Thursday, 29 October 2015

தஞ்சாவூர் சொர்ண காமாட்சி!


தஞ்சாவூர்  - பங்காரு காமாட்சி

சொர்ண மயமான தங்க காமாட்சியை பிரம்மா செய்தார். ஆனந்த அழுகையோடு தொழுதார்.
  சலிப்பூட்டாத அவளின் வழிபாட்டை தொடர்ந்தவர் பங்குனி மாதம் காஞ்சி ஏகாம்பரத்தில் தவமிருக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கு சாஸ்திர பூர்வமாக விவாகம் செய்வித்தார். திருக்கல்யாணம் முடிந்தவுடன் சுவர்ண காமாட்சியை த்ருவம் எனும் அசையா மூர்த்தமாக பிரதிஷ்டை செய்தார். அபிஷேக ஆராதனைகள் முரிந்தவுடன் ஒரு தாமரை மலரை ஆகாசத்தில் வீசி எறிந்தார். வானம் தொட்ட தாமரையினின்று ஆகாச பூபதி என்றொருவன் வெளிப்பட்டான். ஆண்டுதோறும் அன்னையின் திருக்கல்யாணத்தை நிகழ்த்து என அன்பாணையிட்டார். மெல்ல நகர்ந்து சத்திய லோகம் ஏகினார். சொர்ணகாமாட்சி வரலாற்றுப் பேரேடுகளில் சில பக்கங்களை எல்லோரையும் புரட்டும்படி செய்யும் காலம் நெருங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் உச்சிக் காலம்.

அந்நியதேசப் படையெடுப்பாலும்,
  வேற்று மதத்தினராலும் வட இந்தியாவும், தென் இந்தியாவும் ரணகளப்பட்டுக் கொண்டிருந்தது. திருக்கோயில்களின் விக்ரஹத்தில் ஏதுமில்லை அதை தூக்கியெறியுங்கள். உங்களின் வேத நூல்களை தீயிலிட்டு பொசுக்குங்கள் என இந்து மதத்தின்மீது கோரத் தாண்டவமாடினர், அந்நிய நாட்டினர். கோயிலுக்குச் சொந்தமான தங்க விக்ரஹங்களையும், வைர கிரீடங்களையும் கொள்ளை யடித்தனர். மக்கள் துடிதுடித்துப்போயினர். காஞ்சிக் கோயிலுக்கும் அந்தகதி வந்து விடுமோ என்று அஞ்சினர். மஞ்சள் ரூபிணியான சொர்ண காமாட்சியை விஜயநகர மன்னர்கள் தெலுங்கில் பங்காரு காமாட்சி என்று அழைத்தனர். அவளும் அவர்களுக்கருகே செல்லலாம் திருவுள்ளம் பூண்டாள். ஆதிகாமாட்சியும் ஆஹா... என்றாள். சோழதேசத்தின் நெல் வயல்கள் தங்கமுலாம் பூசியதுபோன்று செழித்துக் கிடந்தது. தங்க பங்காரு காமாட்சியும் அங்கேயே சென்று தங்கலாம் என்று உறுதி பூண்டாள்.

 தஞ்சை மராட்டிய மன்னனான ஏகோஜியின் ஆட்சியில் இருந்தது. 1737ம் ஆண்டு வாரிசு இல்லாது ஏகோஜி உயிர் நீத்தான். 1739ம் வருடம் பிரதாப சிம்மன் அரியணை ஏறினான். அப்போதைய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1746 - 1783) மகிழ்ச்சியுற்றார். பிரம்மனால் பிரதிஷ்டை செய்ததாயிற்றே என கண்கலங்கினார். நிலவறையில் சொக்கத் தங்க காமாட்சியை பத்திரமாக பாதுகாத்தனர். ஒரு குழு பீடாதிபதியுடன் கோயில் ஸ்தானிகர்கள் சொர்ண காமாட்சியை கையில் பத்திரமாக சுற்றி எடுத்துக்கொண்டு கண்களில் நீர் கொப்புளிக்க காஞ்சியைவிட்டு வெளியேறினர். சில ஆண்டுகள் செஞ்சியிலும், உடையார்பாளையம் ஜமீன்தாரர்களின் பேரன்பும், ஆதரவாலும் சுவர்ண காமாட்சியோடு ஸ்தானிகர்கள் நிம்மதியோடு பூஜித்தனர். தஞ்சை மன்னரின் நெருங்கிய நண்பரும் அனக்கடி மிராசுதாரரும் சங்கராச்சாரியாரை வரவேற்று சில காலம் தங்க வைத்தார்.

பிரதாபசிம்மன் சுவர்ண காமாட்சி வருகிறாள் என்றவுடன் அகமகிழ்ந்தான். ஓரிடத்தில் பிரம்மன் நிறுத்திய த்ருவம் எனும் சொர்ண காமாட்சி இப்போது எல்லா துருவங்களுக்கும் பயணித்து அருளை இரைத்துக் கொண்டே நாகூர், சிக்கல், திருவாரூர் விஜயபுரம் வழியாக தஞ்சையில் தன் பூப்பாதம் பதித்தாள். தஞ்சை பெருவுடையார் அருவமாக பரவசப்பட்டார். ஆதிமாதாவானவள் இவ்வளவு அருகிலா என்று பிரதாபசிம்மன் நெக்குருகினான். ஓடிச்சென்று ‘‘நா பங்காரு.... நா பங்காரு...’’ என்று தெலுங்கில் ஆனந்தக்கண்ணீர் பொங்கி கதறித் தீர்த்தான். அவளும் மென்மையாக சிரித்தாள். காஞ்சியில் எல்லோரும் கவலை மறந்தனர். தஞ்சை விழாக்கோலம் பூண்டது. கி.பி. 1746 முதல் 1887ம் ஆண்டு வரை எல்லா மன்னர்களாலும் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

கருவறை, விமானம், திருமதில், மண்டபம், கோபுரம் எல்லாமுமே வெவ்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது. புராண காலத்தில் உதித்த பங்காரு காமாட்சி இன்று தஞ்சைவரை யாத்திரை செய்து நிலைபெற்றதென்பது அவளுடைய சங்கல்பம் தானே வேறு எதுவுமன்று. அந்த மகானின் திருநாமம் சியாமா சாஸ்திரிகள் என்பதாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான அவரின் இயற்பெயர் வேங்கடசுப்ரமணியம். சியாமா சாஸ்திரிகள் சொர்ண காமாட்சி
  சிலகாலம் திருவாரூரில் இருக்கும்போதே மெய்மறந்து அவளின் திருவழகில் லயித்திருப்பார். இப்போது தஞ்சையில் குடியேறியபோது அம்மனின் அழகை வெகு அருகே நின்று ஆராதித்தார். கலையையும், ஞானத்தையும் அருள்வதில் இணையிலா நாயகியாக விளங்கும் காமாட்சி சியாமா சாஸ்திரிகளுக்கு அநாயாசமாக அள்ளித் தந்தாள். ஞானத்தை பதிலுக்கு ஏராளமான கீர்த்தனைகளை அவளின் திவ்ய பாதங்களில் சமர்பித்துப் பாடிக் களித்தார்.

அவர் பார்த்துக் களித்த பங்காரு காமாட்சியை நாமும் தரிசிப்போமா. கோயில் சிறிய ராஜகோபுரத்தோடு அழகுற அமைந்துள்ளது. கோயில் எளிமையாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் உள்ளிருக்கும் மூர்த்தினி புராணப் பெருமையுற்றவள். கோயிலின் வாயிலுக்கும், கருவறைக்கும் இடையே ஒரு மண்டபம் உள்ளது. துவார பாலகிகளின் அனுமதியோடு கருவறையை நெருங்கும்போது குங்குமத்தின் மணம் மண்டபத்தையே நிறைக்கிறது. விளக்குச் சுடரொளியில் பங்காரு காமாட்சி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். ஸ்ரீபுரத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் லலிதையே இப்படித்தான் இருப்பாள் என்பது போல அவளின் பிரகாசம் கருவறையை நிறைக்கிறது.

கிளியை தாங்கி நிற்கும் கைகளும், சற்றே இடுப்பை ஒடித்து நளினமாக காட்சி தரும் த்ரிபங்கதாரியின் ஒயிலும், அவள் ஏன் இங்கு வந்து அமர்ந்தாள் எனும் புரியாத வியப்பும் நம்மை பிரமிக்கச் செய்திருக்கின்றன. ஏதோ சற்றுநேரம் முன்னர்தான் பிரம்மனால் வடிக்கப்பட்டவள்போல பேரழகியாக காட்சி தருகிறாள். பிரார்த்தனைகூட செய்ய வேண்டாம். ஏனெனில் பசியறிந்து பிள்ளைக்கு உணவளிக்கும் தாயாயிற்றே இந்த தேவி. காஞ்சி மடமும்,
  இந்து அறநிலையத்துறையினரும் இணைந்து இக்கோயிலை நிர்வகிக்கின்றனர். பூஜைக்கான உரிமையை காஞ்சி முதல் தஞ்சை வரை பங்காரு காமாட்சியுடன் பயணித்து பிரதிஷ்டை செய்து உதவிய மூன்று கோத்திரக்காரகளான ஸ்தானிக பரம்பரையினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி மடத்தில் எந்த ஒரு விழாவானாலும் முதல் பிரசாதம் பங்காரு காமாட்சியிடமிருந்து பெற்றுக் கொள்வர். ஆறுகால வழிபாடுகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. சிவசக்தி ஐக்கியமாக இவள் இருப்பதால் இவளுக்கு பூணூல் உண்டு. காமாட்சியம்மனுக்கு ஆண்டுதோறும் பதினொன்று அபிஷேகங்கள் மட்டும்தான் நிகழ்த்தப்படுகின்றன. பங்காரு காமாட்சியம்மன் மூல ஸ்தானத்தை விட்டு வெளியில் வருவதில்லை. காமகோடி அம்மன் எனும் உற்சவ மூர்த்திக்கும் கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை, உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் தஞ்சை அரச குடும்பத்தினர் அம்மனுக்கு திருமாங்கல்யம் அளிப்பர்.

வெற்றிகளை அருளும் விநாயகி!


கஜமுகம் கொண்ட இப்பெண் தேவதையை, விநாயகி என்ற பெயரை மாத்திரம் இலிங்க புராணம் (02-27-215) கூறுகிறது. 

ஸ்காந்த புராணம் இவளை கஜானனை என்று அழைக்கிறது. 

விஷ்ணு தர்மோத்ர புராணம் (1-226-6) மாத்ரு கணங்களில் கணேசினியும் ஒருவள் என்கிறது. 


அந்தகாசூரனின் குருதியைப் பருக, சிவனால் படைக்கப்பட்ட தேவதையே இவள் என்கிறது மத்ஸ்ய புராணம் (179-18). 

பெண் தெய்வ நாமாக்களை கூறும் வன துர்கோபநிஷத் எனும் கிரந்தத்தில் இவள் நாமம் கணேஸ்வரி என்று கூறப்பட்டுள்ளது.

கஜானனி, கஜானனை, கணேசினி, கணேஸ்வரி, விக்நேஸ்வரி, விநாயகி, லம்போதரி, ஐங்கிணி, வைய நாயகி  என்ற பெயர்களும் உண்டு. 



 லலிதாம்பிக்கைக்கு 64 கோடி யோகினிகள், பரிவார தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள் என்று லலிதா ஸகஸ்ர நாமம் கூறுகிறது. 

பெண் உருவம் கொண்ட விநாயகி, இந்த யோகினிகளில் ஒருவர் என்று வட மாநிலத்தார் கருதுகின்றனர். 



வடமொழியில் ஸ்கந்த புராணத்தில் காசிக் காண்டத்தில் யோகினி களின் பட்டியலில் விநாயகி, கஜானனா எனும் பெயர்கள் காணப் படுகின்றன. அறுபத்தி நான்கு யோகினிகளின் பட்டிலில் விநாயகியும் காணப்படுகிறாள். 

யோகினி என்பவர்கள், அன்னை பார்வதி அசுரர்களை எதிர்த்துப் போரிடக் காளியாகச் சென்றபோது, அன்னையைச் சூழ்ந்து நின்று காளிக்கு உதவி யாக அசுரர்களை எதிர்த் தவர்கள். 


தென்னாட்டிலோ அவளை ‘ஸ்ரீவாஞ்சா கல்ப லதா ஸ்ரீவித்யா கணபதி’ என்று சக்தி ரூபமாக பாவித்து ஸ்ரீவித்யா உபாசகர்கள் அவளை வழிபடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ஒரு தூணில் விநாயகி யின் சிற்பமுள்ளது. இது கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். 

அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளது. தலையில் வேலைப் பாடுடன் கூடிய அழ கிய மகுடம் விளங்கு கிறது. மேற்கைகளில் அங்குச- பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய- வரத ஹஸ்தங் களாக விளங்குகின் றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம். கழுத்தணியும் பூணூ லும் அழகு செய்கின் றன. கால்களில் சிலம் புகள். அழகாகக் கட்டப்பட்ட ஆடை யும் மேகலையும் அழகூட்டுகின்றன. இடப்புறம் திரும்பி பாதத்தைத் தொடுமளவு துதிக்கை நீண்டு விளங்குகிறது.


குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிற்பம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில் காணப்படுகிறது.

இது நின்ற கோலம். தலையில் மகுடம்; சற்றே வலப்பக்கம் சாய்ந்து காணப்படுகிறது. 

இதனைப் போன்ற மற்றொரு உருவத்தை சிதம்பரத்திலும் காணலாம். 

நின்ற கோலம்தான். வலக்கையில் பூங்கொத்து. இடக்கை தூக்கிய நிலை. கழுத்திற்குக் கீழ் கச்சையற்ற இரு நகில்கள். இடுப்பிற்குக்கீழ் புலியின் இடுப்பும் இரு கால்களும் உள்ளன. தூக்கிய வால். இத்தகைய யானைத் தலை, பெண் மார்பு- கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள். 



சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள்  ஏராளமாக உள்ளன.

இதில் ஒன்று விநாயகர் பெண் வடிவத்தில் இருக்கின்ற சிற்பமாகும். விக்னேஸ்வரி என்ற பெயரில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இவற்றைத் தவிர, திருச்செந்தூர், பவானி, திருக்குறுங்குடி ஆகிய இடங்களிலும், திருநெல்வேலித் தேரிலும்  சிற்ப வடிவில் சிரித்துக்கொண்டிருக்கும் விநாயகி வடிவங்களும், ஒருகாலத்தில், அவள் வழிபாடு மிகப்புகழ் பெற்றதாக இருந்திருக்கவேண்டும் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கின்றன .
 
 

சுபமங்களம் தரும் ஸ்ரீ ஆத்யந்த பிரபு!

ஆதி - ஸ்ருதி - பூர்ணம் - கணபதி 
அந்தம் - ஸ்ம்ருதி - ஸம்பூர்ணம் - மாருதி
ஸ்ரீ ஆத்யந்தப்ரபு - ஸர்வத்ர சம்பூர்ணம்!
எந்த ஒருசெயல் துவங்கினாலும், விக்கினங்கள் -தடைகள் இன்றி செவ்வனே நடைபெற விநாயகரை வணங்கிச் செய்வது வழக்கம்.
எந்த ஒரு சுப  நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம். 
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை “ஆத்யந்த பிரபு’ என்பர். ஆதி+அந்தம் என்பதையே ஆத்யந்த பிரபு’ என்று சொல்கிறார்கள்.
“ஆதி’ என்றால் “முதலாவது’. முதல் கடவுள் விநாயகர். “அந்தம்’ என்றால் “முடிவு’. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார்.
ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம்.
அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். 
சென்னை தரமணி அருகிலுள்ள மத்திய கைலாஷ் கோயிலில் ஆத்யந்த பிரபுவுக்கு சந்நிதி உள்ளது.
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது’ என்பார்கள்.
அதற்கு ‘மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது’ என்று பொருள்.
ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும்.
 “கம்” என்பது  கணபதியின் பீஜாக்ஷரமந்திரம் 
“ஹம்” என்பது ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம்.
கம் கணபதயே என்று க-வில் துவங்கி ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.
கணபதி  ,அனுமன் இருவருமே பிரம்மச்சாரிகள்! விலங்கின ரூபம் கொண்டவர்கள்!
ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் ! 
 நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!
இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! 
இருவருக்குமே சூரியன் தான் குரு…

இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை!
கணபதிக்கு  ஆற்றங்கரை கூட இடம் தான்! அனுமனுக்கோ தூண் கூட இடம் தான்! 
 வடநாட்டில் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!
நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!
கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!
இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! 
பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் !
மத்திய கைலாஷ் கோயிலில் அருளும் ஸ்ரீ ஆத்யந்தப்ரபுவை வணங்கி அருள் பெறுவோம்! 



51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்!



51 விநாயகர் வடிவங்களும்,
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்!

1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2.
மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3.
த்ரைலோக்ய. மோஹன  கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4.
லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5.
ருணஹர கணபதி: கடன் நிவர்த்தி.
6.
மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7.
ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8.
வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9.
நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10.
புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11.
பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12.
சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13.
சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14.
க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15.
குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16.
ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17.
ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18.
ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19.
விஜய கணபதி: வெற்றி.
20.
அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21.
ச்வேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22.
உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23.
போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24.
விரிவிரி கணபதி: விசால புத்தி.
25.
வீரகணபதி- தைரியம்.
26.
சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27.
கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28.
விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29.
குமார கணபதி: மாலா மந்திரம்.
30.
ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31.
ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32.
தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33.
துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34.
யோக கணபதி: தியானம்.
35.
நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36.
ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37.
புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38.
நவநீத கணபதி: மனோவசியம்.
39.
மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40.
மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41.
மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42.
குரு கணபதி: குருவருள்.
43.
வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44.
சிவாவதார கணபதி: சிவபக்தி.
45.
துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46.
ரக்த கணபதி: வசிய விருத்தி.
47.
அபிஷ்டவரத கணபதி: நினைத்ததை அடைதல்.
48.
ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50.
மகா கணபதி: ப்ரணவமூலம்.
51.
வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை

ஸ்ரீவைபவ லக்ஷ்மீ விசேஷ அர்ச்சனை!




 ஓம் ஸ்ரீவைபவ லக்ஷ்ம்யை நம:

ஸ்ரீ பார்வதீ ஸரஸ்வதீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
கமலே விமலே தேவி மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காருண்ய நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
தாரித்ரிய துக்க சமனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீதேவீ நித்ய கல்யாணீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸமுத்ர தனயே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராஜ லக்ஷ்மீ ராஜ்ய லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வீர லக்ஷ்மீ விஜய லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மூக ஹந்த்ரீ மந்த்ரரூபாயை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
மஹிஷாஸுர ஸம்ஹர்த்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வைகுண்ட ஸ்ருதயாவாஸே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பக்ஷீந்த்ர வாஹனே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
தான்யரூபே தான்யலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்வர்ணரூபே ஸ்வர்ண மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வித்தரூபே வித்தலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வித்யாரூபே வித்லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹரிப்ரியே வேதரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 

ஃபலரூபே ஃபல தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நிஸ்துலே நிர்மலே நித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரத்னரூபே ரத்னலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
க்ஷüரரூபே க்ஷüரதாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வேதரூபே நாதரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ராணரூபே ப்ராண மூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ப்ரணவானந்த மஹாஸே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மரூபே ப்ரஹ்ம தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஜாதவேத ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆதார சுல்க நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ஸுஷும்னா ஸுஷிராந்தஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
யோகாநந்த ப்ரதாயின்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸெளந்தர்ய ரூபிணீ தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸித்தலக்ஷ்மீ ஸித்தரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ ஸந்தோஷஸத்ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
துஷ்டிதே புஷ்டிதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராஜ ராஜார்ச்சித பதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸாரஸ்வரூபே திவ்யாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சாரித்ர்ய திவ்ய சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வேதகுஹ்யே சுபே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
தர்மார்த்த காமரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மோக்ஷ ஸாம்ராஜ்ய நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ கம்யே ஸர்வரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மோஹனீ மோஹ ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பஞ்சபூதாந்தராளஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நாராயண ப்ரியதமே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காரணீ கார்யரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அனந்த தல்ப சயனே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
லோகைக ஜனனீ வந்த்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சம்புரூபே சம்புமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ப்ரஹ்மரூபே ப்ரஹ்மமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுரூபே விஷ்ணுமாயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆஜ்ஞா சக்ராப்ஜ நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹகாரரேஃப சக்த்யாபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹ்ருதயாம்புஜ தீபாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுக்ரந்தி விசாலாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆதாரமூல நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மக்ரந்தி ப்ரகாசாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
குண்டலீ சயநானந்தீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஜீவாத்ம ரூபிணீ மாதா மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரகாசஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அச்வத்த வ்ருக்ஷ ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காருண்ய பூர்ணே ஸ்ரீதேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மூர்த்தி த்ரய ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸூர்ய ப்ரகாச ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சந்த்ர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பீதாம்பரதரே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
திவ்யாபரண சோபாட்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ப்ராஹ்மணாராதிதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நாரஸிஹ்மீ க்ருபாஸிந்தோ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வரதே மங்களே மான்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பத்மாடவீ நிலயனே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வ்யாஸாதி திவ்யஜ்ஞ ஸம்பூஜ்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ஜயலக்ஷ்மீ ஸித்தலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராஜமுத்ரே விஷ்ணுமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வார்த்த ஸாதகீ நித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸனுமத் பக்தி ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஹனுமத் பக்தி ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

மஹதீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரதிரூபே ரம்யரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காமாங்கீ காமஜனனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸுதாபூர்ணே ஸுதாரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
இந்த்ர வந்த்யே தேவலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அஷ்டைச்வர்ய ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
தர்மராஜ ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ர÷க்ஷõவரபுரீ லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரத்னாகர ப்ரபாரம்போ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மருத்புர மஹானந்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
குபேர லக்ஷ்மீ மாதங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஈசான லக்ஷ்மீ ஸர்வேசீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மபீடே மஹாபீடே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
மாயா பீடஸ்திதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீசக்ர வாஸிநீ கன்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அஷ்டபைரவ ஸம்பூஜ்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
அஸிதாங்க பூரீ நாதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸித்தலக்ஷ்மீ மஹாவித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
புத்தீந்த்ரியாதி நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ரோக தாரித்ர்ய சமனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
ம்ருத்யு ஸந்தாப நாசின்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பதிப்ரியே பதிவ்ரதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சதுர்புஜே கோமளாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பக்ஷ்ரூபே புக்தி தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸதானந்தமயே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
பக்திப்ரியே பக்திகம்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்தோத்ரப்ரியே ரமேராமே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ராமநாம ப்ரியே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
கங்கா ப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விச்வ பர்த்ரீ விச்வமூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
க்ருஷ்ண ப்ரியே க்ருஷ்ண ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
கீதரூபே ராகமூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸாவித்ரீ பூத ஸாவித்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காயத்ரீ ப்ரஹ்ம காயத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ப்ரஹ்மீ ஸரஸ்வதி தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
சுகலாபினீ சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வீணாதர ஸ்தோத்ர கம்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஆஜ்ஞாகரீ ப்ராஜ்ஞவந்த்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
வேதாங்கவன ஸாராங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
நாதாந்த ரஸபூயிஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
திவ்யசக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ந்ருத்தப்ரியே ந்ருத்த லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
சது: ஷஷ்டி கலாரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ மங்கள ஸம்பூரணே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
திவ்ய கந்தாங்க ராகாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
முக்திதே முக்தி தேஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
யஜ்ஞஸாரார்த்த சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே 
சுபம்!