவள். இத்தேவியைப் போன்றே தோற்றமளிக்கும் ஜ்வாலினி, விஸ்புலிங்கினி, மங்களா, ஸூமனோகரா, கனகா, அங்கிதா, விஸ்வா, விவிதா போன்ற சக்தி கூட்டங்களால் சூழப்பட்டவள். தன் திருக்கரங்களில் முறையே செந்தாமரை, சங்கு, செங்கரும்பு வில், கல்ஹார புஷ்பம், பூர்ணகும்பம், தங்கக் கொம்பு, புஷ்பபாணங்கள், மாதுளம் கனி போன்றவற்றை ஏந்தியருள்பவள். சற்றே சுழலும் கண்களை உடையவள். அழகே உருவானவள். முக்கண்ணி.
மாந்தர்களின் துன்பங்களைத் துடைப்பதையே தலையாய கடமையாகக் கொண்டவள். தாமரையும் சங்கும் கொண்டு திருமாலின் அம்சமாகவும், ரத்னகலசம் தந்தம் கொண்டு விநாயகரின் அம்சமும், கரும்பு வில், புஷ்பபாணம் ஏந்தி மன்மத ரதி தேவியின் அம்சமாகவும் துலங்குபவள்.
செந்தாமரையைப் பழிக்கும் பாத கமலங்கள் கொண்ட இத் தேவியின் பாத கமலங்கள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? குரு வடிவாய் இருந்து தன் பக்தர்களைக் காப்பவள். குரு எவ்வாறு தீக்ஷை தருவார் என்பதை மகாபெரியவர் மிக அற்புதமாக அருளியிருக்கிறார்.அம்பாள்தான் ஞானம். ஸத்சித்ஆனந்தம் என்று அடிக்கடி கேள்விபடுகிறோமே, அதில் சித் என்கிற பேரறிவான ஞானம் அம்பிகைதான். சைதன்ய ரூபிணி என்பார்கள். “சிதேக ரஸ ரூபிணி” என்று [லலிதா] ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. காளஹஸ்தியில் ஞானாம்பாள் என்றே அவள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள்.
அம்பாள்தான் குரு ரூபத்தில் வருபவள் என்று பெரியவர்கள் அநுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள். காளிதாஸன் [‘நவரத்ன மாலிகா’வில்] “தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்” என்கிறார். அம்பாள் தன்னுடைய காருண்ய விலாஸத்தை குரு ஸ்வரூபமாக வந்தே காட்டுகிறவள் என்று அர்த்தம். ‘தேசிக‘ என்பதும் குரு, ஆசார்ய என்பவை போல நம்மை நல்ல வழிக்கு நடத்திக் கொண்டு போகிறவரைக் குறிக்கும் இன்னொரு வார்த்தை. [வைஷ்ணவர்களில்] வடகடலை ஸம்ப்ரதாயத்துக்கு மூலபுருஷரை வேதாந்த தேசிகர் என்றே சொல்கிறோம்.
அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் தேசிகர் என்று ‘ர்’ போடாமல், தேசிகன் என்று ‘ன்’ போட்டே சொல்வார்கள். ரொம்பவும் மரியாதை முற்றி அன்பு மேலிடுகிறபோது ஏகவசனம்தான் வந்துவிடும். பகவானையே ‘நீ’ என்றுதான் சொல்கிறோம்; ‘நீங்கள்’ என்பதில்லை.
அப்படி தேசிகரை தேசிகன் என்றே அவரை அநுஸரிப்பவர்கள் பிரேமையினால் சொல்வார்கள். நம் பகவத்பாதாளை அவர் காலத்திலேயே அவருடைய நேர் சிஷ்யரான தோடாகாசார்யார் ஸ்தோத்திரித்தபோது, “சங்கர தேசிகமே சரணம்” என்றே ஒவ்வொரு அடியிலும் முடித்திருக்கிறார்.
அம்பாள் தேசிக ரூபத்தில் வந்து ஞானம் தருவதாகச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக ஸ்பரிச தீக்ஷை, நயன தீக்ஷை, மானஸ தீக்ஷை ஆகியவற்றில் ஒவ்வொன்றையும் அவள் ஒவ்வொரு ரூபத்தில் செய்வதாகச் சொல்வார்கள்.இங்கே இன்னொன்று சொல்ல வேண்டும். ஸ்பரிச தீக்ஷைக்குக் ‘குக்குட தீக்ஷை’ என்று இன்னொரு பெயர்.
‘கோழி தீக்ஷை’ என்று அர்த்தம். நயன தீக்ஷைக்கு ‘மத்ஸ்ய தீக்ஷை’ [மீன் தீக்ஷை] என்றும் பேர். மானஸ தீக்ஷைக்குக் ‘கமட தீக்ஷை’ என்று பேர். ‘கமடம்’ என்றால் ஆமை. கோழி, மீன், ஆமை என்று தீக்ஷைகளைச் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது. ஆனால், வேடிக்கைக்குள்ளே தத்வார்த்தம் நிரம்ப இருக்கிறது.
ஒரு தீக்ஷையானது நிஜமான சக்தி வாய்ந்ததாக இருந்தால், சிஷ்யனுக்கு இதுவரை இருந்த அசட்டு வாழ்க்கை அதோடு முடிந்து, அவன் பாரமார்த்திகமாக ஒரு புது வாழ்க்கை ஆரம்பித்துவிடுவான். அதாவது அது உசந்ததாகப் புனர்ஜன்மா எடுக்கிற மாதிரியாகும். காயத்ரீ தீக்ஷையானவுடன் இப்படித்தான் ஒருவன் பிராம்மணனாக இரண்டாம் ஜன்மா எடுக்கிறானென்ற அர்த்தத்தில், அவனுக்கு ‘த்விஜன்’ என்றும், ‘இருபிறப்பாளன்’ என்றும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
இப்படி தீக்ஷைக்கு முன்னாலே ஒரு ஜன்மா, அப்புறம் முற்றிலும் வேறான இன்னொரு ஜன்மா என்று சொல்வது அவ்வளவு ஸரியில்லை என்கிற அபிப்ராயத்தில் இன்னொரு விதமாகவும் சொல்கிறதுண்டு. இதன்படி, இப்போது ஒருத்தன் எடுத்திருக்கிற ஜன்மாவிலே அவன் அசட்டு அஞ்ஞான ஸ்திதியிலிருந்தாலும் இப்போதுங்கூட உள்ளுக்குள்ளே பிரம்மத்தோடு பேதமில்லாத ஆத்மாவாகத்தானிருக்கிறான். ஆனால் இப்போது இது இவனுக்குத் தெரியாமல் ஒரு கருவை அது முட்டையாயிருக்கும் போது ஓடு மறைக்கிறது போல, அஞ்ஞான ஓடு மூடி மறைத்திருக்கிறது.
குரு என்பவர் தீக்ஷை என்பதன் மூலம், தாய்ப் பறவை முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பது போல, இவனுடைய அஞ்ஞான ஓடு பிளந்து, இவன் தன் ஸத்ய நிலையை உணர்ந்த பக்ஷியாகப் பிறக்கச் செய்கிறார் என்பார்கள். அதாவது, இரண்டு வெவ்வேறு ஜன்மாக்கள் இல்லை; தீக்ஷைக்கு முன்னே முட்டைக்கரு போல முடங்கிக் கிடந்த நிலை; அதற்குப் பிற்பாடு அதுவே ஸ்வதந்திரமாகப் பறக்கும் நிலை.
தாய், முட்டையைக் குஞ்சு பொரிப்பதில் மூன்றுவகை சொல்கிறார்கள். இங்கேதான் கோழி, மீன், ஆமை மூன்றும் வருகின்றன. தாய்க்கோழி என்ன செய்கிறது? முட்டையின் மேலேயே உட்கார்ந்து, அதாவது அதன் மேல் தன் ஸ்பரிசம் நன்றாகப் படும்படி அடைகாத்துக் குஞ்சு பொரிக்கிறது. இதுதான் ஸ்பரிச தீக்ஷை குரு சிஷ்யனைத் தொட்டு அவனுடைய அறியாமை ஓட்டைப் பிளக்கப் பண்ணுவது. குக்குட தீக்ஷை என்ற பெயர் இப்போது புரிகிறதல்லவா? மீன் ஜலத்துக்குள் முட்டை போடுகிறது.
பிரவாஹத்தில் மீன் ஒரு இடமாக நிற்காமல் சஞ்சாரம் செய்துகொண்டேயிருக்கும். முட்டையும் ஓடுகிற ஜலத்தில் ஒரு இடத்தில் நிற்காமல் மிதந்துகொண்டே இருக்கும். தாய் மீன் முட்டையின் மேலே உட்கார்ந்து குஞ்சு பொரிப்பதில்லை. பின்னே என்ன செய்கிறது? இதைப்பற்றி பயாலஜி, ஜூவாலஜியில் என்ன சொல்வார்களோ, நம் சாஸ்திரங்களும் காவியங்களும் ஒரு மரபாகச் சொல்லி வருவதை நானும் ஒப்பிக்கிறேன். தாய் மீன் என்ன செய்யுமென்றால், முட்டையைத் தன் கண்ணால் தீக்ஷண்யமாகப் பார்க்குமாம்.
உடனே முட்டையை உடைத்துக் கொண்டு மீன் குஞ்சு வெளியில் வந்து விடுமாம். குரு கடாக்ஷம் செய்கிற நயன தீக்ஷையை மத்ஸ்ய தீக்ஷை என்பது இதனால்தான். கமட தீக்ஷை, அதாவது, ஆமை தீக்ஷை என்றேனே அது என்ன? ஜலத்திலே இருந்து தாய் ஆமை கரைக்கு வந்து முட்டையிட்டுவிட்டு, அப்புறம் ஜலத்துக்குள்ளேயே எங்கேயோ போய் விடுமாம். முட்டை ஒரு இடத்தில் கிடக்க, தாயோ எங்கேயோ போயிருக்குமாம்.
ஆனாலும் அது முட்டை குஞ்சு ரூபமாக நல்லபடி பொரிய வேண்டுமே என்ற சிந்தனையாகவே இருக்குமாம். அதனுடைய அந்தத் தீவிர நினைப்பின் சக்தியிலேயே இங்கே முட்டை வெடித்துக் குஞ்சு வெளியே வந்துவிடுமாம். இதுதான் குரு செய்கிற மானஸ அல்லது கமட தீக்ஷை. அம்பாள் இந்த மூன்று தீக்ஷைகளை அளிப்பது எப்படி?
அம்பாளுக்கு கண்ணழகை, கடாக்ஷ விசேஷத்தை வைத்து மூன்று பிரஸித்த க்ஷேத்ரங்களில் மூன்று விதமான ரூபங்கள் இருக்கின்றன. காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்னும் ரூபங்கள். காஞ்சிபுரத்தில் காமாக்ஷியாகவும், மதுரையில் மீனாக்ஷியாகவும், காசியில் விசாலாக்ஷியாகவும் இருக்கிறாள்.
மூன்றிலும் கண்ணழகு, கடாக்ஷ விசேஷம் என்று சொன்னாலும் மூன்றிலுமே நயன தீக்ஷை தருகிறாள் என்று சொல்வதில்லை. மீன்தானே நயன தீக்ஷைக்குச் சொன்னது? மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறதே! இதனால் அவளைத்தான் கடாக்ஷத்தாலேயே ஞான தீக்ஷை தந்துவிடும் குருவாகச் சொல்லியிருக்கிறது.
இது மத்ஸ்ய தீக்ஷை. காமாக்ஷி பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கிவிடுபவள். “ஸௌந்தர்யலஹரி” ஸ்தோத்திரிக்கிற மூர்த்தி காமாக்ஷி தான்கரும்பு வில், புஷ்ப பாணம், பாச அங்குசத்தோடு சதுர்புஜையாக இருக்கிற மூர்த்தி. அதிலே ஒரு ஸ்லோகத்தில் ஆசார்யாள் அம்பாளிடம், “வேதங்கள் உபநிஷத்து என்கிற தங்களுடைய சிரஸிலே தாங்கிக் கொண்டிருக்கிறவையான உன்னுடைய திருவடிகளை என் தலையில்கூட தயையினால் வையம்மா!” என்று பிரார்த்திக்கிறார்.
ச்ரூதீநாம் மூர்தாநோ தததி தவ யௌ சேகரதயாமமாப்யேதௌ மாத : சிரஸி தயயா தேஹி சரணௌறுஉபநிஷத்துக்கள்தான் வேதாந்தம் என்பது. ஆசார்யாளின் அத்வைதமான ஞானமார்க்கத்துக்கு வேதாந்த ஸம்ப்ரதாயம் என்றே பெயர். அதனால் இங்கே ஆசார்யாள் ஞான குரு ரூபிணியாகவே அம்பாளை பாவித்துத் திருவடி தீக்ஷை வேண்டுகிறார் என்று ஆகிறது. அதற்குக் காமாக்ஷியிடம் ஸ்பர்சமான குக்குடதீக்ஷை கேட்டிருக்கிறார். காசியிலே இருக்கப்பட்ட விசாலாக்ஷி பக்தர்களை அநுக்ரஹ சிந்தையோடு மனஸால் நினைத்தே ஞானம் அளித்துவிடும் கமட தீக்ஷை குருவாயிருப்பவள். அந்த குரு வடிவாய் விளங்கும் வஹ்னிவாஸினி தேவி பூரணமான கல்வியறிவையும் அதனால் நல்ல பதவியையும் தன் பக்தர்களுக்கு அருள்பவள்.
வழிபடுபலன் பூரண வித்யாப்ராப்தி; உத்தியோக லாபம். மூவுலக வசியம்.
வஹ்னிவாஸினி காயத்ரி
ஓம் வஹ்னிவாஸின்யை வித்மஹே ஸித்திப்ர
தாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
மூலமந்த்ரம்
உம் ஓம் ஹ்ரீம் வஹ்னி வாஸின்யை நம:
வஹ்னிவாஸினி
நித்யகலாதேவி ஸ்ரீபாதுகாம் பூஜயாமி நம:
த்யான ஸ்லோகங்கள்
குமார விக்னராஜ பூஜிதாங்க்ரி திவ்ய பங்கஜாம்
ஹிமாம்சு - ஸன்னிபானனாம் ஸமஸ்த
ஸௌபாக்ய தாயினீம்
ரமேச பத்மகர்ப சந்த்ர சேகராதிபிர்யுதாம்
நமாமி சாருஹாஸினீம் பஜாமி வஹ்னி
வாஸினீம்.
தப்த காஞ்சன ஸங்காஸாம் நவயௌவன
ஸுந்தரீம்
சாருஸ்மேர முகாம்போஜாம் விலஸந்நயந
த்ரயாம்
அஷ்டாபிர்பாஹுபிர்யுக்தாம் மாணிக்யா
பரணோஜ்வலாம்
பத்மராக கிரீடாம் ஸு ஸம்பேதாருணி தாம்பராம்
பீத கௌஸேய வஸநாம் ரத்ன மஜ்ஜீர மேகலாம்
ரத்ன மௌக்திக ஸம்பிந்நதஸ்தப காபரணோஜ்வலாம்
ரக்தாஞ்ஜ கம்பு புண்ட்ரேக்ஷு சாப பூர்ணேந்து மண்டலாம்
ததாநாம் பாஹுபிர்வாமை: கல்ஹாரம் ஹேமஸ்ருங்ககம்
புஷ்பேக்ஷு மாதுலிங்கஞ்ச ததாநாம் தஷிணை: கரை:
ஸ்வஸமாநாபி நபித: ஸக்திபி-பரிவாரிதாம்.
வாக்ஸித்திர் த்விவிதா ப்ரோக்தா ஸாபாநுக்ரஹ காரிணீ
மஹா கவித்வரூபா ச பக்தஸ்தேந த்யாஸ்பத:
வஹ்னி கோடி ப்ரதிகாஸாம் சூர்யகோடி
ஸமப்ரபாம்
அக்னிஜ்வாலா ஸமாகீர்ணாம் ஸர்வ ரோகா
பஹாரிணீம்
காலம்ருத்யு ப்ரஸமனீம் பய ம்ருத்யு நிவாரணீம்
தீர்க்காயுஷ்ப்ரதாம் வந்தே நித்யாம் ஸ்ரீவஹ்னி
வாஸினீம்.
ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸூக்தஸம்ஸ்துதாம் உகார ப்ரக்ருதிக புஷ்டி கலாத்மிகாம்வஹ்னிவாஸினி நித்யா ஸ்வரூபிணீம் ஸர்வதுக்க விமோசன சக்ரேஸ்வரீம் ஸ்பர்சாகர்ஷிணீ சக்தி ரூபிணீம் ஸ்ரீவிஷ்ணு வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வமங்களதேவதாம் விஜயலக்ஷ்மி ஸ்வரூப வஹ்னி வாஸினி நித்யாயை நம:
வழிபட வேண்டிய திதிகள்
ஸூக்ல பக்ஷ பஞ்சமி/க்ருஷ்ண பக்ஷ ஏகாதசி(பஞ்சமி திதி ரூப வஹ்னிவாஸினி நித்யாயை நம:)
நைவேத்யம்
வாழைப்பழம்
பூஜைக்கான புஷ்பங்கள்
செவ்வரளி புஷ்பம்.
திதிதான பலன்
செவ்வாழையை நிவேதித்து தானம் செய்தால் உடல் ஆரோக்கியம் விருத்தியடையும்.
பஞ்சோபசார பூஜை
ஓம் வஹ்னி வாஸினி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் வஹ்னி வாஸினி நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் வஹ்னி வாஸினி நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் வஹ்னி வாஸினி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் வஹ்னி வாஸினி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம: இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள்
க்ருஷ்ணபக்ஷ ஏகாதஸி, சுக்ல பக்ஷ பஞ்சமி இத்திதிகளில் பிறந்தவர்கள் அழகே உருவானவர்கள். மஞ்சள் வண்ணத்தில் மனதை பறிகொடுப்பர். தன் இனிமையான குணத்தால் அனைவரையும் கவர்வர். அரசியல், கலை, கல்வி ஆகியவற்றில் மிகப் பிரபலமாக புகழும் அடைவர். நவரத்தினங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் பிரியமுள்ளவர்கள். இவர்கள் சங்கநிதி, பத்மநிதி தேவதைகளின் பரிபூரணமாக பேரருளுக்குப் பாத்திரமானவர்கள். இத்திதியில் பிறந்தவர்கள் இந்த அம்பிகையின் மூலமந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால் தடைகள் தவிடு பொடியாகி வாழ்வு ஏற்றம் பெறும்.
யந்திரம் வரையும் முறைசந்தன குங்குமக் கலவையால் ஒன்பது கோணம், வட்டம், பன்னிரெண்டு இதழ்கள், இரு வட்டங்கள், கிழக்கு மேற்கு வாயில்கள் உடைய இரு சதுரங்கள் கொண்ட யந்திரத்தை வரைந்து பூஜிக்கலாம். அதில் உறையும் ஜ்வாலினி, விஸ்புலிங்கினி, மங்களா, ஸுமகோகரா, கனகா, அங்கிதா, விஸ்வா, லலிதா போன்ற சக்திகளை த்யானித்து பூஜிக்கவும்.
இத்திதியில் செய்யத் தக்கவையாத்திரை, உபநயனம், திருமணம், தேவதைகளை பிரதிஷ்டை செய்தல் மற்றும் சாந்தி கர்மங்கள்.பஞ்சமியில் செய்யப்படும் எல்லா செயல்களும் வெகு காலம் நிலைத்து நிற்கும்.
அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ பஞ்சமி திதி துதி
பஞ்சமியில் பெற்றெடுத்தாய் சேயேன் தன்னை
பால் கொடுத்தாய் பதநடனம் செய்தாய் அம்மா
கொஞ்சமொரு காரியத்தில் தவக்கம் செய்தாய்
குழிப்பயிரும் கூரையின் மேல் ஏறுமோ தான்
தஞ்சமென நின் அடித்தாள் சார்ந்த மைந்தன்
சாக்கிரத்துள் தாளி னேக்குள் தானே தானாய்
துஞ்சியும் துஞ்சா திருக்க வழி தந்தாய் நீ
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழ்வே!
குழிப்பயிர் கூரை - நான் ஞான நிலைக்கு அருகதையற்றவன். ஆகவே தடையின்றி ஞானநிலையின் உச்சிக்கு ஏறுதல் எளிதன்று.ஆன்மா - புருவமத்தினிடை நின்று தத்துவங்களுடன் நிற்கும் நிலை. துஞ்சியும் துஞ்சாமல் இருப்பது - தூங்கியும் தூங்காமல் இருக்கும் நிலை ( தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்). - பத்திரகிரியார்.தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முன்னேதூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே - திருமந்திரம்.
அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ பஞ்சமி திதி நித்யா துதி
அண்டாண்ட புவனங்கள் நீயே யானாய்
அம்புவியில் ஜோதிமனோன் மணியுமானாய்
கண்டதொரு காட்சிகளைச் சொல்லப் போமோ
காரணியே பூரணியே கன்னியாளே
விண்டதொரு மகிமைகளை வெளிவிடாமல்
வேண்டியதோர் தீட்சைகளை முடித்து வைப்பாய்
தொண்டர்களை எப்போதும் ஆள்வாயம்மா
சோதிமனோன்மணித்தாயே சுழிமுனை வாழ்வே!
மாத்ருகா அர்ச்சனை
ஓம் வஹ்னிவாஸின்யை நம:
ஓம் வஹ்னிநிலயாயை நம:
ஓம் வஹ்னிரூபிண்யை நம:
ஓம் யக்ஞ வித்யாயை நம:
ஓம் மஹா வித்யாயை நம:
ஓம் பிரஹ்ம வித்யாயை நம:
ஓம் குஹாலயாயை நம:
ஓம் பூதேஸ்வர்யை நம:
ஓம் ப்ரஹ்மதாத்ர்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் கனகப்ரபாயை நம:
ஓம் விரூபாக்ஷாயை நம:
ஓம் விஸாலாக்ஷ்யை நம:
ஓம் ஹிரண்யாக்ஷ்யை நம:
ஓம் ஸதானனாயை நம:
ஓம் த்ரயக்ஷாயை நம:
ஓம் காமகலா வித்யாயை நம:
ஓம் ஸித்தவித்யாயை நம:
ஓம் தராதிபாயை நம:
ஓம் தேவமாத்ரே நம:
ஓம் தித்யை நம:
ஓம் புண்யாயை நம:
ஓம் தனவே நம:
ஓம் கத்ரவே நம:
ஓம் ஸுபர்ணீகாயை நம:
ஓம் அபாம்நிதயே நம:
ஓம் மஹாவேகாயை நம:
ஓம் மஹோர்மயே நம:
ஓம் வருணாலயாயை நம:
ஓம் இஷ்டாயை நம:
ஓம் துஷ்டிகர்யை நம:
ஓம் சாயாயை நம:
ஓம் ஸாமகாயை நம:
ஓம் ருசிராயை நம:
ஓம் பராயை நம:
ஓம் ருக் யஜுர் ஸாம நிலயாயை நம:
ஓம் வேதோத்பத்தயே நம:
ஓம் ஸ்துதிப்ரியாயை நம:
ஓம் ப்ரத்யும்னதாயிதாயை நம:
ஓம் ஸாத்வ்யை நம:
ஓம் ஸுக ஸௌபாக்ய ஸித்திதாயை நம:
ஓம் ஸர்வ காமப்ரதாயை நம:
ஓம் பத்ராயை நம:
ஓம் ஸூபத்ராயை நம:
ஓம் ஸர்வமங்கலாயை நம:
ஓம் தமன்யை நம:
ஓம் தமின்யை நம:
ஓம் மாத்வ்யை நம:
ஓம் மது கைடப மர்த்தின்யை நம:
ஓம் பாண ப்ரஹாரிண்யை நம:
ஓம் பாணாயை நம:
No comments:
Post a Comment