Monday, 27 February 2017

நட்சத்திர அதிசயங்கள்! கார்த்திகை!

கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!

மாத்ரி மண்டல நட்சத்திரம்!
நானூறு நட்சத்திரங்கள் கொண்ட மாத்ரி மண்டலத்தில் தீ ஜுவாலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஆறு நட்சத்திரங்களான அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி,மேகயந்தி,வர்ஷயந்தி ஆகியவை மிக முக்கியமானவை. இவையே கார்த்திகை மாந்தர். கந்தனை வளர்த்தவர்கள்!
மாத்ரி மண்டலம் என்ற பெயரே மாதர்கள் கொண்ட கூட்டத் தொகுதி என்று குறிப்பிடப்படுவது வியப்பிற்குரியது! சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்த முருகனை கார்த்திகை மாந்தர் அறுவரும் தனித் தனியே ஆறு உருவங்களில் சீராட்டி மகிழ்வித்ததால் அவன் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றான் என்று புராணம் கூறுவதை அனைவரும் அறிவோம்!
ரிஷப ராசியில் கார்த்திகை நம் தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகைக்குத் தமிழர் கார்த்திகை மாதம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.தமிழரின் தெய்வம் முருகன் என்பதாலும் கார்த்திகை தமிழர் மனதில் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது!
கத்தி போல உள்ளதால் கார்த்திகை என்ற பெயரை இந்த நட்சத்திரம் பெற்றது. ப்ளையாடீஸ் என்று மேலை நாடுகளில் புகழ் பெற்றுள்ள இந்த கார்த்திகை நட்சத்திரம் அக்னி,தீபம் என  ஒளி சம்பந்தமான எல்லாவற்றுடனும் புராணத்திலும் விஞ்ஞானத்திலும் தொடர்பு படுத்தப்படும் ஒரு அபூர்வ நட்சத்திரம்!
அறிவியல் வியக்கும் அதி உஷ்ண பகுலா!
ஒரு வருடத்தின் 365 நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்களாக உள்ளன என அறிவியல் அறிவிக்கிறது. இந்த அதிக பட்ச உஷ்ணம் பூமி வாழ் மக்களின் ‘மித்ரன்’ என்று வர்ணிக்கப்படும்  சூரியனுக்கு எப்படிக் கிடைக்கிறது என்ற காரணத்தை நோக்கினால் அது கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்வதால் தான் என்று தெரிய வருகிறது.
வெறும் கூட்டணியிலேயே சூரியனுக்கே இந்த உஷ்ணத்தைக் கொடுக்கிறது என்றால் கார்த்திகையின் உஷ்ணம் எப்படிப்பட்ட அதி பயங்கரமானதாக இருக்க வேண்டும்? நினைத்து நினைத்து பிரமிக்க வேண்டியது தான்!. சதபத பிராமணம் ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்றல்ல, நான்கல்ல, கார்த்திகை பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது என்று வியக்கிறது. ஆகவே  இதற்கு பகுலா (பல நட்சத்திரம் கொண்டது )என்ற பெயரையும் சூட்டுகிறது.
கார்த்திகையின் அதி தேவதை  அக்னி! 
இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி (க்ருத்திகா நட்சத்திரம் அக்னிர் தேவதா) என்று தைத்திரீய சம்ஹிதா (நான்காம் காண்டம்) கூறும். அக்னியே ஸ்வாஹா; க்ருத்திகாம்யஹ ஸ்வாஹா என தைத்தீரிய ப்ராஹ்மணம் (III 1.4.2) கார்த்திகை நட்சத்திரத்தைப் புகழும்!:
81000 சுலோகங்கள் கொண்ட ஸ்கந்த புராணம் தான் 18 புராணங்களிலேயே மிகப் பெரிய புராணம்.
இதில் ஸ்கந்தனின் பெருமை விவரிக்கப்படும் போது கார்த்திகை நட்சத்திரத்தின் பெருமையும் விவரிக்கப்படுகிறது. அதன் மர்மமும் விளக்கப்படுகிறது.
இதைப் பற்றி வேதத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான குறிப்புகளைக் காணலாம்.வால்மீகி “அந்த ஸ்கந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் அவனுடன் சேர்ந்து இருப்பதை அனுபவிக்க முடியும்” என்று உறுதியாகக் கூறி கார்த்திகேயனின் மகிமையை வியக்கிறார்!
மஹாபாரதம் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் அக்னியின் தோற்றம் மற்றும் மகிமையை விளக்குவதாக ஆரம்பித்து சுப்ரமண்யருடைய உற்பத்தி, வீர அணிவகுப்பு ஆகியவற்றை விளக்கமாகக் கூறுகிறார். மார்க்கண்டேய ஸமாஸ்யா பர்வத்தில் இருநூற்றிருப்பத்தோராவது அத்தியாயம் தொடங்கி இருநூற்றுமுப்பத்து மூன்றாவது அத்தியாயம் வரை ஸ்கந்த சரித்திரம் இடம் பெறுகிறது.
ஸ்கந்த ஜனனம்!
ஒரு சமயம் அக்னி ஸப்த ரிஷிகளின் பத்தினிகளின் மீது ஆசைப்படுகிறான்.அந்த அக்னியின் மீது ஸ்வாஹா தேவி ஆசைப்படுகிறாள். அவள் அருந்ததியைத் தவிர ஏனைய ஆறு பேரின் திவ்ய உருவத்தை எடுத்துக் கொள்கிறாள்.அருந்ததியின் தவத்தினாலும் அவளது பதிபக்தியினாலும் அவள் உருவத்தை ஸ்வாஹா தேவியால் தரிக்க முடியவில்லை.அக்னியோடு சேர்கிறாள்.
கந்தனின் ஜனனத்தை மஹாபாரதம் “காமமுள்ள ஸ்வாஹா தேவியினால் அந்த ஸ்வர்ணகுண்டமென்னும் தடாகத்தில் பிரதமா திதியில் அக்னியினுடைய வீரியமானது ஆறு தடவை போடப்பட்டது. அந்தக் குண்டத்தில் நழுவி விழுந்த அந்த வீர்யமானது தேஜஸினால் சூழப்பட்ட ஒரு புத்திரனை உண்டுபண்ணியது.பிறகு ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட அந்த வீர்யமானது ஸ்கந்தனாயிற்று. அந்த வீர்யத்தில் ஆறுதலைகளுள்ளவரும் பன்னிரெண்டு காதுகளும் கண்களும் கைகளும் பாதங்களுமுள்ளவரும் ஒரு கழுத்தோடும் ஒரு தேகத்தோடும் கூடியவராக குமாரர் தோன்றினார்.” என்று விவரிக்கிறது.
விசுவாமித்திரர் பதிமூன்று மங்கள கர்மங்களைச் செய்வித்து ஸ்கந்தருக்கு நாமகரணம் செய்து வைக்கிறார். இந்திரன் தேவ ஸேனாபதியாக ஸ்கந்தனுக்கு முடி சூட்டி தேவசேனையை திருமணம் செய்விக்கிறார். சிவனின் கட்டளைக்கிணங்க தேவ ஸேனையை அணிவகுத்துத் தலைமை தாங்கிச் சென்ற கந்தன் மகிஷாஸ¤ரனைக் கொல்கிறார்.மாத்ரு கண மாதரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு எல்லா உலகங்களும் பூஜிக்கத் தக்க உயர் நிலையை அருளுகிறார்.
ஸ்வாஹா தேவி எப்போதும் அக்னியுடன் சாஸ்வதமாக சேர்ந்து வஸிக்க தன் விருப்பத்தைத் தெரிவிக்க  ஸ்கந்தர் ,”தேவியே! நன்னடையுள்ள அந்தணர்கள் மந்திரங்களால் நன்றாகத் துதிக்கப்பட்டிருக்கிற ஹவ்யமோ கவியமோ எதையும் எடுத்து இன்று முதல் ஸ்வாஹா என்கிற மந்திரத்தை அக்னியில் ஹோமம் செய்து கொடுப்பார்கள். அக்னி பகவான் இவ்வண்ணம் உன்னோடு கூட எப்போதும் வாஸம் செய்வான்” என்று அருளுகிறார்! இவை அனைத்தையும் விரிவாக மஹாபாரதம் விளக்குவதைப் படித்து விட்டு வானத்தை நோக்கினால் பிரமித்துப் போவோம்.
கம்பீரமான கார்த்திகை நட்சத்திரத் தொகுதியில் அக்னி, ஸ்வாஹா மற்றும் தேவசேனை உள்ளிட்ட நட்சத்திரங்களின் ஜொலி ஜொலிப்பு,ஸோமதாரை என்று புராணம் விவரிக்கும் காலக்ஸி, நானூறு நட்சத்திரங்களைக் கொண்ட மாத்ரு மண்டலம்,அதன் மேற்கில் ஸப்த ரிஷிகளில் ஆறு ரிஷிகளின் பத்னிகளான நட்சத்திரங்கள், சுரபி என்னும் தெய்வீகப் பசு, அதன் தென் கிழக்கில் விஸ்வாமித்திர நட்சத்திரம் ஆகியவற்றைப் பார்த்து பிரமிக்கலாம்.
அத்தோடு பிரம்மாண்டமான தேவ ஸேனை அணிவகுப்பை கந்தன் தலைமை தாங்கிச் சென்றார் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் ஜொலிக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் அணிவகுப்பாகக் கூட்டம் கூட்டமாக கார்த்திகைக்குப் பின்னால் இருப்பதையும் பார்த்து அதிசயிக்கலாம்.இவற்றின் பல்வேறு அதிசய உருவங்களையும் ஜொலிஜொலிப்பில் உள்ள பல்வேறு தரங்களையும் பார்த்து சுப்ரமண்ய சேனையின் மகிமையை முற்றிலுமாக உணரலாம்!
மயில்வாகனன் முருகன்!
முருகனின் வாகனமான மயிலையும் வானத்தில் கண்டு மகிழலாம். இதைப் பற்றி ஜே.பென்ட்லி என்ற ஆங்கிலேயர் வியந்து,  “கார்த்திகேயன் மயிலின் மீது ஏறி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவனே கார்த்திகை நட்சத்திரத்தில் தலைமையாக இருப்பதையும் அவன் பின்னால் அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் தொடர் வரிசையாக அணிவகுப்பதையுமே இது குறிக்கிறது” என்று கூறுகிறார்!
புகழ், ஒளி, கீர்த்தி, காந்தி,ஆயுள் ஆகிய அனைத்தையும் முருகன் அருளுவான் என்ற வேத மற்றும் மஹாபாரத வாசகத்தை மனதில் இருத்தி கார்த்திகை மாந்தரையும் கார்த்திகேயனையும் வானத்தில் பார்த்துத் தொழுது மகிழலாம்!



வைஷ்ணவிதேவி திருக்கோயில், கட்ரா (ஜம்மு & காஷ்மீர்)!



மூலவர் : வைஷ்ணவிதேவி, (சிரோ பாலி)

தீர்த்தம் : கங்கா நதி

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர் : கட்ரா (ஜம்மு & காஷ்மீர்)


திருவிழா: 

வருடந்தோறும் நவராத்திரி நாட்களில் திருவிழா நடைபெறுகிறது.
அந்நாட்களில் திரிகுதா என்ற இம்மலை அலங்கரிக்கப்பட்டு வெகு
விமரிசையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்கும் பொருட்டு
சிறப்பாக நடைபெறுகிறது.



தல சிறப்பு: 

இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின்
51 சக்தி பீடங்களில் இது வைஷ்ணவி சக்தி பீடம் ஆகும். இங்கு அம்மன்
அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.( துர்கை,
லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்.)

திறக்கும் நேரம்:

திரிகுதா என்ற பெயருடைய இமயமலையின் குகைகோயில் (பவன்)
ஜனவரி, பிப்ரவரி மாதம் தவிர இதர மாதங்களில் யாத்ரா மேற்கொள்ளலாம்.
 நாள்தோறும் 24 மணி நேரமும் வைஷ்ணோதேவி இலவச தரிசனம்.

பொது தகவல்:

ஸ்ரீவைஷ்ணோதேவியை தரிசிப்பதற்கும், தங்குவதற்கும் முன்னதாகவே
வெப்சைட் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம்.


யாத்ரா

வைஷ்ணோதேவி ஸ்தலமான இந்த குகை கோயிலுக்கு வர நாம் முதலில்
ஜம்முவை வந்தடையவேண்டும். ஜம்முவிற்கு தினமும் ரயில் மூலம் வரும்
 பயணிகளில் 75 சதவீத மக்கள் ஸ்ரீ வைஷ்ணோதேவியை தரிசிக்கவே வருகின்றனர். வைஷ்ணோதேவி மலையை சென்றடைய நம் முதலில் கட்ரா என்ற சிறிய நகருக்குள் நுழையவேண்டும். இவ்வூர் ஜம்முவிலிருந்து 50 கி.மீ. ஜம்முவில் இளைப்பாற
சரஸ்வதி தாம் மற்றும் வைஷ்ணோதேவி தாம் என்ற இரு தங்கும் விடுதியை
 பக்தர்களுக்காக வைஷ்ணோதேவி போர்டு உருவாக்கியுள்ளது. ஜம்முவிலிருந்து
50 கி.மீ. பிரயாணம் செய்ய ஜம்மு ரயில் நிலையத்திலிருந்தே அரசு பஸ்கள்,
தனியார் பஸ்கள் ரயிலிலிருந்து வரும் பக்தர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.


2003ல் ஜம்மு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் இந்திய ராணுவம்
முழு பாதுகாப்புடன் நம்மை கட்ரா நகருக்கு அனுப்பி வைக்கிறது. கட்ரா பஸ்
நிலையத்தை அடைந்தவுடன் பக்தர்கள் அனைவரும் வைஷ்ணோ தேவியை
தரிசிக்க முதலில் தங்களை பதிவு (ரெஜிஸ்ட்ரேசன்) செய்துகொள்ள வேண்டும். பஸ்ஸ்டாண்டிலேயே வைஷ்ணோதேவி போர்டு - பதிவு நிலையத்தை 24 மணி
நேரமும் திறந்துவைத்துள்ளனர். நமது பெயர், எந்த ஊர், மாநிலம் போன்ற
விவரத்துடன் ஒவ்வொரு குரூப் அல்லது பக்தருக்கு ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப்
இலவசமாக தரப்படுகிறது. இந்த ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் இருந்தால் மட்டுமே
தரிசனத்திற்கு அனுமதி உண்டு. இல்லையேல் மலையிலிருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவார்கள். கட்ரா பஸ் நிலையத்தில் நாம் பதிவுசெய்தவுடன் 1 கி.மீ
தொலைவில் உள்ள திரிகுதா என்ற மலைமுகப்பில் உள்ள இராணுவ செக்போஸ்ட்டில்
நாம் கொண்டுசெல்லும் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.


ஒரு முக்கிய வேண்டுகோள் : மலைக்கு செல்லும்போது முடிந்தவரை உடைகள்,
 உடமைகளை குறைத்துச் சென்றால் மலை ஏறும்போது அதிக சிரமம் இருக்காது.

வைஷ்ணோதேவி ஆலயம் (பவன்) :

மலை பிரயாணத்திற்காக மட்ட குதிரையில் அமர்ந்து பயணித்தல் மற்றும் டோலி
(4பேர் அமரும் இருக்கையுடன் தூக்கிச்செல்லுதல்) போன்றவைகள் மூலமாகவும்
செல்லலாம். வடநாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் 5 வயது முதல் 80 வயது
வரை உள்ள ஆண் / பெண் பக்தர்கள் மலைப்பாதையில் நடந்தே ஜெய் மாதா தி என்ற கோஷத்துடன், மனஉறுதியுடன், பக்தியுடன் நடந்தே வருகின்றனர்.

நடந்து செல்பவர்கள் களைப்பை போக்க ஒரு கி. மீட்டருக்கு ஒரு "ரெப்பிரஸ் மென்ட்'
ஷாப்பிங் உண்டு. அங்கு காபி, ஜூஸ் முதல் அனைத்தும் கிடைக்கும். அதே போல்,
இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு மெடிக்கல் சென்டர் இருக்கும், ஏறி வருபவர்களுக்கு
உடல் நிலை பாதித்தால் இலவசமாக முதலுதவி செய்யப்படும்.

வசதி படைத்த, நடக்க இயலாத பக்தர்கள் ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் கட்ராவில்
பெற்றவுடன் பஸ்நிலைய வாசலில் டெக்கான் ஏர்வேஸ் (போன் நம்பர். 01991-234378,234379) அலுவலகத்தை தொடர்புகொண்டால் ஹெலிகாப்டர் மூலம்
மலைமீது உள்ள வைஷ்ணோதேவியை எளிதில் அடையலாம். ஹெலிகாப்டர்
மூலம் செல்ல கட்டணம் ரூபாய். 2,000/- (ஒருவழி பயணம் மட்டும்).

மலைமீது நடக்க அனைத்து பரிசோதனைக்கு பின் நாம் முதலில் நீராட வேண்டிய
நதி பாண்கங்கா. ஸ்ரீவைஷ்ணோதேவி தொடுத்த பாணத்தால் ஊற்றெடுத்து உருவான
நதி பாண்கங்கா. எனவே பக்தர்கள் இந்த புனித நதியில் நீராடியபின் ஜெய் மாதா தி
என்ற சரண கோஷத்துடன் மலைஏற துவங்கலாம்.

அங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் வைஷ்ணோதேவி இளைப்பாறிய சரண் பாதுகாவை அடையலாம். மலைப்பாதையில் ஸ்ரைன் போர்டு சார்பில் போஜனாலயா என்ற
பெயரில் சலுகை விலையில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து
அர்த்த குமாரியை அடையலாம். நாம் மலையில் நடக்க வேண்டிய மொத்த தூரம்
12 கி.மீ. இம்மலைப் பகுதியில் சுமார் 10 கி.மீ. அதிக ஏற்றத்துடன் ஏறினாலும்
கடைசியில் 2 கி.மீ தூரம் நாம் மலையின் இறக்கத்திலேயே சென்று நுழைவுவாயிலை அடையலாம்.

மலைமீதுள்ள இத்தலத்தின் நுழைவு வாயிலிலேயே நமது செல்போன், பேனா,
பென்சில், மணிபர்ஸ், பெல்ட் போன்றவைகளை இலவச லாக்கரில் வைத்து
விட்டுத்தான் பவன் என்றும் ஸ்ரீவைஷ்ணோதேவி குகைக்கோவிலுக்கு செல்ல
முடியும். இந்திய ராணுவத்தின் சி.ஆர். பி. எஃப் கட்டுப்பாட்டில் பவன் உள்ளது.
எனவே நுழைவு வாயிலில் பக்தர்கள் கடுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர்.

கேட் 1*2 மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கேட் 3. மூலம்
ராணுவத்தினர் மற்றும் இராணுவ அனுமதி பெற்றவர் அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் மலையில் தங்குவதற்கு ஏராளமான வசதிகள் உள்ளது. தங்கும்
விடுதிகள், தனி நபர் டால்மெண்ட்ரிகள், இலவச பெட்ஷீட்கள் (ரூ. 100/- டெபாசிட் செய்தவுடன்) போன்றவைகள் உள்ளது.




பிரார்த்தனை!

இங்குள்ள அம்மனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நிறைவேறும்
என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

நேர்த்திக்கடன்: 

பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துகின்றனர்.

தலபெருமை: 

கோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இருபுறமும்
பசுமைக் காடுகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் "ஜெய் மாதா தி' கோஷத்துடன்
பல்வேறு இன, மாநில மக்கள் நடந்து செல் வதைக் காண்பதே கண்கொள்ளாக்
காட்சிதான். 7 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் வைஷ்ணவ தேவியின்
தரிசனம் ஒன்றே குறிக்கோளாக பரவசமாக செல்வர்.

நடை பயணத்தில் நாம் பவித்ர கங்கா நதியை கடக்க வேண்டும். தன்னை நாடி
வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தேவியே அம்பெய்து
நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழி புராணச் செய்தி உண்டு. வழியில்
சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா தேவி பக்தர் களை பின் தொடர்ந்து
அரக்கன் வரு கின்றானா என்று கண்காணித்து பாது காவல் செய்வதாக ஐதீகம்
உள்ளது.அடுத்து வருவது அர்த் குமாரி. இங்கு நாம் செல்லும் பாதையில் ஒரு
குகை இருக்கிறது. குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை
தரிசித்து பின்னர், பயணத்தை தொடர வேண்டும்.



அர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில்
அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது. இங்கு
தான் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களை யும் வாங்கிக் கொள்ள
வேண்டும். தேவியை தரிசிக்கும் போது, அங்குள்ள பூஜாரி பக்தர்களுக்கு
நாணயங்களை பிரசாதமாக வழங்கு வார். அதை பத்திரமாக நம்முடைய வீட்டில்
உள்ள பூஜை அறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற தைரியம்
ஏற்படும். க்யூவில் நகர்ந்து செல்லும் போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம்
கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்த படி
ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்த வெளி வரும்.

குகைக்கோயிலை நாம் அடைந்தவுடன் பிண்டி எனப்படும் கர்ப்பகிரஹம் உள்ளது.
சுயம்புவான மூர்த்த உருவில் மூன்று உருவங்களாக தேவியை மிக கவனத்துடன்
தரிசிக்கவும். இடதுபுறம் மஹா சரஸ்வதியாகவும், வலதுபுறம் துர்கை என்ற மஹாகாளியாகவும், நடுவில் மஹாலெட்சுமியாகவும் ஆக மூன்று தேவியரின்
முழு உருவாக வைஷ்ணோதேவி அருட்காட்சி அளிக்கிறாள். தேவியை தரிசித்துவிட்டு வெளியில் வரும் பக்தர்களுக்கு சர்க்கரைபாகு கலந்த பொரி, அன்னையின் வடிவம்
பொறித்த வெள்ளி டாலர் ஒவ்வொரு பக்தருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

திருமணம் ஆன தம்பதியினர் ஒரு வருடத்திற்குள் இத்தலத்திற்கு தம்பதிகளாக
வந்துசெல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வைஷ்ணோதேவி
குகைக்கோயில் (பவன்) கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் உள்ளது.


தல வரலாறு:

தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம்
செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன்
அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள்.
அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம்
ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல்
மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது.
அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில்
ஒன்றே ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.

திரு. ஜஸ்துமல் என்ற தேவி உபாசகருக்கு திருமகளாக வைஷ்ணோ தேவி
பிறக்கிறாள். அழகு மங்கையாக வளரும் பருவத்தில் தேவியை கவர்ந்து செல்ல
எண்ணி பைரவன் என்ற அரக்கன் துரத்துகிறான். பைரவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள குகையில் ஒளிந்து கொள்கிறாள் தேவி. அங்கே அவளுடைய சுயசொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட, வெளியே வந்து குகை வாயிலிலேயே
அவனை சம்ஹாரம் செய்கிறாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும், தலை
பைரவகாடி என்ற அருகில் உள்ள மலையில் போய் விழுகிறது. தேவி, மடியும்
தருவாயில் மன்னிப்பு கேட்கும் பைரவனுக்கு வரம் தருகிறாள். தனது குகைக்
கோவிலை (பவன்) நாடிவரும் பக்தர்களின் பாதம்பட்டு அவன் முக்தி அடைவான்
என்ற வரம் அருளுகிறாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை
மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பி செல்லும்போது பைரவ காடிக்கு போய்,
அவனை வழிபட்டு செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணோ தேவி ஒளிந்திருந்த
குகை இன்று வைஷ்ணோதேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.



சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில்
இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.




பஞ்சமுக அனுமன்!


ஓம் ஸ்ரீராமதூதாய, ஆஞ்சநேயாய,
வாயுபுத்ராய, மஹாபலாய,
ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, மஹா பலப்ரசண்டாய, பல்குணஸகாய,கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய, அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, 
துஷ்ட நிராலம்ப க்ருதாய,
ஸஞ்சீவிநீ ஸமாநயந ஸம்ர்த்தாய,
அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய,
தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய,
பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய,
ஷட்ப்ரயோகாங்க பஞ்சமுகி ஹநுமதே நம:


பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்க பஞ்சமுக அனுமன். 

அனுமனின் ஐந்து முகங்களான
கருடமுகம் பிணி நீக்கும்,
வராகமுகம் செல்வம் அளிக்கும்,
அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும்,
நரசிம்மமுகம் தீமையைப் போக்கும்,
ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், 
வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன்.


கிழக்கு முகம்-ஹனுமார்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.


தெற்கு முகம்-நரஸிம்மர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.


மேற்கு முகம்-கருடர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய
ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.



வடக்கு முகம்- வராஹர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய 
ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.


மேல்முகம்-ஹயக்ரீவர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய
ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.



ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி!

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.


மரகதலிங்கம்!



மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள். அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.

மேற்கு ரஷ்யாவின் உரல்ஸ் மலைப்பகுதியில் விலை மதிப்புமிக்க மரகத கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு இப்பகுதியில் 3 ஆயிரத்து 187 கேரட் மதிப்புள்ள மரகத கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்களை பட்டை தீட்டும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 கிலோ மரகத கற்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அரசுக்கு கிடைத்தது.இந்நிலையில் 5 ஆயிரம் கேரட் தரம் கொண்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள அரிய வகை உயர்ரக பச்சை மரகத கல் ஒன்று இப்பகுதியில் மீண்டும் கிடைத்துள்ளது. 

இந்த மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம் .
 

மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம் ஆகும்,

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது மிக சிறந்த பலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இவ்வாறு மரகத லிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .

சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் . மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.


அலைகடல் ஓரம் அழகிய ஆலயம்!

35

கர்னாடக மானிலம் உத்தர் தாலுகாவில் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது முருடீஸ்வரர் கோவில்.  123 அடி உயர சிவபெருமான் சிலை இங்குள்ளது. அதற்குக் கீழே தலபுராணம் எழுதப்பட்டுள்ளது. 

உயர்ந்த நிலை கோபுரம் சூரியனின் தேர்   கீதோபதேசக் காட்சி  பகீரதனுக்காக வந்த கங்கையைத் தாங்கிய கங்காதரன் சிலை என அழகு கொஞ்சும் சிலை வடிவங்கள். 

பல்வேறு சுதை வடிவங்கள்  திருமுகம் துலங்கும் அமைப்புக்கள்  நீண்ட பிரகாரங்கள் விரிந்த பெரும் பரப்பில் ஆலயம் என்று அமர்க்களமாக அமைந்துள்ளது.  தூய்மையும் பராமரிப்பும் வெகு அருமை. இந்த ஆலயத்தை அனைவரும் அவசியம் ஒரு முறையாவது சென்று பார்ப்பது நல்லது.


புவனேஸ்வரி கவசம்!


அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்
பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண்
பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்
பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி

கணபதியே சரணம் கணநாதா ரக்ஷிப்பாய்
கந்தனுக்கு மூத்தோனே கவசத்தைத் தந்திடுவாய்
மாதாவின் கவசத்தை மங்களம் பெருகிடவே
மங்கள கணபதியே மகிழ்ந்தெனக் கருள்வீரே

பஞ்சமுக கணபதியே மனமாசறுத்துத் தேசருளி
வல்லபை கணபதியே வல்வினைகளைப் போக்கி
மஹத்தான உன்னருளை மாரிபோல் பொழிந்திட்டு
பூலோகம் உய்வுபெற புவனேசி கவசமீவாய்
புவனேச்வரித் தாயே புவனமெல்லாம் உய்வுபெற
புண்ணியத்தால் உன்நாமம் போற்றுகிறேன் கேட்டிடம்மா
என் ஹ்ருதயத் துள்ளிருந்து என்னறிவாகியே நீ
சீர்மிக்க மாதாவே சீக்கிரமே வந்திடம்மா
பாக்கியம் பலவேண்டிப் பகர்கின்றேன் கவசத்தை
பாலாம்பிகைத் தாயே பரிவுடனே வந்திடம்மா
படைப்புக்கும் முன்புள்ள பராசக்தித்தாயே கேள்
பாலன் இவனையுமே பார்த்து நீ ரக்ஷிப்பாய்

மூவர்கள் போற்றி ஏத்தும் முதல்வியே புவனேசி
தேவாதி தேவர்களும் தேவியுன்னை வழிபட்டே
சாகாவரம் பெற்று சர்வசக்தி எனப் புகழும்
லலிதாம்பிகைத் தாயே சடுதியில் வந்திடம்மா
மார்க்கண்ட மாமுனிவர் மஹான் துர்வாஸரிஷி
அகஸ்தியரிஷி போன்றோர் அன்னையுன்னை வழிபட்டே
இன்றும் இருந்துகொண்டு இவ்வுலகிற் கருளுவதை
என்னவென்று நானுரைப்பேன் என்தாயே உன் மகிமை
வாராஹி தேவியே வந்திப்பேன் உன் அடியை
பாதம் நகம் விரலைப் பார்வையால் நீ காத்திடம்மா
முழங்கால் இரண்டையுமே மலைமகளே காத்திடம்மா
தொடைகள் இரண்டையுமே துர்க்கை நீ காத்திடம்மா

பின்புறத்தை நாரஸிம்மி பிறழாது காத்திடம்மா
வயிற்றைப் பைரவியே வலியவந்து காத்திடம்மா
மார்பை சிவதூதி மாண்புடனே காத்திடம்மா
வலதிடது தோளை வைஷ்ணவியே காத்திடம்மா
மனோன்மணித்தாயே என் மார்பையுமே ரக்ஷிப்பாய்
மஹாத்ரிபுர சுந்தரி நீ மனத்தையும் காத்திடம்மா
என் ஹ்ருதயத்தில் புவனேசி நீ இருந்து ரக்ஷிப்பாய்
கழுத்தை மாஹேந்திரியும் முகத்தை காத்யாயனியும்

தலையைத் தாக்ஷாயணியும் தலைக்குள் சிவ சக்தித்தாயும்
கண் காது வாய் மூக்கைக் காமாக்ஷியும் காத்திடம்மா
பற்கள் அனைத்தையுமே பத்மாக்ஷி காத்திடம்மா
நாக்கை வாக்தேவி நயமுடன் காத்திடம்மா
புருவங்களிரண்டையுமே பூதேவி காத்திடம்மா
புருவங்களின் நடுவில் ஸ்ரீதேவியிருந்து காப்பாய்
கண்ணொளி யாயிருந்து காப்பாய் காமேச்வரித்தாயே
கண்களின் மணிகளையே காலஹந்த்ரி காப்பாய் நீ
கண்ணிமையைக் காத்திடம்மா காத்யாயனித்தாயே
அங்கங்களனைத்தையுமே ஆதிசக்தி காத்திடம்மா
என்னை நீ ரக்ஷிப்பாய் என் தாயே ரக்ஷிப்பாய்
பூரணி பூமியிலும் மேலே பவானித்தாயும்

திக்குகள் தோறுமே திருபுராம்பா காத்தருள்வாய்
மேல்கீழ் குறுக்கெல்லாம் மூகாம்பா ரக்ஷிப்பாய்
காத்திடம்மா காயத்ரீ கண்ணிமைபோல் காத்திடம்மா
வாராஹி கௌமாரி நாரஸிம்மி ரக்ஷிப்பாய்
சண்டிகை சக்தி கௌரி சங்கடங்கள் தீர்த்திடுவாய்
அஷ்டலக்ஷ்மித் தாயே அமர்ந்திடம்மா என்னுடனே
பிரியா திருந்திடம்மா ப்ரத்யக்ஷம் ஆகிடம்மா
புவனேச்வரித்தாயே புவனமெல்லாம் நிறைந்தவளே

புவனேசி என்றாலே புண்ணியம் பெருகிடுமே
புண்ணிய புருஷர்கள் புவனேசித் திருநாமம்
போற்றிடுவர் போற்றியுமே புண்ணியத்தைப் பெருக்கிடுவர்
திருவடியும் பற்றிடுவர் திருநாமம் ஜெபித்திடுவர்
நாமத்தின் மஹிமையினால் நமனையும் வென்றிடுவர்
ஸகல ஸெளபாக்யமும் ஸாயுஜ்ய முக்தியுமே
தந்திடுவாள் புவனேசி தரித்திரத்தை ஓட்டிடுவாள்
சாந்தியின் வடிவுகொண்ட ஸர்வேசி நமஸ்காரம்
சிரத்தை வடிவான ஸ்ரீமாதா நமஸ்காரம்
காந்தியின் வடிவான காமாக்ஷி நமஸ்காரம்
லக்ஷ்மியின் வடிவான லலிதாம்பா நமஸ்காரம்
விருத்தியின் வடிவான வ்ருத்தாம்பா நமஸ்காரம்

ஸ்மிருதியின் வடிவான ஸ்கந்தமாதா நமஸ்காரம்
தயையின் வடிவான தர்மாம்பா நமஸ்காரம்
துஷ்டியின் வடிவான துக்கஹந்த்ரீ நமஸ்காரம்
மாத்ரு வடிவான மஹாதேவி நமஸ்காரம்
மயக்க மகற்றிடுவாய் மாஹேசி நமஸ்காரம்
தேவியே புவனேசி தினமுன்னை நமஸ்கரிப்பேன்
தீராத வியாதிகளைத் தீர்த்து நீ ரக்ஷிப்பாய்
அகந்தையை ஒழித்திடுவாய் அம்மா புவனேசி

பிறவிப்பிணி தீர்ப்பாய் பிரம்மசக்தித்தாயே கேள்
என் துன்பத்தைத் துடைத்திடவே தீப துர்க்கையாய் வந்திடம்மா
துர்காம்பிகைத் தாயே துரிதத்தை விலக்கிடம்மா
அஷ்டமா ஸித்திகளை அடியேனுக் கருளிடம்மா
மாகாளியாய் வந்து மனமாயையை ஒழித்திடம்மா
சாமுண்டீச்வரியே ஸம்சயத்தைப் போக்கிடம்மா
காளிகா தேவியே காத்திடம்மா என்னையும் நீ
வாராஹியாய் வந்து வழியில் காத்தருள்வாய்
இந்திராணித்தாயே இம்மையில் நீ ரக்ஷிப்பாய்
வைஷ்ணவி மாதாவாய் வந்து வரமருள்வாய்
கௌமாரித் தாயே நீ காத்திடம்மா உள்ளிருந்து
ப்ரஹதாம்பிகைத் தாயே பிரமையையும் போக்கிடுவாய்
துன்பம் துயரத்தைத் துடைத்துக் காப்பாற்றிடவேகாமக் குரோதத்தைக் கலக்கி விரட்டிடவேசத்துருவாம் பகைவனையும் சம்சய அரக்கனையும்துஷ்டர்களை விரட்டிடவே வனதுர்கா வந்திடம்மா

பத்துத் திக்கிலுமே பத்ரகாளி காத்திடம்மா
மாதா பாலாம்பிகையே மாயையைப் போக்கிடம்மா
சும்ப நிசும்பனைப் போல் அகந்தையை அழித்திடம்மா
ஸிம்ம வாஹனத்தில் ஜய துர்க்கே வந்திடம்மா

ஜகத் ஜனனி ஜகன்மாதா ஜய புவனேசித்தாயே
மமதையில் மயங்காமல் மாதங்கி காத்திடுவாய்
அனைத்தையும் கொடுக்கும் அன்னபூர்ணேச்வரியே
குறையற்ற கல்வியைக் கொடுத்திடுவாய் கலைவாணி
மஹிஷாசுரனையும் மற்றுமுள்ள தூம்ரனையும்
சண்டனையும் முண்டனையும் ரத்தபீஜாசுரனையும்
அகம்பாவ அசுரர்களை அழித்தவம்மே ஸ்கந்தமாதா
சாமுண்டீஸ்வரியே சந்தோஷமெனக்கருள
சக்தியாய் வந்திடம்மா புவனாம்பிகைத் தாயே
சத்துசித்தின் வடிவான சித்தேச்வரித் தாயே
ஜயந்தி மங்களா காளி ஜயஜய போற்றி போற்றி
பத்ரகாளி கபாலினியே பராபரே போற்றி போற்றி

பூரண புராதனியே புவனேசி போற்றி போற்றி
அகிலாண்டேச்வரியே அன்னையே போற்றி போற்றி
ஆதிபராசக்தியான ஆசோபனா போற்றி
கள்ளம் கபடம் நீக்கும் காமாக்ஷியே போற்றி
கருணைக் கடலான வம்மே காத்யாயனியே போற்றி
ஆயிரம் நாமமுள்ள ஆதி புவனேசி போற்றி
சாந்தி சுகம் தருவாய் ஷண்முகன் தாயே போற்றி
ஹயக்ரீவர் போற்றி ஏத்தும் ஆதிலலிதா போற்றி

சிரத்தா பக்திதரும் சிவகாமி போற்றி போற்றி
கலிதோஷம் அகற்றுவிப்பாய் கல்யாணி போற்றி போற்றி
ஏகாக்ஷரம் தருவாய் வேதவேத்யா போற்றி போற்றி
ஈசனுள் குடியிருக்கும் புவனேசி போற்றி போற்றி
லக்ஷ்மி வாணி போற்றும் லலிதாம்பா போற்றி போற்றி
ஹ்ரீங்கார ரூபமான புவனமாதா போற்றி போற்றி
ஹரிப்ரம்மேந்திரர்கள் அகத்துள்ளோய் போற்றி போற்றி
ஸர்வேசி ஸாக்ஷிரூபே ஸர்வக்ஞே போற்றி போற்றி
ககாரார்த்தா கபாலினி காலஹந்த்ரி போற்றி போற்றி
ஹம்சமந்த்ர மயமான ஹம்ஸவதி போற்றி போற்றி
லகாராக்ய லதாபூஜ்யா ராஜேச்வரி போற்றி போற்றி
ஹ்ரீம் மத்யா ஓங்காரி ஜகன்மாதா போற்றி போற்றி

ஸநகாதி முநித்தேயே ஸச்சிதானந்தே போற்றி போற்றி
கல்யாணீ காதிவித்யே கமலாக்ஷி போற்றி போற்றி
லகாரிணீ லப்தரூபே லப்தசக்தே போற்றி போற்றி
ஹ்ரீங்கார மூர்த்தித் தாயே புவனேசி போற்றி போற்றி
பஞ்ச தசாக்ஷரித்தாயே பவநாசினி போற்றி போற்றி
ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ சீருடனே வந்திடம்மா
ஸிம்ஹாஸனேச்வரியே சீக்கிரமே வந்திடம்மா
சிதக்னிகுண்ட ஸம்பூதா சித்ரூபி வந்திடம்மா

ஸர்வாபரண பூஷிதையே ஸர்வேசி வந்திடம்மா
சிவாயெனப் பெயர்கொண்ட சிந்தாமணி வந்திடம்மா
மங்களத்தைச் செய்திடம்மா மாதா புவனேஸ்வரியே
ப்ரும்ம விஷ்ணு ருத்ரன் ஈசானன் நால்வருடன்
ஸதாசிவனையுமே பீடமாக்கிக் கொண்ட சிவே
ஐவரான மஞ்சத்தில் அமர்ந்து ஜோதியானவளே
கதம்பவனவாஸினியே காமகோடி வரமருள்வாய்
சாக்தப் பிரணவத்தை சடுதியில் தந்திட்டு
கல்மஷங்களைப் போக்கிக் கலிதோஷ மகற்றிடுவாய்
நகக்கண் வழியாக நாரணனைச் சிருஷ்டித்தோய்
ஹரிஹர ப்ரம்மாக்கள் அனன்யமாய்த் தொழுதேத்தும்
தேவர்களும் முக்தர்களும் தினமும் தொழுதேத்தும்

ஸித்தர்களும் பக்தர்களும் ஜன்மமெல்லாம் தொழுதேத்தும்
புவனேஸ்வரித்தாயே போதுமம்மா இப்பிறவி
மறுபிறவி இனிவேண்டாம் மாதா புவனேஸ்வரியே
பிறவிப்பயன் தந்த புவனேஸித் தாயே கேள்
பற்றினேன் திருவடியைப் பற்றறுப்பாய் புவனேசி
புவனேசி உன்நாமம் பிணியறுக்கும் திருநாமம்
என்றுணர்ந்தேன் உன்னருளால் என்தாயே புவனேசி
மூலமந்த்ராத்மிகையே முக்தியும் தந்திடம்மா

பக்தனுக்கு வசமாகும் பார்வதியே வந்திடம்மா
பயத்தைப் போக்கிவிடும் பரதெய்வமே வருவாய்
நிர்மலா நித்யா நிராகுலா வந்திடுவாய்
மோகநாசினித்தாயே மோகத்தைப் போக்கடிப்பாய்
பாபநாசினி தாயே பாபத்தைப் போக்கிடுவாய்
கோபத்தைப் போக்கடிக்கும் க்ரோத சமனித்தாயே
லோபித்தன மகற்றும் லோபநாசினியே கேள்
சந்தேகம் அகற்றுவிக்கும் ஸம்சயக்னீ கேட்டிடம்மா
பாபநாசினி மாயே பந்தத்தைப் போக்கிடம்மா
பேதபுத்தியை அகற்றும் பேதநாசினியே கேள்
மரணபய மகற்றிடுவாய் ம்ருத்யுமதனித் தாயே
சுகத்தைத் தந்தருள்வாய் சுகப்ரதா சுகமருள்வாய்

துராசாரத்தை யோட்டும் துராசாரசமனீ கேள்
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வ மந்த்ரஸ்வரூபிணியே
மாஹேச்வரீ மஹாதேவி மஹாலக்ஷ்மீ சுந்தரியே
மஹாரூபே மஹாபூஜ்யே மஹாபாதக நாசினியே
பானுமண்டல மத்யஸ்தே பைரவி பகமாலினியே
பத்மாஸனே பகவதி பத்மநாப சகோதரியே
புருஷார்த்த ப்ரதே பூர்ணே போகினி புவவேஸ்வரியே
தத்வாஸனே தத்வமயீ தத்துவத்தை உணர்த்திடுவாய்

குமாரகணநாதாம்பா அஹங்காரம் அகற்றிடுவாய்
ராஜ ராஜேச்வரித் தாயே ராஜ்யலக்ஷ்மீ வரமருள்வாய்
ஸச்சிதாநந்தரூபிணியே ஸதாநந்தம் தந்திடுவாய்
ஸ்ரீசக்ர ராஜநிலயே ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரியே
ஸ்ரீலலிதாம்பிகைத் தாயே சீக்கிரமே வரமருள்வாய்
வரமருள்வாய் வரமருள்வாய் வந்திப்பேன் புவனேசி
புவனேசி திருவடியைப் புண்ணியத்தால் பற்றிவிட்டேன்
சிக்கெனப் பற்றிவிட்டேன் புவனேசி உன்னடியை
பற்றெல்லாம் அறுத்திடுவாய் பராசக்தி புவனேசி
பிறந்து பிறந்திளைத்தேன் பிறவாவரமருள்வாய்
துன்பமெல்லாம் விலக்கித் துரியத் திருத்திடுவாய்
ஞான வைராக்கியமும் நான்மறை ரகசியமும்

ஆகம புராணத்தின் அகத்துள்ள ரகசியமும்
வேதாந்த ரகசியமும் விளக்கிடுவாய் புவனேசி
பிறவிப்பிணி அகற்றிப் பிரம்மமய மாக்கிடம்மா
எல்லாம் சிவமெனவே எனக்கு நீ அருளிடுவாய்
நெஞ்சத்துள் நீ இருந்து நித்ய முக்தனாக்கிடம்மா
அல்லும் பகலும் அடியேன் இவன் உன்னையன்றி
மற்றோர் நினைவின்றி மஹராஜி போற்றுகிறேன்
போற்றுகிறேன் போற்றுகிறேன் புவனேசி பொன்னடியை

தலைமேலாம் தளத்தில் தந்திடம்மா தரிசனமும்
தரிசனம் தந்திட்டுத் தரித்திரத்தை ஒழித்திடம்மா
உள்ளத்துள்ளேயிருந்து உண்மையினை யுணர்த்திடம்மா
திரிபுர சுந்தரித்தாயே தீர்த்திடுவாய் வினைகளையும்
நான் உன்னைவிடமாட்டேன் நவின்றிடுவாய் உபதேசம்
ஹ்ரீங்காரம் தந்துதாயே என்னில் உனைக்காட்டி
உன்னில் எனைக்காட்டி உய்விப்பாய் என்னையும்நீ
ஆத்ம சக்தியாயிருந்து அன்புடன் ரக்ஷிப்பாய்
அறம் பொருள் இன்பத்தை அம்மே கொடுத்திடுவாய்
வீட்டையும் தந்திட்டு விதியெல்லாம் விரட்டிடுவாய்
பேரின்ப விடருளிப் பிறவாவரம் தந்து
ப்ரம்மானந்தத்தோடு பிரியாதிருந்திடச் செய்

திடம்பெறவே உன்னை நானென்றுணர்ந்திடச் செய்
புவனத்தைப் பொய்யென்று புவனேசி காட்டிடம்மா
விருப்பு வெறுப்பற்று என்னை இருத்திடுவாய்
நிராசையான வீட்டில் என்னையும் நீ நிறுத்திடம்மா
உள்ளும் புறமும் உன்னையே காட்டிடம்மா
காணும் காட்சியெல்லாம் காந்திமதி நீ என்றும்
ஓசை ஒளியெல்லாம் உமாதேவி தானென்றும்
ஸ்தாவர ஜங்கமமெலாம் ஜகத்தாத்ரீ நீயென்றும்

புவனேசி உணர்த்திடுவாய் புனிதனாக மாற்றிடுவாய்
என்னையுமே காத்திடுவாய் என்னம்மே புவனேசி
நின்றும் இருந்துமே நின்நாமம் ஏத்திடுவேன்
நடந்தும் கிடந்துமே நானுன்னைப் போற்றிடுவேன்
இமைப்பொழுதும் உன்நாமம் மறந்திடமாட்டேன் நான்
என்நினைவெல்லாம் நீயாக நின்றிடுவாய் புவனேசி
என் உணவெல்லாம் உனக்கேற்ற நைவேத்யமாகுமம்மா
நான் நடப்பதே பிரதக்ஷிணமாய் நம்பிவிட்டேன் தாயே கேள்
என் உடலாட்டமெல்லாம் உனக்கருளும் முத்திரையாம்
என் உயிருக்கும் உயிரான ஆத்மசக்தி நீயன்றோ
அங்கிங்கெனாதபடி எங்கும் சக்தி மயம்
அழகிலும் அன்பிலும் அறிவிலும் சக்திமயம்

அனைத்தும் பராசக்தி அணுக்களெல்லாம் சக்திமயம்
சக்தியில்லாத தெய்வம் சவமென் றுணர்ந்திடடா
தெய்வங்களுக்குள்ளே தேவி யிருப்பதாலே
சக்தியுள்ள தெய்வமென்று சடுதியில் சொல்லுகிறார்
ஹரிஹர ப்ரம்மாவும் அன்புள்ள தேவர்களும்
ரிஷிகளும் ஞானிகளும் ஸித்தர்களும் பக்தர்களும்
சக்தியைத் தொழுவதாலே சர்வசக்தியும் பெற்றார்
புவனேசி மாதாவை முழுமனத்தோடு நீயும்

அகத்துள் துதித்தேத்தி அன்புடன் சரணடைந்து
இடைவிடாது உனதகத்துள் இக்கணமே இருத்தி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் என்று உறுதியாக ஏத்தியும் நீ
மலைபோல் இருந்திட்டால் மஹத்துவம் புலப்பட்டு
தன்னில் புவனசக்தி தரிசனம் காணலாமே
உன்னில் புவனசக்தி ஒன்றையே கண்டிடலாம்
புவனமெல்லாம் புவனசக்தி புலப்படுமுன்னுள்ளே
அகமும் புறமும் ஆதிசக்தி காண்பதற்கு
அன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருந்திடடா
அன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருத்துவோர்க்கு
அழகெலாம் சக்தியாகும் அன்பெலாம் சக்தியாகும்
அறிவெலாம் சக்தியாகும் அனைத்துமே சக்தியாகும்

சத்தியம் சக்தியாகும் ஞானமும் சக்தியாகும்
சாந்தம் ஆனந்தம் சக்தியாய்த் தோன்றிவிடும்
ஆனந்தம் வேண்டிநீயும் ஆதிசக்தி புவனையையும்
அன்புடன் பற்றிடடா அன்னை அருள் கிட்டிடுமே
பகுத்தறிவுள்ள நீயும் பற்றிடடா புவனையையும்
அனைவருள்ளிருக்கும் ஆன்மா புவனேசி
அதுவே நானென்று அகத்துள் உணர்ந்திடலாம்
அழிவிலாச் சக்தி ஆன்ம சக்தியாய்

அகத்துள்ளே உண்மையாய் ஆன்மாவாய் இருப்பதை
இம்மையில் உணர்ந்து நான் இன்புற்றிருப்பதற்கு
அமைதியாய் வாழ்வதற்கு அருள்வாய் வரமெல்லாம்
அருட்குலத் தாயே ஆன்ம சக்தியே
அற்புதமாய் நான் வாழ அடியனுக்கருள்வதுடன்
அம்மையே ஆன்மா அதுவே நானும்
அதுவே நீயும் அனைத்தும் அதுவென்று நீ உணர்த்து
மனமே! அம்மையின் உருவம் அன்பெர்பர் ஞானிகள்
ஸித்தர்கள் அன்பையே எனதம்மை யென்பர்
அன்பின்றி உலகில் வளமில்லை மறவாதே
பார்க்குமிடமெல்லாம் அன்பினைக் கண்டிட
பராசக்தியாம் அன்பைப் பற்றிடு இக்கணமே

பாவனையுடன் நீயும் அடைக்கலமாகி விடு
பார்க்கலாம் உனக்குள் அற்புதக் கடவுளை
அன்பே தானாய் அகத்துள் ஆன்மாவாய்
அம்மையே உணரச் சரண மடைந்திடப்பா
உனதறிவான உனது ஆன்மாவை
உனக்குள் நீ உணர உடனடியாக
இம்மையில் இக்கணமே உண்மையாகச் சரணடைவாய்
மாதாவின் அருளால் மாசற்ற உனதான்மா

சுயம் ஜோதியாய் சுத்தப் பிரம்மமாய்
அகத்துள் உணரலாம் நம்பிடுவாய் மனமே
இச் ஜகத்தையெல்லாம் அருட்குல மாக்கிடவும்
நல்லறிவாற்றலும் நலந்தரு ஞானமுடன்
பூரண மனிதனாய்ப் புவனை நீ எனை ஆக்கி
பாக்கியத்தோடு பாரெல்லாம் புகழ்பெறப்
புனிதனாக்கி என்னைப் பொலிவுறச் செய்குவாய்
வேதவேதாந்த வாழ்வும் வீரத்தோடறமும் ஈந்து
நல்ல நீதியோடருளும் தந்து
நன்நெறியில் எனை இருத்தி வைத்து
புத்தியில் அமைதியோடு அன்பெனும் அழகும் தந்து
அருட்குலமோங்கும் தொண்டை இடைவிடா தருளித்தாயே

ஈதலில் இன்பம்தந்து இன்பத்தில் இறையருள் காட்டிச்
சாதலும் பிறப்புமில்லா வரத்தையும் தந்திட்டென்னை
பூரண ப்ரம்மஞானம் பொருந்திய வாழ்வையருளி
தான்தானாய் நிலைத்திடவே நீ தந்திடம்மா
மனமேகவசத்தை தினமுமோதி காயத்தைசுத்திசெய்து
கவசத்தைப் பொருள் உணர்ந்து கருத்தோடு ஓதிவிட்டால்
கள்ளம் கபடறுக்கும் காமக் கசடறுக்கும்
வினைப்பயனையும் விரட்டும் புவனேசி கவசம் நம்பு

பகுத்தறிவுள்ள சீடா பற்றிடடா கவசத்தை
கவசத்தை ஓதியும் நீ கலிதோஷ மகற்றிடடா
கவச பாராயணத்தால் கள்ளமில்லா வுள்ளமாகும்
கள்ளமில்லா வுள்ளத்தில் காணலாமே புவனையையும்
மனக்கோட்டை கட்டாமல் புதுக்கோட்டை வந்திடடா
புதுக்கோட்டையுள் நீயும் புவனேசி கண்டிடடா
பற்றிடடா புவனேசி பாதமதைப் பற்றிடடா
பற்றிவிட்டால் பற்றற்ற பரசுகமும் கிட்டிவிடும்
ஆனந்தமாகவே நீ அகத்துள் மாறிடுவாய்
அன்னையின் கவசத்தை அன்புடனே நெக்குருக
ஆசாரநிஷ்டையுடன் அனுதினமும் ஓதுவீரேல்
அறம் பொருள் இன்பம் வீடு அனுக்ரஹித்தாட் கொண்டிடுவள்

அதிசுலபமாகவேதான் அன்னையுமே முன்னிற்பள்
மாதாவின் கவசமிதை மனமுருகி ஓதுவீரேல்
அஷ்ட லக்ஷ்மியும் அகலாதிருந்திடுவள்
மறவாது ஓதிட்டால் மஹராஜி அருளுண்டாம்
பொருளுண்டாம் மாதாவின் புண்ணிய லோகமுண்டு
ஆசார ஒழுக்கமுடன் அன்பு நேமநிஷ்டையுடன்
சிரத்தா பக்தியுடன் ஜகன்மாதா கவசமிதை
ஒருமனத்தோ டோதுவீரேல் மாபாவம் மறைவதுடன்

அன்புருவாம் அம்மையை அகத்துள் உணர்ந்திடலாம்
மாதாவும் முன்வந்து மஹத்தான வரமருள
சொன்னபடி செய்து நீ சுகமடைவாய் மனமே கேள்.

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி



ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்!



வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்.

வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||