Saturday 24 December 2016

திருமலை பிரமோற்சவம்!

திருமலை திருப்பதி பிரமோற்சவம் 1
 
திருமலை திருப்பதி பிரமோற்சவம் 2

Angurarpanam!

1st Day 1 Morning Dhwajarohanam


1st Day 2 Evening Pedda Sesha Vahanam

2nd Day 1 Morning Chinna Sesha Vahanam

2nd Day 2 Evening Hamsa Vahanam

3rd Day 1 Morning Simha Vahanam

3rd Day 2 Evening Muthu Pallakku Vahanam

4th Day  Morning Kalpavriksha Vahanam

4th Day  Evening  Sarva Bhoopala Vahanam!

5th Day Morning Mohini Avataram!

5th Day  Evening Garuda Vahanam!

6th Day Morning Hanumantha Vahanam!

6th Day  Evening Ratha Ranga Dolotsavam and Gaja Vahanam!

7th Day 1 Morning Surya Prabha Vahanam!

7th Day 2 Evening Chandra Prabha Vahanam!

8th Day 1 Morning Rathotsavam!

8th Day 2 Evening Aswa Vahanam!

9th Day 1 Morning Chakrasnanam!

9th Day 2 Dhwaja Avarohanam!
 
 
 

varamahaalakshmi!









 

அலர்மேல்மங்கைத் தாயார்!


 
வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன்.

மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.



பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை. தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள்.

தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.

திருமலை வேங்கடவனை  தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.

பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், ‘உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது.

அலர்மேல்மங்கையின் தங்கத்தேர், வெள்ளித்தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.


கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்கச் செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப் படுகின்றன.



கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம்.

கல்யாண விருந்து தயாரானவுடன் நிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை  அஹோபிலம் நரசிம்மருக்கு இருவரும் அந்த திசை நோக்கி  வைத்து நிவேதித்தார்களாம்.

‘வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ’ எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது.

தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

கீழ்த் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சானூர் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது.






 

திருமலை அமிர்தகலச பிரசாதம்!




 ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருமலை திருப்பதியில பெருமாளுக்கு அமிர்தகலசம் அப்படிங்கிற ஒரு பிரசாதம் நைவேத்யம் செய்யறாங்க.

இது அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம்.

சாமிக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செஞ்சபிறகு, இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்யறாங்க.

இதோட சிறப்பு என்னன்னா, அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதுதான்..,

அதுமட்டுமில்லாம,இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம்தான் அமிர்தகலசம்..!

இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


ஓம் நமோ வேங்கடேசாய..!


 

திருமலை திருப்பதி சக்கரஸ்நானம்!

 
புண்ணியதினமான வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த வைகுண்ட துவாதசியும் அதே அளவிற்கு புண்ணியமான நாள்.

வைகுண்ட ஏகாதசி  அன்று வைகுண்ட பிரதட்சணம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்படுகிறது
மேலும், விசேஷமாக சக்கரஸ்நானம் நடைபெறுகிறது.

 
 
திருமாலுடைய திவ்ய ஆயுதமான சுதர்சன சக்கரம்இன்று கர்ப்பாலயத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இருக்கும் மிகவும் புனிதமான சுவாமி புஷ்கர்ணியில் அபிஷேகம் நடத்தப்படுகிறது.இதற்கு சக்கரஸ்நானம் என்று பெயர்.
 
 
திருமலை திருப்பதி சுவாமி புஷ்கரணி!

இந்த சுவாமி புஷ்கரணி என்பது இந்த பூமண்டலத்திலேயே புனிதமான தீர்த்தம் என்றும்,
 
வைகுண்ட துவாதசி அன்று பூமண்டலத்தில் இருக்கும் அத்தனை புண்ணிய ந்திகளில் இருந்தும் புண்ணிய தீர்த்தங்களில் இருந்தும் சக்தி வந்து இந்த சுவாமி புஷ்கரணியில் கலக்கும் என்றும்
 
இதற்கு சுவாமி புஷ்கரணி தீர்த்த முக்கோட்டி என்று பெயரிட்டு அன்று சக்கரஸ்நானம் நடைபெறுகிறது
 
இந்த சக்கரஸ்நானத்தின்போது , சுவாமி புஷ்கரணியில் குளிக்கும் பக்தர்களுக்கு, எத்தனையோ ஜென்மங்களுடைய பாவங்கள் எல்லாம் நசித்து அபாரமான புண்ணிய ராசிகள் சங்கமிக்கும் என்றும், ஸ்வாமியின் அருள் கிட்டும் என்பதும்  சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட உண்மை 
 
சுவாமி புஷ்கரணி என்பது,மிகவும் பவித்ரமானது. பார்க்கும்பொழுதே, அல்லது அந்த தீர்த்தத்தை புரோட்சனை செய்துகொள்ளும்போதே பாவங்களை அழிக்கக்கூடிய புண்ணிய தீர்த்தம்.
 
தர்சன, பர்சன, மாத்ரேன என்று சொல்லப்பட்ட புனிதமான புஷ்கரணியில் பக்தர்கள் சக்கரஸ்நானத்தின் பொழுது ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி,சுவாமியின் அருளால் பாவங்களை நீக்கி புண்ணியங்களைப் பெறுவதற்கு இது மிகவும் விசேஷமான ஒரு வாய்ப்பு.
 
திருமலை திருக்கோயில் அமைந்திருக்கும் மலைத்தொடரில் மிகவும் புனிதமான ஆறுகோடி தீர்த்தங்கள் இருப்பதாக, சொல்லப் பட்டிருக்கிறது
 
இந்த ஆறுகோடி தீர்த்தங்களில் முக்கியமான தீர்த்தங்களில் சில, மனிதர்கள் சென்று தரிசிக்கக்கூடிய நிலையில் இருக்கிறது.
 
இதில் முக்கியமானது, ஆகாச கங்கா, பாபவிநாசனம், ஜாபாலி தீர்த்தம், கோகர்ப தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், குமாரதாரா தீர்த்தம், சேஷ தீர்த்தம், சனகசனந்தன தீர்த்தம், சக்கர தீர்த்தம் முதலியவை
 
இந்த  தீர்த்தங்களை அடைவதற்கு பக்தர்கள் காட்டின் வழியாக சென்று பார்க்கலாம்.
 
ஆகாசகங்கா தீர்த்தத்திலிருந்துதான், திருவேங்கடமுடையானுக்கு ஆராதனைக்காக தீர்த்தம் தினமும் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அப்பால், பாபவிநாசன தீர்த்தம் இருக்கிறது.
 
கோகர்ப தீர்த்தம் பாண்டவ தீர்த்தம் என்று கூட அழைக்கப்படுகிறது.
 
குமாரதார தீர்த்தம் என்ற புனித தீர்த்ததில் சுப்ரமணிய சுவாமி முருகன், நிரந்தரம் தவத்தில் இருப்பார் என்றும், தினமும் கர்ப்பாலயத்தில் வந்து சுவாமியை தரிசிப்பார் என்றும், ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
 
அதே விதமாக தும்புரு தீர்த்தத்தில், நாரதர், தும்புரர் என்று தேவரிஷிகள் வந்து கானம் செய்வார்கள் என்றும்,
 
இந்த தீரத்தங்களில் ஒரு ஒரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் வந்து நீராடி, சுவாமியை தரிசித்து செல்வார்கள் என்றும் அவர்களுடைய பாத சுவடுகள்கூட சிலர் பார்த்திருப்பதாக பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம்

 அப்படிப்பட்ட புனிதமான தீர்த்தங்கள் மலையில் எத்தனையோ இருக்கின்றன. இவை இல்லாமல் திவ்ய தீர்த்தங்கள், சாமானிய ஜனங்களுக்கு, அதிருஷ்யமாக, கண்ணில் படாத வகையில் எத்தனையோ இருக்கின்றன

இவை சித்தர்களுக்கும், தேவதைகளுக்கும் மட்டும் காணப்படுகிறது. அவர்கள் அதில் நீராடி , சுவாமியை தரிசித்து,புண்ணியத்தை பெறுவார் என்றும், புராணங்களில் சொல்லப்பட்ட மிகவும் அதிசயமான உண்மைகளில் ஒன்று.
 
சுவாமியை தரிசித்தபிறகு, இந்த தீர்த்தங்களை தரிசிக்க நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன
 
சில தீர்த்தங்கள் ஆகாசகங்கா, ஜாபாலி பாபவிநாசனம், கோகர்ப தீர்த்தம் இவையெல்லாம் சாலையின் வழியாக வாகனங்களில் சென்று தரிசிக்கலாம்.
 
மீதி தீர்த்தங்கள் தும்புரு தீர்த்தம், குமாரதாரா, ராமகிருஷ்ண தீர்த்தம் இவைகளை அடைவதற்கு பக்தர்கள் காட்டின் வழியாக செல்லவேண்டும்.
 
ஆனால், மிகவும் அழகான,இயற்கையின் சூழ்நிலையில் அமைந்திருக்கும் இந்த தீர்த்தங்கள் மிகவும் புனிதமானவை. மிகவும் பவித்ரமானவை
 
நம்முடைய பாவங்களை தீர்த்து புண்ணியங்களை அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த நீர்நிலைகள் இவைகளை பக்தர்கள் அவசியம் தரிசித்து, சுவாமியின் அருளை பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன"
 
 
 
 

Friday 23 December 2016

ஆனந்த நிலைய விமான வெங்கடேஸ்வரர்!

நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளி யிருக்கிறார். கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார்.

வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.




பரமபதநாதர் (சிவப்பு வண்ண கட்டமிடப்பட்டிருப்பது), அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான்
விமான வெங்கடேஸ்வரா!



 
ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.
இது ஒரு வெள்ளை அம்புக்குறியால்  மார்க் செய்யப்பட்டிருக்கும்.

இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம்.
 
அதே மாதிரி, ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும்.

இது ஒரு சிவப்பு அம்புக்குறியால்  மார்க் செய்யப்பட்டிருக்கும்.

 "..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்களை சொல்ல முடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர்  அமைக்கப்பட்டிருக்காரு.., இவருகிட்ட நமது  வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வர ..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்.."


இனிமே, திருப்பதிக்கு போறவங்க..ஆனந்த நிலையத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர மட்டும் தரிசனம் செஞ்சிட்டு வந்துடாம,

அவருக்கு பக்கத்தலயே இருக்குற பரமபதநாதரையும் வணங்கிட்டு வாங்க..


இவர எப்போ தரிசனம் செஞ்சாலும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு பெருமாள்  தரிசனம் செஞ்ச பலன் கிடைக்கும்னு ஆகமங்கள்லயே சொல்லியிருக்கு.



ரதரங்கடோலோத்சவம்.!


ரதரங்கடோலோத்வம்










வைகுண்ட ஏகாதசி அன்று  புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரில் உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதகராக விசேஷமான திருவாபரணங்கள் அணிந்து  மாடவீதி வலம் வருவார் என்பது விசேஷம்.."

மாசத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி, இரண்டு பர்வங்கள்,திருவோண நட்சத்திரம் இந்த ஐந்தும் விஷ்ணு பஞ்சகம் என்று மஹாவிஷ்ணுவிற்கு பீரீத்தியான நாட்கள்.

அன்று மட்டும் மற்ற வைணவ கோயில்களில் வடக்கு துவாரம் வழியாக உற்சவர்  கொண்டுவரப்பட்டு பக்தர்கள் வடக்குதுவாரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி,  துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது.

அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது.

 
 

திருமலை திருவேங்கடமுடையான் அபிஷேகம்!



"...திருவேங்கடமுடையான் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை  4 மணிக்கு மூலவர்  விக்ரகத்திற்கு அபிஷேகம் நடைபெறும்.
  
சுமார் ஒன்பதரை அடிகள் உயரம் கொண்ட இந்த மூலவர் சாளக்கிராமத்தால் செய்யப்பட்ட சிலை. சிற்பிகள் செய்யாத சுயம்பு வடிவமாக தானே உருவாகியது.
 
வைகுண்டத்தில் இருந்து மஹாவிஷ்ணு அர்ச்சாவதரா சொரூபமாக அவதரித்த திருவுருவம் இந்த மூலபிம்பம். 
 
இந்த மூலவருக்கு வெள்ளிக்கிழமை காலை அபிஷேகம் நடக்கிறது. அபிஷகத்திற்கு முன்னால், சுவாமி அணிந்திருக்கும் பட்டு பீதாபரங்கள் பட்டு உத்தரீயம் முதலியவை அகற்றிவிட்டு ஏகாந்தமாக அவருக்கு கௌபீனம் அலங்கரித்து சுவாமியினுடைய திருமேனிக்கு புனுகுதைலம் தடவி அபிஷேகம் ஆரம்பமாகிறது. 
 
வேதபண்டிதர்கள், பக்த சூக்தங்களை பாராயணம் பண்ணிக் கொண்டிருக்க, சுத்தமான தண்ணீருடன் அபிஷேகம் ஆரம்பமாகிறது.
 
பிறகு, பசும்பாலுடன் அபிஷேகம் நடக்கிறது. சுவாமியினுடைய திருவுருவம் சாளக்கிராம சிலையானதால், இவருக்கு பசும்பால் மட்டும்தான் அபிஷேக திரவியமாக உபயோகபடுத்தப்படுகிறது

 
மற்ற விக்ரகங்களுக்கு நடத்தும் தயிர், தேன், இளநீர் முதலிய திரவியங்கள் உபயோகப்படுத்தமாட்டாது. 
 
பசும்பால் அபிஷேகம் முடிந்த பிறகு, திரும்ப சுத்தோதக ஸ்நானம், சுவாமியினுடைய திருமேனி பாலின் பிசுபிசுப்பு அகற்றுவதற்கு பரிமளம் எனும் சுகந்த திரவியம், சந்தனம், குங்கும்பபூ, பச்சகற்பூரம் முதலியவை சேர்ந்த பரிமளம் என்ற திரவியத்துடன் சுவாமியினுடைய திருமேனியை மத்தனம் செய்து பிறகு, சுத்தோதக ஸ்நானம் செய்யப்படுகிறது.
 
இதேசமயத்தில் திருவேங்கடமுடையானின் மார்பில் வலதுபக்கத்தில் இருக்கும் வியூகலட்சுமி என்ற மிகவும் விசேஷமான சக்திவாய்ந்த மகாலட்சுமி உருவத்திற்கு மஞ்சள் காப்புடன் திருமஞ்சனம் நடக்கிறது. 
 
இந்த பரிமளம் சுத்தோதகம் சேர்ந்த தீர்த்தம்தான் அபிஷேகஜலமாக பக்தர்களுக்கு பிறகு, விநியோகிக்கப்படுகிறது.
 
அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு ஏகாந்தமாக அலங்காரம் நடக்கிறது சுவாமியின் திருமேனியில் இருக்கும் ஈரத்தை தோத வஸ்திரத்தினால் ஒத்தி எடுத்து,24 முழம் நீளம் கொண்ட புதிய வேஷ்டி 12முழ நீளம் கொண்ட பட்டு உத்தரீயம் முதலியவற்றை சுவாமிக்கு அனிவித்து, சுவாமியின் சிரசில் சிறுவா வஸ்திரம் அமைத்து, சுவாமியின் முகபிம்பத்தில் பச்சகற்பூரம் நீர்க்காப்பாக, மெலிதாக அலங்கரித்து, சுவாமியின் நிஜபாத தரிசனம் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது 
 
இந்த சமயத்தில் திருவேங்கடமுடையான் திருமேனியில் நாகபரணம், ஒட்டியாணம் இருக்கும்,ஸ்ரீவத்சம்,கௌஸ்துபம் என்ற மஹாவிஷ்ணுவுக்கே உரிதான அணிகலன்கள் சுவாமியின் மார்பில் அலங்கரிக்கபடுகிறது. 
 
இது நிஜபாத தரிசனம் என்று பெயர். 
 
சுவாமியின் பாதகமலங்கள் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றன. சுவாமியின் நிஜபாதங்கள் மற்ற நேரங்களில் தங்க கவசங்களினாலும், அர்ச்சனை செய்த துளசிதளங்களினாலும் மறைக்கப்படுகின்றன. இது நிஜபாத தரிசனம்.
 
நிஜபாத தரிசனம் முடிந்த பிறகு, சுவாமிக்கு அலங்காரம் நடக்கிறது. இது சமர்ப்பணா என்று சொல்லுவார்கள் இது ஏகாந்தமாக நடக்கும். கதவு சாத்தப்பட்டிருக்கும், அர்ச்சகர்கள் மட்டும்தான் கர்ப்பாலயத்தில் இருந்து சுவாமிக்கு அலங்காரம் நடத்திக்கொண்டிருப்பார்கள்.
 
முதலில் சுவாமியின் முகத்தில் பச்சை கற்பூரத்தை திருநாம்மாக அணிவித்து, அதன் நடுவில் கருப்பு நிறமான கஸ்தூரி திலகம் மூங்கில் இலைபோன்ற வடிவத்தில் அமைத்து, பிறகு, சுவாமியின் முகத்தில் புனுகு தைலம் லேபனம் செய்து புதிய பட்டு வேஷ்டி உத்தரீயங்களை அணிவித்தபிறகு சுவாமியின் திருவாபரணங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அணிவிக்கப்படுகின்றது. 
 
கடைசியாக கிரீடம் அணிவிக்கப்படும். பிறகு சுவாமியின் திருமார்பில் இருக்கும் தங்கலட்சுமி உருவத்துக்கு குலசேகரப்படியின் உள் பக்கம் ஏகாந்தமாக திருமஞ்சனம் நடத்தி, தாயாருக்கு பட்டுவஸ்திரம் அணிவித்து ஸ்வாமியின் திருமார்பில் அலங்கரிக்கப்பட்ட பிறகு, ஸ்வாமிக்கு நவநீதம் அம்சையாகிறது. பிறகு, பச்சை கற்பூர ஆரத்தி நடக்கிறது.
 
இதன்பிறகு தோமாலை சேவை ஆரம்பாகும்.
 
 
 
 

பத்மாவதி தாயார் தெப்பத் திருவிழா!


தெப்போற்சவம்!

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஆனி  மாத பௌர்ணமியை ஒட்டி, ஏகாதசி முதல் பௌர்ணமி வரை ஐந்து நாட்கள் பத்ம சரோவரம் திருக்குளத்தில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம்.
 
இந்த தெப்போற்சவத்தில் முதல் நாள் ருக்மணி சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணரும்,
 
2ம் நாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ சுந்தர ராஜ பெருமாளும்,
 
அடுத்த 3  நாட்களும் பத்மாவதி தாயார் மட்டும் சர்வாலங்கார  பூஷிதை யாக தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து அருள் மழை பொழிவார்.
 
 
தோட்டோத்ஸவம்! 
 
பிரதி வெள்ளிக்கிழமை திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு   தோட்டோத்ஸவம் நடைபெறும். ஆலயத்திலிருந்து 100 அடி தூரத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டம் தோழப்பா பூங்கா என்றும் , வெள்ளிக்கிழமை தோட்டம் எனவும்  அழைக்கப்படும்.

அந்த பூந்தோட்டத்தின் மையத்தில் 16 தூண்களோடு ஓர் வசந்த மண்டபம் இருக்கிறது. பிரதி வெள்ளிக்கிழமை மதியம் தாயாரின் திருமஞ்சனம் மற்றும் நைவேத்தியம் இங்கு தான் நடைபெறும்.

திருமஞ்சனத்திற்கு பின்னர் தாயார் சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு புறப்படுவார்.


 
வசந்தோத்ஸவம்!


சித்திரைக் கத்திரி துவங்கி வைகாசி மாதம் பிறந்த பிறகு வருடந்தோறும் வசந்தோத்ஸவத் திருவிழா, திருச்சானூர் பத்மாவதித் தாயார் திருக்கோயிலில் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.  இந்த உத்ஸவம்  பௌர்ணமியன்று நிறைவு பெறும்.

வசந்தோத்ஸவத் திருவிழா யொட்டி, கோயில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் உற்ஸவமூர்த்தியான பத்மாவதி தாயார் எழுந்தருள, 

அவருக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், கஸ்தூரி, குங்குமப்பூ, தேன், கோரோஜனம், குங்கலியம், சந்தனம், பலவித நறுமண மலர்கள், பழங்கள், மூலிகை கலந்த வெந்நீர் ஆகியவற்றால் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டு,

சிறப்பு பூஜைகளும் ஆராதனைகள் நடைபெறும்.

தாயாருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்படும்.
பிறகு இரவில் பத்மாவதித் தாயார் யானை வாகனத்தில் மாடவீதிகளில் திருவீதியுலா வந்து திருக்காட்சி தந்து அருள் பாலிப்பார். இதையடுத்து தாயாருக்கு தீபாராதனை காட்டப்படும் அதேவேளையில் மூலவருக்கும் பூஜைகள் நடைபெறும்.

பௌர்ணமி அன்று தாயார் தங்கத்  தேரில் எழுந்தருளி அனைவருக்கும் ஆசி வழங்குவார்!



ஆண்டிற்கு 3 முறை தாயார் தங்கத்  தேரில் எழுந்தருளுகிறாள்!

வசந்தோத்ஸவத்தின் இறுதி நாளான வைகாசி மாத  பௌர்ணமி அன்றும், வரலக்ஷ்மி விரத நாள் அன்றும், கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் கருட வாகன வீதி உலா அன்றும்  தாயார் தங்கத்  தேரில் எழுந்தருளி ஆசி வழங்குவார். 

ஓம் நமோ வெங்கடேசாய!

 

சாட்சி சொன்ன பத்மாவதி தாயார்!


<<சாட்சி சொன்ன பத்மாவதி தாயார் >>

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஓர் சம்பவம் இது.
 
அன்றைய நாட்களில் நெசவாளர்களில் இரு பிரிவுகள் இருந்தன. பத்மசாலி, பட்டுசாலி என்பதே அவை. இரு பிரிவினரும் ஒன்றாக இருந்தாலும் சில வேறுபாடுகள் இருந்தன. 16 ஆம் நூற்றாண்டில் இருவருக்கும் ஓர் விவாதம் ஏற்பட்டது. அது என்னவென்றால் திருச்சானூரில் அருளும் அலர்மேல்மங்கை தன் வகுப்பினை சார்ந்தவர் என்பதே. அதற்காக தாலப்பாக்கா சின்ன திருவேங்கடநாதா குருவிடம் சென்று தன் விவாதத்திற்கு ஓர் முடிவினை வேண்டினார்கள்.
 
அவர் தாயாரை வேண்ட , தாயார் எழுந்தருளி " நான் பத்மசாலி வகுப்பினை சேர்ந்தவள் " என்று கூறி " நான் அவர்கள் அளிக்கும் மரியாதையே முதலில் ஏற்பேன்" என்று கூறினாள். இந்த தீர்ப்பு அக்டோபர் 23, 1541 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதை செப்பு தகடில் எழுதப்பட்டுள்ளது. இதை கோவிலில் இன்றும் காணலாம்.


ஓம் நமோ வெங்கடேசாய!
 
 

பத்மாவதி தாயாருக்கு நைவேத்தியம்!


தாயாருக்கு சுப்ரபாத சேவையில் பால் மற்றும் பழங்கள் சமர்ப்பிக்கப்படும்.

தினமும் புளியோதரை, வெண்பொங்கல்,  சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், ரவை கேசரி முதலியவை சமர்ப்பிக்கப்படும்.

மதிய வேளையில் லட்டு, வடைகள் சமர்ப்பிக்கப்படும்.

கல்யாண  உத்ஸவத்தின் போது அப்பம், சர்க்கரை பொங்கல், புளியோதரை சமர்ப்பித்து பக்தர்களுக்கு அளிக்கப் படும்.

வூஞ்சல் சேவையின்போது சுண்டல், ஏகாந்த சேவையின்போது சூடான பால், பஞ்ச கஜ்ஜயா முதலியவை சமர்ப்பிக்கப்படும்.

திருப்பாவாடை சேவையில்  புளியோதரை, ஜிலேபி சமர்ப்பிக்கப் படும்.

வெள்ளிக் கிழமை தோறும் மதிய வேளையில்   பாயசம், தோட்டத்தில் திருமஞ்சனத்திற்கு பிறகு வடபப்பு எனப்படும் வூற வைத்த பாசிப்பருப்பு, பானகம், பொங்கல் சமர்ப்பிக்கப்படும்.




அலங்காரத்திற்குப் பிறகு புளியோதரை, தோசை, சுண்டல் முதலியவை சமர்ப்பிக்கப்படும். 


 

பத்மாவதி தாயார் பஞ்சமி நீராட்டு!


கார்த்திகை பிரம்மோற்சவம் என்பது தாயாரின் பிறந்த நாள் கொண்டாட்டமாகும்!



கார்த்திகை மாத  வெள்ளிக்கிழமை, சுக்ல பஞ்சமி, அபிஜித் லக்கினத்தில், உத்திராடம் நக்ஷத்திரத்தில்  பத்மாஸரோவர் புஷ்கரணியில், ஆயிரம் இதழ்கள் கொண்ட தங்கத்   தாமரையில் பத்மாவதித் தாயார் அவதரித்தார்.



பத்மாவதி தாயாருக்கு திருமலையப்பனின் பஞ்சமி சீர்வரிசை!

தாயாரின் பிறந்த நாளன்று கார்த்திகை சுக்ல பஞ்சமியன்று திருமலையிலிருந்து தாயாருக்கு சீராக


இரண்டு யானைகளின் மேல் வைத்து,



மஞ்சள், குங்குமம், 2 பட்டு புடவைகள், 2 பட்டு இரவிக்கைகள், துளசி மாலை, ஒரு தங்க மாலை,



51 இனிப்பு வகைகள், 51 பெரிய லட்டுகள், 51 வடைகள், 51 அப்பங்களை, 51 தோசைகள், நடைப் பயணமாக கொண்டு வந்து சமர்ப்பிப்பார்கள்.

இவற்றை முதலில் எம்பெருமானுக்கு சமர்ப்பித்து, பின்னர் புது கூடையில் வைத்து வூர்வலமாகக் கொண்டு செல்வர்.




இவ்வூர்வலம் மங்கள வாத்தியங்களுடன், ஆடல், பாடலுடன் மலைவழிப் பாதையில் அலிபிரி, கோதண்டராமர் சந்நிதி, கோவிந்தராஜ ஸ்வாமி சந்நிதி வழியாக திருச்சானூர் சென்று, திருச்சானூர் மாடவீதியில் வழியாக சென்றடையும்.

இந்த சீர்வரிசையை தாயாருக்கு வழங்கிய பின்னரே பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரஸ்நானம் தொடங்கும்.



வேத முழக்கங்கள், மங்கள வைத்தியங்கள் மத்தியில் பத்மாஸரோவர் புஷ்கரணியில்  தாயாருக்கும், ஸ்ரீ சக்கரத்திற்கும் திருமஞ்சனம் நடைபெறும்.





இந்நிகழ்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள்  பத்மாஸரோவர் புஷ்கரணியில் நீராடி, தாயாரை தரிசனம் செய்து,

பல கோடி ஜென்ம புண்ய பலனை அடைவார்கள்!