Thursday, 28 June 2018

அஷ்டலக்ஷ்மீ காயத்ரி!!

அஷ்டலட்க்ஷமி காயத்ரி!!
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே!! விஷ்ணுபத்ந்யைச தீமஹி!!
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்!
ஆதிலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!
மஹாசக்தியை ச தீமஹி!!
தந்நோ ஆதிலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
தான்யலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!
மங்கள ரூபின்யை தீமஹி!!
தந்நோ தான்யலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
வீரலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!வீரசக்தையைச தீமஹி!!
தந்நோ தைர்யலக்ஷ்மீ: ப்ரசோதயாத்!
கஜலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!மஹாபலாயைச தீமஹி!!
தந்நோ கஜலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
சந்தானலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே!! வம்சவர்த்தநாயை தீமஹி!!
தந்நோ சந்தானலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!!
விஜயலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே!! விஜயபலதாயை தீமஹி!!
தந்நோ விஜயலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
வித்யாலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே சு!!கீர்த்தனாயை தீமஹி!!
தந்நோ வித்யாலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
தனலட்சுமி காயத்ரி!!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!
கனகதாராயை தீமஹி!!
தந்நோ தனலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!

கோ தானம்!

கோ மாதா சகல தெய்வங்களும் தன்னுள் அடங்கியதால் ஸர்வ தேவ ஸ்வரூபீ 

கோமாதா பூலோகம், பாதாலலோகம், ஸுவர்க்கம், பித்ருலோகம், கந்தர்வலோகம் , வைவஸ்வத பட்டினம், சத்ய லோகம் என எல்லா லோகத்தையும் கடக்க வல்லவள். நாம் செய்யும் பாவங்களை ஐந்து பிரிவாக விஷ்ணு புராணம், அக்னி புராணம், கருட புராணம் முதலிய புராணங்கள் சொல்கின்றன. அவை மஹா பாதகம், உப பாதகம், ஜாதிப்ரம்ஸ பாதகம்,அபாத்ரிகரண பாதகம் , மலினிகரண பாதகம். அனேகமாக எல்லா பாவங்களும் இந்த ஐந்து பிரிவுகளில் வந்துவிடும். இந்த பாவங்கள் ஏதோ ஒரு வழியில் கர்ம வினையாக ஜன்ம ஜன்மாந்திரமாக தொடர்கிறது. இதிலிருந்து விடுபட்டாலொழிய, ஜன்மம் கடையேற வழி திறப்பதில்லை. இந்த பாவங்கள் ச்ராவன ரிஷிகளால் சொல்லப்பட்டு சித்ரகுப்தனால் கணக்கில் எடுக்கப்பட்டு யமதர்மராஜனால் வைவஸ்வத பட்டினத்தில் அதற்கு உண்டான பலா பலன்களை நிர்ணயம் செய்யப்படுகின்றன. நமது அந்திம காலங்களில் இவை நிதர்சனமாக இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. நம்முடைய இறப்பிற்கு பிறகு நம் ஜீவன் 12 நாள் ப்ரேத ஸம்ஸ்காரத்திற்கு பிறகு 13 ஆம் நாள் தனது யாத்திரையை தொடங்குகிறது. 12 மாத காலம்( பித்ருக்களுக்கு1 நாள்)தொடர்ந்து வைவஸ்வத பட்டணம் அடையும். வழியில் வைதரிணி என்னும் நதி இருப்பதாகவும் அது புண்யாத்மாக்களுக்கு தெளிந்த நீரோடையாக கடப்பதற்கு எளிதாகவும், பாபாத்மாக்களுக்கு மலம், சீழ், அழுகிய ப்ரேதம், ரத்தமும் மாம்சமுடன் கொடிய ஜீவராசிகளுடன் கூடிய கடக்கமுடியாததாகவும் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது. வைதரிணியை கடக்கமுடியாத ஜீவன் தன் இலக்கை அடைய முடியாமல் பாதியில் தவிக்கும். மேல் சொன்ன ஐந்து வகை பாவத்திற்கும் முக்கியமாக இந்த ஒரு காரணத்துக்காகத்தான் கோதானமும் கோ சம்ரக்ஷணமும் ப்ராயசித்தமாக கருட , விஷ்ணு, அக்னி புராணங்களும் க்ருத்ய ஸுத்ரங்களும் சொல்கின்றன. நாம் செய்த கோதான பலனால் வைதரிணி நதிக்கரையில் கோமாதா தோன்றுவாள். அவளுடைய வாலை பிடித்துக்கொண்டால் நம்மை சுலபமாக கடத்திவிடுவாள் என்று கருட புராணம் சொல்கிறது.

பொதுவாக தானங்கள் ஏதோ ஒரு உலகியல் விஷயங்களை பூர்த்தி செய்வதாக இருக்கும். இருப்பவர் இல்லாதவர்க்கு தானம் கொடுப்பதால் , கொடுப்பவர் கைமேலாகவும் வாங்குபவர் நிறம் தாழ்த்தியோ உட்கார்ந்து கொண்டோ கையை தாழ்த்தி பெற்றுக்கொள்வது வழக்கம். கோமாதாவும், கண்ணிகையும் (ப்ரஜாபத்யத்தால்) உலகியல் விஷயத்துக்கு அல்லாமல் ஜீவன் கடையேர உறுதுணையாய் இருப்பதால் இந்த தானத்தை கொடுப்பவனும் பெறுபவனும் (காரணனும் கர்த்தாவும்) ஒரே மாதிரியான புண்யத்தை அடைகிறார்கள்.அதனாலயே இந்த கோதானமும் கண்ணிகா தானமும் குடுப்பவரும் வாங்குபவரும் சரிசமமாக நின்று கொண்டு செய்யவேண்டும் என்று சாஸ்திரங்கள் உறைக்கின்றது..தானங்களிலேயே சிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பலஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.
பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது. கோ தானத்தை பல காரணங்களுக்காக செய்கிறார்கள்.
ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக உக்ராந்தி கோ தானம் என்று செய்வதுண்டு.
இறந்த 12 ஆம் நாள் ஜீவன் வைதரினி நதியை கடக்க வேண்டி செய்ய படும் கோதானம் வைதரிணி கோதானம் என்று பெயர்.

பசுக்களை அதன் கன்றுடன் சேர்த்து நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடியசக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் உள்ள கோ சாலைகளுக்கு பசுவை தானமாகக் கொடுக்கலாம். தானம் குடுப்பதோடு அல்லாமல் அதனை பராமரிக்க குறைந்த பக்ஷம் ஒரு வருடத்திற்காவது (பித்ருக்களுக்கு ஒரு நாள்) உபகாரமும் கூடவே தரப்படவேண்டும். தானம் பெற்றவரும் வியாபார நோக்குடன் இல்லாமல் பசுவையும் கன்றையும் சம்ரக்ஷணம் செய்து பாலை தெய்வ கார்யங்களுக்கும், சத்கார்யங்களுக்கும் உபயோகபடுத்த வேண்டும்.இதை செய்யாத பக்ஷத்தில் தானம் பெருபவர் பாபத்தை சம்பாதிக்க நேரும்.
தானம் குடுப்பவர் பசுவையும் கன்றையும் அதனுடைய வாலை பிடுத்துக்கொண்டு உத்தேசித்த பலனை மனதில் சங்கல்பம் பண்ணிக்கொண்டு அதற்கு உண்டான மந்திரங்களுடன் வடக்கு நோக்கி பசுமாட்டின் வாலை அவர் கையில் கொடுத்து பத்னியுடன் தீர்த்தம் விட்டு தானம் செய்யவேணடும்
கோமாதாவின் தானத்தினாலும், சம்ரக்ஷனத்தினாலும் எல்லா நலன்களையும் பெற ப்ரார்த்திப்போம்.
கோ ஸ்துதி:---
நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்!

சங்கு நாராயண சஞ்ஜீவி!

சங்கு நாராயண சஞ்ஜீவி!
இந்த சங்கு நாராயண சஞ்ஜீவியும் சித்தர்கள் அருளிச் சென்ற 21 வகை சஞ்ஜீவிகளில் ஒன்றாகும், இந்த மூலிகையை தொடர்ந்து உண்டு வந்தால் சிரஞ்சீவியாய் வாழ முடியும் என்று சித்தர்கள் சொல்லிச் சென்றனர். இதன் இலை பார்பதற்கு சங்கு போன்று இருக்கும். இந்த இலைக்கு நடுவில் சங்கு போன்ற அமைப்பு காணப்படும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது சங்கு நாராயண சஞ்ஜீவி இது நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். சங்கு நாராயண சஞ்ஜீவி தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகள் சூழ்சிகளை முறியடிக்கும், எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும், தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும், குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும், மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் சங்கு நாராயண சஞ்ஜீவி லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் பெற்றுத்தரும்.
சிவப்பு நத்தைசூரி :
எத்தை சொன்னாலும் அத்தை செய்யும் நத்தை சூரி" என்பது சித்தர் வாக்கு, அதாவது நாம் இந்த நத்தை சூரியை அணிந்து கொண்டு என்ன பலனை நினைத்து வேண்டுகிறோமோ அந்த வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி நத்தை சூரிக்கு உண்டு. இந்த நத்தை சூரி நாம் வேண்டும் வரங்களை அருளும் அபூர்வ சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த நத்தை சூரியில் ஆறு வகைகள் இருந்தாலும் சித்தர்கள் பயன்படுத்தியது சிவப்பு நிற நத்தை சூரி, இந்த நத்தை சூரி கிடைப்பதற்கு அரிது என்றாலும் இந்த நத்தை சூரியே கேட்கும் வரங்களை அருளும், மற்ற வகை நத்தை சூரிக்கு இந்த சக்தி இல்லை. நத்தை சூரி சகல காரிய சித்தியை கொடுக்கும், லக்ஷ்மி கடாச்சத்தை உருவாக்கும், சகல ஜன வசியம், தொழில் வசியம், வியபார வசியம், நவ கிரக வசியம், தெய்வ வசியம் தரும். சகல காரியங்களிலும் வெற்றியை தேடி தரும்.
மஹாலக்ஷ்மி தன ஆகர்ஷண மூலிகை :
மஹாலக்ஷ்மி தன ஆகர்ஷண மூலிகை என்று சித்தர்களால் போற்றப்பட்டது வெள்ளை நிற பூக்களை உடைய விஷ்ணு கரந்தை ஆகும். நீல நிற பூக்களை கொண்ட விஷ்ணு கரந்தையை அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் வெள்ளை நிற மலர்களை கொண்ட விஷ்ணு கரந்தையை பார்பதற்கு மிகவும் அரிது, இதுவும் அறிய வகை சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த மூலிகை தன ஆகர்ஷணத்தை உண்டாக்கும். ஆகர்ஷணம் என்றால் அழைப்பு என்று பொருள், உலகில் உள்ள செல்வங்களை எல்லாம் ஈர்த்து நம்மிடம் தரும் வல்லமை கொண்டது இந்த மஹாலக்ஷ்மி தன ஆகர்ஷண மூலிகை என்னும் வெள்ளை விஷ்ணு கரந்தை. அஷ்ட லக்ஷ்மிகளை நம் இல்லத்தில் நிலைப்பெற வைக்கும் ஆற்றல் கொண்டது மஹாலக்ஷ்மி தன ஆகர்ஷண மூலிகை.
கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை
இந்த கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையும் அபூர்வ பலன்களை வாரி வழங்குவதாகும். மன்னர்கள் ஆண்ட காலங்களில் மன்னர்கள் தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க பயன் படுத்தியது இந்த கந்தர்வ ராஜ சஞ்சீவி மூலிகை. தம்முடைய கஜானாவில் தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினம், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் முதலான தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க, செல்வங்கள் மேலும் வந்து கஜானாவில் குவிய இந்த அபூர்வ கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையை தமது கஜானாவில் வைத்து குறிப்பிட்ட நாட்களில் பூஜைகளையும் அந்த மூலிகை வேருக்கு செய்து வந்தனர். கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை நம்மிடம் இருந்தால் நமது செல்வங்களை வற்றாமல் பாதுகாக்கும், செல்வங்களை நம் இல்லங்களில் குவிய வைக்கும்.

ரசமணி!

ரசமணி உடலில் அணிவதன் மூலம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும், உடலுக்கு களைப்பு என்பதே ஏற்படாது.
குடும்பம், வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சி வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.
உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தை ஒரே சீராகவும், இரத்தத்தை சுத்தி செய்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த ரசமணிக்கு உண்டு. இதனால் ரசமணி அணிந்தவர் நினைக்கும் அனைத்து நன்மைகளும் நடக்கும், மேலும் விந்து சக்தியை கெட்டி படுத்தும் தன்மை ரசமணிக்கு உண்டு, இதனால் ரசமணி அணிபவரின் சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.
பேய், பிசாசு , காத்து , கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.
செய்வினை கருப்பு , பில்லி , சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் ரசமணியை பயன்படும்.
ரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் தேசஸ் அதிகப்படுகிறது.
வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை ரசமணிக்கு நிச்சயம் உண்டு.

ரசமணி அணிபவரின் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும்.
உடல் வெப்பநிலையை சரிசமமாக பாதுகாக்கிறது, உடல் வெப்பத்தை குறைத்து, உடலை சரியான நிலையில் சீராக வைத்து பாதுகாக்கிறது.
உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு ரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

எந்த நோயும் உடலை அவ்வளவு சீக்கிரம் பாதிக்காது , உடல்நிலை கெட்டு போக வாய்ப்பே இல்லை, தனது உடல் நோய்க்காக மருத்துவ செலவுகள் அதிகம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு வர பிரசாதம்.
வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு , மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.
ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் ரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
மேலும் பல்வேறு பயன்களை ரசமணி அணிவதால் பெறமுடியும்....



சங்கு நாராயண சஞ்ஜீவி மூலிகை!

வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது சங்கு நாராயண சஞ்ஜீவி இது நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். 

சங்கு நாராயண சஞ்ஜீவி தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகள் சூழ்சிகளை முறியடிக்கும், எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும், தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும், 

குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும், மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் சங்கு நாராயண சஞ்ஜீவி லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் பெற்றுத்தரும்

---------------------------

சங்கு நாராயண சஞ்சீவி

இது பசியை தாங்கக் கூடியது. அதேசமயம் களைப்பு வராது.
இது கசப்பு புளிப்பு துவர்ப்பு என மூன்று
சுவை உடையது.
இதன் இவை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து காலை மாலை இருவேளை தேனில் கலந்து சாப்பிடும் முன்பு சாப்பிட்டு வர இருதய சம்பந்தப்பட்ட
இருதய பலவீனம் மாரடைப்பு இருதய ஓட்டை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து குணமாவது மட்டுமன்றி உடல் அதிக உற்சாகமாக இருக்கும்.
இம்மூலிகையின் தண்டுப் பகுதியில் இருக்கும் சதையை மட்டும் எடுத்து
சென்னை லயோலா கல்லூரி பூச்சியல் ஆய்வு நிறுவனம் முனைவர் திரு பாண்டிக்குமார் அவர்கள் ஆய்வு செய்து சர்க்கரை வியாதிக்கு நல்ல முறையில் பயன்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதன் சமூலத்தை நிழலில் உலர்த்தி ஒரு மண்டலம் சாப்பிட்டு வர காயகல்பம். இம்மூலிகையை சாப்பிட்டவர்களுக்கு த்
தான் இதன் அருமை தெரியும்.
படத்தை பாருங்கள் அதன் தண்டு பகுதியில் உள்ள சதையும் இரத்தம் போல் இருக்கும் அதுவும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு சுவை உடையது.
இம்மூலிகையை தனவசியம் என்று செல்வார்கள். அது எப்படியோ ஆனால் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர உடம்பு நல்ல அழகு பெற்று முக வசியமாகும்.

பித்ருக்களின் ஆசிகளைப் பெற!

நமது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகளைப் பெற:-
நமது வீட்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர்;வந்து,அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்;
நாம் உலகத்தில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் வருவதும்,வந்து நம்மை ஆசிர்வாதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது;
அப்படி வரும் போது அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்:
உரல்,
ஆட்டுக் கல்,
,செம்புப் பாத்திரம்,
நெல் மூட்டை,
அரிசிப்பானை,
நறுமணம் தரும் பூக்கள்,
மூங்கிலில் செய்யப்பட்டடபொருட்கள்,
சுரைக் குடுவை,
துளசி மாடம்,
பசு,
மிருதங்கம்,
மாங்கல்யச் சரடுகள்,
வெட்டி வேர்,
மெட்டி,
மாசிக்காய்,
சீந்தல் கொடி,
பிரண்டை,
கஸ்தூரி மஞ்சள்,
பஞ்சபாத்திரமும்
உத்திரிணியும்,
நமக்கு அதே போல நமது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைக்க வேண்டாமா?
x

உலக்கை,
முறம்,
மண்பானை,
சந்தனக் கல்,
சந்தனக் கட்டை,
அம்மி
இவைகளில் ஏதாவது ஐந்து பொருட்களாவது நமது வீட்டில் இருப்பது அவசியம்;
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வந்தாலே நமது அனைத்து கடன்/நோய்/எதிரி/வருமானப் பற்றாக்குறை முழுமையாக நீங்கிவிடும்;
மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் அல்லது ஆண்டுக்கு மூன்று முறையாவது (ஆடி அமாவசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை) அல்லது புரட்டாசி அமாவாசையிலாவது செய்து வர வேண்டும்;ீ
கூடவே மாதம் தோறும் குலதெய்வ வழிபாடு மற்றும் மாதம் தோறும் சிவராத்திரியன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதுமானது;
கால.மாற்றத்தில் அவர் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக மேலே கூறப்பட்ட பொருட்கள் நமது வீட்டில் இல்லாமல் போய்வி்ட்டது
எவர் வீட்டிலும் இவை அனைத்தும் இருக்கின்றனவோ அவர்களுக்கு அவர்களது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன;

Wednesday, 4 April 2018

தை பிறப்பின் சிறப்பு!

தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடத்தில் பார்க்கும் போது. .பூமியை இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள். அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவதுண்டு.

அதில் மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.

அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தக்‍ஷாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை.

அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடம் சிறந்த நட்சததிரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி.
அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால் உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். எனவே உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.

அந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள் சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில், சேர நாட்டில் எடுத்துக் கொண்டால் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். ஆனால் விளக்கை ஏற்றி ஜோதி என்று காண்பிப்பது ஒரு அடையாளமே, ஆனால் இயற்கையாக இருப்பதை அறிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர்.

மகரம் ஆன்மீக மாதம்!

அதனால் தான் பல சிறப்புகள் வாய்ந்த மகர மாதத்தை ஆன்மீகத்தை போற்றும் மாநிலமான கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை ஒன்றாம் தேதியன்று மாலை அந்த விண் மீன் தெரியும். அன்றைய தினம் கருடன் வட்டமிடும். அதுவும் மகர மாதம் துவங்குவதை குறிக்கும் மற்றொரு அறிகுறி. அந்த விண் மீனின் பெயர் மகர மீன்.

மகர யாழ் என்று ஒரு இசைக்கருவி உண்டு. மகர யாழ் மிக வலிமையானது. அதை மீட்டுவதற்கே மிகுந்த வலிமையும், ஞானமும் வேண்டும். எல்லோராலும் மீட்ட இயலாது. அதுபோன்று மகர மீன், அதுபோல் மகர ராசியில் பிறந்தவர்களை மகரத்தார் நகராழ்வார் என்பர். அவர்களுக்கு ஆளும் குணம் உண்டு.

மகர ராசியில் இடம்பெற்றுள்ள ராசிகள் மூன்று, மூன்றுமே சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள். உத்திராடம், திருவோணம், அவிட்டம். திருவோணம் வெங்கடாச்சலபதியின் நட்சத்திரம். திரு ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான். அதாவது திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகத்தின் எதாவது ஒரு மூலையையாவது ஆள்வார்கள் என்பதாகும்.

அவிட்ட நட்சத்திரத்திற்கு “தவிட்டுப் பானையும் தங்கமாகும்” என்ற பழமொழி உண்டு. மூன்று நட்சத்திரங்களுமே மிகச் சிறந்த நட்சத்திரங்கள் ஆகும்.

மகரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. மகரமே சிறந்த வீடு. அதனில் நெருப்பு நட்சத்திரமும் உண்டு, நீர் நட்சத்திரம் உண்டு.

உத்திராடமும், அவிட்டமும் நெருப்பு நட்சத்திரங்கள். திருவோணம் நீர் நட்சத்திரம். மகரத்தைப் பற்றி பழைய நூல்கள் கடல் வீடு என்கின்றன. மகரம் ஆழியாகும். ஆனால் ஒரு சில நூல்கள் நெருப்புத் தன்மை வாய்ந்த கடல் வீடு என்றும் கூறுகிறது. அதாவது வெந்நீர் ஊற்றுகள் அதிகம் நிறைந்தது என்று நாம் கொள்கிறோம். கடல் என்றாலே நீர்தான். ஆனால் குளிர்ச்சி அல்ல கொதிப்புதான் அதன் தன்மை. அதாவது இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவது இந்த ராசிக்கு பொருந்தும்.

மகர ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையை விட்டு மாறுபட்டு இருப்பார்கள். தாங்கள சார்ந்த நாடு, மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுவர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் வேறு மாதிரி செய்து பார்ப்பவர்கள். அதுதான் மகரத்தின் குணம்.
மகர மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். சூரியனுக்கும் இயக்கம் உண்டு, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும். ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடுவர். சிவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான் சூரியனும் எதையும் சுற்ற வேண்டாம். மற்ற கோள்கள்தான் சூரியனை சுற்றுகின்றன.

எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது.
சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் போன்று ஏதாவது பழமொழி உண்டா? இல்லையே. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பதுதானே பழமொழி. எல்லாமே தையில் தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள்.

தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல்.


பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம்.
பரிகாரத்திற்கும் தையே சிறந்தது!

ராஜ ராஜ சோழன் காலத்தில் அந்த மாதத்தில்தான் பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். பல நல்ல திட்டங்கள் அந்த மாதத்தில் துவக்கியுள்ளார்கள். நெற்களஞ்சியத்தில் இருந்து பழைய நெல்களை கொடுத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு புதிய நெல்களை கொள்முதல் செய்து கொள்வர்.

நெற்களஞ்சியத்தில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு தானதர்மம் செய்துவிடுவர். தான தர்மங்கள் செய்வதற்கும் உகந்தது தை மாதம்தான். இதை எல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்தில்தான் துவங்குகிறது.

தட்பவெப்ப நிலையில் பார்த்தாலும் தை மாதம் சிறந்த மாதகும். குளிரும் இருக்கும், வெயிலும் இருக்கும், எதுவும் கடுமையாக இருக்காது. அதுவே வெகு சிறப்பானது.

எனவே சூரியனின் உத்திராயணப் பயணம் துவங்கும் அந்த முதல் நாள் தமிழர் திருநாளாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்தல், புதுமனை புகுதல், புது வேலையில் சேர்வது, புதிய நிறுவனம் தொடங்குதல் போன்ற அத்தனையும் துவங்கினால் அது வெற்றி பெறும். நீண்ட காலம் நிலைக்கும்.

சூரியனை வணங்கும் நாளாகவும் தை பொங்கல் விளங்குகிறது. புது அரிசி - கை குத்தல் - அரிசி களைந்து பானையில் வைத்து சூரியனுக்கு நேர வைத்து பொங்கல் பொங்குவர்.

தை மாதத்தில்தான் சூரியப் பொங்கல் என்கிறோம். மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தையும் வழிபடுவோம். வள்ளுவனையும் வணங்குகிறோம். சித்திரையில் இதுபோன்று தமிழர்களைச் சார்ந்த எந்த விழாவும் இல்லை. வள்ளுவனையும் கொண்டாடுவதில்லை.

மகரம் சமாதான வீடு!

அதேபோன்று மகரம் சனியின் வீடு. சனியின் எதிர் கிரகம் செவ்வாய். சனிக்கு செவ்வாயும், சூரியனும் எதிர் கிரங்களாகும். ஆனால் செவ்வாய் சனியின் வீட்டில் உட்கார்ந்து உச்சம் அடைகிறது. தை மாதம் என்பது மகர மாதம். சனியின் வீட்டில் சூரியன் உட்காரும் போது உக்கிரம் அடைகிறது. அந்த இடத்தில் செவ்வாய் உச்சமடைய மகரம் அனுமதிக்கிறது. ஒன்றுக்கு ஒன்று விட்டுக் கொடுக்கிறது. சனி விட்டுக் கொடுத்து சூரியனின் உச்சத்தை ஏற்றுக் கொள்கிறது. சமாதான வீடாகவும் மகர வீடு விளங்குகிறது.

ஜாதிப்படி பிரித்தால் மகரம் சத்ரிய வீடு என்று சொல்லலாம். மகரத்தில்தான் குரு நீச்சமடைகிறார். சூழ்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை. சத்ரியர்கள் தங்களது திறமையை காண்பிக்கலாம். எல்லா தரப்பினருக்கும் மிக உயர்ந்த மாதமாகும்.