Sunday, 28 February 2016

சஷ்டி தேவி (தேவசேனை) அருளிய துதி!




சஷ்டி தேவி (தேவசேனை) அருளிய துதி!

"நமோ தேவ்யை மஹாதேவ்யை
ஸித்யை சாந்த்யை  நமோ நம:

ஸுபாயை தேவஸேனாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

வரதாயை புத்ரதாயை
தனதாயை நமோ நம:

ஸுகதாயை மோக்ஷதாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:




ஸ்ருஷ்ட்யை ஷஷ்டி அம்ச
ரூபாயை ஸித்தாயை நமோ நம:

மாயாயை ஸித்தயோகின்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸாராயை ஸாரதாயை 
பரா தேவ்யை நமோ நம:

பால அதிஷ்டாத்ரு தேவ்யை 
ஷஷ்டி தேவ்யை  நமோ நம:

கல்யாணதாயை கல்யாண்யை
பலதாயை  கர்மணாம்

ப்ரத்யக்ஷாயை ஸ்வபத்தானாம்
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸுத்த ஸத்வ ஸ்வரூபாயை
வந்திதாயை ந்ருணாம்ஸதா

தேவரக்ஷண காரிண்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

பூஜ்யாயை ஸ்கந்த காந்தாயை
ஸர்வேஷாம் ஸர்வகர்மஸி

ஹிம்ஸா கோடி வர்ஜிதாயை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

தனம் தேஹி யசோ தேஹி
புத்ரம் தேஹி ஸுசரேஸ்வரி

மானம் தேஹி ஜயம் தேஹி
த்விஷோ ஜஹி மஹேஸ்வரி

தர்மம் தேஹி ஸுகம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம,

தேஹி பூமி ப்ரஜாம் தேஹி
வித்யாம் தேஹி ஸுபூஜிதே

கல்யாணம்  ஜயம் தேஹி

ஷஷ்டி தேவ்யை நமோ நம:


அபிஷேக பூஜை, தூப, தீப, நிவேதன ஆராதனைகளுடன்,

"ஓம் ஹ்ரீம் ஷஷ்டி தேவ்யை ஸ்வாஹா'

என்னும் சஷ்டிதேவி அஷ்டாட்சர ஜெபத்தைக் கூறி வணங்கி இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஓதினால் குழந்தைப் பேறு கிட்டும்.

குமாரசஷ்டியில் ஆரம்பித்து, ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியிலும் கந்தனுடன் சஷ்டி தேவியையும் (தேவசேனை) துதித்து பலன் பல பெற்று நலமுடன் வாழ்வோமே!






தேர் கோலங்கள்












பூஜையறை கோலங்கள்



சரஸ்வதி பூஜைக்குரிய கோலம் 



 சரஸ் என்றால் ஒளி என்று பொருள். கல்வி கற்பதற்கு மட்டுமின்றி தொழில் அனைத்திற்குமே சரஸ்வதி சரஸ்வதி தேவியின் அருள் வேண்டும்.
நவராத்திரியில், சரஸ்வதி தேவியை பூஜை செய்யும் நாட்களில் போடும் கோலம் இது .

சரஸ்வதி தேவிக்குரிய இக்கோலம் போட்டு அதன் கீழே ஐந்து தாமரைப் பூக்களை அரிசி மாவினால் போட்டு அன்னையை வணங்கிட வேண்டும்.





 ஹ்ருதய கமலம் 




 ஐஸ்வர்ய கோலம் 







Saturday, 27 February 2016

சூரியனின் 12 நாமங்கள்


ஆதித்ய ஹிருதயம் படித்தால் அளவிலா பலன்களைப் பெறலாம். 
படிக்க இயலாதவர்கள், சூரியனின் 12 நாமங்களான... 

ஓம் மித்ராய நம
ஓம் ரவயே நம
ஓம் சூர்யாய நம
ஓம் பானவே நம
ஓம் ககாய நம
ஓம் பூஷ்ணே நம
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம
ஓம் மரீசயே நம
ஓம் ஆதித்யாய நம
ஓம் சவித்ரே நம
ஓம் அர்க்காய நம
ஓம் பாஸ்கராய நம

என்பதை சொல்லலாம்.

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி!


திரைப்படம்
1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ: 
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:


தமிழாக்கம்

1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன். 

பானு சப்தமி

ஒவ்வொரு தினத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஞாயிற்றுக் கிழமையும் சப்தமி திதியும் ஒன்று சேரும் தினத்தை பானு சப்தமி தினம் என்பார்கள். இந்த தினம் சூரிய கிரகண நாளுக்கு சமமானது ஆகும்.

அதாவது நாளைய தினம் நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.

ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் (கோதுமை தானம் செய்தால் பார்வை சரியாகும்) , சூரியனின் அருளைப் பெற்றுத் தரும்.

அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

216 முறை படித்தால் குழந்தை வரம் அருளும் விரதம்


சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள்.  
சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் ஒரு கெடுதலும் அண்டாது. 

சஷ்டி அன்றும் செவ்வாய்க்கிழமையிலும் கந்தசஷ்டி கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.

சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.