Wednesday 29 March 2017

குலஸுந்தரி நித்யா! (9)




குலஸுந்தரி எனில் குண்டலினி சக்தியையே குறிக்கும். தேவியின் நாமங்களில் புஜங்கினி எனும் நாகமும் ஒன்றாகக் கருதப் படுகிறது. நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். கு என்றால் ப்ருத்வி தத்துவம். அது இருப்பிடமான மூலாதாரத்தையும் அதனுடன் சம்பந்தப்பட்ட சுஷும்னா மார்க்கத்தையும் குலம் என்று குறிப்பிடுவர். இந்த அன்னைக்குப் பன்னிரண்டு கரங்கள், தாமரையையொத்த ஆறு திருமுகங்கள். ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்தருள்பவள். 

திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க வலது கரங்களில் மாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம் ஆகியவற்றை ஏந்தியும், இடது கரங்களில் புத்தகம், தாமரை, எழுத்தாணி, மாலை, சங்கு, வரத முத்திரை தரித்தும் தரிசனம் தருபவள். வலது கரம் அபூர்வமான வ்யாக்யான முத்திரை தரித்துள்ளது. இது, மனிதனைக் குழப்பும் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை தரும் முத்திரையாகும். 

சாதாரண கல்வி முதல் ஆத்ம ஞானம் வரை விளங்க வைக்கும் பராசக்தி இவள். கல்வியில் சிறப்புற்று விளங்கவும் நினைவாற்றல் அதிகரிக்கவும், பெரும் விருதுகள் பெறவும் இந்த தேவியை வணங்கி வர வேண்டும். கருநீல நிறத்திலோ, சாம்பல் நிறத்திலோ இவளை உருவகித்துத் தியானித்தால் பகைவர்கள் தோற்றுப் போவார்கள். எடுத்த செயல்கள் வெற்றிகரமாக முடியும். 

அநேக முகங்கள், அநேக கரங்கள் கொண்டு தேவி திருக்காட்சியளித்தாலும் பக்தர்களைக் கரை சேர்ப்பது தேவியின் இரு திருப்பாதங்கள்தான். தேவி இரு பாதங்கள் மட்டும் கொண்டதேன்? மனிதனுக்கு இரு கைகள் மட்டுமே உள்ளது. அவனால் பற்றிக்கொள்ள முடிந்த அளவிற்கே தனக்கு பாதங்கள் இருக்க வேண்டும் என்று தேவி திருவுளம் கொண்டதால்தான் இரு பாதங்கள். என்னே தேவியின் கருணை! 

தேவர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும் இந்த அம்பிகையைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும், அரசர்களும் கூட இந்த அம்பிகையின் அருள் வேண்டி நிற்கின்றனர். சந்திரனின் வடிவமாய் பிரகாசிப்பவள் இத்தேவி. பக்தர்களை தன் குழந்தைகளாக நினைத்து அருள்பவள். நல்லோர்களைக் காத்து தீயவர்களை அழிக்கும் பேரரசி. திரிபுரமாலினி. நிலையற்றுத் திரியும் மனதை அடக்கி நிலைப்படுத்துபவள். ஆனந்த ஸ்வரூபிணி. அவளைப் பணிபவர்களுக்கு துன்பங்கள் தூசு போலாகும்.

இந்த அன்னையை காதலோடு கசிந்து உள்ளம் பாகாய் உருக, கண்களில் நீர் பெருக, தன்னை மறந்து கருணையே வடிவாய் கருத்தில் வைத்தோர்க்கு முடியாது என்ற செயலே கிடையாது. இன்பமான அமைதி தரும் அம்பிகையைப் பணிவோம். அதிக வரம் பெறுவோம். தன்னை உபாஸிக்கும் அன்பர் தம் குலம் காக்கும் அன்னை இவள். தேவியின் திருவடித் தாமரையை தாமரை மலர் தாங்குகிறது. அம்பிகையை உபாசனை செய்வதால் என்ன பயன் என்பதைப் பற்றி காஞ்சிப் பெரியவர் தன் தெய்வத்தின் குரலில் அருளியுள்ளதைக் காணலாம். 

அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததின் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை. பெரிய சித்தாந்தங்கள் மதங்கள் எல்லாம் எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் முடிவாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டிவிடுகிறது. “அம்மா! நான் எத்தனையோ தோஷம் உள்ளவன். என்றாலும் உன்னை நம்பி விட்டேன். நீ கடாக்ஷித்துவிட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஓடிவிடும். 

நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரியாக இருக்கும் படியாக நீயே பண்ணம்மா” என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும்.  அதைவிடப் பெரிய மதமோ, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை. எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு, நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமும் இல்லாமல் லேசாகிவிட்டால் அதைவிட பேரானந்தம் இல்லை.

அம்பாளை உபாஸிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதற்குப் பலன். ஆனாலும், இந்த லோகத்தின் மாயையில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சிக்கிக் கொண்டிருப்பதால், ‘நான்’ என்பதைவிட்டு, அவளை அவளுக்காகவே உபாஸிக்கிற ஆனந்தம் நமக்கு ஆரம்பதசையில் புரியமாட்டேன் என்கிறது. நமக்கு என்று எதேதையோ எதிர்பார்த்து, அதை எல்லாம் அவள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக அவளை உபாஸிக்கத் தொடங்குகிறோம். இந்த நிலையில் அவளும்கூட நம்மை விட்டுப்பிடிக்கிற மாதிரி, நம் பிரார்த்தனைகளை நிறை வேற்றி வைக்கிறாள். தர்மத்துக்கு விரோதமாக இல்லாத வரையில் நாம் செய்கிற பிரார்த்தனைக்கு செவிசாய்க்கிறாள்.

மநுஷ்ய ஸ்வபாவம் ஆச்சார்யாளுக்கு நன்றாகத் தெரியும். அம்பாள் உபாஸனையால் ஜனன நிவிருத்தி கிடைக்கும், மோக்ஷம் கிடைக்கும் என்று சொன்னால் எடுத்த எடுப்பில் யாரும் அதில் ஈடுபடமாட்டார்கள் என்பது ஆச்சார்யாளுக்குத் தெரியும். அதனால் அம்பாளை உபாஸிப்பதன் பலன் இன்னின்ன என்று ‘ஸௌந்தரிய லஹரி’யில் சொல்கிறபோது, முதலில் படிப்பு, செல்வம், அழகு முதலியன கிடைக்கும் என்கிறார்.

அம்பாளை உபாஸிப்பவர்கள் தனியாக லக்ஷ்மி, ஸரஸ்வதி இருவரையும் உபாஸிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இரண்டு பேரும் இவளுக்கு இரண்டு பக்கத்திலும் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள். 

இப்படியே லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. (ஸ சாமர ரமாவாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா). சகல சக்திக்கும் ஆதாரமான பராசக்தியை உபாஸித்தால் இவளே ஸரஸ்வதியையும், லக்ஷ்மியையும் கடாக்ஷிக்கச் செய்கிறாள். காமாக்ஷிக்கு ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் இரண்டு கண்கள். ‘க’என்று பிரம்மாவுக்குப் பெயர்  ‘சிவ’பத்தினி சிவா என்பதுபோல் ‘க’வின் பத்தினியான ஸரஸ்வதிதான் ‘கா’. ‘மா’ என்றால் மஹாலக்ஷ்மி. ‘மா’ தவன் என்றால் லக்ஷ்மிபதி. ‘கா’வையும் ‘மா’வையும் தன் அக்ஷங்களாக (கண்களாகக்) கொண்டவள் எவளோ அவளே “காமாக்ஷி”.

ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இரண்டும் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைக்கும் என்றேன். இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்  தங்களை மஹா புத்திசாலிகளாகவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால், நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. 

பொதுவாக புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு நிறைய சாமர்த்தியமும் சாதூர்யமும் இருக்கின்றன. அதாவது ‘யாரையும் ஏமாற்றிவிடலாம்’ என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக்கொண்டு, இந்த ‘புத்திசாலித்தன’த்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக்கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம். 

ஒருத்தனைப்பற்றி யாராவது ‘எத்தனை புத்திசாலி’ என்று பேசினால் சந்தோஷப்படுகிறான். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ச லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்று யாராவது சொன்னால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது. அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. 

ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளானால் தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்துகொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? சொல்லிக்கொள்ளாமலேதான் பணக்காரரை விடத்திருப்தியாக இருப்போமே!
இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார்.

‘இதற்குமேல் வேறென்ன வேண்டும்?’ என்று தோன்றலாம். ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். ‘இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஓட்டியாச்சு; இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்? இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக்கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருந்துவிட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதனாலும் பெற்றதாகத் தெரியவில்லையே! இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?’ என்கிற கேள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. 

ஆனால், நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். ‘பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேண்டும், ஆயுசு வேண்டும்’ என்பதெல்லாம் மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரமையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும். 

பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளால் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை. முடிந்த முடிவாக அம்பாள், பக்தனை இந்தப் பரமானந்த ரஸத்தில் திளைத்துக் கொண்டிருக்குமாறு அநுக்கிரஹம் செய்கிறாள் என்று ஆச்சார்யாள் முடிக்கிறார்.

வழிபடு பலன்
இந்த அன்னையின் அபூர்வ அருளால் உபாசனை
 புரிபவர்கள் சர்வ ஞானமும் அடைவர். 
செல்வவளமும் சொத்து சேர்க்கையும் கிட்டும்.
குலஸுந்தரி காயத்ரி
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே காமேஸ்வர்யை 

தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.மூலமந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லூம் ஐம் க்லீம் ஸௌ: லூம் குலஸுந்தர்யை நம:
த்யான ஸ்லோகங்கள்

லோஹிதாம் லோஹிதாகார ஸக்தி வ்ருத்த நிஷேவிதாம்
லோஹிதாம் ஸுகபூஷாங்ருக் லேபநாம் ஷண்முகாம்புஜாம்
ப்ரதிவக்த்ரம் த்ரிநயனாம் ததாசாருஸ்மிதாநநாம்
அநர்க்ய ரத்நகடித மாணிக்ய முகுடோஜ்வலாம்

தாடங்கஹார கேயூர ரஸனா நூபுரோஜ்ஜ்வலாம் 
ரத்நஸ்தப கஸம்பிந்ந லஸத் வக்ஷஸ்தலாம் ஸுபாம்
காருண்யாநந்த பரமா மருணாம் புஜவிஷ்டராம்
பஜைர் த்வாதஸபிர்யுக்தாம் ஸர்வேஷாம் 
ஸர்வவாங்மயீம்

ப்ரவாளாக்ஷ ஸ்ரஜம்பத்மம் குண்டிகாம் 
ரத்ந நிர்மிதாம்
ரத்னபூர்ணாம் தச்சஷகம் லுங்கீம் வ்யாக்யாந
முத்ரிகாம்
ததாநாம். 

ஸதாஸிவ குடும்பினீம் ஸகல மந்த்ர 
ஸம்சாரிணீம்
ஸுஜன க்லேச சம்ஹாரிணீம் கதாதர 
ஸகோதரீம்
கஜமுகப்ரியாம் ஸாங்கியுகம் பஜாமி
குலஸுந்தரீம் ப்ரதம நாயகீம் சந்ததம்.

த்யாயேத் தேவீம் மஹேஸானீம் 
கதம்பவன மத்யகாம்
ரத்ன மண்டப மத்யேது மஹாகல்ப வனாந்தரே
முக்தாபத்ர சாயாயாம் ரத்ன 
ஸிம்ஹாஸனேஸ்திதாம்
அனர்க்ய ரத்ன கடித முகுடாம் ரத்ன குண்டலாம்

ஹாரக்ரைவேய ஸத்ரத்ன சித்ரிதாங்காம் 
கர்ணோஜ்ஜ்வலாம்
ஹரி முக்தாலஸத் பூஷாம் ஸுக்ல 
க்ஷௌம விராஜிதாம்
ஹீர மஜ்ஜீர ஸுபக ரக்தோத்பல பதாம்புஜாம்

ஸுபாங்க ராக ஸுபகாம் கற்பூர 
ஸகலோஜ்வலாம்
புஸ்தகம் சாபயம் வாமே தக்ஷிணே 
சாக்ஷமாலிகாம்
வரதான ரதாம் திவ்யாம் மஹாசாரஸ்வதப்ரதாம்

ஏவம் த்யாயேத்  மஹா நித்யாம் தேவேஸீம்
குலஸுந்தரீம். 
அருணகிரண ஜாலை: ரஞ்சிதாஸாவகாஸா
வித்ருத ஜபபடீகா புஸ்தகாபீதிஹஸ்தா
இதரகர வராட்யா: புல்ஹ கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா: நித்ய கல்யாண சீலா:

ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ல்ருகார ப்ரக்ருதிக 
சந்த்ரிகா கலாத்மிகாம்
குலஸுந்தரி நித்யா ஸ்வரூபாம் ஸர்வ 
ஸித்திப்ரத சக்ர ஸ்வாமினீம்
சித்தாகர்ஷிணி சக்தி ஸ்வரூபிணீம், ஸ்ரீ ஸ்ரீதர வக்ஷஸ்தல

 கமலவாஸினீம் ஸர்வமங்கள தேவதாம்
 ஸ்ரீதுஷ்டிலக்ஷ்மி ஸ்வரூப குலஸுந்தரி நித்யாயை நம:
வழிபட வேண்டிய துதிகள் 
சுக்ல பக்ஷ நவமிக்ருஷ்ண பக்ஷ ஸப்தமி 
(நவமி திதி ரூப குலஸுந்தர்யை நம:)
நைவேத்யம்
நெல் பொரி.
பூஜைக்கான புஷ்பங்கள்
செந்தாமரை.

திதி தான பலன்
இந்த தேவிக்கு நெற்பொரியை நிவேதித்து தானம் அளித்தால் இவ்வுலக சுகங்கள் விருத்தியாகும். 
பஞ்சோபசார பூஜை
ஓம் குலஸுந்தரி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் குலஸுந்தரி நித்யாயை தூபம் கல்பயாமி நம:  

ஓம் குலஸுந்தரி நித்யாயை தீபம் கல்பயாமி நம:  
ஓம் குலஸுந்தரி நித்யாயை நைவேத்யம் 
கல்பயாமி நம:  ஓம் குலஸுந்தரி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் 
தர்சயாமி நம:இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்

பெரும்பாலும் நாத்திகர்கள். பயமற்றவர்கள். கல்வி கேள்விகளில் புகழ் பெற்று விளங்குவார்கள். சிலர் வஞ்ச நெஞ்சம் கொண்டவர்களாகத் திகழ்வர். சூரர்கள். பண்டிதர்கள். தனக்கு அடங்காப் பிள்ளையைப் பெறுபவர்கள். பிறரைத் தன்வயப்படுத்துபவர்கள். எப்போதும் எச்சரிக்கை மிக்கவர்கள். 

யந்திரம் வரையும் முறை

சந்தன குங்குமக் கலவையால் ஒன்பது கோணம், வட்டம், எட்டிதழ், இரு வட்டங்கள், கிழக்கு மேற்கு வாயில்களுடன் கூடிய யந்திரம் வரையவும். தேவியின் பரிவார சக்திகளான பாஷா, சரஸ்வதி, வாணி, ஸம்ஸ்க்ருதா, பிராக்ருதா, பரா, கட்கரூபா, வித்தரூபா, ரம்யா, ஆனந்தா, கௌதுகா போன்றோரை தியானித்து பூஜிக்கவும். 

இத்திதிகளில் செய்யத் தக்கவை

இத்திதியில் போரிடுதல், பகைவரை சிறையிடுதல், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு செய்தல் போன்ற எதிர்மறை செயல்களையே செய்யலாம்.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ நவமி துதி
நவமியிலே நவரத்ன கிரீடம் சூட்டி
நவகோடி நாதருளைப் பணிந்து போற்ற
தவம் பெருக ஒரு நான்கு பாலும் ஈந்து
தற்காத்தாய் பிள்ளைகளைத் தயவு வைத்து
சிவவெளியும் சிவபதமும் தெரிசித்தார்கள்
சிவகாமி நினதுடைய செயலினாலே
சுதன் எனக்கும் அப்படியே தருவாய் அம்மா
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழியவே!

நவ கோடிநாதர்  நவநாதங்கள் ஒன்பது வகைப்படும். அவை சத்ய நாதர், சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர், வெகுளி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், கோரக்க நாதர் போன்ற சித்தர்களையும் குறிக்கும்.நவரத்னம்  கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புஷ்பராகம், வைரம், வைடூரியம்.
நான்கு பால்  அறம், பொருள், இன்பம், வீடு.  

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ நவமி நித்யா துதி
பந்தவினை போக்கிடுமென் அருமைத்தாயே
பாக்யவதி பூரணியே பருவமாதா
வந்து நீ அருள்க என்னை வளர்த்த மாதா
வான் வழங்கப் பெற்ற சுடரொளியே கண்ணே
என்றனையும் சித்தனெனப் பெயருமிட்டே
எட்டெழுத்தின் மூன்றெழுத்தாய் விளங்கி நின்றாய்
சுந்தரியே கன்னிகையே அகண்ட ரூபி
சோதி மனோன்மணித் தாயே சுழிமுனை வாழியவே!

மாத்ருகா அர்ச்சனை
ஓம் பாலாயை நம:
ஓம் உமாயை நம:
ஓம் பைரவ்யை நம:
ஓம் ஸாந்தாயை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் த்ரிபுரேஸ்யை நம:

ஓம் அஹிம்ஸாயை நம:
ஓம் திமரக்ன்யை நம:
ஓம் பாஸ்வராயை நம:
ஓம் ஸூர்யமண்டலாயை நம:
ஓம் வராயுதாயை நம:
ஓம் வராரோஹாயை நம:

ஓம் வரேண்யாயை நம:
ஓம் விஷ்ணுவல்லபாயை நம:
ஓம் ஸ்ருத்யை நம:
ஓம் நிரந்தராயை நம:
ஓம் வேத்யாயை நம:
ஓம் ஸித்யை நம:

ஓம் ஸர்வார்த்த ஸித்தின்யை நம:
ஓம் பஞ்ச பஞ்சாத்மிகாயை நம:
ஓம் குஹ்யாயை நம:
ஓம் கோநிவாஸாயை நம:
ஓம் கோதனாயை நம:
ஓம் ஸாத்யயோகோத்பவாயை நம:

ஓம் ஸக்தயே நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் காஷ்டாயை நம:
ஓம் கலாத்மிகாயை நம:
ஓம் பியூஷாயை நம:
ஓம் வாஜி ஜிஹ்வாயை நம:

ஓம் ரஸாத்ராயை நம:
ஓம் இரம்மதாயை நம:
ஓம் வித்யுதே நம:
ஓம் ஸதக்ன்யை நம:
ஓம் ஸிம்ஹாக்ஷ்யை நம:
ஓம் ஏகபிங்காங்கிதாயை நம:

ஓம் கபால்யை நம:
ஓம் வேத்யாயை நம:
ஓம் வேதாள்யை நம:
ஓம் பூத ஸங்க நமஸ்க்ருதாயை நம:

ஓம் ஸ்ப்ருஷ்டாயை நம:
ஓம் பவாயை நம:
ஓம் விபவாயை நம:
ஓம் தேஸபாஷிண்யை நம:
ஓம் ஸர்வாரம்பாயை நம:
ஓம் நிராரம்பாயை நம:

ஓம் ஆரம்பாயை நம:
ஓம் பவவாஹின்யை நம:
ஓம் பாரத்யை நம:
ஓம் பாஸ்வராயை நம: 
ஓம் மஹாதேவ்யை நம!


No comments:

Post a Comment