Friday 19 August 2016

வேண்டுவன அருளும் காயத்ரி மந்திரம்!


கீதையில் கண்ணன், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். மஹாவிஷ்ணுவின் திரு முகத்திலிருந்து தோன்றிய மந்திரம் இது! காயத்ரிக்கு மூன்று கண்கள், ஐந்து முகங்கள், பத்து கரங்கள் உண்டு. வாகனம்- அன்னம். சிவன்போல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என ஐந்து தொழில்களை காயத்ரியின் ஐந்து முகங்களும் செய்கின்றன. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து சக்திகளின் முகங்களே காயத்ரியின் ஐந்து முகங்கள்.

இம்மந்திரம் உள்ளத்தை இதமாக்கும். மந்திரங்களிலேயே மிகவும் உயர்வான மந்திரம் இது. வேதங்களின் தாய் காயத்ரி. இந்த மந்திரம் வேத மந்திரங்களில் சிரேஷ்டமானது. இது பாவங்களைப் போக்கும். நல்ல ஆரோக்கியம், அழகு, பலம், வீர்யம், பிரும்ம தேஜஸ் முதலானவற்றைத் தருகிறது. மனதைப் பரிசுத்தப்படுத்து கிறது. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளைக் கொடுக்கிறது. சக்தி மானாகவும் புத்திமானா கவும் ஆக்குகிறது.



ஜபிக்கும் முறை

சுண்டு விரல் அடியிலிருந்து ஒவ்வொரு கணுவாக எண்ணி (3), மோதிர விரல் நுனி (1), நடுவிரல் நுனி (1), ஆட்காட்டிவிரல் நுனி (1), கட்டை விரல் இரண்டு கணு (2), ஆள்காட்டி விரலின் கீழ்க்கணு (1), நடுவிரலின் கீழ்க்கணு (1), மோதிர விரல் கீழ்க்கணு (1) என்று மொத்தம் 11 எண்ணிக்கையில் எண்ணி இந்த மந்திரத்தை ஓத வேண்டும். "ஓம், பூர்புவ, சுவஹ' என சொல்லிக் கொண்டே எண்ணினால் 11 சொற்கள் வரும்.

விசுவாமித்திரரால் இம்மந்திரம் இராம பிரானுக்கு உபதேசிக்கப்பட்டு, அதன் பலனாக இராமன் இராவணனை வென்றார் எனக் கூறப் படுகிறது. காயத்ரி மந்திரத்தை 27 முறை ஜபித் தல் நலம். ஜபிக்கும்போது ஒழுக்க நெறியோடும் உள்ளத் தூய்மையோடும் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் விரும்பிய பலனை அடையலாம்; விரும்பிய லோகம் செல்லலாம் என்கிறது சாஸ்திரம்.

இம்மந்திரத்தை வாயால் உச்சரித்து ஜபித்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். அதிக சப்தமில்லாமல் ஜபித்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். உதடு அசைத்து ஜபித்தால் நூறு மடங்கு பலன் கிட்டும். மனதில் ஜபித்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். அதுபோல் பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜபித்தால் ஒரு பங்கு பலனும், நதிக்கரையில் அமர்ந்து ஜபித்தால் இரு மடங்கு பலனும், பசுவின் கொட்டடியில் அமர்ந்து ஜபித்தால் பத்து மடங்கு பலனும், யாக சாலை யில் ஜபித்தால் நூறு மடங்கு பலனும், பாடல் பெற்ற ஸ்தலங்களில் அமர்ந்து ஜபித்தால் நூறாயிரம் மடங்கு பலனும் கிடைக்கும். பெருமாள் சந்நிதியில் செய்யும் காயத்ரி ஜபப் பலனுக்கு எல்லையே இல்லை!



காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்.


இம்மந்திரம் ஜபித்த மூடனும் மகா ஞானி ஆவான். தரித்திரன் தனவந்தனாவான். தினமும் உச்சாடனம் செய்தால் வாழ்வில் மேன்மையும் எடுத்த காரியத்தில் வெற்றியும் பெறுவது சர்வ நிச்சயம். காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமாகக் கொண்டது. எனவே சூரியனை வணங் குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சம மாகும். இப்போது விநாயக காயத்ரி, சண்முக காயத்ரி, அனுமன் காயத்ரி என ஒவ்வொரு தெய்வத்தையும் முழு முதலாகக் கொண்ட காயத்ரி மந்திரங்களும் வழிபாட்டில் உள்ளன.



No comments:

Post a Comment