Thursday 28 June 2018

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!

அனுதினமும் தேவி சக்தியை வழிபடும்அம்பாள் பக்தரா நீங்கள்?

1. வில்வ இலைகளால் தேவியைப் பூஜிப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சந்தோஷமாக இருப்பார்கள்.
2. கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து சக்திக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.
3. ஸ்ரீலட்சுமிதேவிக்கும், ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், நித்தியத்துவம் கிடைக்கும்; அழியா புகழ் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.
4. ரத்தின ஆபரணங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவன் குபேரன் ஆவான். பூக்களால் தேவியை பூஜிப்பவருக்கு கயிலாய வாசம் கிடைக்கும்.

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!
நினைத்தது நிறைவேறும்...!
அம்பாளுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபடுவதால், நினைத்தகாரியம் உடனே நிறைவேறும்.
அதேபோல், அம்மனுக்கு வேப்பிலை மாலை அணிவித்து வழிபட்டால், நீண்டநாள் குணம் ஆகாமல் வாட்டும் பிணிகள், வெகுசீக்கிரம் அகலும்.
சகல செல்வங்களும் ஸித்திக்கும்...!
சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு.
அதாவது
1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்..
இந்த ஏழு வகைப் பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
கல்வி கலைகளில் சிறக்க...!
குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.
அதேபோன்று, சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதகே சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி
நமோஸ்துதே.
நன்றி: ஆன்மீகம்\\\


No comments:

Post a Comment