Monday 30 November 2015

யோகம் தரும் திதிகள்!

 சுபநாள் பார்க்க பஞ்ச அங்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

ஜோதிடம் அறிந்தவரோ அறியாதவரோ எவரானாலும் தினமும் காலையில்
அன்றைய தின பஞ்ச அங்கங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாடதிதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன.
இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற் குணங்களும் உண்டாகும்.
 விரோதிகள் வலுவிழப்பார்கள். துர்ஸ்வப்னம் (கெட்டகனவு) மூலம் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்காஸ்நான பலன் ஸித்திக்கும்.
கோதானத்தினால் உண்டாகும் பலன்களுக்கு இணையான சுபபலன்கள் உண்டாகும்.
நீண்டஆயுளும், எல்லா விதமான வாழ்க்கை வசதிகளும், செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.

தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில்ப ஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து,
அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம்  கிடைக்கும்.
வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும்.
நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும்.
யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும்.
கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும்.
பஞ்ச அங்கங்களைச் சொல்லிவிட்டு (தெரிந்து கொண்டு) பின்னர் ஸ்நானம் செய்து விட்டு நித்திய கர்மாக்களை அனுசரிப்பதுநல்லது.

அமாவாசைக்கு பித்ருக்கள்,
பிரதமைக்கு அக்னி,
த்விதியைக்கு பிரம்மா,
த்ரிதியைக்கு பார்வதி,  
சதுர்த்திக்கு கணபதி,
பஞ்சமிக்கு நாகராஜா,
சஷ்டிக்கு முருகப்பெருமான்,
ஸப்தமிக்கு சூரியன்,
அஷ்டமிக்கு ஈசன்,
நவமிக்கு அஷ்டவசுக்கள்,
தசமிக்கு திக்கஜங்கள்,
ஏகாதசிக்கு யமதர்மராஜன்,
த்வாதசிக்கு திருமால்,
த்ரயோதசிக்கு மன்மதன்,
சதுர்த்தசிக்கு கலிபுருஷன்,
பௌர்ணமிக்கு சந்திரன் போன்றோர் தேவதைகளாக சொல்லப்பட்டுள்ளனர்.

திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுபதிதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.
 
 

No comments:

Post a Comment