Thursday 21 April 2016

விஷூக்கனி!

 
 
இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். மலையாளிகள் இந்த நாளை வெகு சிறப்பானதாகக் கருதுகின்றனர். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில்,
மீன ராசியிலிருந்து மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ).



"விஷூக்கனி" என்றால் விஷூ அன்று முதலில் காண்பது என்று பொருள்படும்.

இந்திய சோதிட சாத்திரத்தின் படி காலத்தின் கடவுளாக கால தேவர்களின்
தலைவனாக விஷ்ணு கருதப்படுகிறார். விஷூ இக்காலங்களின் ஆரம்பமாக விளங்குவதால் இத்தேவர்களுக்கு பூஜை செய்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.


மரபுவழி மலையாளிகள் விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர்.
ஆகையினால் விஷூக்கனி யின் போது பூஜை அறை ஏற்பாட்டில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர்.  இதனால் அவர்களின் புதுவருடம் செழுமையானதாகவும், நேர்த்தியானதாகவும், சிறப்பானதாகவும் அமையுமென நம்புகின்றனர்!
 


பொதுவாக இந்த 'கனி ' என்கிற முதற்பார்வைக்கான விஷூக்கனியை ஏற்பாடு செய்யும் தாயோ அல்லது பாட்டியோ கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு வெகு நேரம் முன்னரே அவர் எழுந்திருப்பார் [மகோன்னதமான பிரம்ம முகூர்த்த காலத்தில் (காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை)
 எழுந்து எண்ணெய் விளக்குகளை ஏற்றி அந்த கண் கொள்ளாக் காட்சியைக் காண்பர். பிறகு மற்ற குடும்பத்தவர்கள் உறங்கும் அறைக்குச் சென்று ஒவ்வொருவராய் எழுப்புவர். அவர்கள் கண்களை தன் கையால் மூடி பூஜை அறைக்கு அழைத்து வந்து அந்த தெய்வீகக் காட்சியைக் காட்டுவர்.



விஷூக்கனியின் ஏற்பாடுகள்
இந்நன்னாளில் அஷ்ட மாங்கல்யம் எனச்சொல்லப்படும்,

பஞ்சலோக பாத்திரம்
தாம்பூலம்
மஞ்சள் அரிசி
குங்குமம்
கண்ணாடி
புதிய துணி
கொட்டைப்பாக்கு
இந்து மதநூல்களுள் ஒன்று
மற்றும் பழவகைகளுள்,மாம்பழம்
தேங்காய்
முந்திரி
வாழைப்பழம்
பசுமையான காய்கறிகள்
இவைகளோடு சேர்த்து,தங்ககாசுகள்
வெள்ளிக்காசுகள்
நெல்மணிகள்
தூய நீர்!

 இது போன்ற பொருட்களை காண்பதன் மூலம் அந்த வருடம் மிக இனிமையான வருடமாக செல்வம் கொழிக்கும் வருடமாக, என்பது அவர்களின் நம்பிக்கையாம். கனி" பார்வைக்காக சராசரி அளவுள்ள உருளி உபயோகப் படுத்தப் படுகின்றது.


உருளி பாத்திரம் வட்டமாகவும் வாய் திறந்தும் இருக்கும். பொதுவாக வெண்கலத்தினால் ஆன உருளியையே இதற்குப் பயன்படுத்துகின்றனர். பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு வந்தது. ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது அதாவது அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.

கொல்லம் சார்ந்த பகுதிகளில் அட்சதம் எனப்படும் அரிசி, மஞ்சள் கலவை நெல்லாகவும் அரிசியாகவும் கலக்கப்பட்டு உருளியில் வைக்கப்படுகின்றது. ஆனால் கேரளாவின் மற்ற பகுதிகளில் அரிசி உருளிக்குள் செல்லும் முதற்பொருளாக உபயோகப் படுத்துகின்றனர். இது உருளிக்குள் மற்ற பொருட்களை வைப்பதற்கு அடித்தளமாக அமைகின்றது.

அரிசிக்கு மேல் புதிதாக சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை கசவு புடவையை (கேரளப்பாணி தங்க சரிகை கொண்ட புடவை) வைத்து அதன் மேல் உன்னதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனி வெள்ளரியை (தங்க நிறத்திலான வடிவுள்ள வெள்ளரிக்காய்) வெற்றிலை, பாக்கு (கனிந்த மஞ்சள் கலந்த சிவப்பு நிறமுள்ள பாக்கு, தங்க நிறத்திலான மாம்பழம், கனிந்த மஞ்சள் பலாப்பழம் (இரண்டாக வெட்டியும்)  பளபளப்பான பித்தளையிலான வால் கண்ணாடி (கைக் கண்ணாடி) ஆகியவற்றையும் வைப்பர்.


 நீண்டு, ஒல்லியான கைப்பிடியுடன் கூடிய தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட வால் கண்ணாடியையும் நன்கு கஞ்சி போடப்பட்ட ஓர் துணியை விசிறி போல் மடித்து
பூஜையில் புனித நீர் விடுவதற்காக வடிவமைக்கப்பட்ட நன்றாக ஒளிரும் பித்தளை கிண்டிக்குள் வைக்கின்றனர். பிறகு இந்த கிண்டியை உருளிக்குள் அரிசி மேல் வைக்கின்றனர்.
பல இடங்களில் இராமாயணம் போன்ற புனித படைப்புகள் கொண்ட பனை ஓலைகள் (தலியோலா என அழைக்கப்படும்) கூட "கனி" பார்வைக்காக உருளியில் வைக்கப்படுகின்றது.

பிறகு ஒரு தங்க நாணயமோ அல்லது தங்க அணிகலனோ எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கப்படுகின்றது. பிறகு உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் எண்ணெய் நிரப்பி, திரியுடன் கனி உருளியின் மேல் வைக்கின்றனர். இதற்கான திரி கஞ்சி போடப்பட்ட துணியால் செய்யப்படுகின்றது. இது மேல் பாகம் நீளமாகவும் அடிப்பாகம் தடித்தும் வடிவமைக்கப்படுகின்றது.  இதன் அடிப்பாகம் தேங்காய் மூடிக்குள் உள்ள தேங்காய் எண்ணெயில் வைக்கப்படுகின்றது. திரியின் மேல்பாகம் நேராக நின்று எரிகின்றது.
 


 இந்தத் தீபங்களை ஏற்றுவதன் மூலம் இறைவனை நம் வாழ்வில் அழைப்பதாக  நம்புகின்றனர். பிறகு ஒரு தட்டில் சிறிது அரிசி மற்றும் மலர்களுடன் வெள்ளி நாணயத்தை வைக்கின்றனர். கனி காணலுக்குப் பிறகு வேண்டியவாறு இந்த வெள்ளி நாணயத்தை எடுத்து பூ அல்லது தலை உள்ளதா என்பதைக் காண்கின்றனர். எப்பகுதி வருகிறதோ அதைக் கொண்டு ஒருவருடைய வேண்டுதல் நிறைவேறும் நிலையை அறிகின்றனர். பிறகு கனி உருளியை ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சிலைக்கெதிராகவோ அல்லது படத்திற்கு முன்னரோ  வைக்கின்றனர்.
 


பிறகு கொன்னைப் பூ கொண்டு கனி உருளி, படம் மற்றும் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கின்றனர்.
ஏற்றப்பட்ட நில விளக்கை (பித்தளை விளக்கு) இதற்கு அருகே வைத்து அதன் தங்க நிற ஒளிர்வை கனி பார்வைக்காக கூட்டுகின்றனர். கண்களைத் திறந்து காணும்போது இறைவனின் தரிசனத்தால் காண்பவர் பூரிப்படைவார்.
பகவதியை நினைவூட்டும் கண்ணாடி ஒளி பிரதிபலிப்பால் விஷூக்கனியை ஒளிரச் செய்வதுடன் அதில் அவரவர் முகங்களையும் காட்டுகின்றது.

பூஜை அறைக்கு வர முடியாதவர்களுக்காக கனி உருளியை  வெளியே கொண்டு வந்து காண்பிப்பர். மேலும் தன் வீட்டுப் பசுக்களுக்கும் இதைக் காண்பிக்க மாட்டு கொட்டகைக்கு கொண்டு வரும் போது அங்கே உள்ள மரம், செடி, பறவை மற்றும் இயற்கை அனைத்தும் காணும் வாய்ப்பு பெறும். குளக்கரைக்கு கொண்டு சென்ற பிறகு, வீட்டை மூன்று முறை சுற்றி வருவர்.
 


சில இடங்களில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கனியை தயார் செய்த பின் அதனை தனது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களுக்கு கொண்டு செல்வர். அவ்வாறு கொண்டு செல்லும் போது இசைக்கருவிகளை இசைத்தபடி கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே செல்வர். அவர்கள் செல்லும் வீடுகளில் அவர்களுக்கு கைநீட்டம் கிடைக்கும். குழந்தைகள் இந்தச் சடங்கிற்காக ஆவலுடன் காத்திருப்பர். வீட்டில் உள்ள பெரியவர்கள், தாத்தா அல்லது தந்தை வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கைநீட்டம் வழங்குவர்.

கைநீட்டத்தில் உருளியிலிருந்து நாணயங்கள் (தற்போது ரூபாய் நோட்டுகள்), கொன்னை மலர்கள், அரிசி மற்றும் தங்கம் ஆகியவற்றை வழங்குவர். தங்கம் மற்றும் அரிசியை மீண்டும் உருளியில் வைத்து விடுவர். மலர்களை கண்களில் ஒத்திக் கொள்வர்

இப்பூஜை அறையில் நில விளக்கின் மகோன்னதமும், அதிலிருந்து உருளியில் பட்டு ஏற்படும் ஒளிச் சிதறல்களும், தங்க நிற கனி வெள்ளரி, தங்க ஆபரணங்கள், மஞ்சள் நிற கனி கொன்னை மலர்களின் அழகைக் கூட்டும் பளபளக்கும் பித்தளைக் கண்ணாடியும் மற்றும் இவை யாவும் சேர்ந்து உருவாக்கும் மஞ்சள் நிற ஆன்மீக ஒளிர்வு அந்த கிருஷ்ண பரமாத்மாவை நினைவுபடுத்துவதாக இருக்கும்.


தங்கம் விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. தங்க மஞ்சள் நிறமுடைய கனிக்கொன்னை மலர்களைக் கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். இப்பூ சூரியன் உச்சத்தில் உள்ள அதாவது விஷூ ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது.

பூஜை அறையில் இப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது.
தங்க நாணயம் அவரவரின் பொருளாதார நிலையையும் மற்றும் கலாச்சார ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது. இப்பண்டிகையின் மற்றொரு அம்சம் விஷூக்கை நீட்டம் எனப்படும்

செல்வம் பகிர்ந்து கொள்ளும் வழக்கமாகும். செல்வம் கொடுப்பவர்கள் தடையின்றி எல்லோருக்கும் கொடுப்பர். பெறுபவர்கள் மிக்க மரியாதையுடன் அதனைப் பெறுவர்.
 விஷூ தினத்தன்று செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி
சுற்றத்தாருக்கும், சிலர் அவர் வாழும் கிராமம் முழுமைக்குமே தானமளித்து
மகிழ்வர்.

விஷூ படக்கம்

வட கேரளாவின் பல பகுதிகளில் பட்டாசு வெடிப்பது விஷு கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாகும்.

விஷூ அன்று காலையிலும் அதற்கு முந்தைய தின மாலையிலும் குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.

விஷூக் கஞ்சி

சத்யா கேரள பண்டிகைகளில் மிகப் பெரிய பகுதியாகும். விஷூவின் போது, விஷூ கஞ்சி மற்றும் தோரன் மிக முக்கியமானதாகும். கஞ்சி, அரிசி, தேங்காய்ப் பால் மற்றும் நறுமணப் பொருட்கள் கொண்டு செய்வதாகும். தொட்டுக் கொள்ள, தோரன் என்பதையும் குறிப்பிட்ட செய்பொருட்கள் கொண்டு செய்வர். விஷூ அன்று விருந்தும் அளிக்கப் படுகின்றது,
இதில் அனைத்து ருசிகளும் அதாவது உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும்
கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமைக்கின்றனர்.

விருந்தில் வேப்பம்பூ ரசமும், மா ம்பழ பச்சடி யும் பரிமாறப்படுகின்றன. புனித புத்தகமாகிய இராமாயணத்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர்  இராமாயணத்தின் எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர்.

அன்றைய தினம் பக்தர்கள் காலையில்
சபரிமலை    ஐயப்பன் , குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று விஷூக்கனி காழ்சா" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர். 

 

சுகம் தரும் அசோகாஷ்டமி!


சுகம் தரும் மருதாணி மரத்திற்குவடமொழியில்அசோகம்என்றுபெயர்

பங்குனிமாதஅமாவாசையிலிருந்துஎட்டாவதுநாளில்வரும்அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது.

சோகம் என்றால்துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாதது.  அதனால்அசோகாஷ்டமிஎன்றுபெயர்.


 ஶ்ரீராமநவமிஅன்றோஅல்லதுஅதற்குமுதல்நாளோவரும்.

அன்றுசுத்தமானஇடங்களில்மருதாணிமரங்களைபயிர்செய்விக்கலாம்.

மருதாணிமரம்இருக்கும்இடத்திற்குசென்றுஅதற்குதண்ணீர்ஊற்றலாம்.

மூன்றுமுறைவலம்வரலாம்.

முட்கள்இல்லாமல்ஏழுமருதாணிஇலைகளைபறித்துஅதைகீழ்கண்டஸ்லோகம்சொல்லிக்கொண்டேவாயில்போட்டுமென்றுசாப்பிடலாம்.

த்வாமசோகநராபீஷ்டமதுமாஸஸமுத்பவ;
பிபாமிசோகஸந்தப்தோமாம்அசோகம்ஸதாகுரு.


ஓமருதாணிமரமேஉனக்குஅசோகம் (துன்பத்தைபோக்குபவன்) எனப்பெயர்அல்லவா. மதுஎன்னும்வஸந்தகாலத்தில்நீஉண்டாகிஇருக்கிறாய்.

நான்உனதுஅருளைபெறுவதற்காகஉனதுஇலைகளைசாப்பிடுகிறேன். நீ , பலவித துன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும்எனது துன்பங்களைவிலக்கி வஸந்தகாலம் போல் எவ்வித துன்பம்இல்லாமல்என்னைஎப்போதும் பாதுகாப்பாயாக.. என்பது இதன் பொருள்.

இதைசொல்லிமருதாணிஇலைகளைசாப்பிடவேண்டும். இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பலநோய்கள், துன்பத்திற்கு காரணமான பாபங்களும் விலகுகிறது என்கிறது லிங்கபுராணம்.

மருதானிமரத்திற்குவடமொழியில்அசோகம்என்றுபெயர். ராவணன்இலங்கையில்சீதையைமருதாணிமரம்அடர்ந்தகாட்டில்சிறைவைத்தான்.
அரக்கிகளைபாதுகாப்பிற்குவைத்துஅவர்களைபயமுறுத்தசொன்னான்.

அரக்கிகளும்சீதையைபயமுறுத்தினார்கள். இதனால்பதிவிரதையானசீதாதேவிபத்துமாதங்களும்மிகதுன்பத்தைஅநுபவித்தாள். தனதுதுன்பங்களைசீதாதேவிஇந்தமருதாணிமரங்களிடம்சொல்லிஅழுதுகொண்டிருந்தாள்.

அந்தசீதாதேவியின்கதறலைகருணையோடுகேட்டஅசோகமரங்களும்தனதுகிளைகளாலும்இலைகளாலும்சீதையைசமாதானபடுத்தின. மரங்களும்சீதையைதுன்பத்திலிருந்துகாப்பாற்றுமாறு கடவுளை ப்ரார்தித்தன.

இறுதியில்சீதாராமர்அயோத்திக்குவந்துபட்டாபிஷேகம்செய்துகொண்டார். அப்போதுசீதைஇந்தஅசோகமரங்களைநோக்கிதங்களுக்குஎன்னவரம்வேண்டும்எனகேட்டார்.

பதிவிரதையானதங்களுக்குவந்தஇந்ததுன்பம்வேறுயாருக்கும்வரக்கூடாது, குறிப்பாக பதிவிரதைகளுக்கு வரக்கூடாது எனக்கேட்கசீதாதேவியும் மருதாணிமரங்களான உங்களையார்ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ , பூஜிக்கிறார்களோ, உன்இலையைகைகளில் பூசிகொள்கிறார்களோ, உன்இலைகளையார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும்நேராது என்றுஶ்ரீராமரின் அனுமதியுடன் வரமளித்தாள்.

ஆகவேதான்திருமணம்போன்றசுபநிகழ்ச்சிகளில்மருதாணிஇலைகளைஅறைத்துகைகளில்பூசிகொள்கிறார்கள். சீதாதேவிமருதாணிமரங்களுக்குவரமளித்தநன்னாலேஅசோகாஷ்டமிநாளாகும்.

 

மதனத்ரயோதசி

சைத்ரசுக்லபக்ஷத்ரயோதசியானஇன்றுமாலைகணவன்மனைவிஇருவரும்மன்மதனை, மன்மதன்மனை, ரதிதேவியுடன் , மற்றும்நண்பன்வஸந்தருதுதேவனுடனும் , கரும்பில்ஆவாஹனம்செய்துபூஜைசெய்துகீழ்கண்டவாறுப்ரார்த்தனைசெய்து கொண்டால்தம்பதிகளுக்குள்ஒற்றுமைஏற்படும்.

வஸந்தாயநமஸ்துப்யம்வ்ருக்ஷகுல்மலதாஸ்ரய
ஸஹஸ்ரமுகஸம்வாஸகாமரூபநமோஸ்துதே. ( நிர்ணயஸிந்து-67)


நமோஸ்துபஞ்சபாணாயஜகதாஹ்லாதகாரிணே
மன்மதாயஜகன்நேத்ரேரதிப்ரீதிப்ரியாயதே.


என்றுப்ரார்த்தனைசெய்துகொண்டு
க்லீம்காமதேவாயநம:. ஹ்ரீம்ரத்யைநம;. ஸ்மரசரீராயநம; அநங்காயநம;. மன்மதாயநம;, காமாயநம;. வஸந்தஸகாயநம;, ஸ்மராயநம;. இக்ஷூசாபாயநம; புஷ்பாஸ்த்ராயநம:

என்று 10 நாமங்கள் சொல்லி மன்மதனை நினைத்து தம்பதிகளாக ஸ்வாமி சன்னிதியில் நமஸ்காரம் செய்யலாம். இதனால் கணவன் மனைவிக்குள் மேன்மேலும்அன்பும், ப்ரேமையும் அதிகரிக்கும்.
 
 

பவானி உத்பத்தி- ஜயந்தி!

சைத்ரமாதம்சுக்லபக்ஷஅஷ்டமிஅன்றுஅம்பாள்பவானியாகஉலகில்அவதரித்தாள்.
பவம்என்றால்( ஸம்ஸார) ஸம்ஸாரகாட்டிலிருந்துநம்மைகாப்பாற்றபிறந்தவள்.பவானி.

இன்றையதினம்பவானிரூபத்திலிருக்கும்அம்பாளைபூஜைசெய்துபவானிஅஷ்டோத்ரம்
அர்ச்சனைசெய்துநமஸ்கரித்துப்ரார்தித்துக்கொள்ளலாம்.


ப்ருஹ்மவைவர்த்தம்என்னும்நூல்
“”பவானீம்யஸ்துபச்யேதசுக்லாஷ்டம்யாம்மதெளநர: நஜாதுசோகம்லபதேஸதாஆனந்தமயோபவேத்””
என்றுசொல்கிறது.

வாழ்க்கையில்துன்பம்வராது. எப்போதும்ஆனந்தத்துடன்இருப்பார்என்கிறதுகாசிகண்டம். கீழ்கண்டஸ்லோகத்தை 108 முறைசொல்லிபவானிஅம்மனைப்ரார்த்திக்கலாம்.

“சரண்யேவரேண்யேஸுகாருண்யமூர்த்தே
ஹிரண்யோதராத்யைரகண்யேஸு
புண்யேபவாரண்யபீதேஸ்சமாம்பாஹிபத்ரே.
நமஸ்தே, நமஸ்தே, நமஸ்தேபவானி”

சௌபாக்கிய பஞ்சமி (லாப பஞ்சமி)!


சௌபாக்கிய பஞ்சமி (அ) லாப பஞ்சமி. (வாழ்வில் (அ) தொழிலில் ஏற்படும் தேக்க நிலை மற்றும் இடையூறுகள் நீங்க

தீபாவளி அமாவாசையை அடுத்து வரும் சுக்லபட்ச பஞ்சமி தினமே சௌபாக்கிய பஞ்சமி (அ) லாப பஞ்சமி என்றழைக்கப்படுகிறது.

இதனை கட பஞ்சமி என்றும் ஞான பஞ்சமி என்றும் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புதிய தொழில் அல்லது முயற்சிகளை இந்நாளில் தொடங்க, நிச்சயம் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. தீபாவளி லக்ஷ்மி பூஜை தினத்தன்று புதிய கணக்குகளைத் துவங்காதவர்கள் இன்று துவங்குவார்கள்.

மேலும் இந்நாளில் தான் பாண்டவர்கள் 13ஆம் ஆண்டு அஞ்ஞாத வாசத்தை முடித்து விராட தேசத்தை பாதுகாக்க கௌரவர் படை முன் தோன்றினான் என நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை பாண்டவ பஞ்சமி என்றும் வழங்குவர்.


வாழ்வில் (அ) தொழிலில் ஏற்படும் தேக்க நிலை மற்றும் இடையூறுகள் நீங்க இந்நாளில் ஈசனையும், விக்னேஸ்வரனையும் உபவாசம் இருந்து பூஜிப்பர்.

இந்நாளில் புதிதாக திருமணமானவர்கள், திருமண வாழ்வில் நலமும், வளமும் பெருக வேண்டி தம்பதியாகவோ, அல்லது புதுமணப் பெண் மட்டுமோ அன்னை கௌரியை அவளின் அருள் வேண்டி வழிபடுகிறார்கள்.

பூஜிக்கும் முறை :

அதிகாலையில் துயிலெழுந்து நீராடி பூஜைக்கு அமர வேண்டும். தூய்மையான இடத்தை தேர்வு செய்து அதில் விநாயகர் மற்றும் சிவபெருமானின் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து அழகாக அலங்கரிக்க வேண்டும். பளிச்சிடும் வண்ணங்களில் கோலமிட்டு தீபங்கள் ஏற்றவும்.

அட்சதை, மலர்கள், அருகம்புல் மற்றும் சந்தனம் கொண்டு விநாயகரைப் பூஜிக்க வேண்டும். அதன் பிறகு ஈசனை வெண்ணிற மலர்கள் கொண்டும், வில்வ இலைகள் கொண்டும் பூஜிக்க வேண்டும்.

பால், மற்றும் இயன்ற பழங்களை நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டு அன்று முழுவதும் உபவாசம் இருந்து மறுநாள் பாரணையோடு விரதத்தை நிறைவு செய்யலாம்.

அல்லது மாலை வேளையில், சந்திர தரிசனத்துக்குப் பிறகு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அன்றைய நாள் முழுவதும் கணேசரின் துதிகளைக் கூறிக்கொண்டு இருப்பது சிறப்பான பலன்களைத் தரும்.

வாழ்வின் தேக்கநிலை போக்கும் இந்த விரதத்தை மேற்கொண்டு வெற்றிகளை அடைவோமாக!!!

 

சைத்ர சுக்ல லக்ஷ்மி பஞ்சமி - ஶ்ரீபஞ்சமி!


ஸ்ரீ விஷ்ணுவின் ப்ரேரணையால் தேவர்களும் அஸுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றிய நன்நாளே ஸ்ரீபஞ்சமி அல்லது லக்ஷ்மி பஞ்சமி எனப்படுகிறது. 


சைத்ரமாத சுக்லபக்ஷ பஞ்சமியான இன்று ஸ்ரீ விஷ்ணுவுடன் ஸ்ரீ லக்ஷ்மீ தேவியை பூஜை செய்து மல்லிகைப்பூவால் லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து லக்ஷ்மீ ஸ்தோத்ரம் சொல்லிப் ப்ரார்த்தித்தால் லக்ஷ்மீ கடாக்ஷம் ஏற்படும். ஏழ்மை விலகும்.
  

 

ஹய (குதிரை) பூஜை.

ஹயம் என்றால் குதிரை. குதிரையை பூஜிக்க வேண்டிய நாளே ஹய பஞ்சமீ. அதாவது தேவாஸுரர்கள் மந்தரமலையை மத்தாக்கி வாஸுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது கடலிலிருந்து ”உச்சைஸ்ரவஸ்” என்னும் [பறக்கும் சக்தியுடைய] தேவக்குதிரை தோன்றிய நாள் தான் சைத்ர சுக்ல பஞ்சமி. 

 

இன்று குதிரையை (சில கந்தர்வர்களுடன் சேர்த்து) பூஜித்து, குதிரைக்கு கொள்ளு தான்யத்தை சாப்பிடத்தர வேண்டும். இதனால் நீதிமன்ற வ்யவஹாரங்களில் (சத்ருக்களிடமிருந்து) வெற்றி கிட்டும். வியாபார லாபமும் ஏற்படும். 

 

சித்திரை மாதம் பெருமை

* சித்திரை மாதம் திருதியை அன்றுதான் பகவான் மஹாவிஷ்ணு, மீனாக (மச்சம்) அவதாரம் செய்தார். ஆகவே அன்று மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

* சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்டலோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

* சித்திரை மாத சுக்ல பட்ச அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதி களில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

* வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அபிஷேகம் நடைபெறுகிறது.

* எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் தோன்றியது சித்திரை மாத பௌர்ணமி நாளில்தான். அதே மாத சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோர் சித்ரகுப்தனை திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் சொல்கின்றன.

* அன்னை மீனாட்சி-சொக்கநாதர் திருமணம் நடைபெறுவதும், மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவமும், வருடம் தப்பாமல் சிறப்பாகக் கொண்டாடப்படுவது சித்திரை பௌர்ணமி தினத்தன்றே.

* சித்ராபௌர்ணமி நாளில் கடைப்பிடிக்கப்படும் சித்ரகுப்த விரதம், ஆயுளைக் கூட்டுவதோடு, அநேக புண்ணிய பலன்களை அளிக்கிறது. விரதமிருப்பவர்கள் உப்பில்லா உணவை ஒருவேளை மட்டும் அன்று உண்பார்கள்; பால், தயிர், நெய் இவற்றைக் கண்டிப்பாக விலக்குவார்கள்.

* சித்திரைமாத மூல நட்சத்திர நாளில் விரதமிருந்து பூஜைகள் மேற்கொண்டு தானம் செய்ய, நினைத்த காரியங்கள் அனைத்தும் இறையருளால் கிட்டுவதோடு நிறைவாக வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்று லட்சுமியையும், நாராயணனையும் இணைத்து பூஜைகள் செய்யப்படுவதால் அது நட்சத்திர புருஷ விரதம் என்று வழங்கப்படுகிறது.

* சித்திரை மாத சுக்ல பட்ச திரிதியை திதியில் உமா மகேஸ்வரரைத் துதித்து பூஜை செய்தல் மிக நல்லது. அன்று தானங்கள் வழங்கினால் இம்மையில் வளமான வாழ்வும், மறுமையில் கைலாச பதவியும் கிட்டும். இந்த விரதம் சௌபாக்கிய சயன விரதம் என அழைக்கப்படுகிறது.

* சித்திரை மாத சுக்ல பட்ச வெள்ளிக்கிழமையில் பார்வதி தேவியைத் துதித்து மேற்கொள்ளப்படும் பார்வதி விரதத்தில் அம்பிகைக்கு சர்க்கரையை நிவேதனம் செய்து வழிபட்டால் நல்வளங்கள் பெருகி இன்பமான வாழ்வு அமையும்.

* சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவ மூர்த்திக்கு பூஜை செய்து தயிர் சாதம் படைத்து விரதமிருந்தால், தீங்கிழைக்கும் எதிரிகள் மிகவும் பாதிப்படைவர். வாழ்வின் முன்னேற்றத் தடைகளும் தூள் தூளாகும். இதனை பரணி விரதமென்று அழைப்பர்.
 
 

 

கனக மழை பொழியும் கமலாத்மிகா!




மிகவும் தூய்மையான, ஸ்படிகம் போன்ற பளபளப்பான நீல நிறத் திருமேனியுடன், தாமரைக் கண்களுடன், கௌஸ்துபம் ஒளிரும் திருமார்பில் வனமாலி எனும் மாலையணிந்து, பட்டுப் பீதாம்பரம் தரித்து, அலங்கார பூஷிதனாய் வைகுண்டத்தில் வாசம் செய்பவர் திருமால். சத்வ குணத்தோடு சங்கு, சக்கரம், கதை, வாள், வில் எனும் ஐந்து ஆயுதங்களைக் கையில் ஏந்தி பக்தர்களைக் காக்கும் பரந்தாமன் திருமால். இந்தத் திருமாலுக்கு சகல விதங்களிலும் உதவும் சக்தியே மகாலட்சுமி எனப் போற்றப்படுகிறாள்.

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபராசக்தி எடுத்த தசமகாவித்யையின் வடிவங்களில் 10 வது வித்யையாக கமலாத்மிகா எனும் மகாலட்சுமி போற்றப்படுகிறாள். ‘இந்த தேவி தங்க நிறத்தினள். இமயம் போன்று உயர்ந்த நான்கு யானைகளின் துதிக்கையில் உள்ள பொன்மயமான அம்ருத கலசங்களால் அபிஷேகம் செய்விக்கப்படுபவள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ஜொலிக்கும் ரத்னாபரணங்கள் அணிந்து, வெண்பட்டாடை உடுத்தி, மேல் இரு கரங்களில் அன்றலர்ந்த தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு திருக்கரங்களில் அபயம், வரதம் தரித்தவள். சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தருபவள். கருடனைத் தன் வாகனமாகக் கொண்டவள். தாமரை மலரில் அமர்ந்தருள்பவள். மகாலட்சுமியான இவளே சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. புன்முறுவல் பூத்த நகையினள். மனத் திருப்தியளிப்பவள். சிருங்காரம் ததும்பும் வண்ணம், பொலிவு கொண்ட பேரழகி. திருமாலின் போக சக்தி’ என ஸௌபாக்ய லக்ஷ்மி உபநிஷத்து எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்த தேவி ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு விதமாக அவதாரம் செய்கிறாள். திருப்பாற் கடலில் அமிர்தம் கடைந்தபோது அதிலிருந்து மகாலட்சுமியாக வெளிப்பட்டாள். சகல செல்வ வளங்களுக்கும் இவளே அதிபதி. தங்கநிற ஆடையை அணிந்தவள். மேன்மை, செழிப்பு எல்லாவற்றின் பிறப்பிடமும் இவளே. பார்ப்பதற்கு சாது போல் இருந்தாலும் மஹிஷாசுரனை அஷ்ட தசபுஜ துர்க்கையாக மாறி, கொன்றவள்’ என பெருமையுடன் கூறுகிறது, தேவி மகாத்மியம் எனும் துர்க்கா சப்தசதி. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்னும் கூற்றுப்படி இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளை தாராளமாக வழங்கும் தயாநிதி இத்தேவி. பொருள் வளம் கொழிக்க இத்தேவியின் திருவருள் அவசியம்.

இத்தேவியை லட்சுமி, ஸ்ரீகமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா, மா, க்ஷீரோதஜா, அம்ருதா, கும்பகரா, விஷ்ணுப்ரியா எனும் பன்னிரண்டு நாமங்களினால் துதிப்பவரின் அனைத்துத் துன்பங்களும் தீயிலிட்ட பஞ்சு போலாகும்.

தனக்கு பிட்சையிட ஏதுமின்றி வீட்டில் இருந்த ஒரு நெல்லிக்கனியைத் தயக்கத்துடன்  அளித்து கலங்கி நின்ற ஒரு ஏழைப் பெண்மணியின் நிலைக்கு இரங்கி கனகதாராஸ்தவம் எனும் அற்புதத் துதியால் மகாலட்சுமியைத் துதித்தார், ஆதிசங்கர பகவத்பாதர். அதனால் மனம் குளிர்ந்த மகாலட்சுமி அந்தப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையெனப் பெய்வித்தாள்.

ஸ்ரீமன்நிகமாந்த மகாதேசிகன், ஓர் ஏழைப் பிரம்மச்சாரியின் திருமணத்திற்காக, திருமகளைப் போற்றும் ஸ்ரீஸ்துதி எனும் ஒரு அரிய துதியைப் பாடி பொன்மழை பொழியச் செய்தார்.

ஸ்ரீம் பீஜத்தில் உறைபவள் இவள். அழகு, செல்வம், சந்தோஷம், சக்தி, அதிகாரம் போன்றவற்றை அருள்பவள். மன்மதனின் தாய். பாற் கடலில் உதித்தவள். சந்திரனின் சகோதரி. கமலா என்பது தாமரையைக் குறிக்கும். தாமரையில் அமர்ந்து தாமரையைத் தாங்கும் திருமகளாகிய கமலாத்மிகாவை உலகில் அனைவரும் அவள் கருணைக்காக வழிபடுகின்றனர். பூக்களில் தாமரைக்கு ஒரு விசேஷமான தன்மையுண்டு. சூரியனின் ஒளிக்குத் தகுந்தாற்போல் தன்னை ஆக்கிக் கொள்ளுவதுதான் அது. கிழக்கில் சூரியன் தோன்றும்போது மலர ஆரம்பித்து, அவன் ஒளியுடன் தன்னை மாற்றிக்கொண்டு அவன் மேற்கில் மறையும் போது தானும் குவிந்து மூடிக் கொள்ளும். அதனால், உலகிற்கு சக்தியையும் ஒளியையும் வழங்கும் நண்பனிடமிருந்து சக்தியைப் பெறும் தன்மை கொண்டிருக்கிறது, தாமரை. தேவி அதனைக் கைகளில் தரித்து அதன் மேல் அமர்ந்து தன் ஆற்றலை தெளிவுற அறிவிக்கிறாள்.
 
ஒவ்வொரு துறையிலும் நீக்கமறக் காணப்படும் அழகு இவளின் அருட் கடாட்சமே. கமலாத்மிகாவின் அருள் எந்தப் பொருளை விட்டு நீங்கினாலும் அப்பொருள் உபயோகமற்றதாகவும் பிறரின் வெறுப்பிற்கு உரித்தானதும் ஆகும். கவிகள், சிற்பிகள் போன்றோரிடம் காணப்படும் நுண்ணறிவு இவளுடைய தயவே. லட்சுமியின் கடாட்சம் பெற்றால்தான் பேறுகளைப் பெற முடியும் என்பதை வெங்கடாத்ரீ என்ற மகான் தன் லக்ஷ்மி ஸஹஸ்ரம் எனும் நூலில் உறுதியாகக் கூறியுள்ளார். திருமகளன்றி திருமாலுக்குப் பெருமைகள் இல்லை. ‘ஹரிவக்ஷஸ்தலவாஸினி’ என்று வடமொழியில் இத்தேவி அழைக்கப் படுகிறாள். ‘வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற மங்கை’ என பெரியாழ்வாரும் குறிப்பிட்டுள்ளார். இத்தேவியின் பெருமைகள் ஸ்ரீஸூக்தத்தின் பதினைந்து ரிக்குகளிலும் போற்றப்படுகிறது.

 இவள் நறுமணம் மிகுந்த இடத்தில் வசிப்பதில் ஆர்வம் உடையவள் என்பதை கந்தத்வாராம் எனும் மந்திரம் கூறுகிறது. லட்சுமி கடாட்சம் உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது பழமொழி. அதை ‘துராதர்ஷாம்’ என்ற சொல் குறிப்பிடுகிறது. இவள் அருள் பார்வை பட்டவர்கள் வசிக்கும் இடத்திற்குப் பதினாறு பேறுகளும் தாமே சென்றடையும். அவர்கள் வாழ்க்கை, வனப்பும் கூடி புஷ்டியாகும் என்பதை ‘நித்யபுஷ்டாம்’ எனும் மந்திரம் எடுத்துரைக்கிறது.

துர்க்கா ஸுக்தம், ‘துர்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே’ எனக் கூறுவது போல் ஸ்ரீஸூக்தமும் ‘தாம் பத்மினீம் சரணமஹம் ப்ரபத்யே’ என லட்சுமியை சரணடைய உபதேசிக்கிறது.

ஆனந்தர், கர்தமர், ஸிக்லீதர் போன்றோர் இந்த மகாலட்சுமி மந்திரத்தின் ரிஷிகளாவர். அக்னி பகவான் தேவதை. ஹிரண்யவர்ணம் என்பது பீஜம். காம்ஸோஸ்மிதாம் சக்தியாக கருதப்படுகிறது.

இவளின் அனுக்ரகம் ஏற்பட்டால் அழியா செல்வம், பெரியோர்களிடமும் விஷ்ணுவிடமும் பக்தி, சத்சந்தானம், நற்புகழ், தன-தான்ய, ஐஸ்வர்ய அபிவிருத்தி போன்றவை மென்மேலும் விருத்தியாகும். புகழுடன் பொலிவும் கூடும்.

பரம்பொருளாம் நாராயணனின் திருமார்பில் உறையும் இவள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தன்னை உபாசிப்பவர்களுக்கு அருள்கிறாள். திருமால் ராமனாக வந்தபோது சீதையாகவும் கண்ணனாய் வந்தபோது ருக்மணியாகவும் ஸ்ரீநிவாஸனாய் வந்தபோது பத்மாவதியாகவும் அவதரித்தவள் திருமகளே.

வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும் அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும் குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும் அழகுள்ளவர்களிடம் சௌந்தர்ய லட்சுமியாகவும் புண்யாத்மாக்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் க்ஷத்ரிய குலங்களில் கீர்த்திலட்சுமியாகவும் வியாபாரிகளிடம் வர்த்தகலட்சுமியாகவும் வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும் பொலிபவள் இவளே. அழகின் உறைவிடம்... ஆனந்தத்தின் பிறப்பிடம் இவள்.

நம் வீட்டில் திருமகள் அருள்புரிய வேண்டுமெனில் பசுஞ்சாணம் கொண்டு வாசல் மெழுகிக் கோலமிட்டால் அவள் கட்டாயம் அருள்புரிவாள். அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

பசுவின் தேகத்தில் தேவர்கள் அனைவரும் தங்க இடம் பெற்றனர். அனைத்து இடங்களிலும் அனைவரும் இடம் பெற்ற நிலையில் தாமதமாக வந்தாள் திருமகள். கோமாதாவிடம் ‘‘எனக்கும் உன் பவித்திரமான தேகத்தில் இடம் தரக்கூடாதா?’’ எனக் கேட்டாள். அனைவரும் இடம்பெறாத இடம் தன் பிருஷ்ட பாகம். அதை எப்படி ஸ்ரீதேவிக்கு அளிப்பது எனத் தயங்கிய பசுவிடம் லட்சுமி, ‘‘உன் தேகம் முழுதுமே பவித்ரம். அதனால் உன்பின்பக்கமாகிய பிருஷ்ட பாகத்திலேயே நான் தங்குகிறேன்’’ எனக்கூறி அங்கே இடமும் பிடித்தாள். அதனால் அங்கிருந்து வரும் கோமியம், பசுஞ்சாணம் போன்றவை புனிதமாகிறது. பசுஞ்சாணியில் திருமகள் வாசம் செய்வதை ‘கரீஷிணிம்’ எனும் சொல் குறிக்கிறது. கோமயத்தைக் கொண்டு மெழுகப்பட்ட இடம் பவித்ரமானதும் லட்சுமி கடாட்சம் பெற்றதாகவும் ஆகிவிடுகிறது. திருமகளை வரவேற்கவென்றே சில வீடுகளில் காலையில் வாசலில் பசுஞ்சாணம் தெளித்துக் கோலமிடுகின்றனர்.

குளிர்ந்த ஒளியைத் தரும் சந்திரன் போன்று பிரகாசிப்பவள். கீர்த்தியுடையவள். தேவர்களால் துதிக்கப்படுபவள். பஞ்ச பூதங்களுக்கும் ஈஸ்வரி என்பதை ‘ஈம்’ பீஜம் குறிக்கிறது. இந்த மகாலட்சுமியைச் சரணடைந்தால்  என ஸ்ரீஸூக்தம் உறுதியாகக் கூறுகிறது. மகாலட்சுமி நிலைத்திருக்க தினமும் ஸ்ரீஸூக்த ஜபம் செய்யவேண்டும். உண்மையே பேச வேண்டும். தனியாக உப்பையும் வெறும் பாக்கையும் மெல்லக்கூடாது. அழுக்கு ஆடைகள் அணியக்கூடாது. எண்ணெய் தேய்த்துக் கொண்டு உணவு அருந்தக்கூடாது. ஆசார சீலத்துடனும் ஒழுக்கத்துடனும் இருந்து இத்தேவியை உபாசிக்க வேண்டும். உண்மை, வாய்மை, அவதூறு கூறாமை, சோம்பலின்மை போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். வெறும் தரையில் படுத்தும் எண்ணெய் தேய்த்துக் கொண்டேயும் இத்தேவியின் மந்திரத்தை ஜபிக்கக் கூடாது.

அகத்தியர் காசிகாண்டம் எனும் நூலில் திருமகளைப் பற்றி லக்ஷ்மி பஞ்சகம் எனும் ஐந்து அதி யற்புதமான துதிகளைப் பாடிப் பணிந்துள்ளார். அதை அதிவீரராமபாண்டியனார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்த துதியை பாராயணம் செய்பவர்களுக்கு செல்வ வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

திருமாலின் தசாவதாரங்களில் பெரும்பாலும் மகாலட்சுமி உடன் இருந்து அருள் புரிந்ததை புராணங்கள் வாயிலாக அறிய முடிகிறது. கூர்மவதாரம் எடுத்து மேருமலையைத் தாங்கிய போது பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு திருமாலை மணந்தாள் லட்சுமி. வராக அவதாரத்தின் போது அவருடன் இணைந்து வராகரை, லட்சுமி வராகராக்கியவள். நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க அவர் மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தி லட்சுமி நரசிம்மராக்கியவள். வாமன அவதாரத்தில் பெருமாள் பிரம்மச்சாரியாக உருமாறியபோதிலும் அவர் திருமார்பில் ‘அகலகில்லேன்’ என்று உறையும் திருமகளை மறைக்க தன் திருமார்பை மான் தோலால் திருமால் மறைத்ததாகக் கூறுவர். பரசுராம அவதாரம் பிரம்மச்சாரி. ராமவதாரத்தில் திருமகளே சீதையானாள். கிருஷ்ணாவதாரத்தில் லட்சுமியே ருக்மிணியானாள். பலராம அவதாரத்தில் திருமகளே ரேவதி எனும் பெயரில் அவரை மணந்தாள். இந்தக் கலியில் திருமால் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்தில் லட்சுமி வித்யா லட்சுமியாகத் தோன்றப்போவதாக பாகவதம் கூறுகிறது.

வரலட்சுமி விரதம், வெள்ளிக்கிழமை விரதம், வைபவலட்சுமி விரத, கோபூஜை, அட்சய திருதியை பூஜை போன்றவை திருமகளுக்குரிய விரதங்களாகக் கருதப்படுகின்றன.

தங்கத்தில் திருமகள் உறைகிறாள். அதனாலேயே மங்களகரமான திருமாங்கல்யம் தங்கத்தில் செய்யப்படுகிறது. திருமகள் உறையும் காரணத்தினாலேயே தங்கத்தாலான ஆபரணங்களைக் காலில் அணியக் கூடாது என்று சொல்லப்படுகிறது. மஞ்சள் மங்கலமான பொருள். சௌபாக்ய லட்சுமி மஞ்சளில் வாசம் செய்வதால் மஞ்சள் பூசிக் குளித்த பெண்கள் லட்சுமிகரமாகத் தோற்றமளிக்கின்றனர் என்கிறோம். சுமங்கலிகளின் வகிட்டில் திருமகள் உறைவதாக ஐதீகம். எனவே சுமங்கலிப் பெண்கள் வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். பூஜைகளின்போது நிவேதிக்கப்படும் தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
 
மேலும், ஸ்வஸ்திக் சின்னம், வெண் சாமரம், பூரணகும்பம், அடுக்கு தீபம், ரிஷபம், வலம்புரிச் சங்கு, ஸ்ரீவத்ஸம், குடை போன்ற எட்டு பொருட்களிலும் திருமகள் உறைவதால் இவை அஷ்ட மங்கலப் பொருட்கள் என போற்றப்படுகின்றன.

பால், தேன், தாமரை, தானியக் கதிர்கள், நாணயங்கள் ஆகிய ஐந்திலும் திருமகள் வாசம் செய்வதால் இவற்றை பஞ்சலட்சுமிகள் என்பர். பாலை குழந்தைகளுக்கும் தேனை பெண்களுக்கும் தாமரையை ஆலயங்களில் அர்ச்சனைக்கும் நாணயங்களை ஆடவர்க்கும் தானியக் கதிர்களை பறவைகளுக்கும் தானமாகத் தர திருமகள் திருவருள் சித்திக்கும்.

வில்வம், தாமரை, வெற்றிலை, நெல்லி, துளசி மாவிலை போன்றவை திருமகள் அருள் பெற்ற தெய்வீக மூலிகைகளாக கருதப்படுகின்றன. பாற்கடலில் இருந்து தோன்றியதால் உப்பும் திருமகள் வடிவமாகவே கருதப்படுகிறது. இன்றும் முதல் தேதியன்று முதன் முதலில் கல் உப்பு வாங்கினால் திருமகள் அருள் கிட்டும் எனும் நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

ஸௌந்தர்யலக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, துஷ்டி லக்ஷ்மி, புஷ்டி லக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, ஆரோக்ய லக்ஷ்மி. அன்ன லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி, நாக லக்ஷ்மி, கிருஹ லக்ஷ்மி, மோட்ச லக்ஷ்மி என அனைத்து லக்ஷ்மிகளும் கமலாத்மிகா எனும் மஹாலக்ஷ்மியின் திருவடிவங்களே.

பத்மவனத்தில் வசிப்பதால், பத்மத்தில் பிரியம் கொண்ட யானைகளின் நாதத்தினாலே உணரப்படுபவள் இத்தேவி. தன் தாமரை ஆசனத்தில் குல்குலு, தமகன், குரண்டகன், சலன் போன்ற நான்கு யானைகளின் முழக்கத்திலே மகிழ்ந்து கொலுவிருப்பவள். இந்த நான்கு யானைகளும் பக்தர்களுக்கு தர்மம், காமம், அர்த்தம், மோட்சம் எனும் நான்கையும் அருள வல்லவை. இந்த தேவி நமக்கு எல்லா செல்வங்களை யும் வளரச் செய்யட்டும் என மங்கள ஸம்ஹிதை எனும் நூல் கூறும் இந்தத் தேவியின் திருவுருவை மனதினில் தியானித்து இக, பர, சுகம் பெற்று ஞான பக்தியால் ஆராதிப்போம்.

லக்ஷ்மி கடாட்சமே அனைத்திற்கும் மூலம்.  எனவே தனம் எனும் செல்வம் நம் வாழ்விற்கு இன்றியமையாதது. அதை அருளும் கமலாத்மிகாவான மகாலட்சுமியைப் போற்றி பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
 
 
 

Sunday 17 April 2016

அளவற்ற பலன்களைத் தரும் அட்சய திருதியை!


 பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில், சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.



அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்:

இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, இந்த அட்சய திருதியையில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

அட்சய திரிதியை நாளில்கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். 

அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.

திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.


அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்:

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம்.

எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.

வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.


நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தான-தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்:

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.


அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!

* கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து சொர்ண கௌரி விரதம் கடைபிடிப்பர். இதன்மூலம் பார்வதிதேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் விரதம் இருப்பர். விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவர்.

* அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

* நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. பெருமாள், குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவரை வைத்தமாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் அழைப்பர். அட்சய திருதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.

* காசியில்  மக்களின் பசி போக்குவதற்காக பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தார். அன்னம் என்றால் உணவு என்று பொருள். பூரணி என்றால் முழுமையாக உடையவள் என்று பொருள். உணவை முழுமையாக கொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம் பெற்று அதிலிருந்து வற்றாத உணவை எடுத்துக் கொடுத்து பக்தர்களின் பசியைப் போக்கினார். அந்த சமயத்தில் மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டார். அந்த நாள்தான் அட்சய திருதியை. எனவே, அட்சய திருதியை தினத்தன்று ஓம் நமச்சிவாய சொல்லி பரமேஸ்வரனின் அருளைப் பெறுவோம்.

* அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோயில்களிலிருந்தும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

* மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அட்சய திருதியை என்றால் திருமணம் தான் என்கிறார்கள். அந்த நாளில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன.

அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.

அட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள் ...
1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

2. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு 'அட்சய திருதியை' நாளில் செய்யப்படு கிறது.

3. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

4. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

5.. அன்னதானம் செய்வதும்,

6. கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

7. பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

8. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத் தரும்.

9. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

10. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.


 

சீரும் சிறப்பும் நல்கும் சித்திரை பௌர்ணமி!


"பருவங்களில் சிறந்த வேனில் பருவம்
மாதங்களில் சிறந்த மேஷ மாதம்
நட்சத்திரங்களில் சிறந்த சித்திரை
திதிகளில் சிறந்த பௌர்ணமி"



 சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று வரும் பௌர்ணமி சித்திரை பௌர்ணமி ஆகும்.

‘ராசிச் சக்கரத்திலுள்ள 12 ராசிகளில் 6 ஆவதான கன்னிராசியிலும், 7ஆவதான துலாராசியிலும் உள்ள நட்சத்திர மண்டலத்துக்கு ‘சித்திரை’ எனப் பெயர். அசுபதி முதலான 27 நட்சத்திரங்களில் 14 ஆவது நட்சத்திரம். சித்திரை பௌர்ணமியெனப் புகழ் பெற்ற தினத்தன்று சந்திரன் சித்திரை நட்சத்திரத்திலோ அதற்கு அடுத்தோ இருக்கும்’ எனக் கலைக் களஞ்சியம் கூறும்.

சித்ரா நதி

நெல்லை மாவட்டம் திருக்குற்றால மலையிலுள்ள சித்ரா நதி சித்திரை பௌர்ணமி அன்றுதான் உற்பத்தியானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் அந்நதியில் நீராடுவது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.

சித்திரை மூலிகை

சித்திரை பௌர்ணமி அன்று நிலவின் ஒளியில் பூமியில் ஒருவகை உப்பு பூரித்து வெளிக்கிளம்பும். இதை பூமி நாதம் என்பர். இந்த உப்புத் தூள் மருந்துக்கு வீரியமளிக்கும். இளமையையும் மரணமில்லாத வாழ்வையும் கொடுக்கும். சித்தர்கள் இதை பௌர்ணமி என்பர்.

கன்னியாகுமரியில்...
கன்னியாகுமரியில் சந்திரோதயமும், சூரிய அஸ்தமனமும் சித்திரை பௌர்ணமி அன்று ஒரே நேரத்தில் நடக்கும்.

சித்திரகுப்தரும் சித்திரை பௌர்ணமியும்

சித்திரை பௌர்ணமியன்று தமிழகம் முழுவதும் சித்திரகுப்தர் வழிபடப்படுகிறார். யமதர்மராஜாவின் கணக்கரான இவர் சித்திரை பௌர்ணமியன்றுதான் அவதரித்தார் என புராணங்கள் கூறும்.


 சித்திரகுப்தர் தியானம்!

சித்ரகுப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபத்ர தாரிணிம்
சித்ர ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்”


சிவாலய வழிபாடு!
அசுரர்களின் கொட்டத்தை அடக்க சிவபிரான் தமது கோபத்திலிருந்து தமனர் எனும் பெயருடைய பைரவரை தோற்றுவித்தார். தமனரும் அசுரர்களை அடக்கினார். மனம் குளிர்ந்த சிவனார் தமனரை நோக்கி “நீ பூமியில் செடியாகத் தோன்றுவாய். உன் தளிர் இலைகளால் சித்திரை பௌர்ணமி அன்று எம்மை பூஜிப்பவர்கள் மேலான நிலையை அடைவார்கள்” என்று வரம் அருளினார்.

சித்திரை பௌர்ணமியன்று நாடு செல்வ செழிப்புடன் விளங்க தமன உற்சவம் செய்ய வேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. தமனம் என்றால் மருக்கொழுந்து. அன்றைய தினம் யாகசாலையின் மத்தியில் சர்வதோபத்திரம் எனும் குண்டம் அமைத்து அதில் சிவபிரானை அர்ச்சனை செய்து ஹோமம் செய்து மருக்கொழுந்தை பூஜித்து கோயிலை வலம் வந்து சிவபெருமானுக்கு சார்த்த வேண்டும்.

விஷ்ணு கோயில்களில் வழிபாடு!


ஒரு சமயம் ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் தமது மனைவிகளுடன் குளம் ஒன்றில் நீராடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு முனிவர் அக்குளத்தில் நீராட இறங்கினார். ஹூஹூ ஒரு முதலை வடிவெடுத்து அவர் காலை கவ்வினான். இதை அறிந்த முனிவர் கோபம் கொண்டு அவன் முதலையாகட்டும் என சபித்தார்.

இந்திரத்யும்னன் என்ற மன்னன் நாராயண பூஜை செய்து கொண்டிருந்த போது அகத்தியர் அவனைக் காண்பதற்கு வந்தார். மன்னன் கவனிக்காததைக் கண்ட அகத்தியர் அவன் யானையாகப் போகட்டும் என சபித்தார்.

ஹூஹூ ஒரு குளத்தில் முதலையாக மாறி வசித்து வந்தான். யானையாக மாறிய மன்னன் அக்குளத்தில் இருந்த தாமரை மலரைப் பறித்து விஷ்ணுவிற்குப் பூஜை செய்வான். ஒருநாள் முதலை யானையின் காலைப் பிடித்து கவ்வ யானை “ஆதிமூலமே” என்று கதறியது. விஷ்ணு கருடன் மீது வந்து தமது சக்கராயுதத்தால் முதலையைக் கொன்று யானையை மீட்டார். இருவரும் சாப விமோசனம் எய்தினர்.

இந்த நிகழ்ச்சி ’கஜேந்திர மோட்சம்’ எனப் புராணங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் பலபடியாக அனுபவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது சித்திரை பௌர்ணமியன்று என்பதால் அன்று அனைத்து விஷ்ணுவாலயங்களிலும் கஜேந்திர மோட்ச விழா நடைபெறும்.

நெல்லை மாவட்டம் அத்தாள நல்லூரில் இந்த விழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. அவ்வூர் பெருமாளுக்கு ‘கஜேந்திர வரதர்’ என்றே பெயர்.

ஸ்ரீராம நவமி!


நாடிய பொருள் கை கூடும்; ஞானமும் புகழுமுண்டாம்;
வீடியல் வழியதாக்கும்; வேரியங் கமலை நோக்கும்;
நீடிய அரக்கர்சேனை நீறுபட்டழிய வாகை 
சூடிய சிலைராமன் தோள்வலி கூறுவார்க்கே!


மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும்.
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.


அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும், தேவர்களும் ஸ்ரீராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.



ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின்பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள்.



ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.



ஸ்ரீராம நவமி. அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

"ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்"

ராமன் நாமத்தை தினமும் சொல்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் பொங்கி பெருகும்.



ராம நாமமானது அஷ்டாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதில் உள்ள 'ரா' என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான 'நமச்சிவாய' என்ற எழுத்தில் '' என்ற எழுத்தையும் சேர்த்து 'ராம' என்றானது.


சீதையைத் தேடிச் செல்லும்போது ராமனால் வானத்தில் பறக்க இயலவில்லை. ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடியே விண்ணில் பறந்து இலங்கையை அடைந்தான். அனுமனுக்கு இது சாத்தியமானதற்குக் காரணம் ராம நாமத்தின் மகிமையே ஆகும்.

""பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும் - இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும் - தூய்மையைக் காட்டிலும் தூய்மையானதும் - மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும் - சான்றோர்களின் உயிர் நாடியாகவும் விளங்குவது "ஸ்ரீராம்" என்னும் தெய்வீக நாமம் ஆகும்.



"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற யிரண் டெழுத்தினால்"



என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்கு கிறது.



ஸ்ரீராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.



ராமன் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.


'குலம் தரும், செல்வம் தந்திடும்.
அருளோடு பெரும் நிலம் அளிக்கும்
.
பெற்ற தாயினும் ஆயினச் செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
.
நாராயணா என்னும் நாமம்
'

என்று திருமங்கை ஆழ்வார் நாராயணநாம மகிமை பற்றி குறிப்பிடுவார்.


விரதமுறை
ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப் பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.


சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராமநவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.


ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.



சுந்தரகாண்டத்தில் அனுமன்கடலைதாண்டுவதற்கு முன் சொன்னவரிகள் ஸ்ரீ ஜெயபஞ்சகம் எனப்படும்.

இதைப்பாடி அனுமனை வழிபட வீட்டில் செல்வம் பெருகும் ....

ஜயத்யதிபலோ ராமோ லசஷ்மணஸ்ச மஹாபலஹ்
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேண அபி பாலிதஹ
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கா்மனஹ
ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்தர மாருதாத்மஜஹ
றராவண ஹஸஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரதஹ் பாத வைச்ச ஸஹஸ்ரஸஹ


அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் கேட்ட வரம்
நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை' என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர். இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப் படுகிறது. ஸ்ரீராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.


விசிறித்தானம்
ஸ்ரீராமநவமியன்று விசிறிகளை பிறருக்கு தானமாக வழங்குகின்றனர்.

ஸ்ரீ ராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்றபோதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர் களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும் பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம்.