Wednesday, 24 February 2016

செல்வம் பெருக!


செல்வம் பெருக

1. குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.

2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்
.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்

4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க 1. வியாழக்கிழமை குபேர சம்பத்து வரும்.

5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.

இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை

காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.

7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.

8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு
அதிகரிக்கும்.

9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.

10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.

11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்

.45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.

14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.

16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.

17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும். பணப் பிரச்சனை தீரும்.

18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.

20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட் கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.

21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.

22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.

23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.

24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரச மரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பண வரவு நிரந்தரமாகும்.

26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.

29. அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.

30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.

31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.

32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.

33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.

34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.

35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.

36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.

37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.

39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.

40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.

41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.

42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.

43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
 
44. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன்முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்துவிட வேண்டும். 

 
45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.

46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.

48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

49. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.

51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.

54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.

55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.

56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.

57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.

58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர தனலாபம் பெறலாம்.

59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.

60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.

62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.

64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.

65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.

66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.

67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.

68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.

70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.

72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.

73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.

74. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.

76. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம். 

77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.

78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.

79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.

80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.

81. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால் பாயாசம், கற்கண்டு கனி வகை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மாளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது

பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பட்சை கற்பூரம்,ஏலக்காய்,சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு கட்டி வைக்கவும். பணப்புழக்கம் அதிகரிப்பதை தாங்களே காணலாம். ஒன்றொன்றும் சிறிதளவு போதுமானது
 
 
 

Sunday, 7 February 2016

தெய்வயானை திருமணம்




தில்லைக் கூத்தனின் நடனத்தைக் கண்ட மஹாவிஷ்ணுவின் ஆனந்தப் பரவச நிலையில் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரிலிருந்து தோன்றிய இரு மங்கையரே அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் கந்தனை மணக்க விரும்ப, கந்தனோ, தன் அவதார நோக்கம் நிறைவேறும் வரையில் திருமணம் இல்லை எனவும் அது வரையில் இருவரையும், ஒருத்தியை
விண்ணிலும், மற்றொருத்தியை மண்ணிலும் பிறந்து தவத்தில் ஈடுபடும்படியும் சொல்லுகின்றான்.


விண்ணில் பிறந்த குழந்தையான தெய்வானையை தேவேந்திரனின் யானையான ஐராவதம் வளர்த்து வருகின்றது. யானைக் கூட்டத்துக்கே இயல்பாக உள்ள பாச உணர்ச்சியால், தாயில்லாக் குழந்தையான தெய்வானை யானையால் பாசத்துடன் வளர்க்கப்
பட்டு தெய்வானை ஆகின்றாள். முருகனை இப்பிறவியிலும் மறவாது மணம் புரியவேண்டி தவம் இருக்கின்றாள்.


அவள் தவம் நிறைவேற வேண்டியும், தன் அன்பு மகளின் மனோரதம் நிறைவேறவும், தேவர்களுக்குச் சேனாபதியாக வந்த தேவசேனாபதிக்குத் தன் மகளைத் தர நிச்சயிக்கின்றான், தேவேந்திரன். திருமணம் நிச்சயிக்கப் பட்டு வேத முறைப்படி, வேள்விச் சடங்குகளைப் பிரம்மா நிறைவேற்ற,

தேவேந்திரன் தாரை வார்த்துத் தர முறைப்ப்படி நடக்கின்றது. தவமிருந்த தெய்வானையாகிய ஆன்மா இறையைத் தேடி மண்ணுக்குவந்து மண்ணுலகில் திருப்பரங்குன்றத்தில் இறையோடு ஒன்றாய்க் கலப்பதே தேவ குஞ்சரியின் திருமணம் ஆகும்.

விண்ணுலக அருள் சக்தியான தெய்வானை முக்தியை முருகன் அருளுகின்றான் என்பதை விளக்க ஏற்பட்டதே தெய்வானை திருமணமாம் திருப்பரங்குன்றம் என ஏற்பட்டது.



 

அகத்தியர் அருளிய "ஆதித்ய ஹ்ருதயம்' தமிழில்!


தினமும் சூரியோதய வேளையில் அகத்தியர் அருளிய "ஆதித்ய ஹ்ருதயம்' சொல்வது மிகுந்த நன்மை தரும்.

* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள் தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.

* தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.

* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே!"சப்த' என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய்.

* சூரியனே! ஆகாயத்திற்கு நீயே நாதன். ராகு என்னும் இருளைப் பிளந்து கொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய். ரிக், யஜூர், சாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனாய் இருக்கிறாய்.

* கண்கண்ட தெய்வமே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன். தட்சிணாயண காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.

*வட்ட வடிவத்தை உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயமாகும் போது மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே!

மகத்தான ஒளியை உடையவனே! எல்லாப் பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிப்பவனே! நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிறைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதை களைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா. அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற 12 மூர்த்திகளை உள்ளடக்கியவனே! உனக்கு நமஸ்காரம்.

* உருகியோடும் தங்க ஆறு போன்ற பிரகாசம் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குபவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.

* உலகம் அழியும் காலத்தில் இந்த ஜகத்தை நீயே அழிக்கிறாய். மீண்டும் நீயே அதை சிருஷ்டிக்கிறாய். ஜலத்தை வற்றச் செய்கிறாய். உலகையே எரிக்கிறாய். மழை பெய்யச் செய்கிறாய். எல்லா உயிர்களும் அழித்து அடங்கியிருக்கும் போது நீ மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறாய்.

சர்வாத்மாவே! சர்வேஸ்வரனே! வேதங்களால் கூட உன்னை அறியமுடியாது. ஆதித்யனே! வேத விற்பன்னர்கள் செய்யும்யாகமாகவும், அதன் பலனாகவும் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.



திருவிளக்கு வழிபாடு!

 
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே
காந்தி விளக்கே: காமாக்ஷித் தாயாரே

பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக்
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளக்கு
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க

மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷனங்கள் தாரும் அம்மா

பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா

சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்

பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்

கைவளையல் கலகலென்னக் கணியாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்

அன்னையே அருந்துணையே: அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:

இதனைப் பாடி முடித்தவுடன் பதினாறு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

திருவிளக்கு போற்றி!

ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
ஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
ஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி

ஓம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
ஓம் ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
ஓம் பிறர் வயமாகா பெரியோய் போற்றி
ஓம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
ஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றி

ஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
ஓம் மூவூலகுந் தொழ மூத்தோய் போற்றி
ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி

ஓம் இருள் கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே மாமணி போற்றி
ஓம் வளமை நல்கும் வல்லியே போற்றி
ஓம் அறம் வளர்நாயகி அம்மையே போற்றி
ஓம் மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி

ஓம் மண் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் தையல் நாயகித் தாயே போற்றி
ஓம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி

ஓம் சூளாமணியே சுடரொளி போற்றி
ஓம் இருள் ஒளித்து இன்பமும் ஈவோய் போற்றி
ஓம் அருள் மொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
ஓம் அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
ஓம் இல்லக விளக்காம் இறைவி போற்றி

ஓம் சுடரே விளக்காம் தூயாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்வினாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
ஓம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி

ஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
ஓம் தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
ஓம் ஜோதியே போற்றி சுடரே போற்றி
ஓம் ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
ஓம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி

ஓம் சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
ஓம் பலா காண் பல்லக விளக்கே போற்றி
ஓம் நல்லக நமசிவாய விளக்கே போற்றி
ஓம் உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
ஓம் உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி

ஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
ஓம் உள்ளத் தகளி விளக்கே போற்றி
ஓம் உயிரெணும் திரிமயக்கு விளக்கே போற்றி
ஓம் இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
ஓம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி

ஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
ஓம் ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
ஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
ஓம் கற்பனை கடந்த ஜோதி போற்றி

ஓம் கருணை உருவாம் விளக்கே போற்றி
ஓம் அற்புத கோல விளக்கே போற்றி
ஓம் அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
ஓம் சிற்பர வியோம விளக்கே போற்றி
ஓம் பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி

ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
ஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
ஓம் பெருகுஅருள் சுரக்கும் பெரும போற்றி
ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயகி போற்றி
ஓம் செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
ஓம் தீப மங்கள ஜோதி போற்றி
ஓம் மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி

ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி
ஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி
ஓம் ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஓம் ஆழியான் காணா அடியோய் போற்றி

ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
ஓம் அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி
ஓம் முந்தை வினையை முடிப்போய் போற்றி
ஓம் பொங்கும் கீர்த்தி பூரண போற்றி
ஓம் தன்னருள் சுரக்கும் தாயே போற்றி

ஓம் அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
ஓம் இருநில மக்கள் இறைவி போற்றி
ஓம் குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
ஓம் ஆறுதல் எமக்கிங் களிப்போய் போற்றி
ஓம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி

ஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
ஓம் எத்திக்குந் துதி ஏய்ந்தாய் போற்றி
ஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றி
ஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி
ஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி

ஓம் ஓங்காரத் துள்ளொழி விளக்கே போற்றி
ஓம் எல்லா உலகமும் ஆனாய் போற்றி
ஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் புகழ் சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
ஓம் செல்வாய செல்வம் தருவாய் போற்றி

ஓம் பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
ஓம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
ஓம் உயிர்களின் பசிப்பிணி ஒளித்தருள் போற்றி
ஓம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
ஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி

ஓம் விளகிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
ஓம் நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
ஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றி
ஓம் தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
ஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி

ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
ஓம் போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

திருவிளக்கு பூஜை

ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியாசக்தியே நம
ஓம் சொர்ண சொரூபியே நம

ஓம் ஜோதி லக்ஷ்மியே நம
ஓம் தீப லக்ஷ்மியே நம
ஓம் மஹா லக்ஷ்மியே நம
ஓம் தனலக்ஷ்மியே நம
ஓம் தான்யலக்ஷ்மியே நம

ஓம் தைர்யலக்ஷ்மியே நம
ஓம் வீரலக்ஷ்மியே நம
ஓம் விஜயலக்ஷ்மியே நம
ஓம் வித்யா லக்ஷ்மியே நம
ஓம் ஜெய லக்ஷ்மியே நம

ஓம் வரலக்ஷ்மியே நம
ஓம் கஜலக்ஷ்மியே நம
ஓம் காம வல்லியே நம
ஓம் காமாக்ஷி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷ்மியே நம

ஓம் ராஜலக்ஷ்மியே நம
ஓம் கிருஹலக்ஷ்மியே நம
ஓம் சித்த லக்ஷ்மியே நம
ஓம் சீதா லக்ஷ்மியே நம
ஓம் திரிபுரலக்ஷ்மியே நம

ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம

ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம

ஓம் எனும் சிற்பரத்தாளே நம
ஓம் அபாயம் அறுக்கும் அறுகோணத்தி நம
ஓம் சொற்பவனத்தி நம
ஓம் சூட்சும ரூபி நம

சரணம் சரணம் தாள் பணிந்தேன் உனை
பாவம் பொறுத்துப் பல பவுசும் தான் கொடுத்து
விக்கினங்கள் வராமல் வேலிபோல் காத்து
ஆதரித்து எனக்கு அருள்புரிவாயே!

புவன சுந்தரி போற்றி வணக்கம்
குரு வடிவாய் வந்து உபதேசங்கள்
கொடுத்து உன் திருவடி தந்து அருள்வாயே!

 
நல்ல பலன் காண என்ன விளக்கேற்றலாம்?

* நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும்.

  * நல்லெண்ணையில் விளக்கேற்றினால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

* விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் வியக்கும் அளவிற்கு புகழ் கூடும்.

* இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றினால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

* தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் தடைகள் அகலும்.

* பஞ்சினால் ஆன திரியில் தீபம் ஏற்றினால் வாழ்வில் நல்ல காரியங்கள் நடைபெறும்.

* தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் பாவங்கள் விலகும்.

* வாழைத்தண்டு நாரினால் உருவாக்கப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் வாரிசுகள் உருவாகும்.

திருவிளக்கு பூஜை விதிமுறை:

* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும்.
* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.

விளக்கு பூஜை மாத பலன்:

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.

சித்திரை – தானிய வளம் .
வைகாசி – செல்வச்செழிப்பு.
ஆனி – திருமண பாக்கியம்.
ஆடி – ஆயுள்பலம்.
ஆவணி – கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி – கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி – நோய் நீங்குதல்
கார்த்திகை – புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி – ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை – எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி – துன்பம் நீங்குதல்.
பங்குனி – ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்
.
கார்த்திகை பெண்களை போற்றும் நன்னாள்
நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார்.

சிவசக்தி தீபம்
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

திருவிளக்கில் தேவியர்
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

பழமையான விளக்கு திருவிழா
திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர்.
இந்த வழிபாட்டை கார்த்திகை விளக்கீடு என்று குறிப்பிடுகின்றன.

பொட்டு வைக்கும் முறை
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

மனநிம்மதி தரும் விளக்கு
வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன.

என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும் உண்டாகும்

எந்த திசை என்ன பலன்
கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு – கடன், தோஷம் நீங்கும்
வடக்கு – திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

விளக்கு துலக்கும் நாள்பலன்
* ஞாயிறு- கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
* திங்கள்- மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
* வியாழன்- குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
* சனி- வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

இவர்களுக்குரிய எண்ணெய்
விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி – பசுநெய்
குலதெய்வம் – வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் – நல்லெண்ணெய்
அம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்

நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு
கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.

தீப ஜோதியே நமோ நம!
ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப – தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் – கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் – விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் – பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.

ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 

 

விளக்கேற்றும் மாத பலன்கள்:




 
* சித்திரை மாதத்தில் ஏற்றினால் தான்யத்தைப் பெறுவர்.
* வைகாசி மாதத்தில் ஏற்றினால் தனத்தைப் பெறுவர்.
* ஆனி மாதத்தில் ஏற்றினால் கன்னியைப் பெறுவர்.
* ஆடி மாதத்தில் ஏற்றினால் ஆயுளைப் பெறுவர்.
* ஆவணி மாதத்தில் ஏற்றினால் புத்திரனைப் பெறுவர்.
* புரட்டாசி மாதத்தில் ஏற்றினால் பசுவைப் பெறுவர்.
* ஐப்பசி மாதத்தில் ஏற்றினால் அன்னத்தைப் பெறுவர்.
* மார்கழி மாதத்தில் ஏற்றினால் பிணி விலகும்.
* தை மாதத்தில் ஏற்றினால் வெற்றியைப் பெறுவர்.
* மாசி மாதத்தில் ஏற்றினால் பாவங்கள் போகும்.
* பங்குனி மாதத்தில் ஏற்றினால் தர்மசிந்தனை பெருகும். 
 
 
 
 

பிள்ளையார் பிடித்து வைக்கும் பொருட்களும், பலன்களும்

 

1.  மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
காரிய சித்தி தருவார்

2.  குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.

குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்

3.  புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்

4.  வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும். வளம் தருவார்

5.  உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.
எதிரிகளை விரட்டுவார்

6.  வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்

7.  விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

8.  சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

9.  சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

10.  வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

11.  வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

12.  சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

13.  பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.

14.  கல் விநாயகர்- வெற்றி தருவார்.

15.  புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்.

16.  மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.


 

blank