Monday, 20 June 2016

பேரானந்தம் அளிப்பாள் பேருண்டா நித்யா!



அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதி காரணியாய்த் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உண்டு பண்ணியதால் இந்த அம்பிகை ‘‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’’ எனவும் அழைக்கப்படுகிறாள்.

உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடை உடுத்தி, குண்டலங்கள், பொன் ஆபரணங்கள், முத்துமாலை, ஒட்டியாணம் மோதிரங்கள் போன்றவற்றை தரித்து அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் திகழும் இந்த அன்னை முக்கண்ணி. புன்முறுவல் பூத்த முகத்தினள்.

மார்பகங்களின் பாரத்தைச் சுமக்க முடியாமல் சற்றே துவளும் இடை கொண்டவள். இத்தேவியின் கண்களில் பொங்கும் கருணை அளப்பற்கரியது.உருக்கிய தங்கத்திற்கு ஒப்பான ஒளிபெற்ற தேககாந்தியுடையவள். 

மந்தஸ்மித புன்னகை சிந்தும் அருள்வடிவினள். மிகச் சிறந்த மேன்மையான ஆபரணங்கள் தேவியின் அழகுக்கு அழகு செய்கின்றன. காதோலை, கழுத்துச்சங்கிலி, கை வளையல்கள், ஒட்டியாணம், பாதசரங்கள், மோதிரம், ரத்ன மயமான வஸ்திரம் தரித்து சோபையும் எழிலும் கொண்டு அழகே உருவாய் பொலிபவள்.

தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், கேடயம், கட்கம், கதை, வஜ்ராயுதம், வில், அம்பு ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். தன்னைப்போன்ற சக்தி கூட்டங்களால் சூழப்பட்டவள். பூஜா காலங்களில் அமர்ந்தும் மற்ற காலங்களில் நின்றும் அருள்பவள். இந்த அம்பிகையை சிரித்த முகத்துடனேயே உபாஸனை செய்ய வேண்டும் என்பது விதி. அம்பிகையின் பெருமையைப் பற்றி ‘தெய்வத்தின் குரலி’ல் மகாபெரியவர் அருளியுள்ளதைப் பார்ப்போம்:

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் ‘ஸௌந்தரிய லஹரி’ஸ்லோகம்
ஒன்றில், த்வயா ஹ்ருத்வா வாமம் என்று சொல்கிறார்:

‘‘அம்பிகே! நிர்குணப் பிரம்மம் தனக்கென்று எந்த வர்ணமும் இல்லாத ஸ்படிக ஈஸ்வரனாக இருக்கிறது. அதில் இடப்பக்கத்தை நீ திருடிக் கொண்டாயாம். அப்படிப் பார்த்தாலும் உனக்கு ஒரு பாதி உடம்புதானே இருக்க வேண்டும்? ஆனால், பதியின் பாதி சரீரத்தைத் திருடிக் கொண்டதிலும் உனக்குத் திருப்தி உண்டாவில்லை.

பாக்கி பாதி தேகத்தையும் நீயே ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாகக் காண்கிறது. அதனால்தான் பூரண ஸ்வரூபமாகச் செக்கச் செவேலென்று காமேசுவரியாக இருக்கிறாய். பரமேசுவரனுக்கு உரிய நெற்றிக்கண், சந்திர கலை எல்லாவற்றையும் நீயே ஸ்வீகாரம் செய்து கொண்டு விட்டாய்!’’

‘கதாஸ்தே மஞ்சத்வம்’ என்று ஆரம்பமாகும் ஸ்லோகத்தில், அம்பாள் ஐந்தொழிலும் செய்வதாகச் சொல்லும்போது, ‘‘பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் (மாயைக்கு அதிபதியான) ஈஸ்வரன் இவர்களைக் கட்டில் கால்களாகக் கொண்ட மஞ்சத்தின் மீது நீ பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனோடு அநுக்கிரஹ ரூபிணியாக, காமேசுவரியாக விளங்குகிறாய். ஆனாலும் அந்தக் காமேசுவரன் ஒருத்தன் தனியாக இருப்பதே தெரியவில்லை. உன்னுடைய ஜோதிச் சிவப்பு அவனுடைய ஸ்படிக நிறத்திலும் பளீரென்று வீசி, அவனையும் ஒரே சிவப்பாக்கி சிருங்கார ரஸத்தின் வடிவமாக்கிவிட்டது’’
முதலில் சொன்ன ஸ்லோகப்படி அம்பாளுக்கும் முக்கண் உண்டு; சிரஸில் சந்திரகலை உண்டு;

நெற்றிக் கண் அக்னி வடிவானது; வலக்கண் சூரிய வடிவம்; இடக்கண் சந்திர வடிவம். உலகத்தை வாழ்விக்கிற மூன்று ஜோதிகளும் பராசக்தியிடமிருந்து வந்தவை. இதை, கவித்வ அழகோடு ஸௌந்தரிய லஹரியின் இன்னோரு சுலோகம் சொல்கிறது. அது, ‘உன் வலது கண் பகலைப் படைக்கிறது. இடது கண் இரவைப் படைக்கிறது. இரண்டுக்கும் நடுவே உள்ள நெற்றிக் கண் சந்தியா காலத்தைப் படைக்கிறது. அதனால்தான் அது சிவந்து அம்பாளைப் பிரகிருதி, மாயை என்று சொன்னதோடு நிற்கவில்லை. புருஷன் அல்லது மாயையின் சக்தியும் இதே தேவிதான். அவனோடு அபேதமாக, அபின்னமாக இருக்கப்பட்ட வஸ்து இவள். இருவரும் ஒன்றே; அத்வைதமாக இருக்கிறார்கள்.

வேதங்களின் பரம தாத்பரியம் அத்வைதம். அந்த அத்வைதத்தின் ரூபமாகவே காஞ்சிபுரத்தில் காமாக்ஷி பிரகாசிக்கிறாளாம்! ‘ஐதம்பரியம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார் மூகர்.
மாதா ஸ்வரூபம் என்று அருகில் போகிறோம். பார்த்தால் பிதாவுக்கு உண்டான நெற்றிக்கண், சந்திரக்கலை எல்லாமும் இங்கே இருக்கின்றன. சிறந்த பதிவிரதையாக இருந்து, அந்தப் பதிவிரத்தியத்தாலேயே ஈஸ்வரனின் பாதி சரீரத்தை இவள் பெற்றதாகச் சொன்னாலும், இப்போது பார்க்கும் போது, இவள் சிவஸ்ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, முழுவதும் தானே ஆகிவிட்டாள் என்று, ஸௌந்தரிய லஹரி சொல்கிறது.

பக்தியின் ஸ்வாதீனமும், கவித்த கல்பனா சுதந்திரமும் கொண்டு இப்படியெல்லாம் ஆசார்யாள், மூகர் போன்றவர்கள் துதிக்கிறார்கள். மொத்தத்தில் தாத்பரியம் அவள் பூரண பிரம்மசக்தி, அவளுக்கும் பரமாத்மாவான பரமேசுவரனுக்கும் லவலேசம்கூட பேதம் இல்லை என்பதே.பரமேசுவரனின் சரீரத்தை இவள் திருடியதாக ஆசார்யார் சொல்கிறார் என்றால், அப்பைய தீக்ஷிதர் வம்சத்தில் வந்த மகனான நீலகண்ட தீக்ஷிதரோ அம்பாளுடைய கீர்த்தியைத்தான் ஈஸ்வரன் தஸ்கரம் செய்து கொண்டுவிட்டான் (திருடிவிட்டான்) என்று குற்றப் பத்திரிகை படிக்கிறார்!

பரமேசுவரன், ‘காமனைக் கண்ணால் எரித்தவராம்; காலனைக் காலால் உதைத்தவராம்’என்று லோகம் முழுக்கப் பிரக்யாதி பெற்றுவிட்டார். ‘‘ஆனால், அம்மா, காமனை எரித்த நெற்றிக் கண்ணில் பாதி உன்னுடையதல்லவா? அதுவாவது போகட்டும். இந்த வெற்றியில் பாதி சிவனுக்குச் சேரும். ஆனால் காலனைக் காலால் உதைத்து வதைத்த புகழ் அவரை அடியோடு சேரவேக் கூடாது. ஏனென்றால் இடது காலல்லவா அவனை உதைத்தது. அது முழுக்க உன்னுடையது தானே! காமாக்ஷியின் கடாக்ஷம் துளி விழுந்துவிட்டால் நாம் காமத்தை வென்று விடலாம்.
காலத்தையும் வென்று அமர நிலையை அடைந்து விடலாம் என்று அர்த்தம்.

அவளுடைய பெருமை நம் புத்திக்கும் வாக்குக்கும் எட்டாதது. அசலமான சிவத்தையே சலனம் செய்விக்கிற சக்தி அது. அவளுடைய க்ஷணநேரப் புருவ அசைப்பை ஆக்ஞையாகக்கொண்டு பிரம்மாவும், விஷ்ணுவும், ருத்தினும், ஈசுவரனும், ஸதாசிவனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்கிறார்கள் என்கிறது ‘‘ஸௌந்தரிய லஹரி’’ (ஜகத் ஸுதேதாதா). பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள்தான் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவர்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

இந்த முத்தொழிலோடு மாயை என்கிற மறைப்பைப் போக்குகிற ஞானம் என்ற அநுக்கிரகம் இவற்றைச் சேர்த்துக் கொண்டு பஞ்சகிருத்யம் என்னும்போது, மறைப்பான திரோதாரனத்தைச் செய்கிறவன் ஈஸ்வரன்; அநுக்கிரகம் செய்பவன் ஸதாசிவன். இந்த தொழில்கள் எல்லாமே பராசக்தியின் ஏவலின்படி நடக்கிறவைதான். இந்த ஐந்து மூர்த்திகளை ஐந்து ஆபீஸர்களாக வைத்துக் காரியம் நடத்தும் எஜமானி, அம்பாள்தான். அவர்கள் தங்கள் இஷ்டப்படி தொழிலாற்ற முடியாது.

அவர்களுடைய சக்தி எல்லாமும் பராசக்தியான இவளிடமிருந்து பெற்றது தான். ‘‘உன் பாதத்தில் அர்ச்சித்து விட்டால் போதும். அதுவே மும்மூர்த்திகளின் சிரசிலும் அர்ச்சனை செய்ததாகும்; ஏனென்றால் திரிமூர்த்திகளின் சிரஸ்கள் எப்போதும் உன் பாதத்திலேயே வணங்கிக் கிடக்கின்றன’’ என்கிறது ஸௌந்தரிய லஹரியில் இன்னொரு ஸ்லோகம்: ‘த்ரயாணாம் தேவானாம்'. மும்மூர்த்திகளும் அந்த சரணார விந்தங்களில் தங்கள் தலையை வைத்து, தலை மீது கைகளை மொட்டுகள் மாதிரி குவித்து அஞ்சலி செய்கிறார்கள்.

நாம் புஷ்பம் போடுவது அம்பாளின் பாதமலர்களிலிருந்து மட்டுமல்லாமல் திரிமூர்த்திகளின் கரங்களான மொட்டுகளுக்கும் அர்ச்சனை ஆகிறது. சகல தேவ சக்திகளையும் பிறப்பித்த பராசக்தி ஒருத்திக்குச் செய்கிற ஆராதனையே, எல்லா தெய்வங்களுக்கும் செய்ததாகிறது என்கிறது உட்பொருள். காலஸ்வரூபிணி அவளே என்பது இதன் தாத்பரியம்.வழிபடு பலன்விஷ ஆபத்துகளிலிருந்து காப்பவள் இந்த அம்பிகை. இவளை வழிபட அபிசாரம், பில்லி சூன்யம் போன்றவை நீங்கும்.

பேருண்டா காயத்ரி
ஓம் பேருண்டாயை வித்மஹே விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூலமந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் க்ரோம் ப்ரௌம் க்ரௌம்
ஜ்ரௌம்ச்ரௌம் ஜ்ரௌம் ஸ்வாஹா.
த்யான ஸ்லோகங்கள்

நித்யானந்தாம், நிர்மலாம், நிஷ்கலங்காம்
ஸத்யாம், ஸ்ரீசக்ரஸ்திதாம் ஸர்வ பௌமாம்
வேதாதீதாம் விச்வ வந்த்யாபிராமாம்
தேவீம் பேருண்டாம் பஜே திவ்யரூபாம்.

தப்தகாஞ்சன ஸங்காஸதேஹாம் நேத்ரத்ரயாந்  விதாம்
சாருஸ்மிதாஞ்சித முகம் திவ்யாலங்கார பூஷிதாம்
தாடங்கஹார கேயூர ரத்நஸ்தவக மண்டிதாம்
ரசநா நூபுரோர்ம்யாதி, பூஷணைரதி ஸுந்தரீம்
பாஸாங்குஸௌ சர்ம கட்கௌ கதாவஜ்ரதநுஸ்
ஸரான்

கரைர் ததாநாமாஸீநாம் பூஜாயாமந்யதாஸ்திதாம்
ஸக்தீஸ்ச தத்ஸமாகார தேஜோஹேதிபிரந்விதா:
பூஜயேத் தத் வதபித: ஸ்மித ஸௌம்ய முகாம்
ஸதா.

சந்த்ரகோடி ப்ரதீகாஸாம் ஸ்ரவந்தீ மம்ருதத்ரவம்
நீலகண்டாம் த்ரிநேத்ராம் ச நானாபரணபூஷிதாம்
இந்த்ர நீல ஸ்பரத்காந்தி ஸிகிவாஹன சோபிதாம்
பாசாங்குசௌ கபாலம் ச சூரிகாம் வரதாபயே
தததீம் சிந்தயேத் தேவீம் பேருண்டாம் விஷநாஸினீம்

பிப்ரதீம் ஹேம ஸம்பத்த காருண்டாங்கத  ஸோபிதாம்.
ஸுத்தஸ்படிக ஸங்காஸாம் பத்மபத்ரஸமப்ரபாம்
மத்யாஹ்நாதித்ய ஸங்காஸாம் ஸுப்ரவஸ்த்ர ஸமந்விதாம்
ஸ்வேத சந்தன லிப்தாங்கீம் ஸுப்ரமால்யாவிபூ ஷிதாம்
பிப்ரதீம் சிந்மயாம் முத்ராமக்ஷமாலாம் ச புஸ்தகம்
ஸஹஸ்ரபத்ரகமலே ஸமாஸீநாம் ஸுசிஸ்மிதாம்
ஸர்வவித்யாப்ரதாம் தேவீம் பேருண்டாம் ப்ரண மாம்யஹம்.

ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்!

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஈகார ப்ரக்ருதிக, துஷ்டி
கலாத்மிகாம் பேருண்டா நித்யா ஸ்வரூபாம்
ஸர்வ மந்த்ரமயி
சக்ர ஸ்வாமினீம் சப்தாகர்ஷிணி சக்தி

ஸ்வரூபிணீம்
ஸ்ரீ கோவிந்த வக்ஷஸ்தல கமலவாஸினீம்
ஸர்வமங்கள தேவதாம்
வீரலக்ஷ்மி ஸ்வரூபாம் பேருண்டா நித்யாயை நம:

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சதுர்த்தி/க்ருஷ்ண பக்ஷ துவாதசி

 (சதுர்த்தி திதி: ரூப பேருண்டா நித்யாயை நம:)

நைவேத்தியம்: நெய் அப்பம்.
பூஜைக்கான புஷ்பம்: செவ்வரளிப் பூ.

திதி தான பலன்

தேவிக்கு கொழுக்கட்டை, நெய் அப்பம், பால் போன்றவற்றை நிவேதித்து தானம் செய்ய செல்வ வளம் பெருகும்.

பஞ்சோபசார பூஜை
ஓம் பேருண்டா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் பேருண்டா நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் பேருண்டா நித்யாயை தீபம் கல்பயாமி நம:

ஓம் பேருண்டா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி
நம: ஓம் பேருண்டா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தவர்களின் குண நலன்கள்

சிரித்த முகத்துடன் கலகலப்பாக பழகும் தன்மை உடையவர்கள். வண்ண வண்ண ஆடைகளை விரும்பி அணிவர். தைரியம், புத்தி கூர்மை போன்றவற்றால் அனைவரையும் கவர்வர். உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள். தலைமைப் பதவி இவர்களைத் தேடி வந்தடையும். இவர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் விஷத்தால் மரணம் சம்பவிக்காது. உடலும் உள்ளமும் எப்போதுமே நலத்துடன் இருக்கும்.

யந்திரம் வரையும் முறைசந்தன குங்குமம் கலவையால் முக்கோண வட்ட, அறுகோண, எண்கோண வட்ட, எட்டிதழ்கமலம், நான்கு வாயில்களுள்ள இரு சதுரங்களை வரையவும். அதில் அருட்பாலிக்கும் சக்திகளான விஜயா, விமலா, சுபா, விஸ்வா, விபூதி, வினதா, விவிதா, விராதா, கமலா, காமினி, கிரீடா, திருதி, குட்டானி, குலஸுந்தரி, கல்யாணி, காலகோலா போன்றவர்களை தியானித்து பூஜிக்கவும். இத்திதியில் பிறந்தவர்கள் இந்த அம்பிகையின் மூல மந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால் அனைத்து நலன்களும் பெறலாம்.

இத்திதிகளில் செய்யத்தக்கவைஎதிரிகளைக் கட்டுப்படுத்துதல், ஆயுதப்பயிற்சி, விஷப்பிரயோகம், எரியூட்டுதல். இத்திதியில் மங்கள நிகழ்வுகள் செய்யப்படுவதில்லை.

அகஸ்தியர் அருளிய சுக்ல பக்ஷ சதுர்த்தி நித்யா துதி!

சதுர்த்தியிலே நாடவிடை வாம பூஜை
தரவேணும் தயவாக அடியேன் செய்ய
மதித்தபடி வரம் தா வா அம்மா!

வான் வெளியே வாசியே மௌனத்தாளே
பதித்து முன்றன் பதத்திலென்றன் சென்னி
தன்னைப்பருதிமதி அகன்றாலும் அகலாமற்றான்
துதித்தபடி நின் சரணம் எனக்கிங்கீத்து
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழ்கவே!

வாலை பாலாம்பிகை. வான்வெளிஞானவெளி. மௌனத்தாள்
 மூகாம்பிகை.

அகஸ்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தி நித்யா துதி

சொல்லவொண்ணாச் சோதிமயமான தாயே
சுந்தரியே உன்பாதம் கொடுப்பாய் அம்மா
நல்லதொரு திருநடனமாடுந்தேவி
நாதர்கள் பணிகின்ற வாமரூபி

வல்லசித்தர் மனதிலுறை மகிமைத் தாயே
வாலை திரிபுரை எனக்கு வாக்கு தந்து
தொல்லுலகத் தாசைதனை மறக்கச் செய்வாய்
சோதிமனோன்மணித் தாயே சுழிமுனை வாழ்வே.
மாத்ருகா அர்ச்சனை

ஓம் பேருண்டாயை நம:
ஓம் பைரவ்யை நம:
ஓம் ஸாத்வ்யை நம:
ஓம் நதாக்யாயை நம:
ஓம் அனந்த ஸம்பவாயை நம:
ஓம் த்ரிகுண்யை நம:
ஓம் கோஷிண்யை நம:

ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் புஷ்டாயை நம:
ஓம் ஸுபாலயாயை நம:
ஓம் தர்மோதயாயை நம:
ஓம் தர்மபுத்தயே நம:

ஓம் தர்மாதர்மபுடத்வயாயை நம:
ஓம் ஜ்யேஷ்டாயை நம:
ஓம் யமஸ்ய பகின்யை நம:
ஓம் ஏலாயை நம:
ஓம் கௌஸேயவாஸின்யை நம:
ஓம் ப்ராம்மணாயை நம:

ஓம் ப்ராமிண்யை நம:
ஓம் ப்ராம்யாயை நம:
ஓம் ப்ராமாயை நம:
ஓம் ஜ்ஞானாபஹாரிண்யை நம:
ஓம் மஹேந்த்ர்யை நம:

ஓம் வாருண்யை நம:
ஓம் ஸௌம்யாயை நம:
ஓம் கௌபேர்யை நம:
ஓம் ஹவ்யவாஹின்யை நம:
ஓம் வாயவ்யை நம:
ஓம் நைர்ருத்யை நம:
ஓம் ஈசான்யை நம:

ஓம் லோகபாலாயை நம:
ஓம் ஏகரூபிண்யை நம:
ஓம் மோஹின்யை நம:
ஓம் மோஹஜனன்யை நம:
ஓம் ஸ்ம்ருத்யை நம:

ஓம் வ்ருத்தாத போதின்யை நம:
ஓம் யக்ஷஜனன்யை நம:
ஓம் யக்ஷ்யை நம:
ஓம் ஸித்யை நம:
ஓம் வைஸ்ரவணாலயாயை நம:
ஓம் மேதாயை நம:
ஓம் ஸ்ரத்தாயை நம:

ஓம் த்ருத்யை நம:
ஓம் ப்ரக்ஜாயை நம:
ஓம் ஸர்வதேவ நமஸ்க்ருதாயை நம:
ஓம் ஆசாயை நம:
ஓம் வாஞ்சாயை நம:

ஓம் நிரீஹாயை நம:
ஓம் இச்சாயை நம:
ஓம் பூதானுவர்தின்யை நம:
 
 

1 comment:

  1. Pl give missed thithi nithya devi slokams ... agasthiyar thithi nithya slokam

    ReplyDelete