Tuesday, 13 September 2016

குரு தரிசனம் கோடி புண்ணியம்!

 குருப் பெயர்ச்சி என்பது நவகிரகங்களில் ஒருவரான குருபகவானின் சஞ்சாரத்தை ஒட்டி நிகழ்வது. அந்தப் பெயர்ச்சி காலத்தில் இவருக்கு வழிபாடு செய்து பலன் பெறுவது பக்தர்களின் வழக்கம்.

 சிவாலயத்திலுள்ள தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, நவகிரக குருபகவானுக்கே குருவானவர் என்பதால்  தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு வழிபாடு செய்து மகிழ்வார்கள்.

தேவ மயிலும் அசுர மயிலும்!

அறுபடை வீடுகளில் 2வது, திருச்செந்தூர். இது தொன்மை வாய்ந்த ஒரு குருத்தலம். வியாழன் எனும் குருபகவான் முருகனின் சந்நதிக்கு முன் உள்ள பீடத்தில் அமர்ந்து முருகனிடம் சூரபத்மனின் வரலாற்றைக் கூறினார். எனவே இது குருத் தலம் எனப்படுகிறது. முருகப் பெருமானின் திருமுன் தேவ மயிலையும் அசுர மயிலையும் காணலாம். இந்திரன் அளித்த மயிலான இந்திர மயில்தான் தேவ மயில். சூரனை வதைத்து அவனை இரு கூறாகப் பிளந்து ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றினார். இந்த மயில்தான் அசுர மயில்.
 தட்சிணாமூர்த்தி தேர்த் திருவிழா!

தட்சிணாமூர்த்தி தனிப்பெருங் கருணையோடு மூலவராகவும் உற்சவராகவும் அருளும் திருத்தலம், திருஇரும்பூளை. பூளை எனும் மரத்தை தலவிருட்சமாகக் கொண்டதால் இத்தலம் இவ்வாறு பெயர் பெற்றது. இத்தலத்தில் குரு பகவான் தேவகுருவாக அருள்கிறார். இவருக்கு 24 நெய் தீபங்கள் ஏற்றி உட்பிராகாரத்தை 24 முறை மௌனமாக வலம் வந்தால் குருபகவான் திருவருள் கிட்டும் என்பது ஐதீகம். இந்த தட்சிணாமூர்த்திக்கு தேர்த்திருவிழா நடப்பது, பொதுவாக வேறெங்கும் காணக்கிடைக்காத விசேஷம். கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 17வது கி.மீ தொலைவிலும் நீடாமங்கலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் திருஇரும்பூளை அமைந்துள்ளது.



வசிஷ்டரிடம் உபதேசம் பெற்ற குரு!

பொதுவாக அமர்ந்த நிலையிலேயே காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, நின்ற நிலையில் அருளும் திருத்தலம் தென்குடித் திட்டை. இங்குள்ள வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில்தான் குருபகவான் இவ்வாறு நின்ற நிலையில் தோன்றுகிறார். பூலோகத்தில் பிரளயம் நிகழ்ந்தபோது, நீரில் மூழ்காமல், இரண்டு இடங்கள் மட்டுமே திட்டுகளாக நின்றன. சீர்காழியும் இந்த தென்குடித் திட்டையும்தான் அத்தலங்கள். ரிஷிகளில் முதல்வரான வசிஷ்டரிடம் குருபகவான் நின்ற நிலையில் உபதேசம் பெற்ற திருத்தலம் இது. இத்தலத்தில் அம்பிகை உலகநாயகிக்கும் வசிஷ்டேஸ்வரருக்கும் இடையில் குருபகவான் சந்நதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குருபகவானை வழிபட, சகலவிதமான தோஷங்களும் தானே விலகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் தென்குடித் திட்டை உள்ளது.

வெளிப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி!

சனகாதி முனிவர் நால்வருக்கும் அக்கினி தபசு என்ற முனிவருக்கும் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் தட்சிணாமூர்த்தியின் வடிவில் ஈசன் உபதேசம் செய்தது திருப்புறம்பியம் தலத்தில். இங்கே தட்சிணாமூர்த்தி வெளிப் பிராகாரத்தில் வீற்றிருந்து அருள் புரிவது வித்தியாசமான அமைப்பு. மாணிக்கவாசகப் பெருமான் தன் கீர்த்தித் திருவகவலில் ‘புறம்பியம் அதனில்...’ என இத்தலத்தை சிறப்பித்துப் பாடியுள்ளார். இத்தலத்தில் ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமானை குழந்தை வடிவில் இடையில் ஏந்தி அம்பிகை அருளும் சிற்பம் அற்புதமானது; கட்டாயம் தரிசிக்கப்பட வேண்டியது. இங்குள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு அபிஷேகம்  செய்யப்படும் தேன் அப்படியே அவருடைய கல் விக்ரகத்துக்குள் உறிஞ்சப்படுவது இன்றளவும் நடைபெறும் அதிசயம். கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது, திருப்புறம்பியம்.

அர்த்தநாரீஸ்வரராக தட்சிணாமூர்த்தி!

கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் வழியாகப் பூந்தோட்டம் செல்லும் பாதையிலுள்ள சிவானந்தேஸ்வரர் ஆலயத்தில், தட்சிணாமூர்த்தி வித்தியாசமான கோலம் காட்டுகிறார். சிவம்-சக்தி இணைந்த அர்த்தநாரீஸ்வர வடிவில் அவரை தரிசிக்கலாம். இந்தப் புதுமைக் கோலம், கோயிலின்
கருவறை விமானத்தில் அமைந்திருக்கிறது.

பிள்ளைத் தொண்டு வழிபாடு!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது, மன்னார்கோயில். இங்குள்ள பெருமாள் கோயிலின் விமானத்தின் உச்சியில் தட்சிணாமூர்த்தி வழிபடப்படுவது இந்த வைணவக் கோயிலைப் பொறுத்தவரை அதிசயமே. தனிச் சந்நதி கொள்ளாமல், ஒரு கோபுரத்தில் வீற்றிருக்கிறார் இவர். இந்த குரு பகவான் கோபுரத்தின் மூன்றாவது மாடத்திலுள்ள சயன நிலைப் பெருமாள் சந்நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள விமானத்தில் அருள்கிறார். குழந்தை பாக்கியம் கிட்டப்பெறாத பெண்மணிகள் இத்தலத்தில் உள்ள பிள்ளைத் தொண்டு எனும் துவாரத்தின் வழியாக ஏறி இறங்குகின்றனர். தொடர்ந்து இரண்டு பௌர்ணமிகள் அவ்வாறு அவர்கள் செய்தால் மழலை வரம் கிட்டுகிறது என்பது நம்பிக்கை.

நாரதருக்கு நாதோபதேசம்!

வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை தஞ்சாவூரில் உள்ள சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் தரிசிக்கலாம். இவர், வீணையேந்தியபடி யோக
நெறியை மேற்கொண்டு, அந்த வீணை நாதத்தில் மனமொருமித்த நிலையில் அருள்கிறார். நாரத முனிவருக்கு நாதோபதேசம் செய்த அருட்கோலம் இது. இசைக்கலைஞர்கள் இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட, அவர்களின் கலைத் திறன் மேன்மையடைகிறது. தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்த 3 கி.மீ. தொலைவில் மேலத்திருப்பூந்துருத்தி எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ளது, திருப்பூந்துருத்தி.

ஆசைகளை விலக்கும் ஆசான்!

மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் 110 கி.மீ. தொலைவில் உள்ளது கம்பம். இத்தலத்திலுள்ள காசி விஸ்வநாதர், கம்பராயப்பெருமாள் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி யோக வடிவில் இடது கையில் கமண்டலத்துடன் தரிசனம் அளிக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் வீண் ஆசைகள் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் இத்தலத்தில் முன்புறம் ஐந்து முகங்களோடும் பின்புறம் ஒரு முகத்தோடும் உள்ள ஆறுமுகப் பெருமானையும் தரிசிக்கலாம்.

பீடத்துக்கு அடியில் ஒரு கோடி மந்திரம்!

தேனியிலிருந்து மதுரை செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் அரண்மனை புதூரில் இறங்கி அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேதபுரி. கோடிக்கணக்கான மூல மந்திரங்கள் எழுதப்பட்டு இத்தல 9 அடி உயர பிரஜா தட்சிணாமூர்த்தியின் பீடத்துக்கு அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவரையும் விமானத்தையும் ஒன்றாக தரிசிக்கும் அமைப்பில் ஆலயம் உள்ளது. ஊறவைத்த கொண்டைக் கடலையை மாலையாக்காமல் அப்படியே சமர்ப்பிப்பது இத்தலத்தின் பிரார்த்தனை நடைமுறை.

27 படிகள் கடந்து தரிசனம்!

ஈசன், நந்தியம்பெருமான், தட்சிணாமூர்த்தி மூவரையும் ஒருசேர புளியறையில் தரிசிக்கலாம். திருநெல்வேலியிலிருந்து 67 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். ஈசனின் கருவறைக்கு நேர் எதிராக நந்தி. அதற்கு அடுத்து தெற்கு நோக்கி யோக தட்சிணாமூர்த்தியாய் குருபகவான். 27 நட்சத்திரங்களை குறிக்கும் 27 படிகளைக் கடந்து குருபகவானை தரிசிக்கலாம். இத்தலத்தில் நவகிரக சந்நதி கிடையாது. குருபகவானே தனிப் பெருங்கருணையோடு அருள்கிறார்.

ஈசனே குரு!

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாதையில் 17வது கிலோமீட்டரில் உள்ளது முறப்ப நாடு. நவ கயிலாயங்களில் 5வதாகத் திகழும் தலம் இது. இங்கு தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனால் இந்நதி தட்சிணகங்கை என போற்றப்படுகிறது. இத்தல ஈசன் கயிலாசநாதர், குருவின் வடிவாய் அருள்கிறார். நாய் வாகனத்துடன் காலபைரவராகவும் வாகனம் இல்லாத வீர பைரவராகவும் இரு பைரவர்கள் இத்தலத்தில் அருள்வது விசேஷம்.

திருமால் தலத்தில் தட்சிணாமூர்த்தி!

மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் சோழவந்தானை அடுத்து குருவித்துறை உள்ளது. குருபகவானின் தவத்தை மெச்சிய திருமால் சித்திரங்கள் நிறைந்த ரதத்தில் வந்து குருவின் பிரச்னையை தீர்த்ததால், சித்திர ரதவல்லப பெருமாள் என வணங்கப்படுகிறார். வைணவத் தலத்தில் குருபகவான் தனி சந்நதி கொண்டு அருள்வது அற்புதம். இந்த குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் ஊறவைத்த கொண்டைக்கடலையை மாலையாகக் கோத்து அணிவித்து அவரருள் பெறுகின்றனர்.

ஆலமரத்தடி குருபகவான்!

காரைக்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டமங்கலம். இத்தலத்தில் குருபகவான் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆலமரத்தடியில் அமர்ந்த குருபகவானை தரிசிக்கலாம். இங்குள்ள ஐம்பொன்னாலான குருபகவானின் திருவுருவை குருப்பெயர்ச்சி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே தரிசிக்க முடியும். சாபத்தால் காளியான உமையவளை, ஈசன் தட்சிணாமூர்த்தி வடிவாக வந்து ஆட்கொண்டு அழகுசௌந்தரியாக்கி சாபவிமோசனம் தந்த தலம் இது. வியாழக்கிழமைகளில் இந்த தட்சிணாமூர்த்தியை 108 முறை வலம் வந்து வணங்க கிட்டாதது ஏதுமில்லை.



உத்கடி ஆசனம்!

காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 30 கி.மீ. தொலைவிலும் அரக்கோணத்திலிருந்து தெற்கே 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது, தக்கோலம். தொண்டை நாட்டிலுள்ள பஞ்சபூதத் தலங்களுள் அப்புத் தலமாக இது விளங்குகிறது. இத்தல உட்பிராகாரத்தில் ஆலமர் கடவுளாகிய தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் ஒரு காலை பீடத்தில் இருத்தி வைத்துக் கொண்டு வலப்புறக் காலை தரையில் வைத்து யோக தட்சிணாமூர்த்தியாய் அருள்கிறார். வலக்கரத்தில் ருத்ராட்ச மாலையையும் இடக்கரத்தில் தாமரை மொட்டினையும் ஏந்தியுள்ளார். தலையைச் சற்று சாய்த்து உத்கடி ஆசனம் எனும் நிலையில் பேரழகுடன் தரிசனம் அளிக்கிறார்.

கால்மாறி அமர்ந்த தட்சிணாமூர்த்தி!

திருநெல்வேலியிலிருந்து 44 கி.மீ. தொலைவிலும் அம்பாசமுத்திரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது பிரம்மதேசம். இங்குள்ள கைலாசநாதர் ஆலயத்தில் மதுரையில் பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய நடராஜரைப்போல, இங்கே தட்சிணாமூர்த்தி கால் மாறி அமர்ந்து காட்சியளிக்கிறார். இத்தலத்தில் 7 அடி உயரமுள்ள அற்புதமான பிட்சாடனரைத் தரிசித்து மகிழலாம். இத்தல மரமான 900 வயது கடந்த இலந்தை மரத்தில் பழுக்கும் பழங்களை பிரசாதமாக உண்டால் கணவன்- மனைவி ஒற்றுமை ஏற்பட்டு இல்லறம் இனிப்பதாக ஐதீகம்.

சிம்ம தட்சிணாமூர்த்தி!

மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது பாமணி. இங்குள்ள நாகநாதர் ஆலயத்தில் நான்கு சிங்கங்கள் தாங்கும் மண்டபத்தில் சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்புரிகிறார் குருபகவான். சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிக ராசிக்குரியவர்களும் அந்த லக்னங்களுக்குரியவர்களும் இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகம்.

குருபலன் அருளும் குரு!

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளுக்கு தென்கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருலோக்கி. இங்குள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் வடிவில் பின்புறம் சிவலிங்கம் துலங்க, நின்றபடி, கைகளை கும்பிட்ட நிலையில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் ஏந்தி குருபகவான் அருள்கிறார். திருமணம் செய்ய குரு பலனுக்காகக் காத்திருப்பவர்கள் இவரை வணங்க அவர்களுக்கு குருபலன் கிட்டி திருமணம் நடக்கிறது. சித்திரை மாத அவிட்ட நட்சத்திரத்தில் இவருக்கு சிறப்பு
வழிபாடுகள் நடக்கின்றன.


 

பெண்களின் சபரிமலை! ஆற்றுக்கால் பகவதி அம்மன்!


கேரளத்தில் பகவதி அம்மன் கோயில்கள் ஏராளம். இவற்றில் திருவனந்தபுரத்திலுள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகளிலும் இக்கோயில் பிரசித்தி பெற்றுவிட்டது. இதற்கு வருடந்தோறும் மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் பொங்கல் விழாதான் காரணம்.

இந்தப் பொங்கல் விழாவைக் காணக் கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் தவிர உலகில் வேறு எந்த பகுதியிலும் ஒரே இடத்தில் இவ்வாறு பல லட்சம் பெண்கள் கூடுவதை பார்க்க முடியாது. கடந்த 1997ம் ஆண்டு இக்கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இந்தச் செய்தியும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இத்தனை சிறப்பு கொண்ட இக்கோயிலில் குடிகொண்டுள்ள தேவிக்கு தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதி வழியாக ஓடும் கிள்ளி ஆற்றின் ஒரு கரையில்தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் உள்ளது. பல நூற்றாண்டுகள் முன்பே உருவான இக்கோயில் பொங்கல் விழா குறித்து பல ஐதீகங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, மதுரையை எரித்த கண்ணகி குறித்து கூறப்படுவது.



மதுரையை எரித்த பின்னர் கண்ணகி நேராக ஆற்றுக்காலுக்கு வந்து இங்கேயே குடியமர்ந்ததாகவும், கண்ணகியின் சினத்தை குறைப்பதற்காகவே பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும் பொங்கல் விழா நடைபெறும் 10 நாட்களிலும் கண்ணகி குறித்த வரலாறு, ‘தோற்றம் பாட்டு’ என்ற பெயரில் பாடப்பட்டு வருகிறது. அடுத்ததாக, மகிஷாசுர வதம் முடிந்த பின்னர் பக்தர்களின் முன் தோன்றிய தேவியை பெண்கள் பொங்கல் வைத்து வரவேற்றதாகவும் இதன் காரணமாகவே காலம் காலமாக பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தொடங்கும் பொங்கல் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அம்மனுக்குக் காப்பு கட்டி, குடியிருத்தல் சடங்குடன் விழா தொடங்கும். பூரம் நாளும், பௌர்ணமியும் ஒன்றாக வரும் திருவிழாவின் 9வது நாளில் பிரசித்தி பெற்ற பொங்கல் விழா நடைபெறும். மறுநாள் குருதி தர்ப்பண சடங்குடன் 10 நாள் பொங்கல் திருவிழா நிறைவடையும். திருவிழாவின் முதல் நாள் முதல் 10வது நாள் வரை கோயிலின் நேர் எதிரே ஒரு குடில் கட்டி 3 பேர் கண்ணகி சரித்திரத்தை பாடுவார்கள்.



இந்த பொங்கல் திருவிழாவில் இன்னும் 2 சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘குத்தியோட்டம்’, இன்னொன்று ‘தாலப்பொலி’. குத்தியோட்டம் என்பது 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான திருவிழா. 3வது நாள் முதல் இறுதி நாள் வரை கடும் விரதமிருந்து கோயிலுக்குள்ளேயே அந்தச் சிறுவர்கள் தங்கியிருப்பார்கள். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து கோயில் பூஜைகளில் கலந்து கொள்ளவேண்டும். 7 நாட்களும் இந்த சிறுவர்கள் கோயிலுக்குள்தான் தங்கியிருக்க வேண்டும். கோயில் சார்பில் வழங்கப்படும் உணவை மட்டுமே சாப்பிடவேண்டும். இந்த விரதத்தில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு சிறந்த கல்வி, ஒழுக்கம், அறிவு உட்பட எல்லா வளங்களும் பெருகும் என்பது ஐதீகம். வருடந்தோறும் இந்த குத்தியோட்ட விரதத்தில் கலந்து கொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அடுத்ததாக தாலப்பொலி என்பது 10 வயதுக்கு குறைவான சிறுமிகள் பொங்கல் நாளன்று புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் ஒரு தட்டில் பழங்கள், அரிசி மற்றும் பொருட்களுடன் பொங்கல் தினத்தன்று கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாகும்.

குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் இருப்பதற்காகவும், வருங்காலத்தில் நல்ல வரன் கிடைப்பதற்கும், ஐஸ்வர்யத்திற்காகவும் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு இந்த நேர்ச்சையை நடத்துகின்றனர்.

தொடக்க காலத்தில் கோயில் முன் உள்ள சிறிய மைதானத்தில் மட்டுமே பெண்கள் பொங்கலிட்டார்கள். ஆனால் தற்போது கோயிலைச் சுற்றிலும் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில் பெண்கள் பொங்கலிடுகின்றனர். வருடந்தோறும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய புதிய இடங்களிலும் பொங்கல் பானைகளை தற்போது பார்க்க முடிகிறது. இதனால் இக்கோயில் ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று திருவனந்தபுரம் நகருக்குள் பஸ்கள் உட்பட எந்த வாகனமும் நுழைய முடியாது. பெண்கள் அதிக அளவில் குவிவதால் பொங்கல் தினத்தன்று கோயிலுக்கு அருகே முறையான அனுமதி இல்லாத ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பொங்கலின் சிறப்பு குறித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளுக்கும் இதன் புகழ் பரவிவிட்டது. கடந்த 25 வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு பொங்கலிடுவதற்காக ஏராளமான வெளிநாட்டு பெண்கள் வருவதுண்டு. இது தவிர பொங்கல் நடைபெறும் அதே சமயத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களும் அவரவர் ஊர்களில் பொங்கலிடுகின்றனர்.


 

குபேர வாழ்வருளும் குசேல சரித்திர ஸ்லோகம்!

பால்ய நண்பனான கண்ணனை தன் மனைவி கொடுத்தனுப்பிய அவலுடன் சென்று குசேலன் சந்தித்தது அட்சய த்ருதியை அன்று. அந்த நண்பன் கொண்டு சென்ற அவலை கண்ணனும் ருக்மிணியும் உண்டு குசேலனை குபேரனாக்கிய பொன்னாள் இது. இத்துதியை அட்சய த்ருதியை தினத்தன்று பாராயணம் செய்தால் வறுமை நீங்கும். சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

இந்த குசேல சரித்திரத்தை நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறி, ‘‘அப்படியா?’’ எனக் கேட்க, அதற்கு குருவாயூரப்பன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ‘‘ஆமாம், அப்படித்தான் நடந்தது’’ என்று சொல்வதுபோல தலையாட்டினார் என்பது வரலாறு. அட்சய த்ருதியை அன்று இந்த ஸ்லோகங்களை உளமாற சொல்லி வந்தால் பொருள் வளர்ச்சி, மன வளர்ச்சி எல்லாம் கூடும்.

குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்
கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:
த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ
தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ

ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் அந்தணனான குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட பரிபூரண பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா? கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா?

ஸமான ஸீலாபி ததீயவல்லபா
ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே
ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே

குசேலருடைய பத்தினியானவள் அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந்தாள். ஜீவனத்திற்கு ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது. அதனாலேயே ‘லக்ஷ்மீபதியான  கோபாலன் தாங்களுக்கு நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள். அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல்லவா?

இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா
ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே
ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ
வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்
குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர்  கிருஷ்ணனை காண புறப்பட்டார். லௌகீகமான பொருளைப் பெறும் ஆசையும் பேராசையான மதமும் அவரிடத்தில் இல்லை. ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார். அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா?

கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்
க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்
ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதிஸம்பாவனயா து கிம் புன:
ஆச்சரியமான அழகைக் கொண்டுள்ள உன்னுடைய பட்டினத்தை அடைந்து ருக்மிணியுடன் நீ வசிக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்தபோது அவர் வைகுண்டத்தை அடைந்தவர்போல் ஆனந்தமானார். அதற்கும் மேலாக குசேலரை நீயே பூஜித்ததால் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு
எல்லையே இல்லை. அப்படித்தானே?

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வாகதய: புராக்ருதம்
யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை
ரபர்த்துவர்ஷந் தமமர்ஷி கானனே
நீ குசேலனைப் பூஜித்தாய்; ருக்மிணி தேவியும் பூஜித்தார்கள். குசேலர் பேரானந்தமடைந்தார். அப்போது பழைய சில சம்பவங்களை நினைவுகூர்ந்தீர்களே? ஒருமுறை குசேலரும் நீயும் குருபத்தினிக்கு உதவுவதற்காக விறகு கொண்டு வர காட்டிற்குச் சென்றீர்கள். வரும்போது பெருமழையில் சிக்கினீர்களே? பொறுமையாக அந்த மழையைப் பொறுத்துக் கொண்டு விறகு கொண்டு வந்து குருமாதாவிடம் கொடுத்தீர்களல்லவா?

த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமா கிலோபேத்யகரம் ருரோத தே
குசேலர் தான் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து வைத்திருந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார். நீதான் குசேலரிடமிருந்து அவலை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்து ஒரு பிடி சாப்பிட்டாய். அப்போது லக்ஷ்மியான ருக்மிணிதேவி, ‘‘இவ்வளவு போதும் போதும்’’ என்று உன்னைத் தடுத்து
நிறுத்தினார்கள், இல்லையா?

பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா
புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்
பதாபரேத்யுர்த்ரவிணம் வினா யயௌ
விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ :

உன்னால் பூஜிக்கப்பட்ட அந்த குசேலர் ஓர் இரவு மகா சுகமாய் உன் பட்டினத்தில் தங்கி, மறுதினம் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக்கவோ, பெறாமலோ தன் இருப்பிடம் திரும்பினாரல்லவா? இப்படி குசேலருக்கு நீ செய்த அனுக்கிரகம் விசித்திரமானதல்லவா?

யதி ஹ்யயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ
வதாம பார்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ
த்வதுக்திலீலாஸ்மிதமக்னதீ: புன:
க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்
‘நான் யாசித்திருந்தால் அச்சுதன் கொடுத்
திருப்பார். மனைவியிடத்தில் என்னவென்று சொல்வேன்’ என்று யோசித்தபடியே தன் ஊருக்கு நடந்து சென்றாலும் அவர், உன் பேச்சின் ரஸம், அழகிய சிரிப்பு இவற்றில் தம்மை மறந்தபடியே பயணப்பட்டார். ஆனால் ஊருக்குள் நுழைந்தபோது நவமணிகளால் பிரகாசிக்கும் தன் வீட்டைப் பார்த்துத் திகைத்தாரல்லவா?

கிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்
க்ருஹம் ப்ரவிஷ்டஸ்ஸ ததர்ஸ வல்லபாம்
ஸகீபரீதாம் மணிஹேமபூஷிதாம்
புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்

‘ஆஹா, நான் கிருஷ்ண சிந்தனையில் திசை தவறி வந்து விட்டேனோ!’ என்று கண நேரம் குழம்பினார். பிறகு பிரமித்துப்போய் தனது வீட்டிற்குள் நுழைந்தார். சகிகளால் சூழப்பட்டவளும் ரத்தினம், தங்கம் முதலிய ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டவளுமான பத்தினியைப் பார்த்தார். உடனே, மிகவும் ஆச்சரியமான உனது கருணையை
அப்போது அவர் உணர்ந்தாரல்லவா?

ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்
ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ
த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.

ஹே குருவாயூரப்பா! ரத்தினமயமான வீட்டில் வசித்த அந்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்துகொண்டவராகவே வாழ்ந்து இறுதியில் மோட்சமடைந்தார் அல்லவா? இதைப்போலவே பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த நீ, எனது ரோகத்தையும் போக்க வேண்டும்.

 

கணபதி ஹ்ருதய சுலோகம்!


கணேசம் ஏகதந்தம் ச சிந்தாமணி விநாயகம் 
டுண்டி ராஜம் மயூரேசம் லம்போதர கஜாநாநன
ஹெரம்பம் வக்ரதுண்டம் ச ஜ்யேஷ்டராஜம் நிஜஸ்திதம்
ஆசாபூரம்து வரதம் விகடம் தரணீ  தரம் 
சித்தி புத்தி பதிம் வந்தே ப்ரும்ஹணஸ்பதி சம் நிதம் 
மாங்கல்யேசம் சர்வபூஜ்யம் விக்னானாம் நாயகம் பரம் 
ஏகத் விம்ச நி நாமாநி கணேசஸ்ய மகாத்மந:
அர்தேந ஸம்யுதா நிசேத் ஹ்ருதயம் பரிகீர்த்திதம் ||

கணபதி ஹ்ருதய சுலோகத்தில் கணபதிப் பெருமானின் இருபத்தோரு பெயர்களும் அடங்கி உள்ளன.  இருபத்தியோரு நாட்களுக்கு மனம் ஒன்றி காலை, மாலை பாராயணம் செய்து வந்தால் மனதில் உள்ள துயரங்கள், கஷ்டங்கள் பரிதியை கண்ட பனி போல மறைந்து நிம்மதி பிறக்கும். 

தேன்.... தேன்... தேன்...! தேனும், லவங்கமும்...!

உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!

அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

**தேனை சூடு படுத்தக்கூடாது**


தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.

உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் அற்புத உணவு தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

**தேனும் லவங்கப் பட்டையும்**


இதய நோய்: இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.


**அற்புத மருந்து இதோ!**


தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.
இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.

இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.

அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்க்ள.அதிசயத்தக்க மாற்றங்களை பதவு செய்துள்ளார்கள். அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.

செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!

**ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.**


மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.

தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள்.

ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் ஹேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.
200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும் 1/2 தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.
ஒரே வாரத்தில் 73 நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.

இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!

**சிறுநீர்குழாய் கிருமிகள்**


2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

**கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து**


2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள். 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.

ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.

சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

**ஜலதோஷம்**


சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.

**வயிற்று அல்சர்**

2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.


**வாயு தொல்லை**

இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!


**எதிர்ப்பு சக்தி வளரும்**


தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.


**அஜீரணம் ** 


சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.


**நீண்ட ஆயுள்**


நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.

வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.

**தொண்டையில் கிச் கிச்!**


1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.

**முகப்படுக்கள் அடியோடு மறைய!**


3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

**சரும நோய் தீர**

சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.


**எடை குறைய வேண்டுமா?**


தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.

அதிசயம் ஆனால் உண்மை. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.


**புற்று நோய்க்கு அருமருந்து**


ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது.

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.


**அயர்ச்சி**


‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. உடலுக்கு உதவ கூடியது.

வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும்.
அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.


**வாய் துர்நாற்றத்தை போக்க!**


தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.

 

 

Monday, 5 September 2016

சிரமமின்றி ஐயப்பனை வழிபட முன் பதிவு செய்யலாம்!

சபரிமலை ஐயப்பனை சிரமமின்றி எளிதில் வழிபட இணையதளத்தில் விண்ணப்பித்து முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காகச் செல்லும் பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
இந்த இணையத்தில் பக்தர்கள் தங்களுடைய பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் வெர்ச்சுவல் கியூ கூப்பன் திட்ட இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஏதாவது ஒரு அடையாள அட்டை, பதிவு செய்த பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பை செல்ல வேண்டும்.

அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும். அங்கு பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையை சோதனை செய்த பின்பு, பக்தர்களை பம்பையில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவர். கூப்பனில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்பாகச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பதினெட்டாம் படியை ஏறி சாமி தரிசனம் செய்து விடலாம்.

இந்த கூப்பன் மூலம் அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை முன்பதிவு வசதியைப் பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம், ஒரு மணி நேரத்தில் 600 முதல் ஆயிரம் பக்தர்கள் வரை சிரமமின்றி சாமி தரிசனம் செய்யலாம். இந்தத் திட்டத்துக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

Friday, 2 September 2016

மாங்கல்ய விருத்தி ஸ்தோத்திரம்!

மாங்கல்ய விருத்தி ஸ்தோத்திரம்

தீர்க்க சுமங்கலியாக வாழ, திருமணம் கைகூட, மாங்கல்ய தோஷம் அகல, விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் இடம்பெற்ற இந்தத் துதியைச் சொல்லி வருவது நல்ல பலனைத் தரும்

கார்யாரம்பேஷு ஸர்வேஷு து:ஸ்வ்ப்நேஷு சஸத்தம
அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ்ஜப்தவ்யம் ததுச்யதாம் (1)

யேநாரம்பாச்ச ஸித்த்யந்தி து: ஸ்வப்நச்சோபசாந்தயே
அமங்களாநாம் த்ருஷ்டாநாம் பரிஹாரச்ச ஜாயதே|| (2)

ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும் ஸ்மரன் மநுஷ்யஸ் ஸதநம் மஹாமுதே|
துஷ்டான்யசேஷாண்யபஹந்தி ஸாதயதி அசேஷகார்யாணி ச யான்யபீப்ஸதி|| (3)

ச்ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம் வதாமி யத்தே த்விஜவர்ய மங்களம்|
ஸர்வார்த்தஸித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்யசேஷாணி ச பாதகாநி|| (4)

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத்ரயே யோ ஜகதச்ச ஹேது: |
ஜகத் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி: || (5)

வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வ ரூபை: விஸ்தாரவான் யோ ணுதரோ ணுபாவாத் |
அஸ்தூலஸூக்ஷ்மஸ் ஸததம் பரேச்வரோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி: || (6)


யஸ்மாத் பரஸ்மாத் புருஷாதநந்தாத் அநாதிமத்யாததிகம் ந கிஞ்சித் |
ஸ ஹேது: ஹேது: பரமேச்வரேச்வரோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி: || (7)

ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ரரூபீ ஸ்ருஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (8)

பரஸ் ஸுராணாம் பரமோ ஸுராணாம் பரோ யதீநாம் பரமோ முநீநாம்|
பரஸ்ஸமஸ்தஸ்ய ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (9)

த்யாதோ முநீநாமபகல்மஷைர் யோ ததாதி முக்திம் பரமேச்வரேச்வர:|
மநோபிராம: புருஷஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (10)

ஸுரேந்த்ரவைவஸ்வத வித்தபாம்புப ஸ்வரூபரூபி பரிபாதி யோ ஜகத்|
ஸ சுத்தசுத்த: பரமேச்வரேச்வர மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (11)

யந்நாமஸங்கீர்த்தநதோ விமுச்யதே ஹி அநேகஜந்மார்ஜித பாபஸஞ்சயாத்|
பாபேந்தநாக்நிஸ் ஸ ஸதைவ நிர்மலோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (12)

யேநோத்த்ருதேயம் தரணீ ரஸாதலாத் அசேஷஸ்ருஷ்டி ஸ்திதிகாரணாதிகம்|
பிபர்த்தி விச்வம் ஜகதஸ் ஸ மூலம் மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (13)

பாதேஷு வேதா ஜடரே சராசரம் ரோமஸ்வசேஷா முநயோ முகே மகா:|
யச்யேச்வரேசஸ்ய ஸ ஸர்வதா ப்ரபு: மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (14)

ஸம்ஸ்தயஜ்ஞாங்கமயம் வபு: ப்ரபோ: யஸ்யாங்கமீசேச் வரஸம்ஸ்துதஸ்ய|
வராஹரூபீ பகவான் ஸஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (15)

விகே்ஷாப்ய ஸர்வோததிதோயஸம்பவம் ததார தாத்ரீம் ஜகதச்ச யோ புவம் |
யஜ்ஞேச்வரோ யஜ்ஞபுமான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி: || (16)

பாதாளமூலேச்வர போகிஸம்ஹதோ விந்யஸ்ய பாதௌ ப்ருதிவீம் ச பிப்ரத: |
யஸ்யோபமாநம் ந பபூவ ஸோச்யுதோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி: || (17)

ஸகர்கமயஸ்ய ச ப்ரும்ஹிதம் முஹு ஸநந்தநாத்யைர் ஜநலோகஸம்ச்ரிதை:|
ச்ருதம் ஜயேத்யுக்திபரைஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (18)

ஏகார்ணவாத் யஸ்ய மஹீயஸோ மஹீம் ஆதாய வேகேந கமுத்பதிஷ்யத:|
நதம் வபுர் யோகிவரைஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (19)

ஹதோ ஹிரண்யாக்ஷமஹாஸுர: புரா புராணபும்ஸா பரமேண யேந:|
வராஹரூபஸ் ஸ பதி : ப்ரஜாபதி: மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (20)

தம்ஷ்ட்ராகராளம் ஸுரபீதிநாசகம் க்ருதம் வபுர் திவ்யந்ருஸிம்ஹரூபிணா|
த்ராதும் ஜகத் யேத ஸ ஸர்வதா ப்ரபு: மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (21)

தைத்யேந்த்ரக்ஷ ஸ்தலதார தாருணை கரேருஹைர் ய: கரகசாதுகாரிபி:|
சித்சேத லோகஸ்ய பயாநி ஸோ ச்யுதோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (22)

தந்தாந்ததீப்த த்யுதிநிர்மலாநி ய: சகார ஸர்வாணி திசாம் முகாநி|
நிநாத வித்ராஸித தாநவோ ஹ்யஸௌ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (23)

யந்நாமஸங்கீர்த்தநதோ மஹாபயாத் விமோக்ஷமாப்நோதி ந ஸம்ஸயம் நர:|
ஸ ஸர்வலோகார்த்திஹரோ ந்ருகேஸரீ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (24)

ஸடாகராள ப்ரமணாநிலாஹதா: ஸ்புடர்தி யஸ்யாம்புதரா: ஸம்மந்தத:|
ஸ திவ்யஸிம்ஹ: ஸ்புரிதாநலேக்ஷணோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (25)

யதீக்ஷணஜ்யோதிஷி ரச்மிமண்டலம் ப்ரலீனமீஷந் ந ரராஜ பாஸ்வத:|
குதஸ்ஸசாங்கஸ்ய ஸ திவ்யரூபத்ருக் மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (26)

அசேஷதேவேசநரேச்வரேச்வரை: ஸதா ஸ்துதம் யச்சரிதம் மஹாத்புதம்:|
ஸ ஸர்வலோகாரத்திஹரோ மஹாஹரி: மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (27)

த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய:|
யத்கீர்த்தநாத் ஸோ த்புதரூபகேஸரீ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (28)

ருக்பாவிதம் யோ யஜுஷாஹி ஸ்ரீமத் ஸாமத்வநித்வஸ்த ஸமஸ்தஸதபாதகம்|
சக்ரே ஜகத் வாமநகஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (29)

யத்பாத விந்யாஸ பவித்ரதாம் மஹீ யயௌ வியச்ச ருக்யஜுஷாமுதீரணாத்|
ஸ வாமநோ வாமசரீரரூபத்ருக் மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (30)

யஸ்மின் ப்ரயாதே ஸுரபூப்ருதோ த்வராத் நநாம கேதாத் அவநிஸ்ஸ ஸாகரா|
ஸ வாமநஸ் ஸர்வஜகன்மயஸ் ஸதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (31)

மாஹாத்புதே தைத்யபதேர் மஹாத்வரே யஸ்மின் ப்ரவிஷ்டே க்ஷுபிதம் மஹாஸுரை:|
ஸவாமநோ ந்தஸ் ஸ்திதஸப்தலோகத்ருக் மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (32)

ஸங்கைஸ் ஸுராணாம் திவி பூதலஸ்திதை ததா மநுஷ்யைர் ககதே ச கேசரை:|
ஸ்துத:க்ரமாத்ய:ப்ரசசார ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (33)

க்ராந்த்வா தரித்ரீம் ககநம் ததா திவம் மருத்பதேர் ரய: ப்ரததௌ த்ரிவிஷ்டபம்|
ஸ தேவதேவோ புவநேச்வரேச்வரோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (34)

அநுக்ரஹம் சாபி பலேரநுத்தமம் சகார யச்சந்த்ரபதோபம் க்ஷணாத்|
ஸுராம்ச்ச யஜ்ஞாம்சபுஜஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (35)

ரஸாதலாத்யேந புரா ஸராஹ்ருதா: ஸமஸ்தவேதா ஜலசாரரூபிணா|
ஸ கைடபாரிர் மதுஹாம்புசாயீ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்யே ஹரி:|| (36)

நி: க்ஷத்ரியாம் யச்ச சகார மேதிநீம் அநேகசோ பாஹுவநம் ததாச்சிநத்|
ய: கார்த்தவீர்யஸ்ய ஸ பார்கவோத்தமோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (37)

நிஹத்ய யோ வாலிநமுக்ரவிக்ரமம் நிபத்ய ஸேதும் ஜலதௌ தசாநநம்|
ஜகாந சான்யான் ரஜநீசராநஸௌ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (38)

சிகே்ஷப பாலச்சகடம் பபஞ்ஜ யோ யமார்ஜுநம் கம்ஸமரிம் ஜகாந ச|
மமர்த சாணூரமுகான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (39)

ப்ராதஸ் ஸஹஸ்ராம்சு மரீசிநிர்மலம் கரேண பிப்ரத் பகவான் ஸுதர்சநம்|
கௌமோதகீம் சாபி கதாமநத்தோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (40)

ஹிமேந்துகுந்த ஸ்படிகாபநிர்மலம் முகாநிலாபூரிதம் ஈச்வரேச்வர:|
மத்யாஹ்ந காலேகபி ஸ சங்கமுத்வஹன் மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (41)

ததா பராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜம் வக்ஷஸ்தலேன ச்ரியமுத்வஹன் ஹரி:|
விஸ்தாரிபத்மாயதபத்ரலோசநோ மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (42)

ஸர்வேஷு காலேஷு ஸமஸ்ததேசேஷு அசேஷசார்யேஷு ததேச்வரேச்வர:|
ஸர்வைஸ் ஸ்வரூபைர் பகவாநநாதிமான் மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:|| (43)

ஏதத்படன் தால்ப்ய ஸமஸ்தபாபை: விமுச்யதே விஷ்ணுபரோ மநுஷ்ய:|
ஸித்த்யந்தி கார்யாணி ததாஸ்ய ஸர்வான் அர்த்தானவாப்நோதி யதேச்சதே தான்:|| (44)

துஸ்ஸ்வப்ந: ப்ரசமம் உபைதி பட்யமாதே ஸ்தோத்ரேஸ்மின் ச்ரவணவிதௌ ஸதோத் யதஸ்ய|
ப்ராரம்போ த்ருதமுபயாதி ஸித்திமீச: பாபாநி க்ஷபயதி சாஸ்ய தேவதேவ:|| (45)

மாங்கல்யம் பரமபதம் ஸதார்த்தஸித்திம் நிர்விக்நாமதிகபலாம் ச்ரியம் ததாதி|
கிம் லோகே ததிஹ பரத்ர சாபி பும்ஸாம் யத் விஷ்ணுப்ரவணதியாம் ந தால்ப்ய ஸாத்யம்|| (46)

தேவந்த்ரஸ் த்ரிபுவனமர்த்தமேகபிங்க: ஸம்ஸித்திம் த்ரிபுவநகாம் ச கார்த்தவீர்ய|
வைதேஹ பரமபதம் ப்ரஸாத்ய விஷ்ணும் ஸம்ப்ராப்த ஸகலபலப்ரதோ ஹி விஷ்ணு:|| (47)

ஸர்வாரம்பேஷு தால்ப்யைகத் துஸ்ஸ்வப்நேஷ ச பண்டித:|
ஜபதேகமநா விஷ்ணௌ ததா மங்கல்யதர்சநே|| (48)

சமம் ப்ரயாந்தி துஷ்டாநி க்ரஹபீடாச் சதாருணா:|
கர்மா ரம்பாச்ச ஸித்யந்தி புண்யமாப்நோதி சோத்தமம்|| (49)

ஹரிர் ததாதிபத்ராணி மங்கல்யஸ்ததிஸம் ஸ்துத|
கரோத்யகிலரூபைஸ்து ரக்ஷாமக்ஷதசக்திப்ருத்|| (50)