Monday 12 August 2019

karanam!


 உங்கள் கரணத்திற்க்கு பலம் சேர்க்கும் ஆலயத்திற்கு அதிகம் சென்று வழிபாடு செய்ய காரியசித்தி அடையலாம்.

கரணம் - அதிபதி - மிருகம்- ஆலயம்

பவம் - செவ்வாய் -சிங்கம் - செவ்வாய் நாமக்கல் லெக்ஷ்மி நரசிம்மர்,

பாலவம் - ராகு - புலி சபரிமலை ஐயப்பன், தர்மசாஸ்தா மற்றும் கிராம தேவதைகள்,

கௌலவம் - சனி - பன்றி ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள்,

தைதுலை - சுக்கிரன் - கழுதை ஷேஷ்டா தெய்வம் பெருநகர், வந்தவாசி,

கரசை - சந்திரன் - யானை- புகழ் பாடல் பெற்ற விநாயகர் ஆலயம், விக்னேஷ்வரன்

வணிசை - சூரியன் - காளை திருமளப்பாடி- அரியலூர்,

பத்திரை- கேது - கோழி திருச்செந்தூர் முருகன்,

சகுனி - சனி - காகம் திருநள்ளாறு சனிபகவான்,

சதுஷ்பாதம்- குரு - நாய் பைரவர் , ஷேந்திரபாலபுரம்- குத்தாலம் கும்பகோணம்

நாகவம் - ராகு - பாம்பு நாகப்பட்டினம் நாகராஜா

கிம்ஸ்துக்னம் - புதன் - புழு திருவரங்கம் , வைத்திஸ்வரன்கோயில் தன்வந்திரி



 

Sunday 11 August 2019

செல்வம் வளம் கொழிக்க!

செல்வம் வளம் கொழிக்க, எடுத்த காரியங்களில் வெற்றிபெற, உங்கள் கனவுகள் நனவாக, எப்போதும் மகிழ்ச்சி பொங்க, குடும்பத்தில் அமைதியும் வளமும் நிறைவாக இருக்க, மொத்தத்தில் எல்லாமும் பெற்று நிறைவாய் வாழ இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

ஆக, எப்படி இறை அருளை பெறுவது?


இதோ... பார்ப்போம்.

உங்களில் ஒரு சிலருக்கு நிச்சயம் ஒரு விஷயம் தெரியும் ...


உங்கள் நண்பரோ அல்லது உங்கள் அருகில் உள்ள வீட்டினரோ புதியதாக ஒரு கோயிலுக்குச் சென்று வந்ததும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து வந்த துயரங்கள் நீங்கி வளமான வாழ்வு அமைந்திருக்கும். நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

இது எதனால் ஏற்பட்டது?

ஒன்று அவரின் நட்சத்திரத்தின் அதிதேவதை தொடர்பான அல்லது அவரின் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான சம்பத்துதாரை நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு உரிய ஆலயத்திற்குச் சென்று வந்திருப்பார்,

அதன் காரணமாக அவரின் வாழ்வு உயரவும், மேம்படவும் செய்திருக்கும்.

இப்படி உங்கள் நட்சத்திரத் தொடர்பான தெய்வம் எது என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உங்கள் நட்சத்திரம் தொடர்பான தெய்வத்தை அறிந்து கொண்டு, அந்தத் தெய்வத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.

அதேபோல், சம்பத்துதாரை நட்சத்திரத்தின் தெய்வ வழிபாடு உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து உங்கள் வாழ்வை வளமாக்கும் என்பது உண்மை.

இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான அதிதேவதை யார் என்று பார்க்கலாமா?

நட்சத்திரம் ------ அதிதேவதை

அசுவினி ------ சரஸ்வதி

பரணி ------ துர்கை

கார்த்திகை ------- அக்னி

ரோகிணி ------- பிரம்மா

மிருகசீரிடம் ------- சந்திரன்

திருவாதிரை -------- நடராஜர்

புனர்பூசம் ------- அதிதி

பூசம் -------- பிரகஸ்பதி (குரு)

ஆயில்யம் --------- ஆதிசேஷன்

மகம் -------- பித்ருக்கள்,சுக்கிரன்

பூரம் ------- பார்வதி

உத்திரம் ------ சூரியன்

அஸ்தம் ------ சாஸ்தா

சித்திரை --------- விஷ்வகர்மா

சுவாதி ------ வாயு

விசாகம் ------ முருகன்

அனுசம் ------ ஶ்ரீலஷ்மி

கேட்டை --------- இந்திரன்

மூலம் --------- நிருதி

பூராடம் ------- வருணன்

உத்திராடம் ------- கணபதி

திருவோணம் -------- விஷ்ணு

அவிட்டம் ------- வசுக்கள்

சதயம் --------- எமன்

பூரட்டாதி --------- குபேரன்

உத்திரட்டாதி -------- காமதேனு

ரேவதி --------- சனிபகவான்

இப்போது நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அறிந்துகொண்டீர்கள். இனியென்ன... அந்தத் தெய்வத்தை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நினைக்க மறக்காதீர்கள். வழிபட மறக்காதீர்கள்.

அதேபோல உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர தேவதை தொடர்பான ஆலயங்களுக்கு சென்று வர 100 சதவிகித வெற்றியை அடைவீர்கள் என்பதும் சத்தியம்.

பூசம் நட்சத்திரத்திற்கு அதிதேவதை குரு பகவான். இவரையும் வணங்கி , இவருக்கு சம்பத்து நட்சத்திரமான ஆயில்யத்தின் தேவதையான “ஆதிசேஷனையும்” வணங்கி வந்தால், எல்லாம் நன்மையாகும். எல்லாக் காரியமும் ஜெயமாகும்.

ஆனால் ஆதிசேஷனுக்கு எங்கு போவது? எங்கும் போக வேண்டாம் நம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆதிசேஷனின் மேல் சயனித்து அருள் பாலித்து வருகிறார் அல்லவா. அவரை தரிசிக்கும் போது ஆதிசேஷனையும் சேர்த்தே நாம் வழிபடுகிறோம். அவரிடமும் நம் கோரிக்கையையும் கண்ணீரையும் வைப்போம். கை மேல் பலன் தருவார் ஆதிசேஷன்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குபேரனையும் வணங்கி, உத்திரட்டாதியின் காமதேனுவையும் வணங்க வேண்டும்.

இப்படி தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வணங்கி வாருங்கள். சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் நிம்மதியும் நிறைவுமாக வாழ்வீர்கள்.

சம்பத்துதாரை! 100 சதவிகிதம் வெற்றி!

உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம்என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள்.

அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான்இருக்கும்.


வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.

புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம்.

புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை. வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா!

சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்மை வந்தடைய வேண்டும் என்பதற்காகத்தானே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான். அதுதான் சம்பத்து தாரை.

சம்பத்துதாரை” என்னும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

இதை எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள்

பரணி, பூரம், பூராடம்

பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்

கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம்,திருவோணம்

ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்

மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி,சதயம்

திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

பூசம், அனுசம்,உத்திரட்டாதி

பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

ஆயில்யம்,கேட்டை,ரேவதி

ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

மகம், மூலம்,அசுவினி

மகம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

பூரம்,பூராடம்,பரணி

பூரம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

உத்திரம், உத்திராடம்,கார்த்திகை

உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

அஸ்தம்,திருவோணம்,ரோகிணி

அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்

சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

சுவாதி,சதயம்,திருவாதிரை

சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

அனுசம்,உத்திரட்டாதி, பூசம்

அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

கேட்டை,ரேவதி,ஆயில்யம்

கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

மூலம், அசுவினி,மகம்

மூலம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

பூராடம்,பரணி,பூரம்

பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

உத்திராடம், கார்த்திகை, உத்திரம்

உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

திருவோணம், ரோகிணி,அஸ்தம்

திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை

அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

சதயம்,திருவாதிரை,சுவாதி

சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்

பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

உத்திரட்டாதி, பூசம், அனுசம்

உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

ரேவதி,ஆயில்யம்,கேட்டை

ரேவதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்

அசுவினி,மகம்,மூலம்

இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்களை அறிந்துகொண்டீர்கள் அல்லவா. உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்கள் எந்த நாளில் இருக்கிறதோ... அந்த நாளே உங்களுக்கு உகந்த பொன்னாள். தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே. இந்த நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்தக் காரியமும் ஜெயத்தில்தான் முடியும். ஜெயத்தையே தந்தருளும்.

இதைப் பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.

இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன்.

நவகிரகங்களே அவரவர் நட்சத்திரங்களுக்கு சம்பத்து நட்சத்திரமான அடுத்தநட்சத்திரங்களில் தான் பிறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... சம்பத்து நட்சத்திரங்களின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும்!

உதாரணமாக சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று “உத்திரம்.” ஆனால் சூரியபகவான் ஜனித்த நட்சத்திரம் உத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான “அஸ்தம்”நட்சத்திரத்தில்.

சந்திரன் தன் நட்சத்திரமான “ரோகிணிக்கு” அடுத்த நட்சத்திரமான “மிருகசீரிடம்”நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இப்படி கிரகங்களே “சம்பத்து நட்சத்திரங்களை” பயன்படுத்தி அழியாப் புகழுடன்இருக்கும் போது, நாமும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையைஅமைத்துக்கொள்வோம். செழிப்பான இந்த வாழ்க்கையை சீரும்சிறப்புமாக்குவோம்!





 

தாரை என்றால் என்ன?

1) அஸ்வினி-மகம்- மூலம்-கேதுவின் நட்சத்திரங்கள்

2) பரணி-பூரம்-பூராடம்- சுக்கிரன்

3) கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்—சூரியன்

4)ரோகிணி-அஸ்தம்-திருவோணம்- சந்திரன்

5) மிருகசீரிடம்-சித்திரை-அவிட்டம்- செவ்வாய்

6)திருவாதிரை-சுவாதி-சதயம்— ராகு

7)புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி— குரு

8) பூசம்-அனுசம்-உத்திரட்டாதி- சனி

9) ஆயில்யம்-கேட்டை-ரேவதி— புதன்

இப்போது உங்கள் நட்சத்திரமும் அதன் அதிபதி கிரகம் யார் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

இதுவரை உங்கள் நட்சத்திரத்தை கோயிலில் அர்ச்சனைக்கும், திருமணப் பொருத்தத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியிருப்பீர்கள்.

இப்போது முற்றிலும் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும் விதமான தகவல்களை அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.

இங்கே தாரை என்னும் விஷயத்தையும், உங்களுக்கு அனுசரணையான, ஆதரவான நட்சத்திரங்கள் எதுவென்றும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

தாரை என்றால் என்ன? தாரை என்றால் கொடுப்பது என்று பொருள்.

தாரைவார்த்து கொடுப்பது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது தம்மிடம் இருப்பதை அப்படியே அள்ளிக்கொடுப்பது என்று பொருள்.

அது நன்மையோ அல்லது தீமையோ தயவுதாட்சண்யம் பார்க்காது அப்படியே வாரிக் கொடுத்துவிடும்.

என்னென்ன தாரைகள் உள்ளது என பார்ப்போம்,

1 வது தாரை - ஜென்ம தாரை (உங்கள் ஜென்ம நட்சத்திரம்)

2 வது தாரை - சம்பத்து தாரை ( உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரம்)

3 வது தாரை - விபத்து தாரை —- மூன்றாவது நட்சத்திரம்

4 வது தாரை- ஷேம தாரை — நான்காவது நட்சத்திரம்

5 வது தாரை- பிரத்தியக்கு தாரை - 5 வது நட்சத்திரம்

6 வது தாரை - சாதக தாரை - 6 வது நட்சத்திரம்

7 வது தாரை- வதை தாரை -7 வது நட்சத்திரம்

8 வது தாரை- மைத்ர தாரை - 8 வது நட்சத்திரம்

9 வது தாரை- அதி மைத்ர தாரை - 9 வது நட்சத்திரம்.

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதன் இணை நட்சத்திரங்களையும் உங்கள் நட்சத்திரமாக கருதவேண்டும்.

உதாரணம்:- உங்கள் நட்சத்திரம் அசுவினி என்றால் மகம், மூலம் இவையும் உங்கள் நட்சத்திரமாகச் செயல்படும்.

அதாவது அசுவினி - ஜென்ம நட்சத்திரம்

மகம்- அனு ஜென்ம நட்சத்திரம்

மூலம்- திரி ஜென்ம நட்சத்திரம்

இப்படி உங்கள் நட்சத்திரமும் இணை நட்சத்திரங்களும் உங்களுக்கு செயல்படும்.

உங்கள் ஜென்ம, அனுஜென்ம,திரிஜென்ம நட்சத்திரங்களில் சந்திரன் பயணிக்கும் போது உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களை இதுவரை உணர்ந்திருக்க மாட்டீர்கள்.

அதை ஏதோ அன்றாட நிகழ்வு போல் கடந்திருப்பீர்கள்.

இனி கவனியுங்கள்..,

அந்த நாட்களில் படபடப்பு, பதட்டம், சட்டென்று உணர்ச்சிவசப்படுதல், சுள்ளென்ற கோபம் உருவாகுதல், எரிந்து விழுதல், அலைச்சல் அதிகரித்தல், தாகம்அதிகமாகுதல், அதிக சிறுநீர் வெளிப்பாடு, மாலை நேரத்தில் அமைதி திரும்புதல்., மகிழ்ச்சி வெளிப்படுதல். இது போன்றவை அன்றைய தினம் உண்டாகும்