Friday, 19 August 2016

விநாயகர் பெருமைகளும் அவதாரங்களும்!

1.ஆதி விநாயகர்
விநாயகர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது யானைத்தலை. ஆனால் யானை முகம் வருவதற்கு முன் இருந்த மனித முகத்துடன் காட்சிதருவது நன்னிலத்துக்கு அருகில் உள்ள திலதர்ப்பணப்பதி எனும் தேவாரப் பாடல் பெற்ற தலத்திலாகும்.     
 
2. கற்பக விநாயகர்
சிவகங்கைச் சீமை, பிள்ளையார் பட்டி எனும் தலத்தில் மலையடியில், குடவறையில் வடக்கு நோக்கி அருளும் கற்பக விநாயகர் கற்பக மரத்தைப் போல, கேட்டதை வழங்குபவர். இரு கரங்களுடன் காட்சி தருவது வித்தியாசமான தோற்றமாகும்.
 
3. வெள்ளை விநாயகர்
திருவலஞ்சுழி எனும் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயத்திற்குள் நுழைந்தவுடன் வெள்ளை நிறத்தில் இந்திரனால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் ‘வேத விநாயகர்’ என்று அருளுகிறார்.
 
4. நேத்திர விநாயகர்
சுவாமிமலை சுவாமிநாதப்பெருமான் சன்னதி நுழையும் முன் தென்திசை நோக்கி அமர்ந்த நிலையில், வேண்டுபவர்களின் கண் நோய் தீர்ப்பதால் இப்பெயர் வந்தது. 
 
5. கள்ளவாரணப் பிள்ளையார்
திருக்கடவூர் அபிராமி சமேத அமிர்தகடேசுவரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் பிள்ளையார். அமிர்த கலசத்தை மறைத்து வைத்ததனால் இப்பெயர் வந்தது.
 
6.கைகாட்டி விநாயகர்
திருநாட்டியத்தான்குடி எனும் தேவாரத் தலத்தில் இறைவனை தரிசிக்க சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே நுழைய முற்பட்ட போது அங்கே சிவபிரான் இல்லாமையை உணர்ந்து கொண்டு விநாயகரை நோக்க... சிவன், சுந்தரரோடு திருவிளையாடல் செய்வதற்காக நாற்று நடும் உழவனாக வயற்பக்கம் நிற்பதனைக் காட்டியதால் ‘கைகாட்டி விநாயகர்’ ஆனார்.
 
7. துணையிருந்த விநாயகர்
திரு ஆரூருக்கு அருகில் உள்ள திருப்பனையூர் எனும் சிவத்தலத்தில், பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார்.
 
8. பிரளயங்காத்த விநாயகர்
மூவரின் பாடல் பெற்ற திருப்புறம்பயம் சிவபிரானுக்கு வலப்புறம் உள்ள விநாயகர், பிரளயமாக வெள்ளம் வந்த போது காப்பாற்றினார். மேலும் சதுர்த்தி அன்று இரவு நடைபெறும் தேனாபிஷேகத்தை முழுவதும் உள்ளிழுத்துக் கொள்வது பெருஞ் சிறப்பு.
 
9. படிக்காசு விநாயகர்
திருவீழிமிழலை எனும் பதிக்கு அப்பரும் சம்பந்தரும் வந்த போது பஞ்சம் நிலவியது. இறைவனைப் பாடிப் பரவியதால் இருவருக்கும் தினம் ஒரு பொற்காசு பீடத்தில் கிடைக்கும் படி செய்தார். எனவே அங்கே உள்ள தல விநாயகர் ‘படிக்காசு விநாயகர்’ எனப்படுகிறார்.
 
10. வாதாபி  கணபதி
பல்லவ மன்னனின் தளபதியாக இருந்த பரஞ்சோதிவாதாபியில் அங்குள்ள கணபதியை வழிபட்டு, போர் செய்து வெற்றி பெற்றார். வெற்றிப் பரிசாக அங்கிருந்து கணபதியைக் கொண்டு வந்து தன் ஊரான திருச்செங்காட்டாங்குடி எனும் கணபதிசுரத்தில் வைத்து வழிபட்டார். பின் பரஞ்சோதி சிறுத் தொண்டரானார்.
 
11. மாற்றுரைத்த விநாயகர்
திரு ஆரூர் தியாகராசசுவாமி மேலைக் கோபுரத்தின் எதிர் குளக்கரையில் உள்ள விநாயகர். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமுள்ளதா என்று உரைத்துப் பார்த்து சோதித்து அறிந்தார்.
 
12. பொய்யாப்பிள்ளையார்
‘அருணகிரிநாதரை ‘குமார வயலூருக்கு வா’ என்று முருகன் அசரீரியாகச் சொல்ல அவர் வயலூருக்கு வந்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கே காட்சிதரவில்லை. உடனே அருணகிரி நாதர் ‘அசரீரி பொய்யோ’ என்று உரக்கக் கூறினார். ‘அசரீரி பொய்யில்லை’ என்று சொன்ன பிள்ளையார் சுப்பிரமணியரைச் சுட்டிக்காட்டினார்.
 
13. பொள்ளாப்பிள்ளையார்
உளிபடாமல் உருவான பிள்ளையார் திருநாரையூரில் நம்பிக்கு கருணை செய்து அவர் தந்த பிரசாதத்தை உண்டவர்.
 
14. செவி சாய்த்த விநாயகர்.
திருவேதிக்குடி எனும் தேவாரத் தலத்தில் சிவனை நான்கு வேதங்களும் வழிபடும் போது தலை சாய்த்து வேதங்களைச் செவி மடுத்ததால் ‘செவி சாய்த்த விநாயகர்’ வேத விநாயகர் எனப்படுகிறார்.
 
15. கற்கடக விநாயகர்.
குடந்தைக்கு அருகே உள்ள திருந்து தேவன்குடி எனும் தலத்தில் நண்டு வழிபட்டதால் (கற்கடகம்) இறைவன் கற்கடகேசுவரர் என்றும் பிள்ளையார் ‘கற்கடகப்பிள்ளையார்’ என்றும் அழைக்கப் படுகின்றனர்.
 
16. ஆண்ட விநாயகர்
திருஇடைமருதூரில் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வருவதால் சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் உள்ள விநாயகர் ‘ஆண்ட விநாயகர்’ ஆகிறார். திருநறையூர்  சித்தீசுரத்திலும் இதே பெயர் பெறுகிறார்...
 
 

கோலாகல கோகுலாஷ்டமி!


கோலாகல பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும். இந்த நாளில் குழந்தை கிருஷ்ணர் நம்மைத் தேடி வருவதன் அடையாளமாக சின்னஞ்சிறு பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கோலமாக வரைவது வழக்கம். கிருஷ்ணன் கோவில்களில் உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்.

பூஜை செய்யும் முறை!

கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், முதிர் மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம். இல்ல வாயிலில் கோலமிட்டு, செம்மண் வரைய வேண்டும். கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து இல்லத்தின் உள்ளே வருவதுபோல கோலமாக வரைவர்.
வாயிலில் தோரணம் கட்டி, மாவிலை வைத்து வாயில் நிலைப்படியை அலங்கரிக்க வேண்டும்.
 
கிருஷ்ணரின் பிறந்தநாள் என்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த பட்சணங்கள் செய்ய வேண்டும். அதில் வெல்லச் சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தட்டை, களவடை- வெல்லச் சீடை மாவில் செய்வது, தேங்காய் பர்பி, திரட்டுப் பால் உட்பட பல பட்சணங்கள் செய்ய வேண்டும்.
 
முன்னதாக அலங்கரித்து வைத்துள்ள கிருஷ்ணர் படத்திற்கு அவரது பல நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் (சர்வே ஜனா சுகினோ பவந்து) என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்வது வழக்கம். கண்ணனை வேண்டிக்கொண்டால் அவன் நம் கவலைகள் யாவையும் தீர்ப்பான் என்பது ஐதீகம்.

எட்டு வகை கிருஷ்ணர்கள்!

ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.


1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.



2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.

 
 

3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.



4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.


5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.



6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.



7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.



8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

கிருஷ்ண ஜன்மாஷ்டமி:

ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற விழாவாகும். பொதுவாக சிவராத்திரியானது சிவனுக்கு சிறப்பாகும், நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம், ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.

ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப் படுகிறது.



ஸ்ரீ ஜெயந்தி!

கோகுலாஷ்டமியை ஸ்ரீ ஜெயந்தி என்றும் சொல்லுவார்கள். காரணம் லட்சுமியை பிரதானமாக வைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போது ஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். மற்ற அனைவரும் பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.

மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத் ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது.



வீட்டிற்கு வரும் கண்ணன்

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும்.

துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும்.

வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.




 

கரு காத்து அருளும் நாயகி கர்ப்பரட்சாம்பிகை!


 


திருத்தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர்.

இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, இறைவன் அருளினால் அவள் பெற்ற கரு கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து இயம்பினாள் வேதிகை.

 
தன் பக்தையின் நிலை அறிந்து அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி நைந்துருவன் என்ற பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.
 


கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள். இதன் காரணமாகவே இத்தலம் திருக்கருகாவூர் என்றும், இத்தல இறைவி கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் விளங்கப் பெற்றது.


இந்த நேரத்தில் அருட்குழந்தை நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால் இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால் பால்குளம் தோன்றியது.



இந்த புனித குளம் இன்றும் திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில் இருந்து வருகிறது. இத்தல கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கிட கரு உண்டாகிறது, கரு கலையாமல் நிலைக்கிறது, சுகப்பிரசவம் உண்டாகிறது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

தலமூர்த்தி: 
 


முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்) திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர்
 
இத்தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவினை, அடையாளத்தினை இன்றும் காணலாம்.
 

தல இறைவி:
கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)

தல விருட்சம்: முல்லைக்கொடி

தல தீர்த்தம்:
க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)
 


பிரம்மன் பூஜித்த வரலாறு:
படைப்புக் கடவுளான பிரம்மன் தன் படைப்புத் தொழிலின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்டு அந்த ஆணவத்தினால் அத்தொழில் செய்ய முடியாமல் போனது. அதன் காரணமாக இங்கு வந்து திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு தீர்த்தத்தை நிறுவி அதில் நீராடி முல்லைவனநாதரை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.

கார்க்கியர் பூஜித்த வரலாறு:
ஸ்வர்ணகாரன் என்ற வைசியன் தான் செய்த தீய செயல் காரணமாக பேயுரு அடைந்தான். அந்த உருவில் இருந்து தன்னை மீட்க வேண்டி கார்க்கியர் என்னும் முனிவரை நாடினான். அவரும் திருவாதிரை நன்னாளில் வைசியனை இத்திருக்கோயில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்தார். அவனும் பேயுரு நீங்கப் பெற்றான்.

கௌதமர் பூஜித்த வரலாறு:
ஒரு சமயம் தன்னிடம் புகலிடம் அடைந்த சில முனிவர்களின் சூழ்ச்சியினால் கௌதம முனிவர் பசுவதை செய்த பாவத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் போதாயனர் என்னும் முனிவரின் சொல்படி கௌதமர் திருக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி சிவலிங்கம் வைத்து பூஜித்தார். அவர் செய்த பசுவதை பழியும் நீங்கியது. அவர் வழிபட்ட லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியின் எதிரே தனிச் சன்னதியில் அமைந்துள்ளது.

மன்னர் குசத்துவன் சாப நீக்க வரலாறு:
மன்னன் குசத்துவன் ஒரு சமயம் சத்திய முனிவரின் சொல்லைக் கேட்காமல் அவர் வசித்த வனத்திலேயே வேட்டையாடினான். அதனால் முனிவரது சாபத்திற்கு ஆளாகி புலியின் உருவத்தைப் பெற்றான். தன் தவறை உணர்ந்து அம்முனிவரை மன்னன் வணங்கிட, அவர் இத்தலத்தில் உள்ள சத்தியகூப தீர்த்தத்தில் நீராடச் சொன்னார். அவ்வாறு செய்தமையால் மன்னன் தன் பழைய உருவினை அடைந்தான்.

சங்குகர்ணன் என்ற அந்தணனும் தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இத்திருத்தலம். தட்சனது சாபத்தால் வேதனையுற்ற சந்திர பகவான் இங்கு வந்து பங்குனி பௌர்ணமி நாளில் சிவ பூஜை செய்து நல்ல கதி அடைந்தான். இன்றும் பங்குனி பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.

இத்தலத்தலம் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். ராமலிங்க அடிகளாரும் இத்திருக்கோயிலைப் பாடியுள்ளார்.



திருக்கோயில் அமைப்பு:

திருக்களாவூர் என்னும் திருக்கருகாவூர் திருக்கோயிலில் தல இறைவன், விநாயகமூர்த்தி, நந்தி பகவான் மூவரும் சுயம்பு வடிவமாகவும், சிவன் சன்னதியின் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் அமைந்திருப்பது இத்தல சிறப்பாகும்.

பஞ்சாரண்யத் தலங்கள் என அழைக்கப்படும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய தலங்களில் முதலாவதாக அமைந்துள்ளது இந்த திருக்கருகாவூர் தலம். இத்திருத்தலத்திற்கு மாதவி வனம், முல்லைவனம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.




திருக்கருகாவூரைச் சேர்த்து ஒரே நாளில் தரிசித்துப் பலனடைய வேண்டிய திருக்கோயில்கள் பற்றிய விபரங்கள்:


1) முல்லைக்கொடி தலவிருட்சமாக உள்ள திருக்கருகாவூரில் விடியும் முன்னரே உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டும்.

2) பாதிரிமரம் தலவிருட்சமாக அமைந்துள்ள அவளிவனல்லூரில் காலை சந்தி காலத்தில் தரிசனம் செய்ய வேண்டும்.

3) வன்னிமரம் தலவிருட்சமாக உள்ள அரப்பெரும்பாழி என்னும் அரித்துவாரமங்கலத்தில் உச்சி காலத்தில் தரிசிக்க வேண்டும்.

4) பூளைமரம் தலவிருட்சமாக உள்ள இரும்பூளை ஆலங்குடியில் சாயங்காலத்தில் தரிசனம் மேற்கொள்ளவேண்டும்.

5) வில்வமரம் தலவிருட்சமாக உள்ள திருக்கொள்ளம்பூதூரில் அர்த்தஜாமப் பொழுதில் திருக்கோயில் தரிசனம் செய்யவேண்டும்.


திருக்கருகாவூர் சென்று கடவுள் வழிபாடு செய்வது முக்திக்கு வழிவகுக்கும் என்பதை,

தில்லை வனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர்
காஞ்சி கழக்குன்றம் மறைக் காருடணை காளத்தி
வாஞ்சிய மென் முத்தி வரும்


இப்பாடல் மூலம் அறிய முடிகிறது.

பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ள இத்தலம் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனது சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையினில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ள, இந்த சோமாஸ்கந்த அமைப்பினை சேர்ந்தாற்போல் வலம் வந்து வணங்குதல் சிறப்பு.


 
சுவாமி சன்னதிக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவையும், பிராகாரத்தில் மடப்பள்ளி, அறுபத்துமூன்று நாயன்மார்களும், நடராஜர் சபா மண்டபமும், யாக சாலையும் உள்ளன. நடராஜர் சன்னதி, நவக்ரகங்கள், சோமஸ்கந்தர் சன்னதி, தல விநாயகர் கற்பக விநாயகர் சன்னதி, நடராஜருக்கு எதிரே, சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும், ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் சன்னதிகளும், தலவிருட்சமாகிய முல்லைக்கொடியும் அமையப் பெற்றுள்ளன. இந்த முல்லைக்கொடி சண்டேசுவரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.
 
திருமணம் கூடிவர படிக்கு நெய்மெழுகுதல்:-
 
திருமணம் கூடிவராத கன்னியர்கள், இக்கோயிலுக்கு நேரில் வந்து அம்மன் சன்னதியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
 
குழந்தை பாக்கியம் பெற!
 
 
 
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரு உண்டாவதற்கு அம்பாள் பாதத்தில் நெய் பிரசாதம் வைத்து மந்திரிக்க வேண்டும். மந்திரித்த நெய் பிரசாத்துடன் அறை கிலோ சுத்தமான நெய் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த நெய்யை தினமும் இரவு தூங்கச்செல்லும் முன், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாளை நினைத்து வணங்கி தம்பதிகள் சாப்பிடவேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.
கணவனால் தினமும் நெய் சாப்பிடமுடியாவிட்டாலும் மனைவி சாப்பிட்டுவரவும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் மற்றும் இதர பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை. இதர மருந்து சாப்பிடுகிறவர்கள் அதனையும் சாப்பிடலாம்.
 
பெண்கள் மாதவிலக்கு காலங்களில் ஐந்து நாட்கள் நெய் சாப்பிடக்கூடாது. இவ்வாறு செய்து வந்தால் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளின் அருளால் மகப்பேறு உண்டாகும். நேரில் வர இயலாத வெளியூர் அன்பர்கள் ஆலய நிரவாகிக்கு நூறு ரூபாய் மணியார்டர் மூலம் அனுப்பி தபால்மூலம் மந்திரித்த நெய் பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

சுகப்பிரசவம் அடைய!
 
 
கர்ப்பினி பெண்கள் சுகப்பிரசவம் அடைய இத்திருக்கோயிலின் கர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது.
இந்த விசேஷமான எண்ணெய்... பிரசவ வலி ஏற்படும்போது கர்ப்பிணியின் வயிற்றில் தடவினால்  சுகப்பிரசவம் ஆகும் என்பது நெடுங்கால நம்பிக்கை.

 
தங்கத்தொட்டில் பிரார்த்தனை!
 
 
தமிழக திருக்கோயில்களிலேயே முதன் முறையாக தங்கத்தொட்டில் பிரார்த்தனை இக்கோயிலில் அறிமுகப்பப்படுத்தப் பட்டுள்ளது.
 
 
குழந்தை பேறு பெற்றுவர்கள் தங்கத்தொட்டில் பிரார்த்தனை நிறைவேற்றலாம். அதாவது குழந்தையை தொட்டிலில் இட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளலாம். தங்கத்தொட்டில் பிரார்த்தனைக்கு திருக்கோயில் அலுவலகத்தில் 550 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். 
 
 
குழந்தை இல்லாத தம்பதிகள் அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தங்கள் முந்தானையில் ஏந்தி அதனை தங்கத்தொட்டிலில் இட்டு சன்னதியை வலம் வந்தால் விரைவில் குழந்தை பேறு கிடைக்கும். 

இத்திருக்கோயிலை சுற்றி முல்லை மாகாளியம்மன் திருக்கோயிலும், வரதராஜ பெருமாள் திருக்கோயிலும், பிள்ளையார் கோயில் ஒன்றும், திரௌபதி அம்மன் திருக்கோயிலும்,  மாரியம்மன் கோயிலும், ஐயனார் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் சோமஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் அழகாம்சம் நிறைந்தவை.

திருவிழாக்கள்:

சுவாமிக்கு வைகாசி விசாக பிரம்மோற்சவமும், அன்னைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி விழாக்களும், நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மேலும், அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபத் திருவிழா, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ விழாக்கள் போன்றவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முதலில் சிவ வணக்கமும் சக்தி வணக்கமும் தனித்தனியாக இருந்து பின்னர் இரண்டு வணக்கமும் ஒன்றாகத் திகழந்தது. காஞ்சிபுரம், கருகாவூர் தலங்களில் சோமஸ்கந்தர் அமைப்பைக் காணலாம். போகச்சக்திக்கு சிவசன்னதிக்கு அருகில் ஆலயம் இருக்கும். இங்கே தனியே அம்பாள் சன்னதி அமைந்துள்ளதால், இது வீரசக்தி என அழைக்கப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு:


இத்திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. சுக்கில பட்ஷம், கிருஷ்ண பட்ஷம் என்னும் இரண்டு பட்சத்திலும் வருகின்ற திரயோதசி திதியில் சூரியன் மறைவதற்கு முன்னதாக மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்னர் மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலம் என்கின்றனர். (மாலை 4:30 முதல் 7:30 மணி வரை உள்ள காலம்). இந்த நேரத்தில் சிவபிரான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிகிறார் என்பது ஐதீகம்.

திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம்!


ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!!

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருங்குழி தேடித் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே!!

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே!!

பூவின் மணத்தை பொருந்திய வாயுவுந்
தாவி உலகின் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவினில் மெல்ல நீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிகொண்ட போதே!!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே!!

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே!!

ஏயங் கலந்த இருவர்தரு சாபத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காண பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே!!

கர்ப்பத்துக் கேவல மாயால் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே!!

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலைசெய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே!!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப்பகலோன்
இதஞ்செய்யும் மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ் செய்யும் அங்கியின் கோபந்தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந்தானே!!

ஒழிபல செய்யும் வினையுற்ற நானே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைக்
கழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே!!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண் சாணது வாகுமே!!

போகத்துள் ஆங்கே புகுந்து புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே!!

பிண்டத்தின் உள்ளுறுபேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தினூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே!!

இலைப்பொறி யேற்றி யெனதுடல் வைத்தமன் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பத்து நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே!!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே!!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினும் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே!!

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கைகலந் தேனே!!

கேட்டுநின் றேன் எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழல் பின்கரு வையுரு
நீட்டிநின் றாகத்துநேர்பட்ட வாறே!!

பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்தபின்
காவுடை தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே!!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று காரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்றுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுஙகண்ணுதல் காணுமே!!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிட
பண்ணுதல் செய்து பசுபாவம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக எடுத்துவைத் தானே!!

அருளள்ள தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயார் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே!!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிற சோதி யவனும்
பகுத்துணீர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பதுவாமே!!

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதி தன் ஆண்மையே!!

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாரும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே!!

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் னாலோடில பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமாமே!!

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே!!

மாதா உதரம் மலமிகில் மந்தனும்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே!!

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அழியாகுங் கொண்டதால் ஒக்கிலே!!

கொண்டநல்வாயு இருவர்க்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியுங் கோமள மாயுடுங்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே!!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப்
போல் வளர்ந்துள்ளே பொருந்துருவாமே!!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம் தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம் தாவதிங் காரறிவாரே!!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மை யெவ்வாறே!!

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புற பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாசி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலுமாமே!!

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே!!

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய் இன்ப மாவதுபோல்
அதற்கது வாய் நிற்கும் ஆதிப் பிரானே!!

ஏனோர் பெருமைய னாகினும் எம்மிறை
ஊணே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினுள்ளே!!

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைகடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே!!

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்:
முத்திலங்கு முறுவல் லுமையஞ்சவே
மத்தயானை மருகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர்ரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே!!

அப்பர் திருத்தாண்டவம்:
குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாம்கருகாவூ ரெந்தைதானே!!

பாபநாசத் திருப்பதிகம்:
மருகல் உறையும் மாணிக்கத்தை
வலஞ்சுழியில் மாமாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக் .
காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலியை
பேணுவார்கள் பரிவரிய
திருவாஞ்சியத் தெம் செல்வனை
சிந்தையுள்ளே வைத்தேனே!!

க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகம்:
திண்டிச்சரம் செய்ஞலூர் செம்பொன்பள்ளி
தெவூர்சிராபுரம் சிற்றேம் சேறை
கோண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர்
கூடல் குருகாவூர் வெள்ளடை குமரிகொங்கு
அண்டர்தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமத்தூரும்
கண்டியூர் வீரட்டம்கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே!!
- அப்பர்

 
 
திருக்கோயில் அமைவிடம்:

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி
திருக்கருகாவூர் அஞ்சல்,
பாபநாசம் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.
தொலைபேசி : 04374....273423
www.garbaratchambigaitemple.org
e.mail id: garbaratchambigai@ sancharnet.in

 
வழித்தடம் : 
 
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு ரயில் வசதியும் உள்ளது.  கும்பகோணம், தஞ்சாவூரில் இருந்து திருகருகாவூருக்கு பஸ் வசதி உள்ளது.

 

மங்கலங்கள் பொங்கிப் பெருகச் செய்யும் மாதங்கி!


பராசக்தி எடுத்த தசமகாவித்யா அவதாரங்களில் ஒன்பதாவதான மாதங்கி, பெரிதும் போற்றி வணங்கப்படுகிறாள். லலிதா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் மாதங்கி. அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில், கற்பக மரங்கள் செறிந்த காட்டில், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்தினுள், தங்க சிம்மாசனத்தில் இந்த தேவி அமர்ந்தருள்கிறாள். மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள்.

மகிஷாசுர வதத்தின்போது இவள் சும்ப-நிசும்பர்களை வதைத்தவள் என சப்தசதீ பெருமையுடன் போற்றுகிறது. மகாதிரிபுரசுந்தரி, பண்டாசுரனுடன் வதம் செய்ய முற்பட்டு நிகழ்த்திய பெரும் போரில், மாதங்கி, விஷங்கன் எனும் அசுரனை அழித்தாள் என லலிதோபாக்யானமும் இவள் புகழ் பாடுகிறது. வாக்விலாசத்திற்கும் அறிவின் விருத்திக்கும் இவள் அருள் கட்டாயமாகத் தேவை. புலவர்களை மன்னர்களுடன் சரியாசனத்தில் வைக்கக் கூடிய வல்லமை இவளுக்கு உண்டு.  இவளை ராஜசியாமளா என்றும் அழைப்பர்.



மாதங்கியின் மந்திரம், 98 எழுத்துக்கள் கொண்டதாகும். மாதங்கி மந்திரம் ஒருவருக்கு சித்தியாகிவிட்டால் உலகில் உள்ள மற்ற வேத மந்திரங்கள் உட்பட அனைத்துமே ஒரு முறை படிப்பதாலேயே சித்தியாகும் என மதங்கமனுகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவமே மாதங்கி. லலிதாம்பிகையின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் இவள், அந்த லலிதா பரமேஸ்வரிக்கே ஆலோசனை கூறும் மந்த்ரிணீயானவள். இவளின் ரதம் கேயசக்ர ரதம் என அழைக்கப்படுகிறது. கேயம் எனில் பாட்டு. கேயசக்ர ரதம் அசைந்து வரும்போது, அதன் ஒலி, சங்கீதமாய் கானம் இசைக்கும்.

எப்போதும் தவழும் புன்முறுவலுடனும் சுழன்று மயக்கும் விழியுடையவளாக இத்தேவி விளங்குகிறாள். கதம்ப மலர்கள் தேவியின் கூந்தலை அலங்கரிக்கும் பேறு பெற்றன. மடியில் வீணையை வைத்துக் கொண்டு கீழ் இரு திருக்கரங்களால் அதை மீட்டிக் கொண்டும் மேலிரு கரங்களில் சம்பா நெற்கதிர்களையும் கரும்பு வில்லையும் ஏந்தியுள்ளாள். மற்ற நான்கு திருக்கரங்களில் கிளி, சாரிகை ஆகிய பறவைகளும் பாசமும் அங்குசமும் அலங்கரிக்கின்றன.

திருமுகம் பொலிவாய்த் துலங்க, நெற்றியில் கஸ்தூரி திலகம் பளிச்சிடுகிறது. திருமுடியில் சந்திர கலையுடன் கூடிய கிரீடம் மின்னுகிறது. சர்வாலங்கார பூஷிதையாக தேவி பொலிகிறாள். பருத்து நிமிர்ந்த மார்பகங்களின் கனத்தால் இடை துவண்டு உள்ளது. மரகத மணியின் நிறத்தைப் போல ஜொலிக்கும் பச்சை நிற மேனியள். வலது பாதத்தை மடித்து, இடது பாதத்தை தொங்கவிட்ட நிலையில் அருள்பவள். செவிகளில் சங்கினால் ஆன காதணிகளை அணிந்துள்ளாள். சில நூல்களில் பனை ஓலையால் ஆன காதணிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவள் கரங்களில் உள்ள நெற்பயிர் உலகியல் இன்பங்களின் தொகுதியையும் கரும்பு வில், அழகு சாதனங்களையும், பாசம், ஆகர்ஷண சக்தியையும் சாரிகை, உலகியல் ஞானத்தையும் கிளி, ஆன்மிக அறிவையும் வீணை, பர-அபர போகங்களையும் காட்டுகின்றன. இத்தேவியின் வழிபாட்டில் உலகியல் இன்பம் துறக்கப்படுவதில்லை. மாதங்கி உபாசனை சகல கல்வி கேள்விகளிலும் தேர்ச்சியை அதி சீக்கிரத்தில் அருளும்; விசேஷமான இன்பக் கலைகளில், நுண்கலைகளில், இன்னிசைக் கலைகளில் உபாசகனுக்கு வெற்றி எளிதில் கிட்டுகிறது.



இந்த மாதங்கியைப் பற்றி அபிராமி பட்டர், தனது அபிராமி அந்தாதியின் எழுபதாவது பாடலில், 

கண் களிக்கும்படி கண்டு கொண்டேன், கடம்பாடவியில்
பண்களிக்கும் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர் குலப்
பெண்களிற் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!

-என்று போற்றுகிறார்.

மகாகவி காளிதாஸர், மாதங்கி உபாசனையால் பல அற்புத சக்திகளைப் பெற்றார். அவர் இந்த மாதங்கியைப் போற்றி ‘ச்யாமளா தண்டகம்’ எனும் அதியற்புத துதியைப் பாடியுள்ளார். அதில் இந்த மாதங்கியே சர்வ தீர்த்தம், சர்வ மந்த்ரம், சர்வ தந்த்ரம், சர்வ சக்தி, சர்வ பீடம், சர்வ தத்வம், சர்வ வித்யை, சர்வ யோகம், சர்வ நாதம், சர்வ சப்தம், சர்வ ஸ்லோகம். சர்வ தீக்ஷை, முதலான சர்வ ஸ்வரூபிணியாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவளாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

லலிதா திரிபுரசுந்தரி வாசம் புரிந்தருளும் ஸ்ரீநகர ஸாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த மாதங்கியுடையதே.

இவளால் செயல்படுத்த முடியாதது என்று எதுவுமே இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் பெறக்கூடிய வாக்கு வல்லமை, சக்தி, பிறரைத் தன் வசமாக்கிக் கொள்ளும் தன்மை, பயமற்ற நிலை, மனதில் பதட்டப்படாத நிலை, எடுத்த செயலை சிரமம் இல்லாமல் நடத்தி முடிக்கும் தன்மை, பின்வரக்கூடிய இடையூறுகளை முன்னதாகவே யோசித்து அதனைச் சரிப்படுத்தும் வல்லமை போன்றவை இந்த மாதங்கி உபாசனையால் ஏற்படும் பலன்கள்.

லலிதையின் மந்திரிணியாக, பூரண மகாசக்தியாக, மதுரையம்பதியில் பிரகாசிக்கும் மீனாட்சி, மாதங்கியின் வடிவம்.

மாதங்கி உபாசனை, கல்வி கேள்விகளில் அதி சீக்கிரத்தில் தேர்ச்சியை அருள்கிறது. விசேஷமான இன்பக் கலைகளிலும் நுண்கலைகளிலும் இன்னிசைக் கலைகளிலும் உபாசகன் வெற்றியை வெகு எளிதில் அடைகிறான்.

வாக்வாதினி, நகுலீ என இவளுக்கு இரு தோழிகள். வாக்வாதினி தேவி நம்மை நன்றாகப் பேச வைக்கும் சக்தி. நகுலீயின் சக்தி எதிரிகளின் வாக்கை அடைத்து, பிறரை விட ஆயிரம் மடங்கு இனிமையாக, தெளிவாகப் பேசி, தன் வயமாக்குவதே. ஞானம் பெற்றாலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உண்டு. அத்தவறுகள் விஷம் போன்றவை. நகுலம் எனில் கீரிப்பிள்ளை. தவறுகள் என்ற விஷத்தால் பாதிக்கப்படாமல் இருக்க இவள் தயவு அவசியம்.

நாம் பேசும் வார்த்தை இனிமையாக இருந்தால் அதை சங்கீதம் என்பதுண்டு. இனிமையான பேச்சு, கிளியை நினைவுறுத்தும். எனவே, அதை தேவி தன் கைகளில் ஏந்தியுள்ளாள். இந்த தேவியை அறுபத்தி நான்கு முக்கியமான யோகினிகள் எப்போதும் பூஜித்துக் கொண்டும் பணிவிடை செய்து கொண்டும் இருப்பர்.

இந்த மாதங்கியைக் குறித்து சியாமளா தண்டகம், சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், சியாமளா அஷ்டோத்திரம், சியாமளா கவசம், ராஜமாதங்கி மந்த்ரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், மாதங்கி ஹ்ருதயம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் என பல்வேறு துதிகள் உண்டு.

கீழ்க்காணும் பதினாறு நாமங்களால் அன்னை மாதங்கியை அர்ச்சித்து அனைத்து நலன்களையும், விரைவாகப் பெறலாம்.

சங்கீதயோகினி, ச்யாமா, மந்த்ரநாயிகா, ச்யாமளா, மந்த்ரிணீ, ஸசிவேசானீ, ப்ரதானேஸ்வரி, ஸுகப்பிரியா, வீணாவதி, வைணிகீ, முத்ரிணீ, ப்ரியகப்ரியா, நீபப்ரியா, கதம்பேசீ, கதம்பவனவாஸினி, ஸதாமதா.

மேற்கூறியவறு இவளை சஞ்சலமின்றி அர்ச்சிப்பவர்களின் இல்லங்களில் லட்சுமி தேவி நித்யவாசம் செய்வாள். ருதுவாகாத பெண்கள் இவள் ஆராதனையால் ருதுவாவார்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேர்வர். சோம்பல், பயம், துக்கம் இம்மூன்றும் இவளை ஆராதிப்பவர்களுக்குக் கிடையாது.

எல்லா பாக்கியங்களையும் பெற மல்லிகை, ஜாதி மல்லி ஆகிய மலர்களால் இத்தேவியை அர்ச்சிக்க வேண்டும்.

அரச போகங்களை வேண்டுவோர் வில்வதளங்களாலும் விசேஷமாக தாமரை மலர்களாலும் பூஜிக்க வேண்டும்.

சொல்வன்மை, கவிபாடும் திறமை வேண்டுவோர் செம்பருத்திப்பூக்களால் இத்தேவியை ஆராதனை புரியவேண்டும். செல்வவளம் சிறக்க கருங்குவளை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.


மாதங்கி த்யானம்!

த்யாயேயம் ரத்னபீடே ஸுககலரணிதம்
             ஸ்ருண்வதீம் ஸ்யாமகாத்ரீம்
ந்யஸ்தைகாங்க்ரிம் ஸரோஜே ஸஸிஸகல
                 தராம் வல்லகீம் வாதயந்தீம்
கல்ஹார பத்தமாலா நியமித விலஸச்சூலிகாம்
                                    ரக்தவஸ்த்ராம்
கர்ணோத்யச்சங்க பத்ராம் கடிநகுசபர
                க்லாந்தகாந்தாவலக்நாம்

மாதங்கி காயத்ரி!

ஓம் மாதங்க்யை வித்மஹே
      ரத்னேஸ்வர்யை தீமஹி
தன்னோ மாதங்கி ப்ரசோதயாத்.


தரிசனம்!

இந்த ராஜசியாமளாவின் அழகான திருவுருவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் காயத்ரி மண்டபத்திற்கு வலப்புறத்தில் தரிசித்து மகிழலாம்; புதுக்கோட்டை புவனேஸ்வரியின் கருவறையின் முன்னும், சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி ஆலய கருவறை முன்னும் மாதங்கியின் நின்ற கோல திருவுருவங்களை தரிசிக்கலாம்.

அபரிமித செல்வத்தையும் ஞானத்தையும் நல்ல புகழையும் முக்தியையும் தரவல்ல மதங்கமுனிவரின் மகளான மாதங்கி அனவரதமும் அடியவர்களைக் காக்கட்டும்.



ஐவர்பாடி பிரத்யங்கிரா தேவி!


ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னரும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவபெருமான் சரபேஸ்வரராக உரு வெடுத்தார். சரபம் பாதி பறவை உருவத்தையும் பாதி யாளி உருவத்தையும் கொண்ட பிரமாண்ட பறவை. கூரிய நகங்களையும் பற்களையும் கொண்டது. சரபரும் நரசிம்மமும் சண்டையிட்டனர். நீண்ட  நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்யங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.



நரசிம்மருக்கும் சர பருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பட்சியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பட்சிக்கு கடும் எதிரியாகும். மிகுந்த கோபத் தில் இருந்த சரபருக்கு அவர் நெற்றிக் கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள்.

 சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும் சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவியர். இருவரும் சரபருக்கு  இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியேதான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா  என்று அழைக்கப்படுகிறாள். நரசிம்மர் சாந்தமானார்.

தான் சிவபெருமானுடன் சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18 ஸ்லோகங்களால் துதித்தார். இந்த 18 ஸ்லோகங்களே சரபேஸ்வரரின்  அஷ்டோத்திர நாமாக்கள். இந்த அம்பிகையின் மந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்ற ரிஷிகள். இத்தேவியின் நாமமே அந்த இரு ரிஷிகளின் பெயர்களிலும் உள்ளன.



தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவ பெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்யங்கிராதான். குரோதத்திலிருந்து உதித்தவளாதலால் இவளுக்கு குரோத சம்பவாயா என ஒரு திருநாமமும் உண்டு. சிவ  த்வேஷத்தை ஒழிக்க இவள் உதித்ததால் உலகிற்கே மங்கலம் ஏற்பட்டது. இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கூட தன்னை வெல்ல முடியாது என்பதை  உணர்ந்த இந்திரஜித், நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான்.

தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்யங்கிராவின்  அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தார்.  இவளை உபாசிப்பவர்கள் கடன், சத்ரு தொல்லைகளிலிருந்து மீள்வர். 16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வர்.

அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கிரா தேவி. இவள் பத்ரகாளியின் அம்சம். பிரத்யங்கிரா தேவிக்கான திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில், ராகு தோஷ பரிகாரத் தலமான திருநாகேஸ்வரம் மற்றும் திவ்ய தேச தலமான  ஒப்பிலியப்பன் திருக்கோயில் அருகில் அமைந்துள்ளது. ஆலய அமைவிடத்தின் பெயர் ஐவர்பாடி.

பஞ்ச பாண்டவர்கள் இத்தலம் வந்து தேவியை பூஜித்து அருள் பெற்றதால் இப்பெயர். பின்னர்  இதுவே மருவி அய்யாவாடி என்றானது.



தேவி சிங்க முகத்துடனும் கரிய உடலுடனும் சிறிய கண்களுடனும் கைகளில் சூலம், கபாலம், டமருகம், பாசம் போன்ற ஆயுதங்கள் ஏந்தியும் நீல நிற ஆடை  உடுத்தி, தனது வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சிங்கத்தின் மீது சிம்மவாகினியாய் வீற்றிருந்து திருவருள் பாலிக்கின்றாள். 

அகோர ரூபம் என்றாலும் தேவி இங்கு சர்வமங்களங்க ளையும் அருளும் குணம் கொண்டவள். பயம் நீக்குபவள். எந்தவித பயம் ஏற்பட்டாலும் இத்தேவியின் நாமத்தை சொல்ல அந்த பயங்கள் தீர துணையிருப்பவள். கேட்டவர்க்கு கேட்டதை அருளும்  இவள் பக்தருக்கு உறுதுணையாய் கூடவே இருப்பவள்.

பஞ்ச பாண்டவர் இந்த தேவியை பூஜித்ததன் சாட்சியாக இத்தலத்தில் உள்ள தல விருட்சம் ஐந்து விதமான இலைகளை கொண்டுள்ளது.

 பிரத்யங்கிராதேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கிரா, பிராம்மி பிரத்யங்கிரா, ருத்திர பிரத்யங்கிரா, உக்கிர பிரத்யங்கிரா, அதர்வண பிரத்யங்கிரா, சிம்ம முகக் காளி, மும்முக ப்ரத்யங்கிரா, ஸ்ரீ மகா  பிரத்யங்கிரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள். கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர். இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே  தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர். தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லட்சுமி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர். உக்கிர தெய்வமாக காணப்பட்டாலும்  இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

‘‘ ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலாஜிஹ்வே கராள
                          தம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹூம்பட்’’

என்ற இவளது மூல மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து, இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர் தொல்லைகள் அறவே  தீரும்.




ப‌ச்சை‌க் ‌கி‌ளிக‌ள் வ‌ழிபடு‌ம் ஹனும‌ன்!


பறவைகளு‌க்காக ம‌ட்டுமே ஆ‌யிர‌க்கண‌க்கான ‌கிலோ தா‌னிய‌ங்க‌ள் ‌சித‌றி‌க்‌கிட‌ப்பதை ‌நீ‌ங்க‌ள் க‌ண்டது‌ண்ட? அ‌‌ந்த‌த் தா‌னிய‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான ப‌ச்சை‌க் ‌கி‌ளிக‌ள் கொ‌த்‌‌தி‌த் ‌தி‌ன்னு‌ம் கா‌ட்‌சியை ‌நீ‌ங்க‌ள் எ‌ப்போதாவது பா‌ர்‌த்தது‌ண்டா?

இ‌ந்த‌க் கே‌ள்‌விகளு‌க்கு ‌நீ‌ங்க‌ள் இ‌ல்லை எ‌ன்று ப‌தில‌‌ளி‌த்தா‌ல், உ‌ங்களை நா‌ங்க‌ள் ம‌த்‌திய ‌பிரதேச மா‌நில‌‌த்‌தி‌ல் இ‌ந்தூ‌ர் அரு‌கி‌ல் உ‌‌ள்ள ப‌ஞ்‌ச்குயா‌ன் ம‌ந்‌தி‌ர் எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌ல்‌கிறோ‌ம்.

இ‌ங்கு அமை‌ந்து‌ள்ள ஹனும‌ன் கோ‌யி‌ல் ‌மிகவு‌ம் புக‌ழ்பெ‌ற்றது. இ‌ந்த‌க் கோ‌யி‌ல் “ப‌ஞ்‌ச்குயா‌ன் ஹனும‌ன் ம‌ந்‌தி‌ர” எ‌ன்று பரவலாக அ‌றிய‌ப்படு‌கிறது. இ‌ங்கு ஆ‌யிர‌க்கண‌க்கான அ‌ல்லது அத‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட எ‌ண்‌ணி‌க்கை‌யிலான ப‌ச்சை‌க் ‌கி‌ளிக‌ள் நா‌ள்தோறு‌ம் வரு‌கி‌ன்றன.

இ‌ந்த‌க் கோ‌யி‌‌ல் வளாக‌த்‌தி‌ற்கு‌ள் ‌சி‌றிய ‌சிவ‌ன் கோ‌யிலு‌ம் அமை‌ந்து‌ள்ளது. ம‌னித‌‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது ப‌ச்சை‌க் ‌கி‌ளிக‌ள் கூட கடவு‌ள் ‌மீது ஏராளமான ப‌க்‌தி கொ‌ண்டிரு‌ப்பதை இ‌ங்கு காண முடியு‌ம். கட‌ந்த பல வருட‌ங்களாக ப‌ச்சை‌க் ‌கி‌‌ளிக‌ள் இ‌ங்கு வருவதாக‌க் கோ‌யி‌லி‌ல் வ‌சி‌க்கு‌ம் துற‌விக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.



நா‌ள்தோறு‌ம் 4 ஆ‌யிர‌ம் ‌கிலோ தா‌னிய‌ங்க‌ள் ப‌ச்சை‌க் ‌கி‌ளிக‌ள் உ‌ண்பத‌ற்காக பர‌ப்ப‌ப்படு‌கி‌ன்றன.
தா‌னிய‌ங்களை உ‌ண்பத‌ற்கு மு‌ன்பு ஒ‌வ்வொரு ‌கி‌ளியு‌ம் தனது தலையை ஹனும‌ன் ‌சிலையை நோ‌‌க்‌கி‌த் ‌திரு‌ப்‌பி வ‌ழிபடு‌கிறது. ‌பிறகு மே‌ற்கு‌ப் புறமாக‌த் ‌திரு‌‌ம்‌பி தா‌னிய‌‌த்தை‌க் கொ‌த்‌தி‌த் ‌தி‌ன்‌கிறது. ப‌ச்சை‌க் ‌கி‌ளிக‌ளி‌ன் இ‌ந்த‌‌ப் ப‌க்‌‌தியை‌க் க‌ண்டு அனைவரு‌ம் ‌விய‌க்‌கி‌ன்றன‌ர்.


ப‌ச்சை‌க் ‌கி‌ளிக‌ளி‌ன் வருகை நா‌ள்தோறு‌ம் அ‌‌திக‌ரி‌த்து வருவதா‌ல், 3,000 சதுர அடி‌பர‌ப்பளவு‌ள்ள கா‌ன்‌கி‌ரீ‌ட் கூரையை ‌சில ப‌க்த‌ர்க‌ளி‌ன் உத‌வியுட‌ன் கோ‌யி‌ல் ‌நி‌ர்வாக‌ம் அமை‌த்து‌ள்ளது. ‌தினமு‌ம் காலை 5.30 முத‌ல் 6.00 ம‌ணி வரையு‌ம், மாலை‌4 முத‌ல் 5 ம‌ணி வரையு‌ம் கா‌‌ன்‌கி‌ரீ‌ட் தள‌த்‌தி‌ன் ‌மீது தா‌னிய‌ங்க‌ள் பர‌ப்ப‌ப்படு‌கி‌ன்றன. சுமா‌ர் 1 ம‌ணி நேர‌த்‌தி‌ல் தா‌னிய‌ங்க‌ள் முழுவதையு‌ம் ‌கி‌ளிக‌ள் ‌தி‌ன்று ‌விடுவதாக, கோ‌யி‌ல் ப‌ணியாள‌ர் ரமே‌ஷ் அக‌ர்வா‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கோ‌யி‌லி‌ற்கு வரு‌ம் ப‌க்த‌ர்க‌ள் வ‌ழிபா‌ட்டி‌ற்கு‌ப் ‌பிறகு ‌பிரசாத‌ம் பெ‌ற்று‌ச் சா‌ப்‌பிடு‌ம் அதே நேர‌த்‌தி‌ல் ப‌ச்சை‌க் ‌கி‌ளிகளு‌ம் தா‌னிய‌த்தை உ‌ண்ண‌த் துவ‌ங்குவது, ஒ‌ன்று‌க்கொ‌‌ன்று தொட‌ர்புடைய ‌நிக‌ழ்வாக ‌விய‌க்க வை‌க்‌கிறது.


 

வேண்டுவன அருளும் காயத்ரி மந்திரம்!


கீதையில் கண்ணன், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். மஹாவிஷ்ணுவின் திரு முகத்திலிருந்து தோன்றிய மந்திரம் இது! காயத்ரிக்கு மூன்று கண்கள், ஐந்து முகங்கள், பத்து கரங்கள் உண்டு. வாகனம்- அன்னம். சிவன்போல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என ஐந்து தொழில்களை காயத்ரியின் ஐந்து முகங்களும் செய்கின்றன. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து சக்திகளின் முகங்களே காயத்ரியின் ஐந்து முகங்கள்.

இம்மந்திரம் உள்ளத்தை இதமாக்கும். மந்திரங்களிலேயே மிகவும் உயர்வான மந்திரம் இது. வேதங்களின் தாய் காயத்ரி. இந்த மந்திரம் வேத மந்திரங்களில் சிரேஷ்டமானது. இது பாவங்களைப் போக்கும். நல்ல ஆரோக்கியம், அழகு, பலம், வீர்யம், பிரும்ம தேஜஸ் முதலானவற்றைத் தருகிறது. மனதைப் பரிசுத்தப்படுத்து கிறது. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளைக் கொடுக்கிறது. சக்தி மானாகவும் புத்திமானா கவும் ஆக்குகிறது.



ஜபிக்கும் முறை

சுண்டு விரல் அடியிலிருந்து ஒவ்வொரு கணுவாக எண்ணி (3), மோதிர விரல் நுனி (1), நடுவிரல் நுனி (1), ஆட்காட்டிவிரல் நுனி (1), கட்டை விரல் இரண்டு கணு (2), ஆள்காட்டி விரலின் கீழ்க்கணு (1), நடுவிரலின் கீழ்க்கணு (1), மோதிர விரல் கீழ்க்கணு (1) என்று மொத்தம் 11 எண்ணிக்கையில் எண்ணி இந்த மந்திரத்தை ஓத வேண்டும். "ஓம், பூர்புவ, சுவஹ' என சொல்லிக் கொண்டே எண்ணினால் 11 சொற்கள் வரும்.

விசுவாமித்திரரால் இம்மந்திரம் இராம பிரானுக்கு உபதேசிக்கப்பட்டு, அதன் பலனாக இராமன் இராவணனை வென்றார் எனக் கூறப் படுகிறது. காயத்ரி மந்திரத்தை 27 முறை ஜபித் தல் நலம். ஜபிக்கும்போது ஒழுக்க நெறியோடும் உள்ளத் தூய்மையோடும் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் விரும்பிய பலனை அடையலாம்; விரும்பிய லோகம் செல்லலாம் என்கிறது சாஸ்திரம்.

இம்மந்திரத்தை வாயால் உச்சரித்து ஜபித்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். அதிக சப்தமில்லாமல் ஜபித்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். உதடு அசைத்து ஜபித்தால் நூறு மடங்கு பலன் கிட்டும். மனதில் ஜபித்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். அதுபோல் பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜபித்தால் ஒரு பங்கு பலனும், நதிக்கரையில் அமர்ந்து ஜபித்தால் இரு மடங்கு பலனும், பசுவின் கொட்டடியில் அமர்ந்து ஜபித்தால் பத்து மடங்கு பலனும், யாக சாலை யில் ஜபித்தால் நூறு மடங்கு பலனும், பாடல் பெற்ற ஸ்தலங்களில் அமர்ந்து ஜபித்தால் நூறாயிரம் மடங்கு பலனும் கிடைக்கும். பெருமாள் சந்நிதியில் செய்யும் காயத்ரி ஜபப் பலனுக்கு எல்லையே இல்லை!



காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்.


இம்மந்திரம் ஜபித்த மூடனும் மகா ஞானி ஆவான். தரித்திரன் தனவந்தனாவான். தினமும் உச்சாடனம் செய்தால் வாழ்வில் மேன்மையும் எடுத்த காரியத்தில் வெற்றியும் பெறுவது சர்வ நிச்சயம். காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமாகக் கொண்டது. எனவே சூரியனை வணங் குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சம மாகும். இப்போது விநாயக காயத்ரி, சண்முக காயத்ரி, அனுமன் காயத்ரி என ஒவ்வொரு தெய்வத்தையும் முழு முதலாகக் கொண்ட காயத்ரி மந்திரங்களும் வழிபாட்டில் உள்ளன.