Thursday, 25 February 2016

மங்களம் தரும் மகாமக நீராடல்!


மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில், பாரதத்திலுள்ள புனித நதிகள் யாவும் கலந்துகொள்கின்றன. இத்திருக்குளத்திலுள்ள இருபது தீர்த்தக்கிணறுகளில் மகத்தன்று புதிய ஊற்றுகள் ஏற்பட்டு, நீராடுபவர்களுக்கு புத்துணர்ச்சியையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றன.

பௌர்ணமியுடன்கூடிய இந்த மாசிமக நன்னாளில் புனித நீராடியபின் பிதுர்பூஜை செய்து அன்னதானம் அளித்தால், பிதுர்களின் ஆசியுடன் வளமான வாழ்வு கிட்டுமென்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இந்த மாசி மக நீராடல் குடந்தையில் மட்டுமல்ல; தமிழகத்திலுள்ள அனைத்து திருத்தலங்களிலும் தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெறும். சில தலங்களில் தெப்போற்சவம் நடைபெறுவதையும் காணலாம்.

இந்த நாளில் கடலில் நீராடுவதும் போற்றப் படுகிறது.

மாசி மகத்தன்று பூமியில் காந்த சக்தி உண்டாவதால் நீர்நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தியையும் ஏற்படுத்து கிறது. இது இயற்கை தரும் கொடை. அச்சமயத்தில் கடலில் நீராடுவோரின் மனமும் உடலும் ஆரோக்கியத்துடன் திகழ்வதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் கூடும். இதை விஞ்ஞானமும் கூறுகிறது.

அதனால், கடற்கரையையொட்டிய திருத்தலங்களில் உள்ள கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு புராணக்கதை ஒன்று சொல்லப்படுகிறது.

பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்தார். அதனால் கடலரசன் திருமாலுக்கு மாமனார் ஆனார். லட்சுமியுடன் திருமால் வைகுண்டம் சென்றுவிட்டதால், "நாம் எப்போது மீண்டும் மகாவிஷ்ணுவைக் காண்பது' என்று கவலைப்பட்டார் சமுத்திரராஜன். இதனையறிந்த மகாலட்சுமி திருமாலைப் பார்க்க, "நான் ஆண்டுக்கு ஒருமுறை கடற்கரைக்கு வந்து தரிசனம் தருகிறேன்' என்று அருளினார்.

அந்த நாள்தான் மாசிமகம் என்கிறது புராணம். அதனால்தான் கடற்கரையையொட்டிய திருத்தலங்களில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் மாசி மகத்தன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. அந்தவகையில் சென்னை திருவல்லிக்கேணியில் அருள்புரியும் ஸ்ரீபார்த்த சாரதி கருடவாகனத்தில் புறப்பட்டு, தெற்கு மாட வீதி, துளசிங்கத் தெருவில் திரும்பி மெரீனா கடற்கரைக்கு அதிகாலைவேளையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார்.

இதேபோல் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் மூலவர் தீர்த்தபாலீஸ்வரரும் மாசி மகத்தன்று அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரியுடன் சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தம்பாலித்து அருளாசி வழங்குவது வழக்கம். மேலும், மயிலை கபாலீஸ்வரர், அம்பாள் ஸ்ரீகற்பகாம்பிகை ஆகியோரும், மயிலையிலுள்ள சிவாலயங்களில் அருள்புரியும் தெய்வங்களும் கடற்கரைக்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள்.

நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்று கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம். இங்குள்ள கடலில் நீராடுவது ராமேஸ்வரம் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடுவதற்கு சமம். இங்கு தலசயனப்பெருமாள் கிழக்குமுகம் நோக்கி சயனக் கோலத்தில் கோவில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீநிலமங்கை நாச்சியார்.

புண்டரீக மகரிஷி தாமரை மலர்களைப் பறித்து ஒரு கூடையில் வைத்துக்கொண்டு, பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாளுக்கு சமர்ப்பிக்க எண்ணி கடற்கரைக்கு வந்தார். மலர்க்கூடையை கரையில் வைத்துவிட்டு, கடல்நீரை இறைத்து விட்டால் பெருமாளைக் கண்டுவிடலாம் என்றெண்ணி, கைகளால் கடல்நீரை இறைக்கத் தொடங்கினார். அப்போது, "நாராயணா நாராயணா' என்றபடியே ஸ்ரீமன் நாராயணன் முதியவர் வேடத்தில் அங்கே வந்தார். அவர் புண்டரீக மகரிஷியிடம், ""எனக்கு பசியாக இருக்கிறது. நீங்கள் ஊருக்குள் சென்று ஏதேனும் உணவு வாங்கிவாருங்கள். அதுவரை கடல்நீரை நான் இறைத்துக்கொண்டி ருக்கிறேன்'' என்றார்.

சிறிது நேரத்தில் உணவு வாங்கிவந்த முனிவர் கடல் நீர் உள்வாங்கி யிருப்பதைக் கண்டார். அந்த வயோதிகரைக் காணவில்லை. அந்த சமயத்தில் ஓர் ஒலி கேட்டது. அந்த திசையில் முனிவர் பார்த்தபோது, அங்கே முனிவர் கடற்கரையில் வைத்துச் சென்ற தாமரை மலர்கள் அடங்கிய கூடையிருந்தது. அதிலிருந்த மலர்களை தனது திருவடிகளில் சேர்த்துக்கொண்டு சயனக் கோலத்தில் சேவை சாதித்தார் ஸ்ரீமன் நாராயணன். திருமால், தன் திருக்கரங்களால் கடல்நீரைத் தொட்டு இறைத்ததனால் இத்தலம் அர்த்தசேது என்று போற்றப்படுகிறது.

முனிவருக்கு பெருமாள் அருள்புரிந்த நன்னாள் மாசிமகம் என்பதால், இத்தல பெருமாள் மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி காண்கிறார். அன்று இக்கடலில் நீராடி, தலசயனப் பெருமாளை தரிசித்தால் சகலபாக்கியங்களும் கிட்டுமென்பது ஐதீகம்.

பொதுவாக மாசிமகத்தன்று கும்ப கோணத்தில் அமைந்துள்ள அமிர்தகுளமான மாமாங்கக் குளத்தில் நீராடுவது சிறப்பு. அதுவும் இந்த வருடம் மகாமகம் என்பதால் மிகவும் போற்றப்படுகிறது. அங்குசெல்ல இயலாதவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு சகல பாக்கியங்களைப் பெறலாம்.



மகிமை பொருந்திய மகாமக குளம்



மகாமகத் தீர்த்தத்தை ஒருமுறை வணங்கினால் எல்லா தேவர்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மகாமகக் குளத்தை ஒருமுறை சுற்றிவந்தால் பூமியை நூறு முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தில் ஒருமுறை நீராடினால் கங்கைக்கரையில் நூறாண்டுகள் வாழ்ந்து மூன்று காலமும் நீராடிய பலன் கிடைக்கும்.

இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தின் வடபுறத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு தனது கோத்திரம், மனைவியின் கோத்திரம் உள்ளிட்ட ஏழு கோத்திரங்களை யும் சேர்ந்தவர்கள் (ஏழு தலைமுறைகளுக்கு) நற்கதி அடைவர். வடபுறத்திலுள்ள கிணற்றில் மகாமகத்தன்று காசியிலிருந்து கங்கை வருகிறது.

இங்கு இடப லக்னத்தில் பல குமிழிகள் ஏற்படுவதைக் காணலாம்.


கிருத யுகத்தில் பிரம்மன் தவம் செய்தமை யால் மகாமகக் குளத்திற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.

திரேதா யுகத்தில் பாவங்களைப் போக்கிய தால் பாபநோதம் என்று பெயர்.

துவாபர யுகத்தில் முக்தி அளித்ததால் முக்தி தீர்த்தம் என்று பெயர்.

கலியுகத்தில் நவகன்னியர் பூஜித்தமையால் கன்யா தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கொரநாட்டுக்கருப்பூர்) ஆகியவை அமிர்தம் பரவிய பஞ்ச குரோச தலங்களாகும்.

மகாமகக் குளத்திலுள்ள தீர்த்தங்கள்இந்திர தீர்த்தம்- வானுலக வாழ்வளிக்கும்.அக்கினி தீர்த்தம்- பிரம்மஹத்தி தோஷம் நீக்கும்.யம தீர்த்தம்- யம பயம் போக்கும்.நிருதி தீர்த்தம்- பூத, பிரேத, பிசாசு குற்றம் நீக்கும்.வருண தீர்த்தம்- ஆயுள் விருத்தி தரும்.வாயு தீர்த்தம்- பிணிகள் அகலும்.குபேர தீர்த்தம்- சகல செல்வங்களும் உண்டாக்கும்.ஈசான தீர்த்தம்- சிவனடி சேர்க்கும்.பிரம்ம தீர்த்தம்- பிதுர்களைக் கரையேற்றும்.கங்கை தீர்த்தம்- கயிலை பதவி அளிக்கும்.யமுனை தீர்த்தம்- பொன் விருத்தி உண்டாக்கும்.கோதாவரி தீர்த்தம்- இஷ்ட சித்தி உண்டாக்கும்.நர்மதை தீர்த்தம்- திடகாத்திரம் உண்டாக்கும்.சரசுவதி தீர்த்தம்- ஞானம் அருளும்.காவிரி தீர்த்தம்- புருஷார்த்தங்களை நல்கும்.குமரி தீர்த்தம்- அசுவமேத யாகப் பலன்களைக் கொடுக்கும்.பயோடிவி தீர்த்தம்- கோலாகலம் அளிக்கும்.சரயு தீர்த்தம்- மனக்கவலை தீர்க்கும்.கன்னிகா தீர்த்தம்- துன்பம் நீக்கி இன்பத்தைச் சேர்க்கும். (இதில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளனவாம்.)தேவ தீர்த்தம்- சகல பாவங்களும் போக்கி தேவேந்திர பதவியைத் தரும்.

இந்த மகாமக குளத்தை சீர்செய்தவர் ஸ்ரீகோவிந்த தீட்சிதர். அச்சுதப்ப நாயக்கரின் பெரும் முயற்சியால் இக்குளங்கள் வெட்டப் பட்டன. தீட்சிதரின் முயற்சியால் மகாமகக் குளத்தில் படித்துறைகள் அமைக்கப்பட்டன. மகாமக தீர்த்தம் தனிப்பட்ட ஒரு தீர்த்தமல்ல; இறைவனின் அனுக்ரகத்தைப் பெற பல புனித தீர்த்தங்கள் ஒன்றுசேர்ந்தது. ராஜகுரு கோவிந்த தீட்சிதர் காலத்தில்தான் கும்ப கோணம் மகாமகம் சிறப்பு பெற்று உலகப் புகழ்பெற்றது.எந்த பரிகாரங்கள் செய்தாலும் தீர்க்க முடியாத பழி பாவங்கள் இக்குளத்தில் நீராடுவதால் தீயிலிட்ட பஞ்சுபோல் பொசுங்கிவிடும். சித்திரை, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களில் நீராடுவது மிகவும் விசேஷம்.

சர்வ வல்லமை தரும் மகாமக துதிகள் - 2


ஸ்ரீ மங்களாம்பிகை சடாதார மங்கள துதி

ஸமஷ்டி மந்த்ர ரூபாம் தாம்
மஹாயாக ப்ரியாம் சிவாம்/
மூலதார ஸ்திதாம் வந்தே
அமிர்தேச ப்ரியாம் தலாம்//

மங்களாம் மாத்ருகாம் தேவீம்
ஸர்வ மங்கள ரூபிணீம்/
ஸ்வாதிஷ்டான ஸ்திதாம்
வந்தே ஸர்வ மங்கள தாயிம்//

ஸர்வகாமப்ரதாம் திவ்யாம்
ஸர்வக்ஞாம் ஞானதாம் சுபாம்/
துர்கடார்த்த ப்ரதாம் வந்தே
மணிபூரக வாஸினீம்//


கணபீத ஹராம் காளீம்
காருண்யாம்ருத ரூபிணீம்/
கணாம்பிகா மஹம் வந்தே
அநாஹத நிவாஸினீம்//


ஸர்வரோக ஹரீம் கௌரீம்
ஸர்வ தாரித்ரிய நாஸினீம்/
ருக்விபேதிநீ மஹம் வந்தே
விசுத்தே ஸ்தேதித காமிநீம்//


ஸர்வைஸ்வர்ய ப்ரதா தாத்சீம்
ஸர்வானந்த ப்ரதாயினீம்/
ஸர்வேப்ஸித ப்ரதாம் வந்தே
ஆக்ஞா சக்ர நிவாஸிநீம்//


மங்களம் தேஹி மந்த்ரேசி
சர்வ மந்த்ர ஸ்வரூபிணி/
கும்பேச வாமபாகஸ்தே
கும்பகோண நிவாஸினி//


மங்களாம்பிகா துதி நித்யம்
ய படேத் பக்தி மாந்நர:/
சர்வ சௌபாக்ய மவாப்னோதி

ஸகல கார்ய சித்திதம் ஸதா//


துதியின் சிறப்பு: மங்களாம்பிகை தேவி 51 அட்சரங்களுடன் கூடிய சக்தி வடிவினளாகவும், மகாயாகம் என்று வர்ணிக்கப்படுகின்ற ஸ்ரீவித்யா பூஜையில் விருப்பம் கொண்டவளாகவும், அமுதேச சிவபெருமானின் அன்புக்குப் பிரியமானவளாகவும், 64 கலைகளோடு கூடிய மூலாதார சக்கரத்தில் வீற்றிருப்பவளாக வும் விளங்குகிறாள்.சர்வமங்கள ரூபிணியாகவும், ஞானத்தை அளிப்பவளாகவும், நமது மனவிருப்பத்தை அறிந்து கிடைப்பதற்கரிதான பொருளைத் தருபவளாகவும், நோய்கள், தோஷங்களை அகற்றி, தரித்திரங்களை விலகச் செய்து, நாம் விரும்புகிற அனைத்து ஐஸ்வர்யங்களையும் அருள்பவளாகவும் காட்சி தருகிறாள்.

மந்திர அட்சரங்கள் எல்லாம் அவளுக்குள் ஒடுங்கியிருப்பது போற்றுதலுக்குரியது என இத்துதி அம்பிகையின் சக்தியை எடுத்துச் சொல்கிறது. மகாமகத் திருவிழா நாளில் இந்த சக்தியுள்ள சடாதாரத் துதியைக் கூறுபவர்க்கு சர்வ வல்லமையும் கூடுவது சாத்தியமே.





சர்வ வல்லமை தரும் மகாமக துதிகள் - 1


"திருக்குடந்தை" கும்ப லிங்க துதி!

"திருக்குடந்தை' என்று புகழப்படும் கும்ப
கோணத்தின் சிறப்பை அறிந்த பிரம்மதேவர், மகாமகத் தீர்த்தத்தில் நீராடி கும்பேஸ்வரரை துதித்த அபூர்வ துதி இது. இதைச் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம், புத்திரலாபம் போன்ற நலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீகுருப்யோ நம:


நமோ நம: காரண காரணாய
ஸ்ரீமத் ஸுதா கும்பக விக்ரஹாய/
கல்யாண ஸாந்த்ராய குணாகராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

பீமாய பீமாதிஹராய சம்பவே
நாகாய சாந்தாய மநோஹராய/
மஹாஜடாஜுட தராய பூதயே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸர்வாகமாம்நாய சரீரதாரிணே
ஸோமார்க்க நேத்ராய மஹேஸ்வராய/
யக்ஞாய யக்ஞேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

காத்யாயனீ காமித தாயகாய
துர்க்கார்த்த தேஹாய க்ருதாகமாய/
காலாய காலேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

விபூதி தாநேக சரீர தாரிணே
கல்பாய கல்பாந்தகராய சம்பவே/
விஸ்வாய வைஸ்வாநர லோசநாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

மாயா ப்ரபஞ்சாய மனோஹராய
மாயா கடேசாய மஹாதிஹாரிணே/
மாயா ப்ரபஞ்சைக நிதான மூர்த்தயே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

போகீந்த்ர ஸம்பூஜித விக்ரஹாய
போகீந்த்ர பூஷாய பவாந்தகாய/
ஸ்ரீபாரதி சங்கர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

தாம்ராய சாமீகர பூஷிதாய
ஸ்ரீசோம கோடீர விபூஷிதாய/
ஸமஸ்த ஸத்க்ஷேத்ர கலாவராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸ்ருஷ்டி ஸ்திதி த்வம்ஸன காரணாய
ஸ்ரீஸ்ருஷ்டி பீஜாங்க மனோகராய/
ஸச்சாஸ்த்ர வேதாந்த களேபராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஷட்வர்க்க ஸம்பேதன தீக்ஷிதாய
ஷடானனாதித்ய பலப்ரதாய/
ஸமஸ்த மந்த்ரார்த்த நிதான ரூபிணே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

கும்போத்பவ ப்ரமுக பூஜித விக்ரஹாய
வீராய வீராந்தகராய மாயினே/
பக்தேஷ்டதான நிபுணாய பவாப்தி போத்ரே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

மூலாய மூலாகம பூஜிதாய
பாதாள மூலாய நிதீஸ்வராய//
நித்யாய ஸித்தேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸமஸ்த கல்யாண வரப்ரதாய
ஸமஸ்த கல்யாண நிதான மூர்த்தயே/
ஸ்ரீமங்களாம்பார்ச்சித பாதபத்மிநே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

லக்னாதி பேசாய க்ரஹார்ச்சிதாய
ஸ்ரீகாமதேநு சுரஸங்க சுபூஜிதாய/
பஞ்சாநநாய பரமார்த்த நிதர்ஸகாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

தீர்த்தாதி நாதாய பலப்ரதாய
பலஸ்வரூபாய பலாங்கதாரிணே/
ஸ்ரீமந்த்ரபீடேஸ்வரீ வல்லபாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

பஞ்ச குரோச தல யாத்திரை: மகாமகப் புனித நீராடலுக்கு முன்பாக விரதமிருந்து யாத்திரை சென்று வரவேண்டிய ஐந்து தலங்களாக திருவிடை மருதூர், சுவாமிலை, தாராசுரம், திருநாகேஸ்வரம், கருப்பூர் என்னும் திருப்
பாடலவனம் ஆகியவை விளங்குகின்றன.

அஷ்டாதச தல யாத்திரை: பதினெட்டு
சிவஸ்தலங்களுக்கு மகாமகக் காலத்தில் யாத்திரை சென்றுவருதல் முக்கியம். அவை:திருவிடைமருதூர் என்ற மத்யார்ஜுனம், திருப்புவனம், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், செம்பியவரம்பல் (அய்யாவாடி), சிவபுரம், சாக்கோட்டை, மருதாநல்லூர், பட்டீஸ்வரம், திருச்சக்திமுற்றம், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, இன்னம்பூர், திருப்புறம்பியம், கொட்டையூர், கருப்பூர், வாணாதுரை.

பஞ்ச குரோச தலங்களையும், அஷ்டாதச ஸ்தானம் என்னும் தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பவர்கள், பூமியை வலம் வந்த பலனை அடைவார்கள் என்பது ஐதீகம். பழங்கால கல்வெட்டுச் செய்திகளின்படி இத்தகவல் உள்ளது.





Wednesday, 24 February 2016

பிரம்ம முகூர்த்தம்


அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை. இந்த நேரம், தேவர்களும், பித்ருக்களும், ஒன்றுகூடும் நேரம்.காலையில் அவர்களை நினைக்க வேண்டும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டவேண்டும் என்று மனதில் தியானித்து கடமையை தொடங்கவேண்டும்.

அதிகாலை எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும்.உஷத்காலம் உஷஸ் என்னும் பெண்தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவளே விடியற்காலை நேரத்திற்கு உரியவள். இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.


உள்ளங்கையில் விழிப்பது:

காலையில் கண்விழித்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பது பலரது வழக்கம். உள்ளங்கையின் அடிப்பாகத்தில் பார்வதி தேவியும், மத்தியில் சரஸ்வதியும், மேல்புறத்தில் மகாலட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே காலையில் கண்விழித்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பதால் இந்த மூன்று தேவியரையும் தரிசித்த பலன் கிடைக்கும். அதனால் அன்றைய தினம் செய்ய வேண்டிய செயல் இனிதே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

வள்ளி திருமணம்!


(மயிலில் உலகை வலம் வந்தும், மாங்கனியை முருகப்பெருமானால் பெற முடியவில்லை. விநாயகரோ, அம்மையப்பரே உலகம் என்று சொல்லி சிவபார்வதியை வலம் வந்து மாங்கனியைப் பெற்றார். பெற்றோர் மீது கோபம் கொண்ட முருகன் பழநி மலை மீது ஆண்டியாகி நின்றார். அண்ணனான விநாயகர், இச்செயலுக்குப் பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும் விதத்தில், தம்பி முருகன் வள்ளியை மணந்து குடும்பஸ்தனாக வாழ துணை நின்றார். பெரிய மதயானையாக வந்துவள்ளியைத் துரத்தினார். பயந்து போன வள்ளி, "முருகா! முருகா' என்று கூவியபடி ஓடினாள். எதிரில் நின்ற கிழவன் முருகனைக் கட்டியணைத்துக் கொண்டாள். மகிழ்ந்த முருகன் தன் சுயரூபத்தைக் காட்டி வள்ளியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின் நம்பிராஜன் தலைமையில் வள்ளிகல்யாணம் இனிதே நிறைவேறியது.)

முதலில் வள்ளி பிறந்ததைப் பார்ப்போம்

நமக்கெல்லாம் தெரிந்த கதையான வள்ளி கதையில் நம்பிராஜனின் மகளாய்ப் பிறக்கின்றாள் என்று ஒரு கதையும், நம்பிராஜன் கண்டெடுக்கின்றான் என இன்னொரு வகையும் உண்டு.
ஆனால் இந்தக் குமரி மாவட்டக் கதைப் பாடல்களில் சொல்லுவதே வேறே. ரிஷ்ய சிருங்கருக்கும், மற்றொரு பெண் மான் உருவில் இருந்த பெண்ணிற்கும் பிறந்த குழந்தையே வள்ளி. நம்பிராஜன் வேளி மலை அரசன். இவன் மனைவி மோகினி. இவன் வேட்டைக்குச் செல்லும்போது வள்ளிக் கிழங்குகள் சூழ்ந்த தோட்டத்தில் இந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்து வருகின்றான். இந்தக் குழந்தையைச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகின்றனர் நம்பிராஜன் குடும்பத்தில்.
குழந்தை அழுதால் பாடும் பாட்டெனச் சொல்லுவது,

"மானே நீ போட்ட சத்தம் மலக்குறவன் ஓடி வந்து ஓடி வந்து
வள்ளி தனை வளைத்துமே எடுத்தானே வளைத்துமே எடுத்தானே
பெண்பிள்ளை பிள்ளையல்லோ பிள்ளையே ஆயிப்போச்சு
ஆமணக்கு தண்டு வெட்டி  அது நிறையத் தேனடச்சு தேனடச்சு
அமுது பெறும்  நேரமெல்லாம் அமுது பசி அடக்கிவிட்டு
குச்சு போய்ச் சேர்ந்தார்கள்."

என்ற இவ்வாறு ஓடி வந்து வள்ளியாகிய குழந்தையின் அழுகையை அடக்குகின்றார்களாம், குறவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து. நம்பிராஜனுக்கு மகன்கள் நிறையப் பேர். அனைவரும் வள்ளியைத் தங்கள் சொந்த சகோதரி போலவே எண்ணிப் பாசமுடனும், நேசமுடனும் வளர்த்து வந்தார்கள். தினைப்புலத்தில் தினை அறுவடைக்குக் காத்து நின்றது. அங்கே பட்சிகள் வந்து செய்யும் இம்சை தாங்க முடியவில்லை. தன் மருமகள்கள் ஒவ்வொருவரையும் வேண்டுகின்றாள் நம்பிராஜன் மனைவியான மோகினி. ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு காரணம். மறுக்கின்றார்கள். ஒருத்திக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்கணும், ஒருத்திக்குக் குழந்தை பிறக்கப் போகின்றது. இன்னொருத்திக்குத் தலை நோவு. இப்படிச் சொல்ல, அங்கே மெல்ல, மெல்ல மாமியார், மருமகள் சண்டை உதயம் ஆகும்போல் சூழ்நிலை உருவெடுக்கின்றது. பார்த்தாள் வள்ளி, தானே தினைப்புலம் காவல்காப்பதாய்ச் சொல்லிக் கிளம்புகின்றாள். பதறுகின்றாள் மோகினி. ஆஹா, பொன்னைப் போல் போற்றி வளர்த்தபெண்ணாயிற்றே. எப்படி அனுப்புவது?? தயங்கினாள் மோகினி.

அன்னையைத் தேற்றி விட்டுப் புறப்படுகின்றாள் வள்ளி. கூடவே துணைக்குத் தோழிப் பெண்களை அனுப்பினாள் மோகினி. தோழிகள் புடை சூழ தினைப்புலம் வந்து, அங்கே மரத்தின் உச்சியில் தங்குவதற்குக் கட்டி இருக்கும் இடத்தில் தங்கிக் கொண்டு, கையில் ஒரு குச்சியையும் வைத்துக் கொண்டு வரும் பட்சிகளை விரட்டுகின்றாள் வள்ளி.. ஆலோலம், ஆலோலம், ஆலோலம் என்று பாடுகின்றாள் வள்ளி. அவள் ஆலோல சப்தம் கேட்டுப் பட்சிகள் பறந்தனவா? அவளைத் தூக்கிச் செல்ல கந்த பட்சி பறந்து வந்ததா??
வள்ளி தினைப்புலம் காக்க வந்துவிட்டாள். ஏற்கெனவே வள்ளியின் திருமணம் குறித்து அவளின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும், தாயான மோகினியும் கவலையுற்றிருந்தார்கள். ஆனால் நாரத முனியோ அவள் குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கே உரியவள் எனச் சொல்லி இருந்தார். முருகனாவது, வள்ளியை வந்து மணப்பதாவது! என்ன செய்வது என்றறியாமல் இருந்தனர் நம்பிராஜனும், மோகினியும். இந்நிலையில் வள்ளி தினப்புலம் காக்கச் சென்றாள். அங்கே தோழிகள் புடை சூழ "ஆலோலம்" பாடினாள். ஆடினாள். அப்போது தோழிகள் ஓடி வந்து வள்ளியிடம் வளைச் செட்டி வந்திருப்பதாய்க் கூற , அவனை அழைத்து வருகின்றனர். தோழியர் அழைத்து வந்த வளைச் செட்டியைப் பார்த்து வள்ளி, இவன் என்ன சிறு பிள்ளையாக இருக்கின்றானே என மனதிற்குள் எண்ணினாள். வள்ளியின் கை பிடித்து வளை போட செட்டி நெருங்கியதும், வள்ளி விதிர் விதிர்த்துப் போகின்றாள். அந்த ஆறுமுகன் பிடிக்க வேண்டிய கை இது, ஒரு வளைச்செட்டி பிடிக்கலாமோ என மயங்குகின்றாள். வளைச் செட்டியைத் துரத்துகின்றாள் வள்ளி. ஏளனமாய்ப் பேசுகின்றாள் அவனைப் பார்த்து. அவமானப் படுத்தித் திருப்பி அனுப்புகின்றாள். "ஏ! வளைச்செட்டி,

 "ஆருமற்ற வள்ளி நாம் அருந்தினையைக் காக்கப் போறேன்
வாசலிட்டுப் போறவளுக்கு வளசலு எனக்கெதுக்கு?"

என்று சொல்லி அவனை விரட்டுகின்றாள். வள்ளியின் அன்பின் ஆழம் புரிகின்றது கந்தனுக்கு. ஆம் வளைச் செட்டி வேடத்தில் வந்து வள்ளியைச் சோதனை செய்தது அந்தக் கந்தனே ஆகும். தினைப்புலம் காக்கும் போது வள்ளி தினைக் கொத்த வரும் கிளி, மைனா, குருவி, அன்னங்கள், காக்கைகள் போன்றவற்றை விரட்டுகின்றாள்.
ஆலோலம், ஆலோலம்,  ஆலோலங்கடி, சோஓஓஓஓஓஓ"
ஆலோலங்கடி சோஓஓஓஓஓ; ஆயலோ கிளி ஆயலோ
அன்னங்களே, வாத்துகளே போவென்று விரட்டினாலும்
குந்துகெட்ட வெள்ளக்கிளி ஆனாலும் போவதில்லை அடி
ஆலோலம், ஆலோலம்,  ஆலோலங்கடி சோஓஓஓஓ"

எனப் பாடிப் பறவைகளை விரட்டுகின்றாள் வள்ளி. அப்போது அங்கே ஒரு தள்ளாத வயது சென்ற கிழவர் வருகின்றார். கிழவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கின்றது. உடல் மட்டுமில்லாமல் அனைத்து அவயங்களும் ஆடுகின்றன. கையில் பிடித்திருந்த தடியும் கையில் பிடிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு வந்து கொண்டிருந்தார் கிழவர். தோழிகள் பார்த்தனர். கிழவரை மெதுவாய்க் கை பிடித்து அழைத்துச் சென்று வள்ளியிடம் கொண்டு சேர்த்தனர். கந்தன் நினைப்பில் இருந்த வள்ளி கிழவரைக் கொஞ்சம் எரிச்சலுடனேயே பார்த்தாள். என்னவென்று கேட்க, பாவம் தள்ளாத கிழவர், பசி போலிருக்கிறது, கை, கால் நடுக்கமாய் இருக்கிறது, அதான் இங்கே கொண்டு வந்து சேர்த்தோம் என்றனர் தோழிகள். சரி அந்தத் தினைமாவைக் கொஞ்சம் சாப்பிடக் கொடுங்கள் என்று தோழியரிடம் ஆணை இடுகின்றாள் வள்ளி. "வள்ளி, வள்ளி, நீ உன் கையால் கொடேன்!" என்று ஆசையுடன் கிழவர் கேட்க, கிழவருக்கு ஆசையைப் பாரேன், என்ற வள்ளிக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்து விடுகின்றது.

 "கல்லை உரலாக்கி கருங்கம்பை ஒலக்கையாக்கி
தேக்கிலையை அளவாக்கி தெள்ளி விடு வள்ளி
தினைமாவை அள்ளி"

சரி, கிழவர் தானே ஆசையை நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டே, தேனும், தினைமாவும் கலந்து கிழவருக்குக் கொடுக்கின்றாள் வள்ளி. ஒரு வாய் போடவில்லை, கிழவருக்கு, விக்கல் எடுத்து விடுகின்றது. பயத்தில் வள்ளியைக் கட்டிக் கொள்கின்றார் கிழவர். வள்ளிக்குக் கோபம் வந்துவிடுகின்றது. "தண்ணீர் தவிக்குதடி வள்ளி" என்று தண்ணீர் கேட்கின்றார் கிழவர். வள்ளி மறுக்க, கிழவர் யோசிக்கின்றார். இவள் எதற்கும் பயப்படவே மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கின்றாளே என நினைத்த வண்ணம், "வள்ளி, வள்ளி, இந்தக் காட்டு யானை இருக்கே!" என்று ஆரம்பித்தார்.

 யானையா? தாத்தா, இருங்க, இருங்க, போயிடாதீங்க! எனக்கு யானையைக் கண்டால் பயம்!" என்று வள்ளி நடுக்கத்துடன் ஓடி வந்து கிழவரைக் கட்டிக் கொள்கின்றாள். மனதில் சந்தேகம் பூக்கின்றது வள்ளிக்கு. கிழவர் மாதிரி இல்லையே கையும், காலும், என்று நினைத்துக் கொள்கின்றாள். ஆனாலும் யானை பயம் மனதில் முந்துகின்றது. கிழவருக்கு சந்தோஷம், " வள்ளி, ஏமாந்தாயா? ஏச்சுப்புட்டேனே, வள்ளி, ஏச்சுப் புட்டேனே!" என்று பாடி, ஆட, இவர் கிழவர் இல்லை என வள்ளியின் மனதில் உறுதிப் படுகின்றது.

 "சரி, தண்ணீர் தானே, தாத்தா, வாங்க , தண்ணீர் தருகின்றேன்"என்று அருகே இருந்த சுனைக்கு அழைத்துப் போய்க் கிழவரைச் சுனையில் தள்ளி விடுகின்றாள். பின் கை கொட்டிச் சிரிக்கின்றாள் வள்ளி. "ஏச்சுப்புட்டேனே, தாத்தா, ஏச்சுப்புட்டேனே!" என்று பாடி ஆடுகின்றாள் வள்ளி. "அப்படியா, வள்ளி, அதோ பார்!' என்கின்றார் கிழவர். அங்கே வந்தது ஒரு யானை பிளிறிக் கொண்டு. வள்ளிக்கு நடுக்கம் அதிகம் ஆகி அவளும் சுனைக்குள் இறங்கிக் கிழவரைக் கட்டிக் கொண்டாள். யானை போகவே இல்லை. அங்கேயே பிடிவாதமாய் நிற்கின்றது.

"ஆனையும் குதிக்குதல்லோ அசட்டாளம் பண்ணுதல்லோ
சண்டாளப் பண்டாரா- என்னை சதி மோசம் செய்தீரே
ஆனையை விலக்கி விடும் – நீர் ஆளையேக் கலக்குதல்லோ!"

என்று கிழவரிடம் யானையைக் கூப்பிடும்படியும், விரட்டும்படியும் வள்ளி கெஞ்சுகின்றாள். கிழவர் கெஞ்சினால் மிஞ்சுகின்றார், மிஞ்சினால் கெஞ்சுகின்றார். இப்போது கிழவரின் முறையாச்சே. வள்ளி சரியாக மாட்டிக் கொண்டாள். "வள்ளி, என் அருமை வள்ளி, ஆசை வள்ளி, நான் உனக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லு, என்னைக் கல்யாணம் செய்துக்குவியா? சரினு சொல்லு! ஆனை போகும்!" என்று சொல்கின்றார் கிழவர்.
வள்ளி மறுக்கின்றாள். "நீர் எனக்கு மாமன், நான் உமது மருமகள்" என்று வள்ளி சொல்ல, கிழவர் மறுக்கின்றார். யானை போக மறுக்கின்றது. யானையை எப்படியாவது துரத்தினால் போதும் என நினைத்த வள்ளியோ,

"ஆகட்டும், ஆகட்டும் தம்புரானே ஆனய விலக்கிவிடு
நீரெனக்குப் பாட்டாவாம் நானுனக்குப் பேத்தியாம்"

என்று சொல்கின்றாள் இம்முறை. ஆனால் கிழவர் இதற்கும் மசியவில்லையே. அழுத்தமாய் "வள்ளி, நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லு, ஆனை போயிடும்" என்று சொல்கின்றார் கிழவர். அரை மனதோடு வள்ளி சம்மதிக்கின்றாள்.  அப்போது நம்பிராஜனுக்குத் தினைப்புலத்தில் ஒரு கிழவர் வந்து வள்ளியைத் துன்புறுத்துகின்றான் எனத் தகவல் கிட்ட, அவன் வள்ளியைப் பார்க்க விரைந்து வந்தான் தன் மகன்கள் அனைவருடனும்.

அவனும், அவன் கூட்டத்தாரும் வருவதைக் கண்டதும் "ஆஹா, பிழைத்தோம் " என நினைத்த வள்ளி, கிழவர் இருந்த பக்கம் திரும்ப அங்கே கிழவரைக் காணவில்லை. புதியதாய் ஒரு வேங்கை மரம் நிற்கின்றது. வள்ளிக்கு அப்போது தான் இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது எனப் புரிய, என்ன செய்யலாம் என யோசிக்கின்றாள். நம்பிராஜன் வந்து பார்த்துவிட்டு, "என்ன இது? புதுசாய் ஒரு வேங்கை மரம்? வெட்டுங்கள் இதை! " என்று சொல்ல, அதை வெட்ட ஆரம்பிக்க, வள்ளியோ, வேண்டாம், வேண்டாம் என அலறிக் கொண்டே அந்த வேங்கை மரத்தைக் கட்டிக் கொள்கின்றாள். ஆறுமுகன் தன் ஆறுமுகங்களோடும் தோன்றி வள்ளியை ஆட்கொள்கின்றான். நம்பிராஜன் திகைத்துப் போய் நிற்கின்றான்.

எத்தனையோ தெய்வத் திருமணங்கள் இருந்தாலும் இந்த வள்ளி திருமணக் கதை அனைவரையும் கவர்ந்தாப் போல்வேறு ஒன்று கவராது. அனைவருக்கும் பிடித்த கதையாகும் இது.

கோமாதா வழிபாடு!


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர்.
செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும் ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம்.
பசுவுள் இருந்து அருளும் தேவர்கள்

நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான அணுக்களையும் நம் மூளையின் நுண்ணியமான பகுதிகள் பாதுகாத்தாலும், பொதுவாக கை, கால், இடுப்பு, மார்பு, கண், காது, மூக்கு, வாய், வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய முக்கிய உறுப்புக்களை மூளையின் சில பகுதி காக்கிறது என்றே கூறுகிறோம். அதுபோல, உலகை காக்கின்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் கோமாதாவின் (பசுவின் உடலில்) அடங்கி இருந்தாலும், கல்வி, செல்வம் போன்ற முக்கிய தேவைகளை நிறைவேற்றும் முக்கிய தெய்வங்கள் கோமாதாவின் திருவுருவில் எங்கெங்கு உள்ளனர் எனத் தெரிவிப்பதே வழக்கமாக இருக்கிறது. இதையே பல தெய்வங்களை உள்ளடக்கிய காமதேனு என்ற படத்தில் காண்கிறோம்.

கோமாதாவின் உடற் பகுதியும் அங்கே அருளும் தெய்வங்களும்:

1. முகம் மத்தியில் சிவன்
2. வலக் கண் சூரியன்
3. இடக் கண் சந்திரன்
4. மூக்கு வலப்புறம் முருகன்
5. மூக்கு இடப்புறம் கணேசர்
6. காதுகள் அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம் ராகு
8. கழுத்து கீழ்புறம் கேது
9. கொண்டைப்பகுதி ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால் பைரவர்
12. முன் இடக்கால் ஹனுமார்
13. பின்னங்கால்கள் ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம் கங்கை
16. பிட்டம் - மேல்புறம் லக்ஷ்மி
17. முதுகுப்புறம் பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி
18. வயிற்றுப்பகுதி ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு வீமன்
22. இடக்கொம்பு இந்திரன்
23. முன்வலக்குளம்பு விந்தியமலை
24. முன்இடக்குளம்பு இமயமலை
25. பின் வலக்குளம்பு மந்திரமலை
26. பின் இடக்குளம்பு த்ரோணமலை
27. பால்மடி அமுதக்கடல்

7. பசு வழிபாடு வகை

பசு வழிபாடு இரண்டு வகைப்படும்.

1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை. ஈசனை விக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபட முடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவது போல, வீட்டில், கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்.

2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடா விட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவழிபாடே.
அர்ச்சனை

ஓம் காமதேநவே நம
ஓம் பயஸ்வின்யை நம
ஓம் ஹவ்யகவ்யாயை நம
ஓம் பலப்ரதாயை நம
ஓம் வ்ருஷபத்ந்யை நம
ஓம் ஸெளரபேய்யை நம
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம
ஓம் ரோஹிண்யை நம
ஓம் ஸ்ருங்கிண்யை நம
ஓம் க்ஷீரதாரிண்யை நம
ஓம் காம்போஜஜநகாயை நம
ஓம் ஜநகாயை நம
ஓம் யவநஜநகாயை நம
ஓம் மாஹேய்யை நம
ஓம் நைசிக்யை நம
ஓம் ஸபள்யை நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி;
(மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் கூறியும் அர்ச்சனை செய்யவும்)
1. கவாஷ்டகம்

1. ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை ஸுரபியைச நமோ நம:
கவாம், பீஜஸ்வரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே.

2. கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸர்வேஷாம் ஸததம்பரே
க்ஷீரதாயை தனதாயை புத்திதாயை நமோ நம:

3. சுபாயைச சுபத்ராயை கோப்ரதாயை நமோ நம:
யசோதாயை கீர்த்திதாயை தர்மதாயை நமோ நம:

4. பவித்ரரூபாம் பூதாஞ்ச பக்தானாம் ஸர்வகாமதம்
யதா பூதம் ஸர்வம் விசுவம் தாம் தேவீம் சுர பிம்பஜே.

5. கவார்ச்சனம் மகா புண்ணியம் தேவானுக்கிரக காரகம்
மகா பாப ப்ராயச்சித்தம் புக்தி முக்தி ப்ரதாயகம்.

6. யஸ்மாத் சரீரேஸான் நித்யம் த்ரிவிம்சத்கோடி தேவதா
ஸாதேனுர்பவ பூஜ்ய நித்யம் ஸ்ரீ கிருஷ்ணஸ்யாஜயா.

7. தர்மராஜ பிரதிஷ்டாம்ஸ்தி கோ, லக்ஷ்மீ பிரமதாமதா
கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸாந்நித்யம் ஸேவ்ய பிரயத்னதா

8. கோபிரதிஷ்டா வினாசைய்வா வியர்த்தா ஸர்வ பிரதிஷ் டிதா
ஸர்வபிரதிஷ்டா மூலம்ஸ்யாத் ரக்ஷணீயா பிரயத்நதா

9. ஜாத்வாபூஜா ரகஸ்யஞ்ச பக்தி யுக்திச்ச மானவா
யபூஜ யச்சஸுரபி ஸச பூஜ்யோ பவேத்புஜிஹி.

10. அஷ்டகமிதம் ஸபுண்யம் பக்தியுக்திச்சயப் ப்டேத்
ஸ்ர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா.
சுபம்