தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடத்தில் பார்க்கும் போது. .பூமியை இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள். அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவதுண்டு.
அதில் மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.
அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தக்ஷாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை.
அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடம் சிறந்த நட்சததிரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி.
அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால் உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். எனவே உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.
அந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள் சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில், சேர நாட்டில் எடுத்துக் கொண்டால் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். ஆனால் விளக்கை ஏற்றி ஜோதி என்று காண்பிப்பது ஒரு அடையாளமே, ஆனால் இயற்கையாக இருப்பதை அறிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர்.
மகரம் ஆன்மீக மாதம்!
அதனால் தான் பல சிறப்புகள் வாய்ந்த மகர மாதத்தை ஆன்மீகத்தை போற்றும் மாநிலமான கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை ஒன்றாம் தேதியன்று மாலை அந்த விண் மீன் தெரியும். அன்றைய தினம் கருடன் வட்டமிடும். அதுவும் மகர மாதம் துவங்குவதை குறிக்கும் மற்றொரு அறிகுறி. அந்த விண் மீனின் பெயர் மகர மீன்.
மகர யாழ் என்று ஒரு இசைக்கருவி உண்டு. மகர யாழ் மிக வலிமையானது. அதை மீட்டுவதற்கே மிகுந்த வலிமையும், ஞானமும் வேண்டும். எல்லோராலும் மீட்ட இயலாது. அதுபோன்று மகர மீன், அதுபோல் மகர ராசியில் பிறந்தவர்களை மகரத்தார் நகராழ்வார் என்பர். அவர்களுக்கு ஆளும் குணம் உண்டு.
மகர ராசியில் இடம்பெற்றுள்ள ராசிகள் மூன்று, மூன்றுமே சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள். உத்திராடம், திருவோணம், அவிட்டம். திருவோணம் வெங்கடாச்சலபதியின் நட்சத்திரம். திரு ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான். அதாவது திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகத்தின் எதாவது ஒரு மூலையையாவது ஆள்வார்கள் என்பதாகும்.
அவிட்ட நட்சத்திரத்திற்கு “தவிட்டுப் பானையும் தங்கமாகும்” என்ற பழமொழி உண்டு. மூன்று நட்சத்திரங்களுமே மிகச் சிறந்த நட்சத்திரங்கள் ஆகும்.
மகரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. மகரமே சிறந்த வீடு. அதனில் நெருப்பு நட்சத்திரமும் உண்டு, நீர் நட்சத்திரம் உண்டு.
உத்திராடமும், அவிட்டமும் நெருப்பு நட்சத்திரங்கள். திருவோணம் நீர் நட்சத்திரம். மகரத்தைப் பற்றி பழைய நூல்கள் கடல் வீடு என்கின்றன. மகரம் ஆழியாகும். ஆனால் ஒரு சில நூல்கள் நெருப்புத் தன்மை வாய்ந்த கடல் வீடு என்றும் கூறுகிறது. அதாவது வெந்நீர் ஊற்றுகள் அதிகம் நிறைந்தது என்று நாம் கொள்கிறோம். கடல் என்றாலே நீர்தான். ஆனால் குளிர்ச்சி அல்ல கொதிப்புதான் அதன் தன்மை. அதாவது இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவது இந்த ராசிக்கு பொருந்தும்.
மகர ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையை விட்டு மாறுபட்டு இருப்பார்கள். தாங்கள சார்ந்த நாடு, மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுவர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் வேறு மாதிரி செய்து பார்ப்பவர்கள். அதுதான் மகரத்தின் குணம்.
மகர மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். சூரியனுக்கும் இயக்கம் உண்டு, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும். ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடுவர். சிவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான் சூரியனும் எதையும் சுற்ற வேண்டாம். மற்ற கோள்கள்தான் சூரியனை சுற்றுகின்றன.
எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது.
சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் போன்று ஏதாவது பழமொழி உண்டா? இல்லையே. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பதுதானே பழமொழி. எல்லாமே தையில் தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள்.
தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல்.
பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம்.
பரிகாரத்திற்கும் தையே சிறந்தது!
ராஜ ராஜ சோழன் காலத்தில் அந்த மாதத்தில்தான் பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். பல நல்ல திட்டங்கள் அந்த மாதத்தில் துவக்கியுள்ளார்கள். நெற்களஞ்சியத்தில் இருந்து பழைய நெல்களை கொடுத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு புதிய நெல்களை கொள்முதல் செய்து கொள்வர்.
நெற்களஞ்சியத்தில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு தானதர்மம் செய்துவிடுவர். தான தர்மங்கள் செய்வதற்கும் உகந்தது தை மாதம்தான். இதை எல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்தில்தான் துவங்குகிறது.
தட்பவெப்ப நிலையில் பார்த்தாலும் தை மாதம் சிறந்த மாதகும். குளிரும் இருக்கும், வெயிலும் இருக்கும், எதுவும் கடுமையாக இருக்காது. அதுவே வெகு சிறப்பானது.
எனவே சூரியனின் உத்திராயணப் பயணம் துவங்கும் அந்த முதல் நாள் தமிழர் திருநாளாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்தல், புதுமனை புகுதல், புது வேலையில் சேர்வது, புதிய நிறுவனம் தொடங்குதல் போன்ற அத்தனையும் துவங்கினால் அது வெற்றி பெறும். நீண்ட காலம் நிலைக்கும்.
சூரியனை வணங்கும் நாளாகவும் தை பொங்கல் விளங்குகிறது. புது அரிசி - கை குத்தல் - அரிசி களைந்து பானையில் வைத்து சூரியனுக்கு நேர வைத்து பொங்கல் பொங்குவர்.
தை மாதத்தில்தான் சூரியப் பொங்கல் என்கிறோம். மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தையும் வழிபடுவோம். வள்ளுவனையும் வணங்குகிறோம். சித்திரையில் இதுபோன்று தமிழர்களைச் சார்ந்த எந்த விழாவும் இல்லை. வள்ளுவனையும் கொண்டாடுவதில்லை.
மகரம் சமாதான வீடு!
அதேபோன்று மகரம் சனியின் வீடு. சனியின் எதிர் கிரகம் செவ்வாய். சனிக்கு செவ்வாயும், சூரியனும் எதிர் கிரங்களாகும். ஆனால் செவ்வாய் சனியின் வீட்டில் உட்கார்ந்து உச்சம் அடைகிறது. தை மாதம் என்பது மகர மாதம். சனியின் வீட்டில் சூரியன் உட்காரும் போது உக்கிரம் அடைகிறது. அந்த இடத்தில் செவ்வாய் உச்சமடைய மகரம் அனுமதிக்கிறது. ஒன்றுக்கு ஒன்று விட்டுக் கொடுக்கிறது. சனி விட்டுக் கொடுத்து சூரியனின் உச்சத்தை ஏற்றுக் கொள்கிறது. சமாதான வீடாகவும் மகர வீடு விளங்குகிறது.
ஜாதிப்படி பிரித்தால் மகரம் சத்ரிய வீடு என்று சொல்லலாம். மகரத்தில்தான் குரு நீச்சமடைகிறார். சூழ்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை. சத்ரியர்கள் தங்களது திறமையை காண்பிக்கலாம். எல்லா தரப்பினருக்கும் மிக உயர்ந்த மாதமாகும்.
Wednesday, 4 April 2018
Monday, 8 January 2018
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயாரின் திருவடி சேவை!

*ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயாரின் பாதத்தை கவனியுங்கள்.
வருடத்திற்கு ஒரு முறைதான் காணமுடியும்.
இதை திருவடி சேவை என்பார்கள்.*
ஐஸ்வர்யங்களை வரவழைக்கும்தூபம்!
தூபம் என்பது இறைவழிப்பாட்டின் போது இறைவனை போற்றி செய்து இறைவனை சாந்தப்படுத்துவதர்காக காண்பிக்கப்படும் நறுமணப் புகையே ஆகும்.
பெரும்பாலும் சாம்பிராணி புகைபோடுதல் என்றால் அனைவருக்கும் நன்கு தெரியும்.
இவ்வகை சாம்பிராணி புகை போடுவதால் என்ன நன்மை?
தெரிந்துகொள்ளுங்கள்!
சாம்பிராணியில் இருக்கும் இயற்கை குணமாகப்பட்டது மனிதனை திடப்படுத்தும் திறன் கொண்டது!
மரத்துண்டில் நெருப்பூட்டி சாம்பிராணியை அதனிலிட்டு அதன் புகை காற்றில் கலந்து வருகையில் அதை சுவாசிக்கும் நமது தேகத்தில் எத்தனையோ வித மாற்றங்கள் நிகழும்.
அந்த மாற்றங்களை சொல்லுவதென்றால் தற்போது அதனை விவரிக்க நேரம் இயலாது!
இருப்பினும் சாம்பிராணியைப் போல பல தூப முறைகள் உண்டு. அவைகளை செய்வதினால் உண்டாகும் நன்மையை சுறுக்கமாக உறைக்கிறேன் .
தினமும் தூபமிட்டு தங்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துங்கள்!
#சந்தனத்தில் தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.
#சாம்பிராணியில் தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
#ஜவ்வாது தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
#அகிலி தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.
#துகிலி தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.
#தசாங்கம் தூபமிட தரித்தர்யம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்.
#துளசி தூபமிட காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.
#தூதுவளை தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.
#வலம்புரிக்காய் தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.
#வெள்ளைகுங்கிலியம் தூபமிட துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.
#வெண்கடுகு தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.
#நாய்கடுகு தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.
#கோஷ்டம் தூபமிட நவக்கிரக கோளாறுகள்நீங்கும்.
#மருதாணிவிதை தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும்.
#கரிசலாங்கன்னி தூபமிட மகான்கள்அருள்கிட்டும்.
#வேப்பம்பட்டை தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.
#நன்னாரிவேர் தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.
#வெட்டிவேர் தூபமிட சகல காரியங்களும் சித்தியாகும் .
#வேப்பஇலைதூள் தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும்.
#மருதாணிஇலைதூள் தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
#அருகம்புல்தூள் தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.
மேலே குறிப்பிட்டுருக்கும் அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.

ஏகாதசி விரதங்கள்!
ஆன்மீகமும்..... ஜோதிடமும்....
மாதந்தோறும் ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில், திருமாலை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள்.
சித்திரை - காமதா (வளர்பிறை) - நினைத்தது நடக்கும்.
சித்திரை - பாபமோகினி (தேய்பிறை) - விரும்பியது கிடைக்கும்.
வைகாசி - மோகினி (வளர்பிறை) - புண்ணிய நதிகளில் நீராடிய பலன்.
வைகாசி - வருதித் (தேய்பிறை) - பத்ரிநாத் தரிசன பலன்.
ஆனி - நிர்ஜலா (வளர்பிறை) - சொர்க்கம் கிடைக்கும்.
ஆனி - அபார (தேய்பிறை) - மனச்சுமை நீங்கும்.
ஆடி - தேவசயனி (வளர்பிறை) - பாற்கடல் சென்ற பலன்.
ஆடி - யோகினி (தேய்பிறை) - லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த பலன்.
ஆவணி - புத்ரஜா (வளர்பிறை) - அழகான குழந்தை பிறக்கும்.
ஆவணி - காமிகா (தேய்பிறை) - குழந்தை பெறுவதற்கான தடை நீங்கும்.
புரட்டாசி - பரிவர்தீனி (வளர்பிறை) - குடும்ப ஒற்றுமை.
புரட்டாசி - அஜா (தேய்பிறை) - பிரிந்த கணவன், மனைவி சேருதல்.
ஐப்பசி - பராங்குசா (வளர்பிறை) - வறுமை, நோய் நீங்குதல்.
ஐப்பசி - இந்திரா (தேய்பிறை) - மன நிம்மதி கிடைக்கும்.
கார்த்திகை - பிரபோதின (வளர்பிறை) - 21 பேருக்கு தானம் செய்த பலன்.
கார்த்திகை - கைசிக (தேய்பிறை) - தீர்க்க சுமங்கலி பாக்கியம்.
மார்கழி - வைகுண்ட (வளர்பிறை) - சொர்க்கம் கிடைத்தல்.
மார்கழி - உத்பத்தி (தேய்பிறை) - திருமண தடை நீங்குதல்.
தை - புத்ரதா (வளர்பிறை) - ஆண் குழந்தை பாக்கியம்.
தை - சுபலா (தேய்பிறை) - ஒளிமயமான வாழ்வு.
மாசி - ஜயா (வளர்பிறை) - முன்னோருக்கு முக்தி.
மாசி - ஷட்திலா (தேய்பிறை) - முன்னோர் சாபம் நீங்குதல்.
பங்குனி - ஆமலகி (வளர்பிறை) - ஆயிரம் பசுக்கள் தானம் செய்த பலன்.
பங்குனி - விஜயா (தேய்பிறை) - நடக்காததும் நடத்தல்.

ஓம் ஸ்ரீ தத்தாத்ரேயா நமஹ.!
சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்திரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி . கர்த்தம பிரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந்த ரிஷிபத்தினியான இவர், கற்பிற் சிறந்த பதிவிரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ இராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது ,அத்திரி- அனசூயா ஆசிரமத் திற்குச் சென்று, இருவரையும் வணங்கியதாக, இராமாயணம் குறிப்பிடுகிறது.
ஒருமுறை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், அனசூயா தேவியின் கற்பினைச் சோதிக்கும் பொருட்டு,அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவளுக்கு மிகவும் கடினமான ஒரு சோதனையை ஏற்படுத்த, அனசூயா தன் கற்பின் வலிமையால் மூவரையும் சிறு குழந்தைகளாக மாற்றிவிட்டதாகவும், பின்னர் மும்மூர்த்திகளின் தேவியர்கள் வேண்டுகோளுக் கிணங்க, அவள் அவர்களை மன்னித்ததாகவும் புராணங் கள் குறிப்பிடுகின்றன. அனசூயா தேவி அந்த தெய்வீகக் குழந்தைகளை ஒன்று சேர்த்து எடுக்கவே, மூன்று முகங்கள், ஆறு கரங்களோடு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் அவதரித்தார்.
இவர் அனக தத்தர், அனகசுவாமி என்ற பெயர்களில், அனகா தேவி என்ற தேவியோடு காட்சியளிப்பதையும் காண முடியும். அனகா என்ற சொல் "பாவமற்ற' என்ற பொருளைத் தரும். அனகசுவாமியும் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் அவரது தேவியான அனகாதேவியும் நம் பாவங் களை முழுதாகக் களையும் கண்கண்ட தெய்வங் களாகப் போற்றி வணங்கப்படுகின்றனர்.
'அனுக்ரஹ ப்ரதாம் புத்திம், அனகாம் ஹரிவல்லபாம்,
அசோகாம் அம்ருதாம், தீப்தாம், லோகசோக விநாசினீம்.'

நடராஜரின் நடன சபைகள்!
நடராஜரின் நடன சபைகள் பொற்சபை, ரஜித சபை அல்லது வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வழங்கப்படுகின்றன.
சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலய ங்களில் நடராஜர், தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் இருக்கின்றன. இவை பஞ்ச சபைகள் அல்லது ஐம்பெரும் சபைகள் என்று அழைக்கப்படுகி ன்றன. இந்த ஐந்து சபைகளும் பொற்சபை, ரஜித சபை அல்லது வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வழங்கப்படுகின்றன.
பொற்சபை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது திருமூலட்ட நாதர் ஆலயம். இங்கு அருள் பாலிக்கும் நடன நாயகன் நடராஜர் வீற்றிருக்கும் இடமே, பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாதர் ஆகியோருக்கு அருளிய தலம் இதுவாகும்.
இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இங்கு இறைவனின் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது.
சித்திர சபை
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் இருக்கிறது சித்திர சபை. இங்கு எமனை சம்ஹரித்த இறைவன், பார்வதியுடன் மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக் கிறார். இங்கு நடனம் புரிந்த இறைவ னின், தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது. இந்த இடம் சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘திரிபுர தாண்டவம்’ எனப்படுகிறது.
ரத்தின சபை
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, ரத்தின சபை. இங்கு காளியை தனது நடனத்தின் மூலம் சிவபெருமான் வெற்றி கண்டார் என்கிறது தல புராணம். இந்த இடம் ரத்தின அம்பலம், ரத்தின சபை, மணி மன்றம் என்று பல பெயர்களால் வழங்கப்படுகி றது. இங்கு இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார்.
காளியுடன் நடந்த போட்டியில், காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார் என்கிறது தல வரலாறு. காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ‘ஊர்த்துவ தாண்டவம்’ என்று போற்றப்படுகிறது.
வெள்ளி சபை
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளும் ஆலயமே ‘வெள்ளி சபை’ என்று போற்றப்படுகிறது. இதனை வெள்ளியம்பலம், வெள்ளி மன்றம் என்றும் போற்றுகிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் நடராஜர், தனது பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டு கோளுக்கு இணங்க, வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி திருநடனம் புரிகிறார்.
இங்கும் முதலில் இறைவன் பஞ்சலி, வியாக்கிர பாத முனிவருக்கு தில்லையில் காட்டிய காட்சியையே காட்டி அருளினார். அதன்பிறகு, பாண்டிய மன்னனின் வேண்டுகோள்படி, காலை மாற்றி ஆடி, அந்த நிலையிலேயே அருள்கிறார். இங்கு இறைவ னின் நடனம் ‘சந்தியா தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
தாமிர சபை
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் நடராஜர் சன்னிதியே ‘தாமிர சபை’ என்று போற்றப்ப டுகிறது. இங்கு தாமிரத்தால் ஆன அம்பலத்தில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இறைவன் நடனம் புரியும் சபையானது, தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகி றார். இங்கு இறைவன் ஆடும் நடனமானது ‘திருத்தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது.

தலைவிதியை மாற்றும் பிரம்மா!
பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன.
அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!
திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார்.
திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.
ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.
அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு.
பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.
உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.
இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான்.
வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும்; தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும்; கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.
இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இங்கு அருள்பாலிக்கும் நான்முகனுக்கு தனிக்கதை ஒன்று உண்டு.
படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன.
ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மா. அழிக்கும் ஈசனைவிட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்றெண்ணிய பிரம்மா, யாரையும் மதிக்காமல் கர்வம் கொண்டு அலைந்தார்.
அதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணினார். அவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். ஐந்து தலைகள் இருப்பதால்தானே அகம்பாவம் தலை தூக்குகிறது என்று நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்துவிட்டார்.
பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.
பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார்.
அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க!' என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.
திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும்; அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.
பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர்.

அதுமட்டுமின்றி அவரிடமிருந்து படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார்.
மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்தத் தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன.
மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்தத் தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன.
பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.
பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார்.
அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க!' என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.
திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும்; அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.
பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர்.
Subscribe to:
Posts (Atom)