Wednesday, 30 November 2016

சகல நலன்களும் அருளும் சப்தாவரண கணபதிகள்!

‘‘வாரணாசி’’ என்னும் ‘‘காசி’’ மாநகரத்தில் சப்த ஆவரணத்தில் (ஏழு பிரிவுகளில்) ஐம்பத்தாறு கணபதி மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.  அந்த மூர்த்தங்களின் பெயர்களைச் சொல்லி பூஜை செய்து காலங்காலமாக பல நன்மைகளை அடைந்து வருகிறார்கள் பக்தர்கள். இதை விநாயக  புராணமும் உயர்வாக கூறுகின்றது.

முதல் ஆவரணம் துண்டி கணபதியே நம: துர்கை கணபதியே நம: அர்க்க கணபதியே நம: பிரஸன்ன கணபதியே நம: பீம கணபதியே நம: சுந்தர  கணபதியே நம: (ஆக ஆறு மூர்த்தங்கள்)

இரண்டாவது ஆவரணம் சித்ருப கணபதியே நம: லம்போதர கணபதியே நம: கூப தந்த கணபதியே நம: சலாடக கணபதியே நம: குலப்பிரிய கணபதியே  நம: சதுர்த்தி கணபதியே நம: பஞ்சமி கணபதியே நம: முண்ட கணபதியே நம: சசிமுக கணபதியே நம: விடங்க கணபதியே நம: நிஜ கணபதியே நம:  ராஜபுத்ர கணபதியே நம: பிரணவ கணபதியே நம: உபதாப கணபதியே நம: (ஆக பதினான்கு மூர்த்தங்கள்)

மூன்றாவது ஆவரணம் வக்ர துண்ட கணபதியே நம: ஏக தந்த கணபதியே நம: த்விமுக கணபதியே நம: பஞ்சமுக கணபதியே நம: ஏரம்ப கணபதியே  நம: விக்னராஜ கணபதியே நம: வரத கணபதியே நம: மோதகப்பிரிய கணபதியே நம: (ஆக எட்டு மூர்த்தங்கள்)

நாலாவது ஆவரணம் ஏகோபயப்ரத கணபதியே நம: சிங்கமுக கணபதியே நம: கூர்ணிதாக்ஷ கணபதியே நம: க்ஷிப்ரப்ரசாத கணபதியே நம: சிந்தாமணி
கணபதியே நம: தந்த வக்த்ர கணபதியே நம: அயிசண்டி கணபதியே நம: ஊர்த்தி வாண்ட முண்ட கணபதியே நம: (ஆக எட்டு மூர்த்தங்கள்)

ஐந்தாவது ஆவரணம்: மணி கர்ண கணபதியே நம: ஆசார சிருஷ்டி கணபதியே நம: கஜகர்ண கணபதியே நம: கண்டா கணபதியே நம: சுமங்கல  கணபதியே நம: மந்திர கணபதியே நம: (ஆக ஆறு மூர்த்தங்கள்)

ஆறாவது ஆவரணம் மோதக கணபதியே நம: ஸுமுக கணபதியே நம: துர்முக கணபதியே நம: கண கணபதியே நம: அமர கணபதியே நம: ஆக்கினை
கணபதியே நம: துவார கணபதியே நம: அவிமுக்த கணபதியே நம: (ஆக எட்டு மூர்த்தங்கள்)

ஏழாவது ஆவரணம் ஆமோதக கணபதியே நம: பரகீரத கணபதியே நம: ஹரி சந்திர கணபதியே நம: கபர்த்தி கணபதியே நம: பந்து கணபதியே நம:
கனக கணபதியே நம: (ஆக ஆறு மூர்த்தங்கள்)

காசி க்ஷேத்ரத்தை மனதில் நினைத்து இந்த கணபதி மூர்த்தங் களைப் போற்றி வழிபடுவோம்.

 

No comments:

Post a Comment