Thursday 29 October 2015

சுபமங்களம் தரும் ஸ்ரீ ஆத்யந்த பிரபு!

ஆதி - ஸ்ருதி - பூர்ணம் - கணபதி 
அந்தம் - ஸ்ம்ருதி - ஸம்பூர்ணம் - மாருதி
ஸ்ரீ ஆத்யந்தப்ரபு - ஸர்வத்ர சம்பூர்ணம்!
எந்த ஒருசெயல் துவங்கினாலும், விக்கினங்கள் -தடைகள் இன்றி செவ்வனே நடைபெற விநாயகரை வணங்கிச் செய்வது வழக்கம்.
எந்த ஒரு சுப  நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம். 
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை “ஆத்யந்த பிரபு’ என்பர். ஆதி+அந்தம் என்பதையே ஆத்யந்த பிரபு’ என்று சொல்கிறார்கள்.
“ஆதி’ என்றால் “முதலாவது’. முதல் கடவுள் விநாயகர். “அந்தம்’ என்றால் “முடிவு’. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார்.
ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம்.
அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். 
சென்னை தரமணி அருகிலுள்ள மத்திய கைலாஷ் கோயிலில் ஆத்யந்த பிரபுவுக்கு சந்நிதி உள்ளது.
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது’ என்பார்கள்.
அதற்கு ‘மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது’ என்று பொருள்.
ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும்.
 “கம்” என்பது  கணபதியின் பீஜாக்ஷரமந்திரம் 
“ஹம்” என்பது ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம்.
கம் கணபதயே என்று க-வில் துவங்கி ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.
கணபதி  ,அனுமன் இருவருமே பிரம்மச்சாரிகள்! விலங்கின ரூபம் கொண்டவர்கள்!
ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் ! 
 நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!
இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! 
இருவருக்குமே சூரியன் தான் குரு…

இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை!
கணபதிக்கு  ஆற்றங்கரை கூட இடம் தான்! அனுமனுக்கோ தூண் கூட இடம் தான்! 
 வடநாட்டில் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!
நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!
கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!
இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! 
பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் !
மத்திய கைலாஷ் கோயிலில் அருளும் ஸ்ரீ ஆத்யந்தப்ரபுவை வணங்கி அருள் பெறுவோம்! 



No comments:

Post a Comment