Friday, 5 January 2018

பன்னீர் மரங்கள்!

வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

பன்னீர் மரங்கள், உயரமாக வளரும் இந்த மரங்கள், பரந்து விரிந்த கிளைகளுடன், கரும் பச்சை நிறத்தில் சற்றே அகன்ற இலைகளுடன், உருவத்தில் நாதஸ்வரத்தை ஒத்த, நீண்ட நறுமணமுடைய வெள்ளை நிறத்தில் எழிலுடன் விளங்கும் மலர்களுடன், காட்சியளிக்கும்.

தமிழகத்தில் காண்பதற்கு மிக அரிதாகி விட்ட பன்னீர் மரங்கள், இலை, பூக்கள், மற்றும் மரம், வேர் இவற்றின் மூலம், மனிதர்க்கு பலன்கள் தருபவை. பன்னீர் மரத்தை அதன் தோற்றத்தைக் கொண்டு அடையாளம் காண முடியாத மனிதர்கள் கூட, பன்னீர் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில், அவ்விடங்களில் பரவும், அவற்றின் வசீகர நறுமணத்தின் மூலம், வெகு எளிதாக, அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வெள்ளை நிறத்தில், அளவில் சற்றே நீண்ட மலர்கள், தரும் வாசனை, மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் அளிக்கும். பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர் மறை எண்ணங்கள் விலகி, மனதில் தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும். பன்னீர் மலர்கள் உடலுக்கும் மனதுக்கும் சக்தியை அளிக்கும்.

Reasons why we need to grow Indian cork tree and it's medicinal benefits
Image source

பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள்.

மேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், பன்னீர் மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம்.

தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, பன்னீர் மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

பன்னீர் மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் பன்னீர் மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.

பித்தம் தணியும் :
பன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும்.

இரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.

சுவாச பாதிப்புகள் நீங்கும் :
காய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர்.

பன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதியில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.

வயிற்றுப் போக்கு குணமாகும் :
பன்னீர் மரப் பட்டைகளை நீரிலிட்டு, மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் சுண்டியதும் பருகி வர, பேதி எனும் வயிற்றுக் கழிச்சல் பாதிப்பு குணமாகும்.

பன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது.

கும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.

பிரசாதம் :
அனைத்திலும் சிறப்பாக, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வழங்கப்படும் பன்னீர் இலை திருநீற்றுப் பிரசாதம், பக்தர்களிடையே, மிகுந்த பிரசித்தம், பக்தர்களின் மனக் குறைகள் மட்டுமல்லாமல், அவர்களின் உடல் குறைகளும் அந்த பன்னீர் இலை திருநீரை உட் கொள்ள நீங்கும், என்ற நம்பிக்கை முருக பக்தர்களுக்கு உண்டு.

அத்வைத தத்துவ போதனைகளை உலகுக்கு முதலில் அளித்து, மனிதர்களை நல்வழிப்படுத்திய ஆதி சங்கரர், ஒரு சமயம், இவரின் சமூக சீர்திருத்த கருத்துக்கு எதிர்ப்பாளர்களின் சதிகளின் பாதிப்பால், உடல் வியாதி உண்டாகி அதைப் போக்க, திருச்செந்தூர் முருகன் கோவிலில், திருமுருகனின் அதிகாலை விஸ்வரூப தரிசனம் காணப் பெற்று, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்று பிரசாதத்தின் மூலம், ஆதி சங்கரரின் உடல் பாதிப்புகள் நீங்கி, நலம் பெற்றார் என்பர்.

இன்றும் திருச்செந்தூர் முருகனின் அதி காலை விஸ்வரூப தரிசனத்தை, பெற வரும் பக்தர்களுக்கு எல்லாம், பன்னீர் இலை திருநீற்று பிரசாதமே, வழங்கப்பட்டு வருகிறது. முருகனுக்கு உகந்த மரமாக, பன்னீர் மரமும், பூஜிக்க ஏற்ற மலராகவும் பன்னீர் மலர்களும் விளங்குகின்றன.

இந்த பன்னீர் இலை திருநீற்றுப் பிரசாதத்தை, பக்தர்கள் வீடுகளில் வைத்துக் கொண்டு, வியாதிகள், மனத் துன்பங்கள் நேரும் சமயங்களில், முருகனை வேண்டி, நெற்றியில் இட்டுக் கொள்வர்.

தொன்மையான தருமை ஆதீனம் போன்ற சைவத் திரு மடங்களிலும், சன்னிதானங்கள் எனும் ஆதீனகர்த்தர்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் போது, திருநீற்றுப் பிரசாதங்களை,. பன்னீர் இலைகளிலேயே வைத்து வழங்குகின்றனர்.

கட்டி வீக்கம் :
பன்னீர் இலை காண்பதற்கு, முருகனின் வேல் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும், பன்னீர் இலை மருத்துவ வகையிலும், உடலுக்கு நன்மைகள் அளிக்கக்கூடியது. உடல் வியாதிகள் தீர, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்றை உட்கொண்டு, பன்னீர் இலைகளையும் உட்கொள்வர்.

ஆன்மீகத்தில் சிறந்த இலையாக விளங்கும் பன்னீர் இலைகள், சித்த மருத்துவத்தில், உடலில் உள்ள வீக்கங்களை போக்கக் கூடியவையாக, அறியப்படுகின்றன. வீக்கங்களின் மேல் பன்னீர் இலைகளை வைத்து கட்டி வர, வீக்கங்கள் அகலும்.

அம்பாளை விஷேசமாக துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி எனும் மூன்றுவிதமான திருக்கோலங்களில் வழிபடும் நவ ராத்திரி விழாநாட்களின் எட்டாவது நாளில், கல்வி கேள்விகளுக்கு அருள் பாலிக்கும் சரஸ்வதி தேவியை, தாமரைப்பூ கோலமிட்டு, ரோஜாப்பூ மற்றும் பன்னீர் இலைகளைக்கொண்ட மாலையைச் சூட்டி, இனிப்பு பாயசம் படைத்து வணங்க வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.







தமிழகத்தின் காசி எது தெரியுமா..?

எல்லா ஊர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றது என்றாலும், சில ஊர்களுக்கு மகான்களாலோ, அறிஞர்களாலோ மிகப்பெரிய சிறப்பு ஏற்பட்டு விடுகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாக விளங்குவது காஞ்சிபுரம்.

ஏனெனில், இங்கு தான் உலகாளும் ஈஸ்வரியான காமாட்சியும், நடமாடும் தெய்வமான காஞ்சி மகாப்பெரியவரும் அருளாட்சி செய்கின்றனர்.

நகரங்களில் மிகவும் சிறந்தது காஞ்சி என்பதை நகரேஷு காஞ்சி என்ற வடமொழிச் சொல் குறிப்பிடுகிறது.

பாரதத்தில், அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்துவார்), காசி, அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகை ஆகிய வடமாநில ஊர்களுடன் தென்னகத்தின் காஞ்சிபுரம் உட்பட ஏழு இடங்கள் மோட்சத்தை தரும் மோட்சபுரிகள் என அழைக்கப்படுகின்றன.

உலகம் அழியும் காலத்தில், ஒரு சில ஊர்கள் மட்டும் அழியாது என புராணங்கள் கூறுகின்றன.

அதில் சிவனால் பாதுகாக்க ப்படும் தலம் கும்பகோணம்.

அன்னை காமாட்சியால் பாதுகாக்கப்படும் தலம் காஞ்சிபுரம்.

எனவே இந்த ஊரை பிரளயஜித் க்ஷேத்ரம் என்பர். பி ரளயம் என்றால் உலக அழிவு. ஜித் என்றால் வெற்றி.

இங்கிருக்கும் காமாட்சி மூன்று தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள்.

ஸ்ரீதேவியான லட்சுமி, வாக்தேவியான சரஸ்வதி, சவுபாக்கிய தேவதையான அம்பாள் ஆகியோர் வாசம் செய்யும் ஊர் இது.

இவ்வூரை விட்டு, இவர்கள் ஒருநாளும் பிரிவதில்லை என்ற அந்தஸ்தைக் கொண்டது.

புண்ணிய பாரதத்தின் நாபி (தொப்புள்) ஸ்தலமாக விளங்குவது காஞ்சிபுரம்.

பிரம்மா செய்த வேள்வியின் போது, அவிர்பாகம் ஏற்ற திருமால், சங்கு சக்கர கதாதாரியாய் இவ்வூரில் தங்கி அருள்பாலிக்கிறார்.

இவ்வூரின் வரதராஜப் பெருமாள், உலகளந்த பெருமாள் கோயில்கள் பிரம்மாண்டமானவை.

இது பஞ்சபூத க்ஷேத்ரங்களில் பிருத்வி(நிலம்) தலமாகவும் விளங்குகிறது.

இங்குள்ள கைலாசநாதர் கோவில் கருவறையைச் சுற்றி வரும்போது, சொர்க்க பிரதட்சணம் என்ற வாசல் வழியாக வெளியே வருவர்.

இப்படி வெளியேறுபவர்களுக்கு மறுஜென்மம் ஏற்படாது என்பர்.

இங்குள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலுள்ள இஷ்டசித்தி தீர்த்த நீரைத் தெளித்தாலே போதும்.

தீர்க்காயுள் கிடைக்கும்.

தேனம்பாக்கத்திலுள்ள சிவாஸ்தானம் கோயிலில் மிகப்பெரிய விசேஷம்.

சிவபார்வதியின் நடுவில் முருகன் இ ருந்தால் சோமாஸ்கந்தர் என அழைப்போம்.

இங்கே முருகனுக்கு பதிலாக விநாயகர் நடுவில் இருக்கிறார்.

காஞ்சிப்பெரியவர் விருப்பமுடன் இங்கு தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த சிறப்பு பெற்ற இடம் இது.

கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்த பூமி இது.

அவரால் புகழப் பட்ட குமரக்கடவுள் அருளும் குமரக்கோட்டம் கோயில் இங்கு தான் உள்ளது.

காஞ்சிபுரத்தை சத்யவிரத க்ஷேத்ரம் என்றும் புகழ்வர்.

உண்மை குடியிருக்கும் ஊர் இது.

எந்த உண்மை! சாட்சாத் காமாட்சியே நம் மைக் காக்க வல்லவள் என்ற உண்மை!

இதுபோன்ற தலங்களில் செய்யும் தானம், பிராயச்சித்தம், அனுஷ்டிக்கும் விரதங்களுக்கு நூறு மடங்கு புண்ணியம் அதிகம்.

தமிழகத்தின் காசி என்றால் அது காஞ்சிபுரம் தான்.


*செங்கல்பட்டில் திருப்பதி!

*செங்கல்பட்டில் திருப்பதி. ஆம், ஆச்சரியம்... ஆனால் உண்மை.*

இனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.
நேராக செங்கல்பட்டிற்கு செல்லுங்கள், 50ம் எண் கொண்ட திருப்போரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில்இறங்குங்கள். 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில்
மிகப் பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை
நாட்டு திருத்தலமான இடைச்சுரநாதர் (சிவன்) ஆலயம் வரும். இவரையும்
அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள். நீங்கள் 7 அழகிய மலைகளைக் காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு
சிறிய கோயில்கள் தென்படும். இடது புறமாக ஒரு சாலை பிரியும், அதைப் பின்பற்றி சென்றீர்கள் என்றால்... 

உலகிலேயே மிக உயரமான 51 அடிஅற்புதமான தரிசனம் தரும் கருமாரி
அம்மனை சேவிக்கலாம். அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காண கண்கள் கோடி வேண்டும். மிகவும் விஸ்தாரமான இடத்தில், கோழியும், கெளதாரியும், வான்கோழியும் சுற்றி திரியும் இயற்கை எழில் கொஞ்சும் அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே
மறந்துவிடுவீர்கள்.

கருமாரி அன்னையின் பின்புறமே அவர் அண்ணன் பெருமாள் ஸ்ரீ
நிவாசனாக மிகப் பெரிய அளவில் வீற்றிருக்கிறார். திருப்பதி சென்று
சரியாக கடவுளை காண முடியாத ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே நம்மூரிலேயே, சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைரவர் கோயிலைப் பார்க்காலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம். 

கோயில் நுழைவு வாயிலில் பௌர்ணமி குகை கோயில் உள்ளது. ஆனால் இந்த குகை கோயிலில் இருக்கும் சிவனைக் காண நீங்கள் பௌர்ணமிக்கு 3 நாட்கள் அல்லது பூரட்டாதிக்கு 3 நாட்கள் முன்பே பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். சிவனை இங்கு பாதாளத்தில் காணலாம். 

*முக்கிய குறிப்பு - சிவனைப் பார்க்க வேண்டுமெனில் நீல நிற ஆடைஅணிந்து தான் செல்ல வேண்டும்.*

சிவனடியார்களே, சிவபக்தர்களே, தயவு செய்து இந்தக் கோயிலைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் சொல்லவும். இந்தப் பதிவை அதிகம் பகிரவும்.

வசதியுள்ளவர்கள் கார், பைக், வேன் போன்ற வாகனங்களில் வருகிறார்கள்.
வசதியில்லாதவர்கள் நடந்துதான் வரவேண்டும். இது ஒரு குக்கிராமம்
என்பதால் ஆட்டோவோ, ஷேர் ஆட்டோவோ இல்லை.

ஆள் அரவவமற்ற பகுதி என்பதால் காலையில் சென்று மதியமோ அல்லது
மாலை இருட்டுவதற்குள் திரும்பி வந்து விடுவது போல் உங்கள் பிரயாணம்
இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

சைவமும், வைணவமும் ஒன்றாக கலந்து ஒரு சுற்றுலா சென்ற மகிழ்ச்சியும் கிடைக்கும்...




நீங்கள் குபேரன் ஆகவேண்டுமா?

நம் அனைவருக்குமே எல்லா வளங்களும் பெற்ற நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆசை எல்லாம் உண்டு. அதற்காக பலவிதமான பூஜைகள், வழிபாடுகள், ஹோமங்கள் செய்கிறோம்.

இவ்வாறு செல்வ வளம் வேண்டிச் செய்யப்படும் வழிபாடுகள் எல்லாம் மகாலட்சுமியை மையமாக வைத்தே இயங்குகின்றன. அவள் அருளைப் பெறுவதற்காக மக்கள் ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படித்தும், மகாலட்சுமி அஷ்டகத்தை பாராயணம் செய்தும், அவளது திவ்ய நாமாவளியைச் சொல்லி அர்ச்சனைகள் செய்தும் அவளது கருணையை வேண்டி நிற்கின்றனர்.

பரந்து விரிந்த நம் பாரத நாட்டில் ஜகத் ஜனனி என்று அழைக்கப்படும். செல்வ திருமகள் வழிபாடானது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஆனால் நம் எல்லா இதிகாசப் பராணங்களிலும் அன்னையின் பிறப்பைப் பற்றி ஒன்றுபோல பேசுகின்றன. அதாவது அன்னை மகாலட்சுமி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமுதம் நாடிக் கடைந்தபோது வெளி வந்ததாகக் கூறுகின்றன.
உலகம் தோன்றிய நாள் முதல் செல்வமும் இருந்திருக்கிறது. செல்வம் என்பது வெறும் பணம், பொருள் என்பது மட்டுமல்ல; நல்ல மனது, உடல் ஆரோக்கியம், நிம்மதி, நன்மக்கட்பேறு என 16 பேறுகளும் சேர்ந்ததுதான்! 

ஆதி காலம் தொட்டே மகாலட்சுமி இருந்திருக்கிறாள். பின்னர் எப்படி பாற்கடலில் இருந்து வெளி வந்தாள்? என்றால் அது ஒரு கதை.
லட்சுமி பிருகு முனிவரின் மகளாக பார்கவி என்ற பெயரில் சொர்க்கத்தில் இருந்தாள். ஒரு முறை துர்வாச முனிவர் திருமாலால் மகிமை பெற்ற பாரிஜாத மலரோடு தேவேந்திரனைக் காண வந்தார். அந்த மலரை அவனுக்கு அளிக்கவும் செய்தார். அதன் பெருமை உணராத இந்திரன், அம்மலரை தன் யானையிடம் கொடுக்க, அது காலால் நசுக்கி அழித்துவிட்டது. இதனால் கோபம் கொண்ட துர்வாசர், “இந்திரனிடமிருந்து லட்சுமி கடாட்சம் விலகட்டும்’ என்று சபித்துவிட்டார்.

லட்சுமியின் அருட்பார்வை நீங்கியதால் இந்திரன் எல்லாவற்றையும் இழந்து விட்டான். அந்நேரம் மகாலட்சுமி சொர்க்கத்தில் இருக்கப் பிடிக்காமல் பாற்கடலைத் தன் இருப்பிடமாகக் கொண்டாள். பின்னர் பாற்கடலைக் கடையும்போது சந்தினர், ஐராவதம், உச்சைஸ்வரவஸ் என்ற குதிரை, காமதேனு இவைகளுடன் பாற்கடலிலிருந்து தோன்றினாள். கையில் மாலையுடன் அவதரித்த லட்சுமி, எல்லாவற்றிலும் நிகரில்லாதவராக விளங்கிய மகாவிஷ்ணுவைத் தன் பதியாக வரித்தாள். அப்போது அவளுடன் அலட்சுமி எனப்படும் மூத்த தேவியும் தோன்றினாள். மூத்த தேவி எல்லா வகையிலும் லட்சுமிக்கு நேர்மாறான குணம் கொண்டவள்.

மகாவிஷ்ணு மகாலட்சுமி திருமணம் ஏற்பாடானது. ஆனால், அக்கா இருக்க தங்கையான எனக்குத் திருமணமா? என்று லட்சுமி கேட்டாள். அலட்சுமியை ஏற்க யாருமே முன்வரவில்லை. அந்த நேரத்தில் உலக நன்மையை உத்தேசித்து உத்தாலக முனிவர் மூத்த தேவியைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். அவ்வாறே திருமணமும் நடந்தது. அதன் பின்னர் மகாவிஷ்ணு, மகாலட்சுமி தெய்வீகத் தம்பதிகளின் திருமணம் நடந்தது. அன்று முதல் மகாவிஷ்ணுவின் வல மார்பை தன் இருப்பிடமாகக் கொண்டாள் லட்சுமிதேவி.

திருமலைவையாவூரில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளின் இரு மார்புகளிலும் நிலவுகிறாள் லட்சுமி. அதனால் இங்கு வந்து வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யம் இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. திருப்பதியைப் போன்றே அமைக்கப்பட்டிருக்கும் இத்திருக்கோயில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு செல்லும் பாதையில் உள்ளது.

கார்த்திகை மாதம் நிறைந்த அமாவாசை நாளன்று பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினாள் எனப்புராணங்கள் கூறுகின்றன.

தேவி மகாத்மியத்தின் நடுப்பகுதி மகாலட்சுமியின் தோற்றம் பெருமை ஆகியவற்றை விளக்குகிறது.

பதினெட்டுக் கரங்களுடன் சிவந்த நிறத்தில் உடையணிந்து, அழகின் பிறப்பிடமாக ஞானத்தின் பிரதிநிதியாக அஷ்ட தச புஜ மகாலட்சுமியாகக் காட்சியளிக்கிறாள் அன்னை. ஒவ்வொரு கரமும் ஒரு பொருளைத் தாங்கி நிற்கிறது. இவளின் வாகனம் வெள்ளை ஆந்தை. அன்னை தாங்கி நிற்பவை வருமாறு:

1. ஜபமாலை, 2. கோடரி, 3. தண்டாயுதம், 4. அம்பு, 5. மின்னல், 6. தாமரை, 7. வில், 8. கலசம், 9. வளைதண்டம், 10. ஈட்டி, 11. வாள், 12. கேடயம், 13. சங்கு, 14. மணி, 15. மதுக்கிண்ணம், 16. திரிசூலம், 17. பாசக்கயிறு, 18. சுதர்சன சக்கரம்.
லட்சுமி என்ற சொல் லக்ஷ் என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இந்தச் சொல்லுக்கு நோக்கம், அடைதல், வழி எனப் பல பொருளுண்டு. அதே போல மகாலட்சுமியை வழிபடுவோரும் நல்ல நோக்கம், நன்னடத்தை, சோம்பலின்மை ஆகியவை உடையவர்களாக இருக்க வேண்டும். தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அத்தகையவர்களுக்கே இவளின் அருள் கிட்டும்.

மகாலட்சுமி பொதுவாக அஷ்ட லட்சுமி வடிவத்தில் வணங்கப்படுகிறாள். நிம்மதியான சந்தோஷமான வாழ்வு அமைய இவர்கள் அருள் தேவை. மகாலட்சுமியே தன்னை அஷ்ட சக்திகளாகப் பிரித்துக் கொண்டு அருள் பாலிக்கிறாள். அஷ்ட லட்சுமிகள் 1. ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான லட்சுமி, 6. விஜய லட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி. ஒவ்வொரு யுகத்திலும் அன்னை மகாலட்சுமி அஷ்ட லட்சுமி உருவம் தாங்குகிறாள். எனவே யுகங்களுக்கேற்ப இந்த அஷ்ட லட்சுமிகளின் பெயர்கள் மாறும் எனப் புராணங்கள் கூறுகின்றன.

லட்சுமிக்கு பல பெயர்கள் நிலவுகின்றன. தாமரையாள், அலைமகள், திருமகள், செந்திரு எனத் தமிழில் பெயர்கள் இருக்கின்றன என்றால் வடமொழியில் இவளுக்கு பெயர்கள் அநேகம்.

தமிழ்நாட்டில் லட்சுமி குபேர வழிபாடு பிரபலமாக விளங்குகிறது. அட்சய திரிதியை நாள் தங்கம் வாங்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அட்சய என்ற குறைவற்ற என்று பொருள். மகாபாரதத்தில் இந்த அட்சய திரிதியை நாளில்தான் கிருஷ்ணர் திரௌபதிக்கு குறையாத சேலை தந்தருளினார். அவர் சொன்ன வார்த்தை அட்சய. அதனால்தான் எடுக்க எடுக்கக் குறையாமல் புடவை வளர்ந்து கொண்டே போயிற்று.

மேற்கு வங்கத்தில் இந்த அட்சய திருதியை நாளை ஹல்கத்தா என்ற நாளாக லட்சுமி பூஜை செய்து கொண்டாடுகின்றனர். அன்று களிமண்ணால் செய்து லட்சுமி பொம்மைக்குப் பூஜைகள் செய்கிறார்கள். இந்நாளில் தான் அளப்பரிய செல்வத்துக்கு சொந்தக்காரனான குபேரன் தவமிருந்து மகாலட்சுமியிடமிருந்து நவ நிதிகளையும் பெற்றதாக லட்சுமி தந்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. கங்கை பூலோகத்துக்கு வந்த நாளும் இதுவே.
பொதுவாகவே நம் நாட்டில் வடபகுதிகளில் லட்சுமியோடு சேர்த்து பிள்ளையாரையும் வணங்குகிறார்கள். கணபதியின் தாள் பணிவது நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்க வழி செய்யும் என்பது இவர்கள் நம்பிக்கை. அதனால் லட்சுமி விக்ரகங்களை களி மண்ணில் செய்யும்போது தவறாமல் பிள்ளையார் சிலையையும் சேர்த்தே படைக்கிறார்கள்.

வரலட்சுமி பூஜையும் லட்சுமி வழிபாட்டில் ஒரு முக்கியமான பூஜைமுறை ஆகும். தமிழகத்திலும் ஆந்திராவிலும் இந்த விரதம் சிராவண மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அன்று மகாலட்சுமியை வீட்டுக்க அழைத்து, 16 வகையான உபசாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். பலவிதமான கொழுக்கட்டைகள் விவேதனம் செய்யப்படுகிறது. அன்று பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் பெருகவும், வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும் வேண்டுகின்றனர்.

நம் நாட்டின் வடக்குப் பகுதியில் தீபாவளியை ஒட்டி லட்சுமி பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்றும் அவள் அருள் வேண்டி தீபங்கள் ஏற்றப்படுகின்றன. தீபாவளியை ஒட்டி எப்படி லட்சுமி வழிபாடு வந்தது? அதற்கும் ஒரு புராணக் கதை இருக்கிறது. செல்வத் திருமகள் மகாபலிச் சக்ரவர்த்தியால் சிறை பிடிக்கப்பட்டாள். அதனால் அவன் நாடு நகரம் எல்லாம் செல்வம் வழிந்தோங்கியது. அவன் லட்சுமியை விடுதலை செய்ய எண்ணவேயில்லை. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அவனை அழித்த போது லட்சுமியும் தன் சிறையிலிருந்து மீண்டாள். அதனால் தான் தீபாவளியை ஒட்டிய பௌர்ணமியில் நம் நாட்டின் வட பகுதியில் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜையை ஒட்டிய பௌர்ணமி நாளில் இந்த பூஜை செய்யப்படுகிறது. அன்று சிறிதாக மஞ்சளாலோ அல்லது அரிசிமாவினாலோ லட்சுமியின் பாதம் வீட்டின் வாசலிலிருந்து பூஜை நடக்கும் இடம் வரை அழகாக வரையப்படுகிறது. விதவிதமான ரங்கோலிகள் போடப்படுகின்றன. அன்னைக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மந்திரங்கள் படிக்கப்படுகின்றன. அன்று அந்த பூஜை எந்தக் குறைவும் இன்றி நடந்துவிட்டால் வருடம் முழுவதும் தங்கள் இல்லத்தில் மங்களம் தங்கும் என்பது இவர்கள் நம்பிக்கை. அஸ்ஸாம் மாநிலத்தில் மறுநாள் நவானா என்ற அறுவடைத் திருநாள் தொடங்குவதால் அவர்கள் இந்தப் பூஜையை இன்னமும் சிறப்பாகப் பக்தி சிரத்தையோடு கொண்டாடுகிறார்கள்.

தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றுவதும், கோபூஜை செய்வதும், மகாலட்சுமிக்கு உகந்தவைகளாகும். இந்துக்களிடம் ஆலய வழிபாடு செல்வம் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதோடு லட்சுமி பூஜையும் குபேர வழிபாடும் சேர்ந்து கொண்டால் செல்வச் செழிப்பிற்குக் குறைவில்லை என்பது நம்பிக்கை. நம் இந்து மதத்தில் லட்சுமி தேவி வழிபாடு மிகவும் தொன்மையானது. வேதங்களிலும் லட்சுமி தேவியைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. பஞ்ச பாண்டவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் லட்சுமியின் அருளைப் பெற்றுத் தந்ததாக மகாபாரதம் கூறுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையில் ஒரு இடத்தில் கிட்டத்தட்ட 1400 வருடப் பழைய லட்சுமி தேவியின் சிலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே லட்சுமி வழிபாட்டின் தொன்மை நன்று விளங்கும்.

லட்சுமிக்கு அடுத்தபடி குபேரன் செலவத்துக்கு உரியவராகக் கருதப்படுகிறார். இவர் வடக்கு திசைக்கு உரிய திக்குப்பாலகன். அதேபோல உலகத்தில் இருக்கும் எல்லாப் புதையங்களுக்கும் இவர்தான் அதிபதி. பணம் மற்றும் அதைச் சார்ந்த நூல்களுக்கும் இவர் உரியவர் என விஷ்ணு தர்மோத்தர புராணம் கூறுகிறது. இவருக்கு ஒரு கண் மற்றும் மூன்று கால்கள் உள்ளதாகவும், கண்கள் மஞ்சள் நிறமாக இருப்பதாகவும், நிறைய நகைகள் அணிந்திருப்பதாகவும் அதே புராணம் கூறுகிறது. தமிழ்நாட்டில் மகாலட்சுமியோடு சேர்த்து குபேரனையும் பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. அதில் தவறில்லை என்றாலும் செல்வத்திற்கு அதி தேவதை மகாலட்சுமி மட்டும்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. அவள் அருளைப் பெற நாம் வீட்டில் லட்சுமி பூஜை செய்தும், ஹோமங்கள் செய்தும் மங்கல நாட்களில் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களைத் தானம் செய்தும் அவளை வேண்டுகிறோம்.

லட்சுமியின் அருளைப்பெற என்ன செய்ய வேண்டும்?

எப்போதும் உண்மையே பேசுபவர்கள், சுத்தமாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்துக் கொள்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்கமுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் என இவர்களிடம் லட்சுமி இஷ்டமாக வசிப்பாள் எனப் புராணங்கள் கூறுகின்றன.
லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் அன்னை இருக்கும் இடங்கள்தான். அதனால் இயற்கையைப் பேணி பாதுகாப்பதும் நம் கடமைதான். அனைத்து செல்வங்களையும் பெற்று குபேர வாழ்வு வாழ திருமகளை வழிபடுவோம்!



ம்ருத ஸஞ்ஜீவன கவசம்!

தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்!

தினமும் காலையில் எழுந்ததும் இந்த கவசத்தை பாராயணம் செய்பவர்கள் இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
இப்படி பலமுறை பாராயணம் செய்பவர்கள், எந்த வியாதியும் இன்றி மார்க்கண்டேயன் போல வாழ்வதோடு ‘அணிமா சித்தி’ போன்ற அஷ்ட சித்திகளையும் அடைவார்கள். 

தேவர்களுக்கு கிடைப்பதற்குக்கூட அரிதான இந்த கவசத்தைப் படித்தாலோ, பிறர் சொல்லக் கேட்டாலோ அல்லது பிறருக்கு எடுத்துரைத்தாலோ நீண்ட ஆயுள் நிச்சயம்!

மரணத்தை வென்ற ‘ம்ருத்யுஞ்ஜெயர்’ சிவபெருமானின் இந்த கவசமானது இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்கச் செய்யும் வல்லமையுடையது.

Sri கணேசாய நம
ஏவமாராத்ய கெளரீஷம் தேவம்
ம்ருத்யும்ஜயேஷ்வரம்!
ம்ருதஸஞ்ஜீவனம் நாம்னா கவசம் ப்ரஜபேத் ஸதா!

ஸாராத் ஸாரதரம் புண்யம் குஹ்யதரம்
சுபம்!
மஹாதேவஸ்ய கவசம் ம்ருதஸஞ்ஜீவ நாமகம்!

ஸமாஹிதமனோபூத்வா ச்ருணுஷ்வ கவசம் சுபம்!
ஊருத்வாஏதது திவ்யகவசம் ரஹஸ்யம் குரு
ஸர்வதா!

வராபய கரோயஜ்வா ஸர்வதே வ நிஷேவித:!
ம்ருத்யும்ஜயோ மஹாதேவ: ப்ராச்யாம் மாம் பாது ஸர்வதா!

ததான: சக்திம் அபயாம் த்ரிமுக: ஷட்புஜ: ப்ரபு:!
ஸதாசிவ: அக்னிரூபி மாம் ஆக்னேய்யாம் பாது ஸர்வதா!


அஷ்டாதச புஜோ பேதோ தண்டாபய கரோவிபு:!
யமரூபி மஹாதேவ: தட்சிணஸ்யாம் ஸதா அவது!

கட்கா அபய கரோ தீரோ ரசேஷாகண நிஷேவித:!
ரசேஷா ரூபி மஹாஷோ மாம் நைர்ருத்யாம்
ஸர்வதா அவது!

பாசாபய புஜ: ஸர்வ ரத்னாகர நிஷேவித:!
வருணாத்மா மஹாதேவ: பச்சிம் மே மாம்பாது
ஸதா அவது!

கதாபயஹர: ப்ராணநாயககா: ஸர்வதா கதி:!
வாயவ்யாம் மாருதாத்மா மாம் சங்கர:
பாது ஸர்வதா!

சங்காபய ஹரஸ்தோ மாம் நாயக: பரமேஸ்வர:!
ஸர்வாத்மான்தர திக்பாகே பாதுமாம் சங்கர: ப்ரபு:!

சூலாபயஹர: ஸர்வ வித்யானாம் அதிநாயக:!
ஈசானாத்மா ததா ஈசான்யாம் மாம் பாது
பரமேஸ்வர:!

ஊர்த்வபாகே ப்ருஹ்ரூபி விஷ்வாத்மா அத: ஸதா
அவது!
சிரோ மே சங்கர: பாது லலாடம் சந்திரசேகர:!

ப்ரூமத்யம் ஸர்வலோகேச: த்ரிநேத்ரோ லோசேன
அவது!
ப்ரூயுக்மம் கிரிச: பாது கர்ணே பாது மஹேச்வர!
நாஸிகாம் மே மஹோதேவ ஓஷ்டெள பாது
வ்ருஷத்வஜ:!
ஜிஹ்வாம் மே தட்சிணாமூர்த்தி: தந்தான் மே
கிரிஷோ அவது!

ம்ருத்யும்ஜயோ முகம் பாது கண்டம் மே
நாகபூஷண:!
பினாகி மத்கரோ பாது த்ரிசூலி ஹ்ருதயம் மம!

பஞ்சவக்த்ர: ஸ்தனெள பாது உதரம் ஜகதீஷ்வர:!
நாபிம் பாது விருபாசஷ: பார்ச்வெள மே பார்வதிபதி:!

கடித்வயம் கிரிஷோமே ப்ருஷ்டம் மே ப்ரமதாதி ப:!
குஹ்யம் மஹேஷ்வர: பாது மமோரு பாது பைரவ:!

ஜானுனீ மே ஜகத்தர்த்தா ஜங்கே மே ஜகதாம்பிகா!
பாதெள மே ஸததம் பாது லோகவந்த்ய: ஸ்தாசிவ:!

கிரீச: பாது மே பார்யாம் பவ: பாது ஸீதான் மம
ம்ருத்யும்ஜயோ: மம ஆயுஷ்யம் சித்தம் மே கணநா
யக:!

ஸர்வாங்கே ஹி மே ஸதா பாது காலகால:
ஸதாசிவ:!
யேததுதே கவசம் புண்யம் தேவதானாம்ச துர்லபம்!

ம்ருதஸஞ்ஜீவன நாம்னா மஹாதேவ்யேன
கீர்த்திதம்!
ஸஹஸ்ர ஆவர்தனம் ச அஸ்ய புரச்சரணமீரிதம்!

ய: படேச் ச்ருணுயான் நித்யம் ச்ராவயேத்
ஸீஸமாஹித:!
ஸ கால ம்ருத்யும் நிர்ஜித்ய ஸதா ஆயுஷ்யம்
ஸமஸ்னுதே:!

ஹஸ்தேனவா யதா ஸ்ப்ருஷ்ட்வா ம்ருதம் ஸஞ்ஜீவ
யத்யசெள!
ஆதயோ வ்யாதய: தஸ்ய ந பவந்தி கதாசன:!

காலம்ருத்யுமபி ப்ராப்த அஸெள ஜயதி ஸர்வதா!
அணிமாதி குணை: ஐஸ்வர்யம் லபதே
மானவோத்தம:!

சுத்தாரம்பே படித்வேதது அஷ்டாவிம்சதி வாரகம்!
யுத்தமத்யே ஸ்தித: ஸத்ரு: சத்ய: ஸர்வைர் ந த்ருச்
யதே!

ந ப்ருஹ்மாதினி ச அஸ்த்ராணி சஷயம் குர்வந்தி
தஸ்யவை!
விஜயம் லபதே தேவயுத்த மத்யேபி ஸர்வதா!

ப்ராதருத்தாய ஸததம் ய: படேத் கவசம் சுபம்!
அசஷய்யம் லபதே ஸெளக்யம் இஹ லோகே பரத்ரச!

ஸர்வவ்யாதி விநிர்முக்த: ஸர்வரோக விவர்ஜித:!
அஜராமரணோ பூத்வா ஸதா ஷோடச வார்ஷிக:!

விசரந்தி அகிலானு லோகானு ப்ராப்ய போகாம்ச
துர்லபான்!
தஸ்மாது இதம் மஹாகோப்யம் கவசம் ஸமுதாஹ்ரு தம்!

ம்ருதஸஞ்ஜீவன நாம்னா தேவதைரபி துர்லபம்!
ம்ருதஸஞ்ஜீவன கவசம் ஸம்பூர்ணம்!




கெர்போட்ட நிவர்த்தி!

No automatic alt text available.

படித்தேன் பகிர்கிறேன்..

தமிழர்கள்க ண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்

தினசரி காலண்டரில் " இன்று  *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?

நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது *கெர்போட்ட ஆரம்பம்* என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்.,

சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்

சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்

அதாவது

மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்

இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்

ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா??

எனவே

மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்

எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்

எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்

இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது

இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி( வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்

நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில்

கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று
மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள  டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்

புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!

ஆராய்ந்து உன் முன்நோரின் யுத்திகளை கையால் தமிழா!



Thursday, 4 January 2018

தேங்காய் !

தேங்காய்
***********

நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது.

இது சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில்.உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது .

தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும் .

கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது .

ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும் .

முச்சந்தியில் சிதறுகாய் சூறை இடும்போது அங்கே துர்சக்திகள் விரட்டியடிக்கப் படுகிறது .

ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்று கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும் .

வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஷுமி கடாட்சம் பெருகும் ,

மாந்திரீகத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் . இது சித்தர்கள் முறையாகும்.

முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் போன்ற பொருட்களில் செய்யும் தீய மந்திர வேலைகளுக்கு

நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் , மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம் ,

அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் , அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும் ,

குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும் ஞபக சக்திகூடும்.
வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும் .

வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகினி ஹஸ்த்தம் , திருவோணம் , நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்.
( அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்)

முன்னோர் தேங்காய் உடைக்கும் சாஸ்திரம் சாதாரண விஷயமில்லை.