Monday, 20 June 2016

காலமெல்லாம் காப்பாள் காமேஸ்வரி நித்யா!


அமாவாசை மற்றும் பவுர்ணமியன்று வாராஹி, மாதங்கியுடன் கூடிய மஹாநித்யாவான லலிதா பரமேஸ்வரியை வழிபட வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவதை உண்டு.


அமாவாசைக்கு பித்ருக்கள், பிரதமைக்கு அக்னி, த்விதியைக்கு பிரம்மா, த்ரிதியைக்கு பார்வதி,
 சதுர்த்திக்கு கணபதி, பஞ்சமிக்கு நாகராஜா, சஷ்டிக்கு முருகப்பெருமான், ஸப்தமிக்கு சூரியன், அஷ்டமிக்கு ஈசன், நவமிக்கு அஷ்டவசுக்கள், தசமிக்கு திக்கஜங்கள், ஏகாதசிக்கு யமதர்மராஜன், த்வாதசிக்கு திருமால், த்ரயோதசிக்கு மன்மதன், சதுர்த்தசிக்கு கலிபுருஷன், பௌர்ணமிக்கு சந்திரன் போன்றோர் தேவதைகளாக சொல்லப்பட்டுள்ளனர்.



இந்த அம்பிகை கோடி சூரியப்ரகாசம் போன்று ஜொலிப்பவள். மாணிக்க மகுடம் தரித்தவள். தங்கத்தினாலான அட்டிகை, பதக்கங்கள், ஒளிரும் சங்கிலி,  ஒட்டியாணம், மோதிரம், கால்களில் கொலுசு அணிந்தவள். ரத்னாபரணங்கள் பூண்டு, பட்டாடை உடுத்தியவள். இந்த காமேஸ்வரி நித்யா தேவிக்கு ஆறு  திருக்கரங்கள். முக்கண்கள். தலையில் சந்திரகலை தரித்திருக்கிறாள். புன்முறுவல் பூத்த முகத்தினள். கருணையை வெள்ளமெனப் பாய்ச்சும் கண்களைக்  கொண்டவள். கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மதனா, உன்மனா, தீபனா, மோகனா, ஸோஷனா எனும் ஐந்து தேவதைகளாலான புஷ்பபாணங்கள்,  அமிர்தத்துடன் கூடிய ரத்ன பாத்திரம், வரமுத்திரை தரித்தவள்.

இன்பமானவை  இனிப்பாக இருப்பதை கரும்பு மூலம் தேவி காட்டுகிறாள். ஆனால், காமேஸ்வரியை சரணடைய பேரின்பம் கிட்டும். பஞ்சேந்த்ரியங்களை தன் கையிலுள்ள பஞ்சபுஷ்பபாணங்களினால் கட்டுப்படுத்துகிறாள். பக்தர்களின் இதயக்கமலத்தில் விரும்பி வாசம் செய்யும் அம்பிகை இவள். காமேஸ்வரி என்றால் அழகான வடிவத்துடன் இருப்பவள். அல்லது விரும்பிய  வடிவத்தை எடுக்கக்கூடியவள் என்று பொருள். கேட்கும் வரங்களை வாரி வழங்கும் பரம கருணை வடிவினள் இத்தேவி.

அன்னையின் நெற்றியில் கஸ்தூரி திலகங்கள் ஜொலிக்கின்றன. வழிபடும் அன்பர்களின் மனதில் பரிவோடு நித்யவாஸம் செய்து ஆத்ம சுகத்தையும்  பேரின்பத்தையும் அருள்பவள். ஆத்மானுபவத்தில் திளைப்போர்க்கு பேரொளி வடிவமாகக் காட்சி தருபவள். பாவிகளையும் தாய் போல் காப்பவள். அன்பர்களின்  மனதிற்கு இனியவள். மங்களங்கள் அருள்பவள்.


சௌந்தர்ய ரூபவதி. ஜீவன்களின் பாபமூட்டையைத் தன் கடைக்கண் பார்வையாலேயே சுடுபவள். மனிதர்களை  வருத்தும் பாவங்களும், துன்பங்களும் இந்த தேவியை நினைத்த மாத்திரத்திலேயே மறைந்து விடும்.


வழிபடுபலன்:

இந்த அம்பிகையை வழிபடுவோர் புக்தி, முக்தி இரண்டையும் பெற்று பேரின்பப் பெருவாழ்வை அடைவர் என்பது திண்ணம். வழிபடுபலன் வாழ்வின்  ஆனந்தத்திற்கும், தனவரவு, தனவிருத்திக்கும் இந்த காமேஸ்வரி தேவியின் உபாசனை பேருதவி புரியும். மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கையும் தரும். தீராத  கொடிய நோய்களைப் போக்கி ஆரோக்கியமான வாழ்வை அருளும்.

காமேஸ்வரி காயத்ரி

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.



மூல மந்த்ரம்:

ஓம் ஐம் க்லீம் ஸௌ: காமேஸ்வர்யை நம: காமேஸ்வரி
இச்சா காம பலப்ரதே ஸர்வ ஸத்ய வசங்கரீ ஹும் ஹும்
ஹும் த்ராம் த்ரீம் க்லீம் ப்லூம் ஸ: ஸௌ: க்லீம் ஐம்
காமேஸ்வரி நித்யா தேவ்யை நம:


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் அம் ஐம் ஸகல ஹ்ரீம் நித்யக்லின்னே
மதத்ரவே ஸௌ: அம் காமேஸ்வர்யை நம:


த்யான ஸ்லோகங்கள்

பாலார்க்க கோடி ஸங்காசம் மாணிக்ய மகுடோஜ்வலாம்
ஹாரக்ரைவேய காஞ்சீபி: ஊர்மிகா நூபுராதிபி:
மண்டிதாம் ரக்தவஸனாம் ரக்தாபரண ஸோபிதாம்
ஷட்புஜாம் த்ரீக்ஷணாமிந்து தலாகலித மௌளிகாம்

பஞ்சாஷ்ட ஷோடசத்வந்த்வ ஷட்கோண சதுரஸ்ரகாம்
மந்தஸ்மிதோல்லஸத் வக்த்ராம் லஜ்ஜா மந்த்ரவீக்ஷணாம்
பாசாங்குசௌ ச புண்ட்ரேக்ஷு சாபம் புஷ்பசிவீமுகம்
ரத்னபாத்ரம் ஸுதாபூர்ணம் வரதம் பிப்ரதீம்கரை:
ஏவம் த்யாத்வார்சயேத் தேவீம் நித்ய பூஜாஸு ஸித்தயே.

ஸ்ரீமானினி ரமண பத்மஜ சங்கராதி
கீர்வாண வந்தித பதாம்போருஹே
புராணி காமாக்ஷி லோகஜனனீ கமனீய காத்ரி
காமேஸ்வரி த்ரிபுரஸுந்தரி மாம் அவத்வம்.

ரக்தாம் ரக்த துகூலாங்க லேபனாம் ரக்த பூஷணாம்
தனுர்பாணான் புஸ்தகம் சாக்ஷமாலிகாம்
வராபீதிம சதததீம் த்ரைலோக்ய வஸகாரிணீம்
ஏவம் காமேஸ்வரீம் த்யாயேத் ஸர்வஸௌ    பாக்ய வாக்ப்ரதா.

தேவீம் த்யாயேத் ஜகத்தாத்ரீம் ஜபாகுஸுமஸந் நிபாம்
பால பானு ப்ரதீகாசாம் சாதகும்ப சமப்ரபாம்
ரக்த வத்ஸரபரிதானம் சம்பதி வித்ய வசங்கரித்
நமாமி வரதாம் தேவீம் காமேஸ்வரீம் அபயப்ரதாம்.

ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்:

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்திதாம் அகார ப்ரக்ருதிக அம்ருத கலாத்மிகாம்
காமேஸ்வரி நித்யா ஸ்வரூபிணீம் ஸர்வ ஸம்மோ ஹன சக்ர
ஸ்வாமினீம் காமாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம், ஸ்ரீ கேசவ
வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவ தாம்
ஸ்ரீ ஸௌந்தர்ய லக்ஷ்மி ரூபேண காமேஸ்வர்யை நம:


வழிபட வேண்டிய திதிகள் :


சுக்ல பக்ஷ ப்ரதமை/அமாவாசை (ப்ரதிபாத திதி ரூப காமேஸ்வரி நித்யாயை நம:)

நைவேத்யம் : பசு நெய்.

பூஜைக்கான புஷ்பம் : பல வண்ண வாசனையுள்ள மலர்கள்.

திதி தான பலன் :  இந்த தேவிக்கு பசு நெய்யை நிவேதித்து தானம் செய்தால் நோய்கள் விலகியோடும்.

பஞ்சோபசார பூஜை :

ஓம் காமேஸ்வரி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:


இத்திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்:


 இத்திதியில் பிறந்தவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்பவர்களாக விளங்குவார்கள். அலங்காரப் பிரியர்கள்.  நவரத்தினங்கள், சிவப்பு நிற ஆடைகளை அணிவதில் பிரியம் இருக்கும். தெய்வீகத் தன்மை கொண்டவர்கள். புன்சிரிப்பு முகத்தினர். முக்காலங்களையும் உணரும்  தன்மையுடையவர்கள். அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இத்திதியில் பிறந்தவர்கள் காமேஸ்வரி நித்யா தேவியை வணங்கி வழிபட்டால்  வாழ்வு வளம் பெறும்; தினமும் இத்தேவியின் மூலமந்திரத்தை 45 முறை பாராயணம் செய்தால் சகல துன்பங்களும் விலகும்.

இத்தேவியின் யந்திரம் வரையும் முறை:


சந்தன குங்குமக் கலவையால் ஐந்திதழ்க் கமலம், அதற்கு வெளியில் எட்டிதழ்க் கமலம், பதினாறிதழ்க் கமலம்,  ஷட்கோணம் நான்கு வாயில்களுடன் கூடிய சதுரஸ்ரம் கொண்ட பூஜா யந்திரத்தை எழுதி வழிபடவும். எட்டு தளங்களில் அனங்ககுஸுமா, அனங்கமேகலா,  அனங்க மதனா, அனங்க மதனாதுரா, மாதவேகினி, புவனபாலா, சசிரேகா, ககனரேகா போன்ற தேவதைகளை வழிபட வேண்டும். பதினாறு தளங்களில் சிரத்தா,  ப்ரீதி, ரதி, தார்தி, விந்தி, மனோரமா, மனோஹரா, மனோரதா, மதன்னோமதிதி, மோகினி, தீபனி, ஸோஷனி, வசங்கரீ, சிஞ்ஜினி, சுபகா, ப்ரியதர்ஷினி போன்ற  சந்திரனின் அமிர்த கலை வடிவான தேவதைகளை  தியானித்து வழிபட வேண்டும்.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ அமாவாசை நித்யா தேவி :

துதி அமாவாசி தானான அரூபத்தாயே
அகண்ட பரிபூரணையே அமலை சக்தி
நம்மாலே பாடறியேன் நினது பேரில்
நாவிலே வந்தருள்செய் நாயேனுக்கு


தம்மாலே ஷோடஸ தோத்திரம் விளங்க
தயவு செய்து நின் பதத்தில் அளிப்பாய் தேவி
சும்மா நீ இருக்காதே கண் பார்த்தாள்வாய்
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழ்வே!


அகத்தியர் அருளிய க்ருஷ்ண பக்ஷ பிரதமை நித்யா தேவி துதி :

பிரதமையிற் பிரவிடையாய்களை வேறாகி
பிங்கலை விட்டிடைக் கலையிற் பிறந்த கன்னி
உறவாக விரவியை விட்டகலா நின்ற
உமையவளே என் பிறவி ஒழியச் செய்வாய்


இறவாத வரத்துடன் வரம் எட்டெட்டுக்கும்
எளிதாக சித்திக்க எனக்குத் தந்து
சுருதியிலே வந்தருள் செய் அடியேனுக்கு
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழியவே!


பிரவிடை என்றால் பருவம் அடைந்த பருவ மங்கை. ரவி எனும் சூரியமண்டலத்தை விட்டு அகலாதவள்; பானு மண்டல மத்யஸ்தா என்கிறது லலிதா  ஸஹஸ்ரநாமம். தேவியின் திருவருள் சித்தித்தால் புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, பெருமை,  இளமை, துணிவு, கோபமின்மை ஆகிய பதினாறு பேறுகளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.


மாத்ருகா அர்ச்சனை:

ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் வாகீஸ்யை நம:
ஓம் ப்ரஹ்ம ஸஞ்சிதாயை நம:
ஓம் அக்ஷராயை நம:

ஓம் த்ரிமாத்ராயை நம:
ஓம் த்ரிபதாயை நம:
ஓம் த்ரிகுணாத்மிகாயை நம:
ஓம் ஸுரஸித்த கணாத்யக்ஷாயை நம:
ஓம் கணமாத்ரே நம:

ஓம் கணேஸ்வர்யை நம:
ஓம் சண்டிகாயை நம:
ஓம் சண்டமுண்டாயை நம:
ஓம் சாமுண்ட்யை நம:
ஓம் தம்ஷ்ட்ரிண்யை நம:

ஓம் விஸ்வம்பராயை நம:
ஓம் விஸ்வயோன்யை நம:
ஓம் விஸ்வமாத்ரே நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:

ஓம் ஸ்வதாயை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் ருத்யை நம:
ஓம் காயத்ர்யை நம:
ஓம் கோணாயை நம:

ஓம் ககாயை நம:
ஓம் வேதமாத்ரே நம:
ஓம் வரிஷ்டாயை நம:
ஓம் ஸுப்ரபாயை நம:
ஓம் ஸித்த வாஹின்யை நம:

ஓம் ஆதித்ய வாஹின்யை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரபாவாயை நம:
ஓம் அனுமண்டலாயை நம:
ஓம் ஜ்யோத்ஸ்னாயை நம:

ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் பவது:க பயாபஹாராயை நம:
ஓம் ஸிவதத்வாயை நம:
ஓம் ஸிவாயை நம:

ஓம் ஸாந்தாயை நம:
ஓம் ஸாந்திதாயை நம:
ஓம் ஸாந்தி ரூபிண்யை நம:
ஓம் ஸௌபாக்யதாயை நம:
ஓம் ஸுபாயை நம:

ஓம் கௌர்யை நம:
ஓம் உமாயை நம:
ஓம் ஹைமவத்யை நம:
ஓம் ப்ரியாயை நம:
ஓம் தக்ஷாயை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:









No comments:

Post a Comment