Sunday 7 February 2016

திருவிளக்கு வழிபாடு!

 
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே
காந்தி விளக்கே: காமாக்ஷித் தாயாரே

பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக்
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளக்கு
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க

மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷனங்கள் தாரும் அம்மா

பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா

சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்

பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்

கைவளையல் கலகலென்னக் கணியாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்

அன்னையே அருந்துணையே: அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:

இதனைப் பாடி முடித்தவுடன் பதினாறு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

திருவிளக்கு போற்றி!

ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
ஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
ஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி

ஓம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
ஓம் ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
ஓம் பிறர் வயமாகா பெரியோய் போற்றி
ஓம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
ஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றி

ஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
ஓம் மூவூலகுந் தொழ மூத்தோய் போற்றி
ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி

ஓம் இருள் கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே மாமணி போற்றி
ஓம் வளமை நல்கும் வல்லியே போற்றி
ஓம் அறம் வளர்நாயகி அம்மையே போற்றி
ஓம் மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி

ஓம் மண் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் தையல் நாயகித் தாயே போற்றி
ஓம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி

ஓம் சூளாமணியே சுடரொளி போற்றி
ஓம் இருள் ஒளித்து இன்பமும் ஈவோய் போற்றி
ஓம் அருள் மொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
ஓம் அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
ஓம் இல்லக விளக்காம் இறைவி போற்றி

ஓம் சுடரே விளக்காம் தூயாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்வினாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
ஓம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி

ஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
ஓம் தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
ஓம் ஜோதியே போற்றி சுடரே போற்றி
ஓம் ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
ஓம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி

ஓம் சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
ஓம் பலா காண் பல்லக விளக்கே போற்றி
ஓம் நல்லக நமசிவாய விளக்கே போற்றி
ஓம் உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
ஓம் உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி

ஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
ஓம் உள்ளத் தகளி விளக்கே போற்றி
ஓம் உயிரெணும் திரிமயக்கு விளக்கே போற்றி
ஓம் இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
ஓம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி

ஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
ஓம் ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
ஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
ஓம் கற்பனை கடந்த ஜோதி போற்றி

ஓம் கருணை உருவாம் விளக்கே போற்றி
ஓம் அற்புத கோல விளக்கே போற்றி
ஓம் அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
ஓம் சிற்பர வியோம விளக்கே போற்றி
ஓம் பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி

ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
ஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
ஓம் பெருகுஅருள் சுரக்கும் பெரும போற்றி
ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயகி போற்றி
ஓம் செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
ஓம் தீப மங்கள ஜோதி போற்றி
ஓம் மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி

ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி
ஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி
ஓம் ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஓம் ஆழியான் காணா அடியோய் போற்றி

ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
ஓம் அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி
ஓம் முந்தை வினையை முடிப்போய் போற்றி
ஓம் பொங்கும் கீர்த்தி பூரண போற்றி
ஓம் தன்னருள் சுரக்கும் தாயே போற்றி

ஓம் அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
ஓம் இருநில மக்கள் இறைவி போற்றி
ஓம் குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
ஓம் ஆறுதல் எமக்கிங் களிப்போய் போற்றி
ஓம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி

ஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
ஓம் எத்திக்குந் துதி ஏய்ந்தாய் போற்றி
ஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றி
ஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி
ஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி

ஓம் ஓங்காரத் துள்ளொழி விளக்கே போற்றி
ஓம் எல்லா உலகமும் ஆனாய் போற்றி
ஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் புகழ் சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
ஓம் செல்வாய செல்வம் தருவாய் போற்றி

ஓம் பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
ஓம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
ஓம் உயிர்களின் பசிப்பிணி ஒளித்தருள் போற்றி
ஓம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
ஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி

ஓம் விளகிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
ஓம் நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
ஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றி
ஓம் தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
ஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி

ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
ஓம் போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

திருவிளக்கு பூஜை

ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியாசக்தியே நம
ஓம் சொர்ண சொரூபியே நம

ஓம் ஜோதி லக்ஷ்மியே நம
ஓம் தீப லக்ஷ்மியே நம
ஓம் மஹா லக்ஷ்மியே நம
ஓம் தனலக்ஷ்மியே நம
ஓம் தான்யலக்ஷ்மியே நம

ஓம் தைர்யலக்ஷ்மியே நம
ஓம் வீரலக்ஷ்மியே நம
ஓம் விஜயலக்ஷ்மியே நம
ஓம் வித்யா லக்ஷ்மியே நம
ஓம் ஜெய லக்ஷ்மியே நம

ஓம் வரலக்ஷ்மியே நம
ஓம் கஜலக்ஷ்மியே நம
ஓம் காம வல்லியே நம
ஓம் காமாக்ஷி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷ்மியே நம

ஓம் ராஜலக்ஷ்மியே நம
ஓம் கிருஹலக்ஷ்மியே நம
ஓம் சித்த லக்ஷ்மியே நம
ஓம் சீதா லக்ஷ்மியே நம
ஓம் திரிபுரலக்ஷ்மியே நம

ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம

ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம

ஓம் எனும் சிற்பரத்தாளே நம
ஓம் அபாயம் அறுக்கும் அறுகோணத்தி நம
ஓம் சொற்பவனத்தி நம
ஓம் சூட்சும ரூபி நம

சரணம் சரணம் தாள் பணிந்தேன் உனை
பாவம் பொறுத்துப் பல பவுசும் தான் கொடுத்து
விக்கினங்கள் வராமல் வேலிபோல் காத்து
ஆதரித்து எனக்கு அருள்புரிவாயே!

புவன சுந்தரி போற்றி வணக்கம்
குரு வடிவாய் வந்து உபதேசங்கள்
கொடுத்து உன் திருவடி தந்து அருள்வாயே!

 
நல்ல பலன் காண என்ன விளக்கேற்றலாம்?

* நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும்.

  * நல்லெண்ணையில் விளக்கேற்றினால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

* விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் வியக்கும் அளவிற்கு புகழ் கூடும்.

* இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றினால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

* தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் தடைகள் அகலும்.

* பஞ்சினால் ஆன திரியில் தீபம் ஏற்றினால் வாழ்வில் நல்ல காரியங்கள் நடைபெறும்.

* தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் பாவங்கள் விலகும்.

* வாழைத்தண்டு நாரினால் உருவாக்கப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் வாரிசுகள் உருவாகும்.

திருவிளக்கு பூஜை விதிமுறை:

* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும்.
* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.

விளக்கு பூஜை மாத பலன்:

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.

சித்திரை – தானிய வளம் .
வைகாசி – செல்வச்செழிப்பு.
ஆனி – திருமண பாக்கியம்.
ஆடி – ஆயுள்பலம்.
ஆவணி – கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி – கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி – நோய் நீங்குதல்
கார்த்திகை – புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி – ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை – எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி – துன்பம் நீங்குதல்.
பங்குனி – ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்
.
கார்த்திகை பெண்களை போற்றும் நன்னாள்
நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார்.

சிவசக்தி தீபம்
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

திருவிளக்கில் தேவியர்
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

பழமையான விளக்கு திருவிழா
திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர்.
இந்த வழிபாட்டை கார்த்திகை விளக்கீடு என்று குறிப்பிடுகின்றன.

பொட்டு வைக்கும் முறை
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

மனநிம்மதி தரும் விளக்கு
வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன.

என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும் உண்டாகும்

எந்த திசை என்ன பலன்
கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு – கடன், தோஷம் நீங்கும்
வடக்கு – திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

விளக்கு துலக்கும் நாள்பலன்
* ஞாயிறு- கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
* திங்கள்- மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
* வியாழன்- குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
* சனி- வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

இவர்களுக்குரிய எண்ணெய்
விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி – பசுநெய்
குலதெய்வம் – வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் – நல்லெண்ணெய்
அம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்

நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு
கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.

தீப ஜோதியே நமோ நம!
ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப – தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் – கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் – விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் – பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.

ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 

 

No comments:

Post a Comment