Thursday, 28 June 2018

தொழிலில் அபரிதமான வளர்ச்சி!

மாதம் தோறும் செய்து தொழிலில் அபரிதமான வளர்ச்சியையும்,செல்வ வளத்தையும் பெறுங்கள்........
சுயதொழில் செய்யும் ஒவ்வொருவரும் மகம் நட்சத்திரம் வரும் நாளன்று உங்கள் ஊரில் இருக்கும் ஆலயத்திற்குச் செல்லுங்கள்!
விநாயகர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
நாராயணர் கோவிலாக இருந்தாலும் சரி;
சிவாலயமாக இருந்தாலும் சரி;
நரசிம்மர் ஆலயமாக இருந்தாலும் சரி;
பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அம்பாள் ஆலயமாக இருந்தாலும் சரி;

அபிஷேகம் நடைபெறும் போது அந்த தண்ணீரை கோமுகம் வழியாக வெளியேறும் போது பிடிக்க வேண்டும்;

நமது அலுவலகத்தில் தெளிக்க வேண்டும்;மகம் நட்சத்திரம் முடிவதற்குள் தெளிக்க வேண்டும்;

ஒவ்வொரு மாதமும்  செய்து வருக; மகத்தான செல்வச் செழிப்பினை அடையுங்கள்!!!


புதாஷ்டமி விரதம்!

புதாஷ்டமி  அன்றைய தினம் விரதமிருந்து சிவன் கோவில் சென்று பைரவர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
சுக்ல பட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் அஷ்டமி "புதன்கிழமை" அன்று வந்தால் அன்றைய தினம் அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.
புதாஷ்டமி விரதம் பற்றி "சிவ மகா புராணத்தில்" சொல்லப்பட்டுள்ளன. அஷ்டமி விரதம் பற்றிய செய்திகளும் சிவ ஆகம புராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
 அஷ்டமி திதி பற்றி :-
அஷமி என்பது - எட்டாவது திதி. அதிலும், தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அஷ்டமி நாட்களில் தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலனைத் தரும்.
அஷ்டமியில் விரதம் இருப்பவர்கள் உடல் ஊனமில்லாமலும், செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றும் "சிவபுராணம்" கூறுகிறது.

புதாஷ்டமி விரதம் பிறந்த கதை :-
கவுசிகன் என்பவன் மிக விலையுயர்ந்த எருது ஒன்றினை வளர்த்து வந்தான். அந்த எருது ஒரு சமயம் காணாமல் போனது. காணாமல் போன எருதினைத் தேடி புறப்பட்டான் கவுசிகன். கவுசிகன் தனியாகச் செல்லாமல் தனது சகோதரியையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
இருவரும் சேர்ந்து பல நாட்கள் எருதினைத் தேடினார்கள். இருவரும் அன்ன ஆகாரம் ஏதும் இன்றி இருந்தார்கள். பசி இருவரையும் வாட்டியது.
இறுதியில் ஒரு குளத்தில் தேவலோகப் பெண்கள் ஜலக்ரீடை செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களிடம் சென்று தங்கள் இருவருக்கும் பசிப்பதாகவும், பசிக்கு உணவு வேண்டும் என்றும் கேட்டார்கள்.
அப்போது தேவலோகப் பெண்கள் விரதம் ஒன்றைப் பற்றிச் சொல்லி அந்த விரதத்தை மேற்கொண்டால் உங்களுக்கு உணவும் கிடைக்கும். மேலும், காணாமல் போன உங்களுடைய எருதும் கிடைக்கும் என்று கூறினார்கள்.
இவ்வாறு தேவலோகப் பெண்களால் கூறப்பட்ட விரதமே "புதாஷ்டமி விரதம்". அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியானது - புதன்கிழமை அன்று வந்தால் அந்த அஷ்டமி "புதாஷ்டமி" என்றழைக்கப்படும்.
அதன்படி இன்று வளர்பிறை அஷ்டமி மற்றும் புதன்கிழமை - இன்றைய தினம் புதாஷ்டமி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

விரதப் பலன்கள் :-
தேவலோகப் பெண்கள் இவ்வாறு கூறிய விரதத்தினைக் கேட்ட கவுசிகன், புதாஷ்டமி விரதம் இருந்தான். காணாமல் போன எருதான காளை கிடைத்தது. அவன் சகோதரிக்கும் நல்ல கணவன் கிடைத்தான். கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்ததால் அரசனானான்.
கவுசிகனின் சகோதரி பெயர் - விஜயை. அவளுக்குக் கிடைத்த கணவன் யமன்.
கவுசிகனுடைய பெற்றோர்கள் நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். கவுசிகன் புதாஷ்டமி விரதம் கடைப்பிடித்த பலனால் அவனுடைய பெற்றோர்களும் நரகவேதனையில் இருந்து விடுபட்டார்கள்.
இன்றைய தினம் செய்யக்கூடிய ஜபம் மற்றும் பூஜைகள் 10 மடங்கு நன்மை தரும்.
புதாஷ்டமி விரதம் இருந்தால் இழந்த பொருட்களைத் திரும்பப் பெறலாம். நன்மக்கட்பேறு உண்டாகும். மரணத்திற்குப் பின்பு பேரின்ப வாழ்வு நிச்சயம்.
இன்றைய தினம் அதிகாலை சிவன் திருக்கோவில் சென்று சிவபெருமானையும், அம்பிகையையும், பைரவரையும் வழிபட்டு விரதத்தைத் துவக்கலாம். அதேபோல மாலையும் சிவன் திருக்கோவில் சென்று வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்வது சிறந்தது.

புதாஷ்டமி வழிபாடுகள் :-
இன்றைய தினத்தில் எட்டு விதமான அக்னி வழிபாடுகளுடன் அஷ்ட லட்சுமிகளையும் வழிபட வேண்டும்.
எட்டு வழிபாடுகள் :-
1. விளக்கேற்றுதல்
2. ஹோமம்
3. அக்னிப் பூர்வமாகத் தயாராகும் அன்னத்தைத் தானமளித்தல்
4. ஊதுவத்தி தீபம்
5. கற்பூரத் தீபம்
6. சாம்பிராணித் தீபம்
7. பல வகையான தீபங்கள் (உலோகம், மண், எலுமிச்சை தீபம் - இவைகளை கோவிலில் இறைவனின் சன்னிதானத்தில் ஏற்ற வேண்டும்). வீட்டில் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, அகல் விளக்கு ஏற்றலாம்.
8. ஓடும் நதிகளில் மிதக்கும் இலை மடக்கு ஜல தீப பூஜை (நதிகளில் இலைகளின் மேல் அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்).
இவ்வாறு எட்டு வழிபாடுகள் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். அல்லது வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்து, கோவில் சென்று அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.

புதாஷ்டமி நாட்களில் பூமிக்கு வந்து அஷ்ட லக்ஷ்மிகளையும் வழிபடுபவர் "வித்யாரண்ய மகரிஷி". இன்றைய தினத்தில் மேலே கூறப்பட்டுள்ள வகையில் அன்னையை வழிபடுபவர்களுக்கு இந்த வித்யாரண்ய மஹரிஷியின் அருள் தாமாகவே நிறைந்து வந்து கிட்டும்.
சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்த திருநாள் "புதாஷ்டமி" தினமாகும்.
புதனும் - அஷ்டமியும் கூடும் நாட்களில் ஆலயங்களில் உள்ள அசோக மர தரிசனம் மற்றும் மரத்தை வலம் வருவது விசேஷம்.
அசோக மரத்திற்கு ஆறு வகையான சோக மூல காரணங்களை உணர்வித்து, பிராயச்சித்த - பரிகாரங்களைப் பெற்றுத்தரும் தெய்வீக சக்திகள் உண்டு.

புதாஷ்டமியான இன்று எட்டு முறை ஆலய தரிசனம், எட்டுப் பிரதட்சிணங்கள், எட்டு ஆலய தரிசனம், ஸ்ரீகிருஷ்ணரின் எட்டு விதமான தரிசனங்களை பெற முயற்சிக்கலாம்.
108 லிங்கங்களைக் கொண்ட ஒரே கல் வடிவ "நூற்றியெட்டு லிங்க தரிசனமான - கும்பகோணம் அருகேயுள்ள நூற்றியெட்டுச் சிவாலய வழிபாடு சிறப்பானதாகும்".
தன்னையும் அறியாமல் செய்த பிழை, கோபம், சூடான பேச்சு, கவனக்குறைவு, ஞாபகமறதி போன்றவற்றால் ஏற்படும் கஷ்ட - நஷ்டம், உறவு முறிவு, பணியில் பிரச்சினை போன்றவற்றிற்குத் தக்க பிராயச்சித்தம் "புதாஷ்டமி பூஜை" மிகப்பெரிய பலனாகும்.
ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அபிஷேகம், ஆராதனை, சந்தனக் காப்பு, பாத பூஜை, விஸ்வரூப பூஜை, தூபக் காப்பு மற்றும் காலை - மாலை இரண்டு வேளைகளிலும் கோ பூஜை போன்ற எட்டு பூஜைகளை நிகழ்த்தி வழிபாடு செய்யலாம்.
அமர்ந்த கோலத்தில் அருளும் காஞ்சிபுரம் - ஸ்ரீபாண்டவத்தூதப் பெருமாளை கிருஷ்ண மூர்த்தியாக ஆராதனை செய்வது விசேஷமானது.
குறைந்த படிப்பு எனத் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் முன்னுக்கு வர இருக்க வேண்டிய விரதம் - புதாஷ்டமி விரதம்.
அதிகப் படிப்பு படித்தும் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் - வேதனை தீர்ந்து நிம்மதி பிறக்கும் நன்னாள் "புதாஷ்டமி" தினமே.

சிறப்பு :-
காலத்தால், பிரளயத்தால் அழிவுறா ஆயக் கலைகள் பெற வேண்டி ஸ்ரீ சரஸ்வதி தேவி - ஸ்ரீ காலபைரவரை வணங்கி, ஸ்ரீ ஹயக்ரீவரிடம் குருகுல வாசல் பூண்ட நாள் புதாஷ்டமி.
தினமும் வாழ்வில் ஏற்படும் பயம், அச்சம் போன்றவை தெளிவதுடன், எதிர்காலத்தில் நம்முடைய சந்ததியை காத்து ரட்சித்துக் கொள்வதற்கான இந்நாளில் "அதி அற்புதமான மகா வித்யா பைரவ சக்திகள்" கிட்டும்.
ஸ்ரீ கால பைரவருக்கு புனுகு, கஸ்தூரி கலந்த சந்தனக்காப்பு இட்டு முந்திரி மாலை சார்த்தி, சிவராத்திரி போல ஆறு அல்லது எட்டு கால வழிபாடுகளை நிகழ்த்தலாம்.
இன்றைய தினத்தை "காலத்தைப் பற்றிய நுண்ணிய அறிவைத் தரும் தினமாகப் போற்றுகிறார்கள் சித்தர்கள்".
காலத்தின் சக்தியையும், மகத்துவத்தையும் உணர்வதற்குக் கால பைரவர் பூஜை மிக மிக முக்கியமானதாகும்.
புதாஷ்டமியின் சிறப்பு என்னவென்றால் "எட்டுவிதமான சௌகார சக்திகள் நிறைந்துள்ள நல்ல நாளே - புதன்கிழமையாக அமைகிறது". புதன் கிரகத்திற்கு உரித்தான எண் "ஐந்து". இதில் அஷ்டமியும் சேர்வதால் இன்னும் கூடுதலான கால சக்திகள் - வித்யா சக்திகளுடன் சேர்ந்து பல நற்பலன்களை வாரி வழங்குகின்றன.
இன்றைய தினம் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்து, திருத்தலம் சென்று, கால பைரவரையும் வழிபட்டு, விரதம் இருந்தால் மகத்தான - வளம் நிறைந்த வாழ்வு அமையும்.


இஷ்டி காலம்!

இஷ்டி காலம் என்றால் என்ன? இதோ விளக்கம்...
நாட்காட்டியில் இஷ்டி காலம் என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அது என்ன 'இஷ்டி' என்று சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதோ அவர்களுக்கான விளக்கம்...
இஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதிப்பகுதியாகும். அதாவது, நான்காம் பாகமாகும். பிரதமை திதியின் முதல் மூன்று பாகமும்கூடிய காலம் இஷ்டி. நேற்று தை அமாவாசை முடிந்ததால், இன்று இஷ்டி காலமாக உள்ளது. இந்த நாளில் நாம் பூஜைகளை மேற்கொண்டால், பூஜைக்குரிய தேவர்கள் அருகிலேயே வந்து சூட்சும ரூபமாக நின்று வணக்கங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஜோதிட, ஆன்மிக நூல்கள் சொல்கின்றன,

அகிலாண்டேஸ்வரி அஷ்டோத்திர_சத_நாமாவளி!

ஓம் கல்யாண்யை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் த்ரிபுரஸுந்தர்யை நம:
ஓம் ஸுந்தர்யை நம:
ஓம் ஸெளபாக்யவத்யை நம:
ஓம் க்லீங்கார்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:
ஓம் ஏகாக்ஷர்யை நம:
ஓம் ஸ்கந்த ஜநந்யை நம:
ஓம் பராபஞ்சதசாக்ஷர்யை நம:
ஓம் த்ரைலோக்ய மோஹனாதீசாயை நம:
ஓம் ஸர்வாசாபூரவல்லபாயை நம:
ஓம் ஸர்வ ஸம்÷க்ஷõபணா தீசாயை நம:
ஓம் ஸர்வ ஸெளபாக்யதேச்வர்யை நம:
ஓம் ஸர்வார்த்த ஸாதகாதீசாயை நம:
ஓம் ஸர்வ ரக்ஷõகரா தீசாயை நம:
ஓம் ஸர்வரோக ஹராதீசாயை நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய காயை நம:
ஓம் ஸர்வாநந்த மயாதீசாயை நம:
ஓம் யோகிநீசக்ரநாயிகாயை நம:
ஓம் பக்தானுக்ரக்தாயை நம:
ஓம் ரக்தாங்க்யை நம:
ஓம் சங்கரார்த்தசரீரிண்யை நம:
ஓம் புஷ்பபாணேக்ஷúதநு: பாசாங்குசகரோஜ்வலாயை நம:
ஓம் ஸச்சிதானந்தல ஹர்யை நம:
ஓம் ஸ்ரீ வித்யாயை நம:
ஓம் த்ரிபுரேச்வர்யை நம:
ஓம் ஸர்வ ஸம்÷க்ஷõபிண்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் அநங்க குஸுமாயை நம:
ஓம் புவனேச்வர்யை நம:
ஓம் குப்தாயை நம:
ஓம் குப்ததராயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் மதத்ரவாயை நம:
ஓம் மோஹின்யை நம:
ஓம் பரமாநந்தாயை நம:
ஓம் காமேச்வர்யை நம:
ஓம் தருண்யை நம:
ஓம் கலாயை நம:
ஓம் கலாவத்யை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் பத்மராக கிரீடின்யை நம:
ஓம் ரக்த வஸ்த்ராயை நம:
ஓம் ரக்த பூஷாயை நம:
ஓம் ரக்த கந்தானு லேபனாயை நம:
ஓம் ஸெளகந்திக மிலத்வேண்யை நம:
ஓம் மந்த்ரிண்யை நம:
ஓம் மந்த்ர ரூபிண்யை நம:
ஓம் தத்வத்ரயாயை நம:
ஓம் தத்வமய்யை நம:
ஓம் ஸித்தாந்த புரவாஸிந்யை நம:
ஓம் ஸ்ரீமத்யை நம:
ஓம் மஹா தேவ்யை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் பரதேவதாயை நம:
ஓம் கைவல்யரேகாவசின்யை நம:
ஓம் ஸர்வேச்வர்யை நம:
ஓம் ஸர்வமாத்ருகாயை நம:
ஓம் விஷ்ணு ஸ்வஸ்ரே நம:
ஓம் வேதமய்யை நம:
ஓம் ஸர்வ ஸம்பத் ப்ரதாயிகாயை நம:
ஓம் கிங்கரீபூதகீர்வாண்யை நம:
ஓம் ஸுதாபாநவிநோதின்யை நம:
ஓம் ஆதாரவீதீ பதிகாயை நம:
ஓம் ஸ்வாதிஷ்டான ஸமாச்ரயாயை நம:
ஓம் மணிபூர ஸமாஸீனாயை நம:
ஓம் அநாஹதநிவாஸின்யை நம:
ஓம் ஆக்ஞாபத்ம ஸமாஸீனாயை நம:
ஓம் வீசுத்தி ஸ்தல ஸம்ச்ரயாயை நம:
ஓம் அஷ்டத்ரிம்சத் கலாமூர்த்யை நம:
ஓம் ஸுஷும்னாத்வார மத்யகாயை நம:
ஓம் யோகீச்வர மநோத்யேயாயை நம:
ஓம் பரப்ரஹ்ம வரூபிண்யை நம:
ஓம் சதுர் புஜாயை நம:
ஓம் சந்த்ர சூடாயை நம:
ஓம் புராணாகமரூபிண்யை நம:
ஓம் கார்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் பஞ்சப்ரணவரூபிண்யை நம:
ஓம் பூதேச்வர்யை நம:
ஓம் பஞ்சாசத்வர்ண ரூபிண்யை நம:
ஓம் ÷ஷாடாந்யாஸ மஹா பூஷாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் தசமாத்ருகாயை நம:
ஓம் அருணாயை நம:
ஓம் ஆதாரசக்த்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் த்ரிபுர பைரவ்யை நம:
ஓம் மஹாபூஜா ஸமாலோலாயை நம:
ஓம் ரஹோ யஜ்ஞ ஸ்வரூபிண்யை நம:
ஓம் த்ரிகோண மத்ய நிலயாயை நம:
ஓம் ஷட்கோணபுரவாஸின்யை நம:
ஓம் வஸுகோணபுரவா ஸின்யை நம:
ஓம் தசார த்வந்த்வ வாஸின்யை நம:
ஓம் சதுர்தசாந்த கோணஸ்தாயை நம:
ஓம் வஸுபத்ம நிவாஸின்யை நம:
ஓம் ஸ்வராப்ஜ பத்ர நிலயாயை நம:
ஓம் வ்ருத்தத்ரய நிவாஸிந்யை நம:
ஓம் ஸ்ரீமத் பீஜகுசஸ்தந்யை நம:
ஓம் அகிலாண்டேஸ்வரியே நம:
ஓம் ஸ்ரீமஜே நம:
ஓம் ஸ்ரீராஜராஜேச்வர்யை நம:
ஓம் அகிலாண்டகோடிப்ரும் ஹாண்டஜனன்யை நம:

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும்,அதன் பெருமைகளும்!

இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர்,ஈசனுடைய திருப்பாதத்திற்கு அரிய அலங்காரம் செய்ய வேண்டும்;அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வரவேண்டும்;அப்படி வலம் வரும் போது,நாதஸ்வரம்,சங்கு,உடுக்கை,பேரிகை,துந்துபி,மத்தளம் மற்றும் திருக்கையிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்சவாத்தியங்கள் இசைக்க வேண்டும்;இவைகளை யார் ஒருவர் சம்பளம் வாங்காமல் ஒரு பிறவி முழுவதும் இசைக்கின்றார்களோ,அவர்களே சிவலோகம் என்று அழைக்கப்படும் திருக்கையிலாயத்தில் இசைக்கும் கணங்களாக பொறுப்பேற்கின்றார்கள்;
ஒவ்வொரு தினமும் ஒரு சில நல்ல செயல்களையாவது செய்தோம் என்ற மன நிறைவு உடன் காலதேவனாகிய மஹாகால பைரவப் பெருமானுக்கு நாம் செய்யும் முறையான வழிபாட்டு தின நிறைவுதான் இந்த பள்ளியறை பூஜை!
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும் போது,சிவபுராணம்,பதிகங்கள் பாடி வரவேண்டும்;இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்;
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ,அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும்,பல மாடிக்கட்டிடங்களுக்குச் சொந்தக் காரர்களாகவும்,பல ஆயிரம்கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள்;
பள்ளியறை பூஜைக்கு பூக்கள்,பூச்சரங்கள்,நிவேதனம் செய்து தருபவர்கள் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கக் காரணமாக இருக்கும்;
பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு அருமையான வாரிசுகள் இப்பிறவியிலேயே கிட்டும்;
பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய்,மின் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்;
திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து,அதில் கலந்து கொள்பவர்கள் அதன் பிறகு தமது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்;
ஆயில்யம்,கேட்டை,மூலம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும்;எனவே,இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;ஆயில்யம் நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் வரும் நாளன்று தமது வருமானத்தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாக தந்து,அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;
அரசு மற்றும் தனியார்த் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன் கிழமையன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு,கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்;
அனைத்துவிதமான சித்திகளும் கிடைக்க பலர் பல பிறவிகளாக முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள்;அவர்கள் ஒருவருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;மேலும் அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கித்தரவேண்டும்;கலந்து கொண்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்;
கணவனுடைய நோய் பல காலமாக இருந்தால் அது தீர,அவருடைய மனைவியானவர், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையை சிறப்பிக்க தம்மால் ஆன முயற்சியில் ஈடுபடவேண்டும்;
அற்புதமான வாரிசு மகனாகவோ அல்லது மகளாகவோ பெற விரும்பினால் சனிக்கிழமையன்று பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வதோடு,அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி அன்பளிப்பாகத் தரவேண்டும்;
பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும்,காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும்,அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள்,பால்,நைவேத்தியம் போன்றவைகளை வாங்கித் தரவேண்டும்;(ஒரு போதும் பாக்கெட் பால் வாங்கித் தரக் கூடாது என்பதை நினைவிற் கொள்க)
பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் தரும் வேலையில் சேருவர்;அவர்களது மகனும்,மகளும் மற்றும் பேரன் பேத்திகள் அதிக சம்பளம் தரும் வேலையில் இருப்பார்கள்;குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட பலன் கிட்டும்;
பள்ளியறை பூஜைக்கு பால்,நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும்,பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர்,ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும்,மறுபிறவியிலும் பிறப்பார்கள்;
பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு,அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டு வந்தால்,சுகப்பிரசவம் ஏற்படும்;நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும்;குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும்;இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால்,அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாகுவற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும்;
பள்ளியறை பூஜையிலும்,அதன் நிறைவுப்பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவார்கள்;பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்;
பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக்காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது,
அகத்திய மாமுனிகள் அவர் தமது நூல்களில்  பித்தத்தால் வரும் உடல் எரிச்சலை தணிக்க மிக சுலபமான ஒரு மார்க்கத்தை காட்டி இருக்கிறார். அதை உங்களுக்கு சொன்னால் நீங்களே அதை வீட்டில் இருந்தபடியே செய்து பூரண குணம் அடையலாம்
கொத்தமல்லி விதை அதாவது தனியா 200 கிராம் சீனா கற்கண்டு 400 கிராம் சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம் காட்டு சீரகம் சன்ன லவங்க பட்டை, கருவாய் பட்டை போன்றவைகள் தலைக்கு 30 கிராம் எடுத்து கொள்ளுங்கள் இவற்றில் சீனா கற்கண்டு தவிர மற்றவற்றை உரலில் போட்டு இடித்து கதர் துணியில் சலித்து கொள்ளுங்கள் பிறகு சீனா கற்கண்டையும் பொடி செய்து முதலில் இடித்த மூலிகை பொருள்களோடு கலந்து வைத்து கொள்ளுங்கள் பிறகு காலை மாலை இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு வென்னீர் குடித்து வாருங்கள் அதிகபட்சமாக 90 நாட்களில் உங்கள் வியாதி முற்றிலும் விலகி விடும். இது வைத்திய முறை மட்டுமல்ல ஜோதிட ரீதியாக குறைவாக இருக்கும் கிரகத்தின் ஆகர்சனத்தை அதிகபடுத்தி தரும் ரகசிய முறையும் ஆகும்.

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!

அனுதினமும் தேவி சக்தியை வழிபடும்அம்பாள் பக்தரா நீங்கள்?

1. வில்வ இலைகளால் தேவியைப் பூஜிப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சந்தோஷமாக இருப்பார்கள்.
2. கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து சக்திக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.
3. ஸ்ரீலட்சுமிதேவிக்கும், ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், நித்தியத்துவம் கிடைக்கும்; அழியா புகழ் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.
4. ரத்தின ஆபரணங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவன் குபேரன் ஆவான். பூக்களால் தேவியை பூஜிப்பவருக்கு கயிலாய வாசம் கிடைக்கும்.

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!
நினைத்தது நிறைவேறும்...!
அம்பாளுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபடுவதால், நினைத்தகாரியம் உடனே நிறைவேறும்.
அதேபோல், அம்மனுக்கு வேப்பிலை மாலை அணிவித்து வழிபட்டால், நீண்டநாள் குணம் ஆகாமல் வாட்டும் பிணிகள், வெகுசீக்கிரம் அகலும்.
சகல செல்வங்களும் ஸித்திக்கும்...!
சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு.
அதாவது
1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்..
இந்த ஏழு வகைப் பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
கல்வி கலைகளில் சிறக்க...!
குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.
அதேபோன்று, சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதகே சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி
நமோஸ்துதே.
நன்றி: ஆன்மீகம்\\\