கேரளத்தில் பரசுராமர் நிறுவிய காளி கோயில்களுள் கொடுங்களூர் பகவதி கோயிலும் ஒன்று, தற்சமயம் பகவதி கோயில் இருக்கும் இடத்திலிருந்து சற்று விலகி இருந்ததாகவும், கண்ணகிக்கு கோயில் எழுப்பிய சேரமன்னன் காளிகோயிலில் இருந்த விக்ரகத்தையே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாகவும், காளியின் ரூபத்திலேயே கண்ணகி வழி படப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சக்தி பீடத்தில் தாரகனை வதைத்த பத்ரகாளியின் வடிவத்தோடு தேவியின் திருவுருவம் காணப்படுகிறது. எட்டு கரங்களில் வாள், திரிசூலம், மணி, சிலம்பு போன்றவை காணப்படுகின்றன. ஆறடி உயர திருமேனி. இது பலா மரத்தினால் செய்யப்பட்ட திருவுருவம் என்கிறார்கள். கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறாள், அன்னை. மூலவிக்ரகத்திற்கு அபிஷேகம் கிடையாது. பக்தர்கள் செந்நிற ஆடைகளை காணிக்கையாகத் தருகிறார்கள். புஷ்பாஞ்சலி மிகவும் முக்கியமான வழிபாடு. பெரும்பான்மையாக செந்நிற மலர்களே உபயோகப்படுத்தப்படுகின்றன.
கர்ப்பக்கிரகத்தின் அருகில் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் இருக்கிறது. இந்த ஸ்ரீசக்ரத்திற்கும் பூஜை உண்டு. அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் மகாசக்திபீடமாகக் கருதப்படுகிறது. சந்தனம், மஞ்சள், சுண்ணாம்பு கலந்த சாந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. சுற்றி வரும்போது கணபதியைத் தரிசிக்கலாம். சிவலிங்க சந்நதியும் உண்டு. இங்கே இரண்டு உற்சவங்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. ஒன்று தாலப்பொலி என்னும் உற்சவம். இது நான்கு நாட்கள் கொண்டாட்டம். மகரசங்கராந்தியன்று இவ்விழா தொடங்குகிறது. நாம் போகியன்று வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களைத் தெருவில் போட்டு எரிப்பதைப்போல, மகரசங்கராந்திக்கு முன்தினம் கோயிலில் இருக்கும் வேண்டாத பொருட்களையெல்லாம் கோயில் வளாகத்தில் போட்டு எரிக்கிறார்கள். மகர சங்கராந்தி தினத்தன்று மாலையில் தாலப்பொலி உற்சவம் தொடங்குகிறது. பகவதியின் உற்சவ விக்ரகத்தை (இதை திடம்பு என்கிறார்கள்) அலங்கரிக்கப்பட்ட யானைமீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்கிறார்கள்.
அந்த யானையின் இரு பக்கங்களிலும் வேறு சில யானைகளும் வருகின்றன. எல்லா யானைகள் மீதும் நன்கு அலங்கரிக்கப்பட்ட முத்துக் குடைகள் இருக்கும். திடம்பு விக்ரகத்தைத் தாங்கிச் செல்லும் யானையின்மேல் ஒரு பெரிய தாம்பாளம் காணப்படும். அதில் அரிசி, தேங்காய், உதிரிப் பூக்கள், பாக்குப் பூங்கொத்து ஆகியவை காணப்படும். இரண்டாவது, பரணி உற்சவம். இது ஏழு நாட்கள் நடைபெறும். மலையாள மாதமான கும்பத்தில் (பங்குனி) பரணி நட்சத்திரத்தன்று கொடியேற்றுவார்கள். இந்த உற்சவத்தின் முதல் நாளன்று, கோயிலின் வடக்கு நுழைவாயிலின் அருகே புதைக்கப்பட்டிருக்கும் இரண்டு வட்ட வடிவமான கற்களை எடுத்துப் பூஜை செய்து, அவற்றிற்கு சிவப்பு நிறப் பட்டுத் துண்டு சாத்தி, அந்தக் கற்களை மீண்டும் பூமியில் புதைக்கிறார்கள். இதற்கு ‘கோழிக்கல்லு மூடுதல்’ என்று பெயர். ஒரு காலகட்டம்வரை இந்தக் கற்களின் மீது கோழியின் ரத்தத்தை ஊற்றி காளிக்குச் சமர்ப்பித்ததாகவும், தற்சமயம் அது நிறுத்தப்பட்டு சிவப்புநிற பட்டுத்துண்டு சாத்தப்படுவதாகவும் கூறுகிறார்கள் கோயிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் நாம் தரிசிப்பது பன்னிரண்டு அடி உயரமுள்ள க்ஷேத்ர பாலகரை.
அடுத்ததாக அமர்ந்த கோலத்தில் காணப்படும் ‘வசூரிமாலா’வைத்து தரிசிக்கிறோம். இது பகவதியின் இன்னொரு தோற்றம். இந்த பகவதியைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் மஞ்சள் பொடியையும் சுண்ணாம்பையும் கலந்து பகவதியின் மேல் தூவுகிறார்கள். மேற்கூரை இல்லாத மண்டபத்தில் பகவதி காணப்படுகிறாள். தகிக்கும் கோடை காலத்தில் மாரியம்மன் கோயில்களில் கருவறையைச் சுற்றிலும் நீர்க்கட்டு அமைப்பார்கள். அம்மை போன்ற உஷ்ண நோய்கள் பரவும். அந்த காலகட்டத்தில் ஆலயம்தோறும் விசேஷமான வைபவங்களை நடத்தி, அன்னையின் அருள் வேண்டுவார்கள். தமிழகத்தில் மாரியம்மனைப் போன்றே கேரளத்தில் வசூரிமாலா விழாவைக் கொண்டாடுகிறார்கள். வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்ட கோலத்தில், இரு கரங்களையும் தன் முழங்காலில் பதித்தவளாகக் காட்சிதரும் இந்தத்தேவியின் சிலை மிகவும் புராதனமானது, ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. தனிச்சந்நதியில் தரிசனம் அருள்கிறாள் வசூரிமாலா தேவி.
இந்தத் தேவியின் திருவுரு மீது தூவப்படும் மஞ்சள் பொடியை சிறிது எடுத்துப் பிரசாதமாக வழங்குகிறார்கள். அந்தப் பிரசாதம் எந்த வீட்டில் இருக்கிறதோ, அங்கு எந்தத் துன்பமும், தொற்று நோயும் புகாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத்தேவிக்கு ஒரு புராண வரலாறு உண்டு. போரில் காளிதேவியின் பேராற்றலைத் தாங்கமுடியாமல் தடுமாறுகிறான் தாருகாசுரன். தாருகாசுரனின் மனைவி மனம் கலங்கினாள். பார்வதியைச் சரண் புகுந்து தன் மாங்கல்யம் நிலைக்க அருளுமாறு வேண்டினாள். உடனே உமையவள், தன் வியர்வைத் துளிகளை அவளிடம் தந்து, கணவனைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு சொன்னாள். அவள் வருவதற்குள், காளிதேவி தாருகனின் தலையைக் கொய்து விட்டாள். அதனால் சினந்த தாருகாசுரனின் மனைவி, அந்த வியர்வைத் துளிகளை காளிதேவியின் மீது வீசினாள். அவை தேவியின் உடலெங்கும் கொப்புளங்களாயின.
அதிலிருந்து மீண்ட காளிதேவி, தாருகனின் மனைவியைக் குருடாக்கினாள் என்றாலும், அவளுடைய பதிபக்தியை மெச்சி, அவளுக்கு வசூரிமாலா என்ற பெயருடன் தனிச்சந்நதி வழங்கினாள். அவளை வழிபடுபவர்களை எந்தத் துன்பமும் அணுகாது என்று வரமளித்தாள். அதன்படியே, கொடுங்களூர் பகவதியை வழிபட வரும் அன்பர்கள், இந்த வசூரிமாலாவையும் மஞ்சள் தூவி வழிபடுகிறார்கள். மங்கலப் பொருளான மஞ்சள் பொடியை ஏற்று, தன் பக்தர்களின் வாழ்விலும் மங்கலம் பொங்கச் செய்பவளாக விளங்கிக் கொண்டிருக்கிறாள் வசூரிமாலா. ஒரு தாய்போல கொடுங்களூர் பகவதியும் பக்தர்களின் குற்றங்களை மன்னித்து, அவர்களது மனக்குறைகளைத் தீர்த்து அருள் புரிகிறாள். கோயில் தினமும் விடியற்காலை மூன்று மணி முதல் இரவு ஒன்பது மணி வரை இடைவேளை இல்லாமல் திறந்திருக்கும்.
திருச்சூரிலிருந்து 38 கி.மீ.தூரத்தில் இவ்வூர் உள்ளது. பரவூர் வழியாக எர்ணாகுளம் செல்லும் பஸ்களில் சென்று கொடுங்கலூரில் இறங்க வேண்டும். அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் கொடுங்களூர் உள்ளது.

No comments:
Post a Comment