Thursday 28 June 2018

கோ தானம்!

கோ மாதா சகல தெய்வங்களும் தன்னுள் அடங்கியதால் ஸர்வ தேவ ஸ்வரூபீ 

கோமாதா பூலோகம், பாதாலலோகம், ஸுவர்க்கம், பித்ருலோகம், கந்தர்வலோகம் , வைவஸ்வத பட்டினம், சத்ய லோகம் என எல்லா லோகத்தையும் கடக்க வல்லவள். நாம் செய்யும் பாவங்களை ஐந்து பிரிவாக விஷ்ணு புராணம், அக்னி புராணம், கருட புராணம் முதலிய புராணங்கள் சொல்கின்றன. அவை மஹா பாதகம், உப பாதகம், ஜாதிப்ரம்ஸ பாதகம்,அபாத்ரிகரண பாதகம் , மலினிகரண பாதகம். அனேகமாக எல்லா பாவங்களும் இந்த ஐந்து பிரிவுகளில் வந்துவிடும். இந்த பாவங்கள் ஏதோ ஒரு வழியில் கர்ம வினையாக ஜன்ம ஜன்மாந்திரமாக தொடர்கிறது. இதிலிருந்து விடுபட்டாலொழிய, ஜன்மம் கடையேற வழி திறப்பதில்லை. இந்த பாவங்கள் ச்ராவன ரிஷிகளால் சொல்லப்பட்டு சித்ரகுப்தனால் கணக்கில் எடுக்கப்பட்டு யமதர்மராஜனால் வைவஸ்வத பட்டினத்தில் அதற்கு உண்டான பலா பலன்களை நிர்ணயம் செய்யப்படுகின்றன. நமது அந்திம காலங்களில் இவை நிதர்சனமாக இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. நம்முடைய இறப்பிற்கு பிறகு நம் ஜீவன் 12 நாள் ப்ரேத ஸம்ஸ்காரத்திற்கு பிறகு 13 ஆம் நாள் தனது யாத்திரையை தொடங்குகிறது. 12 மாத காலம்( பித்ருக்களுக்கு1 நாள்)தொடர்ந்து வைவஸ்வத பட்டணம் அடையும். வழியில் வைதரிணி என்னும் நதி இருப்பதாகவும் அது புண்யாத்மாக்களுக்கு தெளிந்த நீரோடையாக கடப்பதற்கு எளிதாகவும், பாபாத்மாக்களுக்கு மலம், சீழ், அழுகிய ப்ரேதம், ரத்தமும் மாம்சமுடன் கொடிய ஜீவராசிகளுடன் கூடிய கடக்கமுடியாததாகவும் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது. வைதரிணியை கடக்கமுடியாத ஜீவன் தன் இலக்கை அடைய முடியாமல் பாதியில் தவிக்கும். மேல் சொன்ன ஐந்து வகை பாவத்திற்கும் முக்கியமாக இந்த ஒரு காரணத்துக்காகத்தான் கோதானமும் கோ சம்ரக்ஷணமும் ப்ராயசித்தமாக கருட , விஷ்ணு, அக்னி புராணங்களும் க்ருத்ய ஸுத்ரங்களும் சொல்கின்றன. நாம் செய்த கோதான பலனால் வைதரிணி நதிக்கரையில் கோமாதா தோன்றுவாள். அவளுடைய வாலை பிடித்துக்கொண்டால் நம்மை சுலபமாக கடத்திவிடுவாள் என்று கருட புராணம் சொல்கிறது.

பொதுவாக தானங்கள் ஏதோ ஒரு உலகியல் விஷயங்களை பூர்த்தி செய்வதாக இருக்கும். இருப்பவர் இல்லாதவர்க்கு தானம் கொடுப்பதால் , கொடுப்பவர் கைமேலாகவும் வாங்குபவர் நிறம் தாழ்த்தியோ உட்கார்ந்து கொண்டோ கையை தாழ்த்தி பெற்றுக்கொள்வது வழக்கம். கோமாதாவும், கண்ணிகையும் (ப்ரஜாபத்யத்தால்) உலகியல் விஷயத்துக்கு அல்லாமல் ஜீவன் கடையேர உறுதுணையாய் இருப்பதால் இந்த தானத்தை கொடுப்பவனும் பெறுபவனும் (காரணனும் கர்த்தாவும்) ஒரே மாதிரியான புண்யத்தை அடைகிறார்கள்.அதனாலயே இந்த கோதானமும் கண்ணிகா தானமும் குடுப்பவரும் வாங்குபவரும் சரிசமமாக நின்று கொண்டு செய்யவேண்டும் என்று சாஸ்திரங்கள் உறைக்கின்றது..தானங்களிலேயே சிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பலஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.
பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது. கோ தானத்தை பல காரணங்களுக்காக செய்கிறார்கள்.
ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக உக்ராந்தி கோ தானம் என்று செய்வதுண்டு.
இறந்த 12 ஆம் நாள் ஜீவன் வைதரினி நதியை கடக்க வேண்டி செய்ய படும் கோதானம் வைதரிணி கோதானம் என்று பெயர்.

பசுக்களை அதன் கன்றுடன் சேர்த்து நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடியசக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் உள்ள கோ சாலைகளுக்கு பசுவை தானமாகக் கொடுக்கலாம். தானம் குடுப்பதோடு அல்லாமல் அதனை பராமரிக்க குறைந்த பக்ஷம் ஒரு வருடத்திற்காவது (பித்ருக்களுக்கு ஒரு நாள்) உபகாரமும் கூடவே தரப்படவேண்டும். தானம் பெற்றவரும் வியாபார நோக்குடன் இல்லாமல் பசுவையும் கன்றையும் சம்ரக்ஷணம் செய்து பாலை தெய்வ கார்யங்களுக்கும், சத்கார்யங்களுக்கும் உபயோகபடுத்த வேண்டும்.இதை செய்யாத பக்ஷத்தில் தானம் பெருபவர் பாபத்தை சம்பாதிக்க நேரும்.
தானம் குடுப்பவர் பசுவையும் கன்றையும் அதனுடைய வாலை பிடுத்துக்கொண்டு உத்தேசித்த பலனை மனதில் சங்கல்பம் பண்ணிக்கொண்டு அதற்கு உண்டான மந்திரங்களுடன் வடக்கு நோக்கி பசுமாட்டின் வாலை அவர் கையில் கொடுத்து பத்னியுடன் தீர்த்தம் விட்டு தானம் செய்யவேணடும்
கோமாதாவின் தானத்தினாலும், சம்ரக்ஷனத்தினாலும் எல்லா நலன்களையும் பெற ப்ரார்த்திப்போம்.
கோ ஸ்துதி:---
நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்!

No comments:

Post a Comment