Friday, 23 September 2016

மூன்றாம் பிறை தரிசனம்!

அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காண வேண்டும், செல்வவளம் பெருகும் தேவைகள் யாவும் பூர்த்தியாகும், பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம், சந்திர தரிசனம் சிவன் பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும்  ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார்கள்.

சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள், சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், மாலை வேலைக்கும். மேற்க்குக்குரிய சனிஷ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் .

காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும். ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும்,

அதற்கான முறைகளை காண்க!
 
 ஒரு தாம்பாளத்  தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து (வெளியில் வந்து  வழிபாடு செய்ய வேண்டும்) ஏற்றி வணங்க வேண்டும். அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம். அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும். தேவையை கேட்க வேண்டும்.
 
இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும், இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும். இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார், இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள். 

பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு, நகை, தானியம், மாங்கல்யம், இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள். தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது. கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ம பலம், மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.

சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவது  . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார்.  

சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும், வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும். பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும். இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே உயர்ந்த செல்வத்தை பெறுவான் இது உறுதி.

 மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது , எனினும் கவலை இல்லை , மாலை    6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்,

 பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும், அவசர வேலையை வைத்துக் கொண்டோ ஏதோ ஒப்புக்காகவோ. கோபதாபங்களோடோ பிறை தரிசனம் செய்ய கூடாது. என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும், எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும்.

அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு,

அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும்.

அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும்,

 ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும். திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்.

திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும். சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம். இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை.
யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும் .

ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக வழிபட்டு வரவேண்டும், சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும்,  சிலருக்கு  12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும்.  எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தரிசனம் கண்டு அளவு கடந்த நன்மைகளை பெறுவோம்.
 
 

அகத்தியர் எழுதிய லக்ஷ்மி சுலோகம்!



அகத்திய முனிவர் தம்முடைய மனைவி லோபாமுத்திரையோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். அங்கு திருமகள் திருக்கோயில் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றபோது திருமகள்மீது இப்பாடல்களைப் பாடிப்போற்றினார்.

அப்போது திருமகள் அகத்தியருக்குக் காட்சி கொடுத்து, "உன்னுடைய 'போற்றி' பாடல்களுக்கு நான் மனமகிழ்ந்தேன். இப்பாடலைப் பாடி போற்றினார் யாவரும்  அரிய, பெரிய இன்பங்களை நுகர்வார்கள்.

இப்பாடல்களை  எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் அங்கே நான் நித்ய வாசம் செல்வேன்!என்று திருவாய் மலர்ந்தருளினாள்.

இப்பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் பெரும் செல்வத்தை  அடைந்து அச்செல்வத்தை நுகர்வர்.
 இப்பாடல்கள் அதிவீரராமபாண்டியரால் மொழிபெயர்க்கப்பட்ட காசி காண்டத்தில் அவரால் மொழி பெயர்த்துப் பாடப்பட்டவை.
   

மூவுலகும் இடறியற்றும் அடலவுணர்
    உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவையுறழ் திருமேனி அருட்கடவுள்
    அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா
    புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவையிரு தாழ்தொழுது பழமறைதேர்
    குறுமுனிவன் பழிச்சுகின்றான்
மூன்றுஉலகங்களுக்கும்துன்பத்தைச்செய்தவலிமைபொருந்தியஅசுரர்களுடைய உயிர்கள் உடலைவிட்டு ஒழியுமாறு சினம் கொண்ட காயாமலரை ஒத்த அழகிய உடலினை உடைய அருள் மிக்க திருமாலின் பரந்த மார்பினிடத்தில் விளங்கித் தோன்றி, தேவர்களுடைய உலகத்தைக் காட்டிலும் பெருமையில் சிறந்து திகழும் பெருமையை உடைய கொல்லாபுரம் என்னும் ஊரிலினிதாகச் சேர்ந்து வீற்றிருக்கின்ற பாவையாகிய திருமளின் இரண்டு திருவடிகளையும் பணிந்து பழமையான மறைகளையெல்லாம் ஆராய்ந்து உணர்ந்த அகத்திய முனிவர் புகழ்ந்து பாடலானார்


கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
    பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறலும் திருமேனி மணிவண்ணன்
    இதயமலர் வைகுமானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
    கரகமலம் முகிழ்த்தெந் நாளும்
கழிபெருங் காதலில் தொழுவோர் வினை தீர
    அருள்கொழிக்கும் கமலக்கண்ணாய்

"வண்டுகள் கிண்டிப் பண்களைப் பாடுவதற்கு இடமாக விளங்கும் தாமரை மலரின் மென்மையான பொகுட்டின்மீது வாழும்தன்மையைப்போல
கருமுகிலை ஒத்த அழகிய உடலினை உடைய மணிவண்ணனாகிய
திருமாலின் உள்ளத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் திருமகளே!
எல்லா உலகங்களையும் இனிதாகப் பெற்ற அருட்கொடியே! கையாகிய
தாமரை மலரைக் குவித்து, எந்த நாளும் மிகுந்த பேரன்பினோடு வணங்குபவர்களுடைய தீவினைகள் ஒழியுமாறு அருளைப் பொழியும்
தாமரை மலர் போலும் கண்களை உடையவளே!"


கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
    செழுங்கமலக் கையாய் செய்ய
விமலை பசுங்கழை குழைக்கும் வேனிலான்
    தனையீன்ற விந்தை தூய
அமுத கும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
    அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன்றிட ஒளிரும் செழுஞ்சுடரே என
    வணக்கம் செய்வான் மன்னோ

"திருமகளே! அழகிய மறு அமைந்த மார்பினை உடையவனாகிய திருமாலின் இல்லக்கிழத்தியே! செழுமை வாய்ந்த தாமரை மலர்போன்ற கைகளை உடையவளே! செந்நிறமுள்ள விமலையே! பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கின்ற வேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதனைப் பெற்ற திருமகளே!
தூய்மை வாய்ந்த அமுதம் நிறைந்த குடத்தை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளையுடையவளே! திருப்பாற்கடலில் பிறந்தவளே! அன்பர் நெஞ்சத் திமிரமாகிய இருள் அகன்றிட விளங்குகின்ற செழுமையான பேரொளியே!"
என்று வணக்கம் செய்யலானான்.



மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும்
    செந்துவர் வாய் மயிலே மற்றும்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
    உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி
    மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெரும்சீர்த்தி எம்மனோ
    ரால் எடுத்துச் சொல்லற் பாற்றோ


இதழ்களை உடைய மணமுள்ள தாமரைப்பூம்பொகுட்டில் அரசு வீற்றிருக்கின்ற செம்பவழம் போன்ற அதரத்தையுடைய மயில் போன்றவளே! உன்னுடைய கடைக்கண்ணின் அருள் பெற்றதனால் அல்லவா நீலமணி போன்ற வண்ணத்தையுடைய திருமால் உலகம் முழுவதையும் காத்தல் செய்யும் தொழிலை மேற்கொண்டான்? நான்முகனான பிரம்மன் படைத்தல் தொழிலை மேற்கொண்டான்?பசுமையான இளம்பிறையை அணிந்த சிவபெருமானும் அழிக்கும் தொழிலை மேற்கொண்டான்? உன்னுடைய பெரும் புகழானது எம்மைப் போன்றோரால் எடுத்துக்கூறுவதற்கு முடியக்கூடிய தன்மைபடைத்ததோ?


மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
    தனிபுறக்கு மன்னர்தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
    நிகரில்லாக் காட்சியோரும்
வெல்படையில் பகை துரந்து வெஞ்சமரில்
    வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர் பொகுட்டு றையும் அணியிழை நின்
    அருள்நோக்கம் அடைந்து ளாரே


அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும் மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய
போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள்
பார்வையைப் பெற்றவர்களே!


செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிறும்
    எழில்மேனி திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
    வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
    நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளை நீ, அவணன்றோ மல்லல் வளம்
    சிறந்தோங்கி இருப்ப தம்மா


செந்தாமரை மலரின் பொன்மயமாகிய மகரந்தத்தைப் போல சிறந்து விளங்குகின்ற அழகிய உடலினை உடைய திருமகளே! கடலால் சூழப்பட்ட அழகிய இடத்தை உடைய உலகத்திலுள்ள இருளை ஓட்டுகின்ற விரிந்த ஒளி உடைய சூரியனாக, வெண்மையான சந்திரனாக, தேவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பொங்கும் நெருப்பாக உலகத்தைக் காக்கின்ற பூங்கொடியே! நெடுக்கானகத்தில், மலையில், நிலத்தில், எங்கு நீ இருக்கின்றாயோ, அந்த இடத்தில் அல்லவோ புகழ்பெற்ற மிகுந்த செல்வமானது சிறப்படைந்து உயர்வாகத் திகழ்கின்றது, அம்மா!


 லக்ஷ்மி சுலோகம் பலன்

என்று தமிழ்க்குறுமுனிவன் பன்னியொடும்
    இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
"நன்றுனது துதி மகிழ்ந்தோம், நான்மறையோய்,
    இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
    ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
    தவ்வை அவண் மருவல் செய்யாள்".

என்று கூறித் தமிழை உணர்த்திய அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கியவுடன் (திருமகள் அகத்திய முனிவரைப் பார்த்து கூறினாள்) "நான்மறைகளிலும் வல்லவனே! நல்லது. உன்னுடைய புகழ்ப் பாடலுக்கு உள்ளம் களித்தோம். இப்புகழ்ப் பாடல்களைப் பாடியவர்கள் எல்லோரும் பெரிய போகங்களை நுகர்வார்கள். இப்புகழ்ப் பாடல்கள் எழுதப்பெற்ற ஏடு, வளம்பொருந்திய வீட்டினிடத்தில் இருந்தால் அங்கே நான் (மஹாலக்ஷ்மி)  நித்ய வாசம் செல்வேன்!என்று திருவாய் மலர்ந்தருளினாள்.
 
 

Wednesday, 14 September 2016

ஸ்ரீ இராம பக்த ஹனுமன் வடைமாலை தேர் அலங்காரம்!

சிறிய திருவடியில் மலையப்ப சுவாமி!

பெருமாளின் திருவடிகளை எப்போதும் தாங்குபவர்களில் முதல்வர் கருடாழ்வார் அவர் பெரிய திருவடி என்றும், இரண்டாவது மாருதி இவர் சிறிய திருவடி என்றழைக்கப்படுகின்றார்.
 
சூரிய பகவானின் சஞ்சாரத்தை பின்பற்றியே ஓடிக் கொண்டு நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைகளை கற்ற பேரறிவாளன் ஸ்ரீ இராம பக்த ஹனுமான்.

ஒரு லட்சத்து எட்டு வ்டை மாலை தேர் அலங்காரம் முன்னழகு!
 
அசோக் நகர் கருமாரி திரிபுர சுந்தரி ஆலயம் - சென்னை, ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரம்.
 
தீபாவளியன்று காசியில் அன்னபூரணிக்கு லட்டுத்தேர் போல இவ்வாலயத்தில் அனுமனுக்கு வடைமாலை(1,00,008) தேர். ஹனுமன் ஜெயந்தி அன்று  காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தரிசனம் செய்யலாம்.
 
வாயு புத்ரன், அஞ்சனையின் அருந்தவ புதல்வன் அனுமன். சீதா மாதாவினால் சிரஞ்சிவி பட்டம் பெற்றவன், நித்திய பிரம்மச்சாரி மாருதி.
 
 
தேரில் அருள் பாலிக்கும் அனுமன்!

அண்ணனால் விரட்டப்பட்ட சுக்ரீவனையும் சீதா தேவியை பிரிந்து அன்னையை தேடி வந்த இராமரையும் நண்பர்களாக்கியவன் சொல்லின் செல்வன் அனுமன்.

அனுமனுக்கு அருள் பாலிக்கும் இராம சீதா லக்ஷ்மணர்!

தென்னிலங்கை சென்று தேவியைக் கண்டு கணையாழி கொடுத்து மாதாவின் துயர் தீர்த்து சூடாமணி பெற்று வந்த வீர தீரன் ஹனுமன்!

தேரின் பின்னழகு

இலக்குவன் மயங்கிக் கிடந்த போது சஞ்சிவி கொணர்ந்து அண்ணல் துயர் தீர்த்தவன் சங்கடஹரன். யுத்த களத்தில் இராம லக்ஷ்மண்ருடன் தோளோடு தோள் சேர்ந்து போரிட்டு வெற்றி பெற செய்தவன் அனுமன்.

தேரின் ஒரு பக்க அழகு !
இராம தூதனாக சென்று இராவணனுக்கு அறம் உரைத்தவன் ஆஞ்சனேயன்.
இலங்கைதனை தன் வாலிலிட்ட தீயால எரித்து அழித்தவன் பஜ்ரங்கபலி.

அஞ்சலி ஹஸ்த அனுமன்!

காகுத்தன் அருள் கொண்டு கதையதனை கையில் கொண்டு கஷ்டங்களை போக்கடிக்கும் கர்ம வீரன் சுந்தரன் அனுமன்.


பட்டாபிராமன் புகழைப் பாடிப் பாடி காலமெல்லாம் பரந்தாமனருளால் பரமபதமளிப்பவன்! கதைதனைக் கையில் கொண்டு, கிங்கிணியை வாலில் கொண்டு ராம் ராம் என்று சொல்லும் ராம பக்தன் அனுமான்.
 
 
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ!
 
என்று மாருதியை ஸ்தோத்திரம் செய்து வழிபட நல்ல புத்தி, பலம், புகழ், தைரியம், மனத்திடம், பயமின்மை, நோயின்மை, சுறுசுறுப்பு, சொல் வன்மை, எல்லாம் சித்திக்கும்.
 
 
 

பத்துக்கரங்களுடன் பக்த அனுமன்!

 



ஸ்ரீ த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர், அனந்தமங்கலம்!

அனுமன் எடுத்த வடிவங்களில் அற்புதமானதும், தரிசிப்போர் வாழ்வில் தடைகளைத் தகர்க்க வல்லதுமான ஒன்று,  ‘தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேய’ வடிவம். ரக்தாட்சன், ரக்தபீஜன் எனும் அரக்கர்களை இத்திரு உருவில்தான் வதைத்தானாம் அனுமன்.

நோய், பயங்கள், கிரக தோஷங்கள், தீயோரின் தொல்லை முதலியவை அழியும்படி அருள்பவன் அவன். விபத்து, ஆபத்துகள், சிறைவாசம் போன்றவை இவனை நினைப்பதாலேயே நெருங்காது ஓடிவிடும்.



பொதுவாக அனுமனுக்கு வெற்றிலையில் பாக்கு வைத்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் மாலையாகக் கட்டி வியாழன், சனிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கலமான மண வாழ்க்கை கிட்டும்.

வடநாட்டில் இனிமையான வாழ்வு வேண்டுமென இனிப்புகளாலும், தென்னாட்டில் ராகு தோஷம் நீங்க உளுந்து வடையை மாலையாகக் கட்டி சாத்தியும் பலன் பெறுகிறார்கள்.

தஞ்சாவூரில் உள்ள அனந்த மங்கலத்தில் ராஜ கோபால சுவாமி கோயில் தசபுஜ த்ரிநேத்ர ருத்ரவீர்ய ராமாஞ்சநேய திருஉருவத்தை தரிசித்து அருள் பெறலாம்.

அனந்த மங்கலம் த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயர்!



ஆண்டவனை தொழுவதை விட அவருடைய மெய்யடியார்களை தொழுவது சிறந்த பலனைத் தரும். அத்தகைய சிறந்த ராம பக்தர்தான் ஆஞ்சனேயர், தன் மார்பைக் கிழித்து அதன் உள்ளே ஸ்ரீ ராமனையும் ஸீதாப்பிராட்டியும் வீற்றிருப்பதைக் காட்டிய இந்த ராம பக்தன் அந்த ராம நாமத்திலேயே தானே அடங்கி விடுவதாக உணர்கிறார். எனவே எங்கெங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சிரமேற் கூப்பிய கைகளுடன் ஆனந்த பாஷ்பக் கண்ணுடன் இன்றும் தோன்றுபவர்தான் இந்த சிரஞ்சீவி அனுமன். வைணவ சம்பிராயத்தில் " சிறிய திருவடி" என்று குறிக்கப்படுகிறார் இவர்.

அனுமன் கடலைக் குளம் போல் செய்தவர், அரக்கர்களை கொசுவைப்போல செய்தவர், ராமாயணமாகிய சிறந்த மாலையின் ரத்னம் போன்று விளங்குபவர், அஞ்ஜனா தேவியின் ஆனந்தப் புதல்வர், ஜானகியின் துன்பத்தை துடைத்தவர். வாயு வேகமும், மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர்,புத்திமான்களில் சிறந்தவர் அதனால் தான் கம்ப நாடரும் தமது ராம காதையிலே மாருதியை "சொல்லின் செல்வன்" என்று குறிப்பிடுகின்றார்.அடக்கத்தின் இலக்கணமாகத் திகழ்பவர் அனுமன்.

சஞ்சிவீ மலையைக் கொணர்ந்து , ராமர் மற்றும் லக்ஷ்மணனின் உயிரைக் காப்பற்றியவர், தீக்குளிக்க சென்ற பரதனை முன்னே சென்று காப்பாற்றியவர். தூதுவனாக சென்று சீதாப்பிராட்டியிடம் ராமனைப்பற்றியும், ராமனிடம் ஸீதையின் இருப்பிடத்தையும் கூறி அனுமன் பண்ணிய தூதுத்யம் பூரண பலன் கொடுத்தது. (ஆனால் கிருஷ்ணராக பெருமாள் சென்ற தூது வெற்றி பெறவில்லை ) எனவே தான் திருவள்ளுரில் ராஜ வைத்தியராக பள்ளி கொண்டிருக்கும் வீர ராவகப் பெருமாளைப் பற்றி கூற வந்த திருமங்கை ஆழ்வார் " அந்த அஞ்சனேயனை தூது அனுப்பியவன் தான் இங்கு பள்ளி கொண்டிருக்கின்றான் என்று கூறினார்."

இதையே விளக்கும் ராமாயணத்தின் சிறந்த பகுதியான " சுந்தர காண்டத்தையே" தன்னுள் அடக்கி விட்ட ஒரு பாடல்:

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்
.

 
பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன் மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் ஸீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான் என்று பாடுகிறார் கவிசக்கரவர்த்தி கம்பர்.



பாரத தேசமெங்கும் ஸாங்கூலன்,அஸாத்ய ஸாதகன், ராம தூதன்,கிருபாஸ’ந்து, வாயு புத்ரன்,கபிசிரேஷ்டன்,மஹா தீரன், பஜ்ரங்க பலி, பவனஜன், மஹா பலன், மாருதி, என்று பல் வேறு நாமங்களாலும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார் இவர்.
 
மங்கலம் என்ற திருத்தலத்திலே ராஜ கோபால சுவாமி திருக்கோவிலிலே, மும்மூர்த்திகளின் அம்சமாக, த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயராக ( முக்கண், பத்து கரங்களுடன்) எழுந்தருளி அருள் பாலிக்கின்ற அனுமனை பற்றி அறிந்து கொள்வோமா?

இராஜ கோபாலர் ஆலயம், அனந்த மங்கலம்
மகிமாலையார் என்ற காவிரியின் கிளை நதியின் கரையில் அமந்துள்ள தலம் தான் ராஜ கோபால சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் மூலவர் ராஜ கோபாலர், ருக்மணி சத்ய பாமா சமேதராக சங்கு, சக்கரம்,சாட்டை, வெண்ணை கொண்டு சேவை சாதிக்கின்றார். இக்கோவில் விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது.

இக்கோவிலில்தான் மும்மூர்த்திகளின் அம்சத்துடன், த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயர், மிகுந்த வரப் பிரசாதியாக, தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை தீர்ப்பவராக அருட்க்காட்சி தருகின்றார்.


தல வரலாறு :
ராவண வதத்திற்க்கு பிறகு, தேவி žதாப்பிராட்டியை அழைத்துக்கொண்டு ராமபிரான் வரும் போது பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இறங்கினார். அவர் ராமரிடம் , ராமா இன்னும் ரக்தபிந்து, ரக்த தாக்ஷன் என்ற இரு அரக்கர்கள் ஏழு சமுத்திரங்களுக்கு அப்பால் கடலில் மூழ்கி தவம் செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களின் தவம் பலித்தால் உலகமே நாசமாகும் எனவே நீ அவர்களைக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்று வேண்டினார்.

த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயர்
 
ராமர் பரதனுக்கு வாக்கு கொடுத்தபடி அயோத்தி செல்ல வேண்டி இருந்ததால் அரக்கர்களை அழிக்க அனுமனை அனுப்ப முடிவு செய்தார்.

அரக்கர்களை வெல்வதற்காக செல்லவிருந்த அனுமனுக்கு, திருமால் ச்ங்கு, சக்கரம் அளித்தார். பிரம்மா கபாலத்தை அளித்தார், சிவ பெருமான் நெற்றிக்கண்னையும், சூலத்தையும், கருடன் சிறகுகளயும் அளித்தனர். இவ்வாறு பத்து கரங்களிலே சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு,பாசம், வில், அம்பு, சாட்டை, வெண்ணை கொண்டு புறப்பட்டார் அனுமன் அசுரர்களை அழிக்க .

அசுரர்களை அழித்து வரும் போது பசுமையான மரங்கள் சூழ்ந்த ஒரு சோலையில் தங்கினார் . அவ்வாறு அவர் தங்கி ஸ்நானம் செய்து இளைப்பாறிய இடமே அனந்த மங்கலம் என்பது இத்தல வரலாறு.

அமாவாசை தினம் இவருக்கு மிகவும் உகந்த தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவரிடம் வந்து வேண்டி, தங்கள் குறைகள் தீர்த்துச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, ஹனுமத் ஜயந்தி தினமான மார்கழி அமாவாசை மிகவும் விசேஷம். காலையில் சுவாமியை எல்லாரும் பார்க்கும் படியாக பிரகாரத்திலே ஒரு உயரமான மேடையில் எழுந்தருளப் பண்ணி முதலில் திரு மஞ்சனம் செய்கின்றனர். பின்னர் அலங்காரங்கள் முடித்து அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. இவ்வாறு உயர மாக இவரை எழுந்தருள் செய்வதால் வருகின்ற அனைவரும் சிரமமில்லாமல், பூரண திருப்தியுடன் ஜெய மாருதியை தரிசனம் செய்ய முடிகின்றது. இரவு சிறப்பு அலங்காரத்தில் மின் விளக்கு ஒளியில் ஊர்வலம் வருகின்றார் ஆஞ்சனேயர்.

அனுமன் தன் பக்தர்களுக்கு வருகின்ற கெட்டவைகளை கூட நல்லனவாக ஆக்கித்தரும் தூயவர், சிவ பெருமான் அபிஷேகப்பிரியர், அது போல அனுமன் ஸ்தோத்திரப் பிரியர், எனவே


ஸ்ரீ ஓனி ஆஞ்சநேயர் வஜ்ர கவச அலங்காரம் பெங்களூர்
அவர் கிருபை உண்டாக

ஸர்வ கல்யாண தாதார்ம
ஸர்வ வாபத்கந வாரக்ம
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்சனேயம் நமாம்யகம்


துஷ்ட கிரகங்கள் விலக!


அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹசாரிணம்
துஷ்ட க்ரஹ வினாஸாய
ஹனுமந்த முபாஸ்மஹே.


காரிய ஸ’த்தி உண்டாக

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம தூத கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ


என்றும் மாருதியை ஸ்தோத்திரம் செய்து வழிபட நல்ல புத்தி, பலம், புகழ்,தைரியம், மனத்திடம், பயமின்மை, நோயின்மை, சுறுசுறுப்பு, சொல் வன்மை, எல்லாம் சித்திக்கும்.

தூய உள்ளத்தோடு நம் கோரிக்கைகளை இவரிடம் வேண்டிக்கொண்டு வடை மாலை, வெண்னை சாற்றுதல், வெற்றிலை மாலை ஆகியவை கொண்டு வழிபட்டால், சூரியனைக் கண்ட பனி போலே உங்களின்கஷ்டம் எல்லாம் விலகி விடும். எனவே ஆஞ்சனேயரின் இஷ்ட தெய்வமான ராமனின் அருளோடும் ஆசியோடும் அனந்த மங்கலம் சென்று, அனுமனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோமாக.


 

ஸ்ரீகமலாம்பிகா அஷ்டகம்!

51 சக்தி பீடங்களில் முதல் சக்தி பீடமாகத் திகழும் பெருமை பெற்றது, திருவாரூர் கமலை பீடம். இத்தலத்தில் உள்ள அட்சரபீடத்தில் சக்தியின் 51 அட்சரங்களும் இடம்பெற்றுள்ளன. இத்தலத்தை தரிசித்தாலே 51 சக்தி பீடங்களையும் தரிசித்த பலனைப் பெறலாம். தேவேந்திரனால் ஆராதிக்கப்பட்ட தியாகராஜ மூர்த்தி அருளாட்சி புரியும் இத்தலத்தில் தேவியும் கமலாம்பிகையாக திருவருள் பாலிக்கிறாள்.

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், இத்தேவியைக் குறித்து கமலாம்பாள் நவாவரணம் எனும் அற்புத கீர்த்தனைகளை இயற்றியருளியுள்ளார். அந்த கீர்த்தனைகள் ஸ்ரீவித்யா உபாசகர்களால் வழி வழியாக இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. பொதுவாகவே கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் அனுபவம், நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீழ்காணும் அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, அம்பிகை அருளால் அனைத்து நலன்களும் பெறுவோம். இத்துதி நாராயண தீர்த்தர் எனும் யதியின் சிஷ்யரால் இயற்றப்பட்டது.

பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம்
ப்ருந்தாரகைர்வந்திதாம்
மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம்
மந்தஸ்மிதாம் ஸுந்தரீம்
பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம்
போகாபவர்கப்ரதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

 செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே, அழகின் இலக்கணமே, கர்மபந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

ஸ்ரீகாமேஸ்வர பீட மத்ய நிலயாம்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரீம்
ஸ்ரீ வாணீ பரிஸேவிதாங்க்ரியுகளாம்
ஸ்ரீமத்க்ருபாஸாகராம்
சோகாபத்ய மோசினீம் ஸுகவிதா
நந்தைக ஸந்தாயினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

ஸ்ரீகாமகோடி பீடத்தின் நடுவில் அமர்ந்தவளே, ராஜராஜாக்கள், ஈஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி இவர்களால் சேவிக்கப்பட்ட, தாமரை போன்ற மென்பாதங்களைக் கொண்டவளே, ஐஸ்வர்யத்தை அளிக்கும் கருணைக் கடலாக இருப்பவளே, மனக்கவலை, ஆபத்துகள், பயம் ஆகியவற்றைப் போக்குகிறவளே, நல்ல கவிதை உள்ளத்தை அளித்து, அதனால் பேரானந்தத்துக்கு வழி வகுப்பவளே,
கமலாம்பிகையே, நமஸ்காரம்.

மாயா மோஹவினாஸினீம்
முனிகணைராராதிதாம் தன்மயீம்
ஸ்ரேய: ஸஞ்சய: தாயினீம் குணமயீம்
வாய்வாதி பூதாம் ஸதாம்
ப்ராத: கால ஸமானஸோப மகுடாம்
ஸாமாதி வேதைஸ்துதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

மாயையினால் ஏற்படும் அஞ்ஞானத்தை நீக்குகிறவளே, முனிவர்களால் ஆராதிக்கப்படுபவளே, பிரம்ம ஸ்வரூபமாக துலங்குபவளே, பலவித க்ஷேமங்களை மனம் மகிழ அளிப்பவளே, சத்குணங்கள் நிரம்பியவளே, சாதுக்களின் இதயத்தில் பிராணனுக்குக் காரணமான ஆகாச பூதமாக திகழ்பவளே, உதய காலத்திற்கு ஒப்பான சிவந்த ஒளியுடன் கூடிய கிரீடத்தை அணிந்தவளே, சாம வேதம் முதலான வேதங்களால் துதிக்கப்பட்டவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

பாலாம் பக்தஜனௌக சித்தநிலயாம்
பாலேந்து சூடாம்பராம்
ஸாலோக்யாதி சதுர்விதார்தபலதாம்
நீலோத்பலாக்ஷீமஜாம்
காலாரிப்ரிய நாயிகாம் கலிமல
ப்ரத்வம்ஸினீம் கௌலினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

சிறு பெண்ணாக இருப்பவளே, பக்தர்களின் சித்தத்தில் உறைபவளே, சந்திர கலையை சிரஸில் தரித்தவளே, பரப்ப்ரம்ம ஸ்வரூபிணியே, ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களைக் கொடுப்பவளே, நீலோத்பலம் போன்ற கண்களை உடையவளே, பிறப்பு அற்றவளே, காலனைக் காலால் உதைத்த பரமசிவனுடைய பிரிய மனைவியே, கலியால் ஏற்படும் பாவங்களைப் போக்குகிறவளே, சிவசக்தி ஸம்பந்தரூபமாக உள்ளவளே, விரும்புவோர் எண்ணங்களை ஈடேற்றுபவளே, கமலாம்பிகையே நமஸ்காரம்.

ஆனந்தாம்ருத ஸிந்து மத்ய நிலயாம்
அக்ஞான மூலாபஹா
க்ஞானானந்த விவர்தினீம் விஜயதாம்
மீனேக்ஷணாம் மோஹினீம்
க்ஞானானந்தபராம் கணேஸ ஜனனீம்
கந்தர்வ ஸம்பூஜிதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

ஆனந்த சமுத்திரத்தின் நடுவில் இருப்பவளே, அஞ்ஞானத்தின் ஆதிகாரணத்தையே போக்குகிறவளே, ஞானம், ஆனந்தம், இவற்றை நன்கு மேலோங்கச் செய்கிறவளே, ஜயத்தைக் கொடுக்கிறவளே, மோகிக்கச் செய்கிறவளே, ஞானம் ஆனந்தம் இவற்றிற்குக் காரணமாக இருப்பவளே, ஸ்ரீமகாகணபதிக்குத் தாயாக இருப்பவளே, கந்தர்வனால் சிறப்பாக பூஜிக்கப்பட்டவளே, கோரிய பொருளை அளிப்பவளே, மங்களமே வடிவானவளுமான கமலாம்பிகையே, நமஸ்காரம்.

ஷட்சக்ரோபரி நாதபிந்து நிலயாம்
ஸர்வேஸ்வரீம் ஸர்வகாம்
ஷட் ஸாஸ்த்ராகம வேத வேதிதகுணாம்
ஷட் கோண ஸம்வாஸினீம்
ஷட் காலேன ஸமர்ச்சிதாத்ம விபவாம்
ஷட்வர்க ஸம்சேதினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

ஷட்சக்ரத்தின் மீது நாதபிந்துவில் இருப்பவளே, யாவருக்கும் ஈஸ்வரியாய் விளங்குபவளே, எங்கும் வியாபித்திருப்பவளே, ஆறு சாஸ்திரம், ஆகமங்கள், நான்கு வேதங்கள், இவை போற்றும் குணங்களை உடையவளே, ஷட்கோணங்களில் இருப்பவளே, ஆறு காலங்களிலும் பூஜிக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவளே, காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம் எனும் ஆறு வர்க்கங்களையும் அழிப்பவளே, கோரிய பொருளை அளிப்பவளே, மங்களமாய்த் துலங்குபவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

யோகானந்தகரீம் ஜகத்ஸுககரீம்
யோகீந்த்ர சித்தாலயாம்
ஏகாமீஸ ஸுகப்ரதாம் த்விஜநுதாம்
ஏகாந்த ஸஞ்சாரிணீம்
வாகீஸாம், விதி, விஷ்ணு, ஸம்பு, வரதாம்
விஸ்வேஸ்வரீம் வைணிகீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

தியான யோகத்தினால் ஏற்படும் ஆனந்தத்தை அளிப்பவளே, உலகத்திற்கு சுகத்தை அளிப்பவளே, யோகீந்த்ரர்களின் மனதைக் கோயிலாகக் கொண்டவளே, பரமசிவனுக்கு சுகத்தை அளிப்பவளே, வேதியர்களால் துதிக்கப்பட்டவளே, பிரளய காலத்திலும் தனித்து நிற்பவளே, வாக்கிற்கு ஈஸ்வரியாக விளங்குபவளே, பிரம்மா, விஷ்ணு, சிவன், இவர்களுக்கும் வரங்களை அளிப்பவளே, உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியாகத் திகழ்பவளே, வீணா வாத்யத்தில் தேர்ச்சி பெற்றவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

போதானந்த மயீம் புதைரபிநுதாம்
மோதப் ரதாமம் பிகாம்
ஸ்ரீமத் வேதபுரீஸ தாஸ வினுதாம்
ஹ்ரீங்கார ஸந்தாலயாம்
பேதா பேத விவர்ஜிதாம் பகுவிதாம்
வேதாந்த சூடாமணீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

ஞானானந்த ஸ்வரூபிணியே, அறிவாளிகளால் சிறப்பாக ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளே, சந்தோஷத்தை அளிக்கிறவளே, அம்பிகையே, வேதபுரீச தாஸரால் துதிக்கப்பட்டவளே, ஹ்ரீம், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்தை ஆலயமாகக் கொண்டவளே, வேறுபட்டது, வேறுபடாதது இவ்விரண்டும் அற்றவளே, பலவிதமாய் காட்சி தருபவளே, வேதாந்தங்களுக்கு சிரோபூஷணமாய் இருப்பவளே, கோரிய பலனை அளிப்பவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே நமஸ்காரம்.

இத்தம் ஸ்ரீ கமலாம்பிகாப்ரியகரம்
ஸ்தோத்ரம் படேத்யஸ்ஸதா
புத்ர ஸ்ரீப்ரதமஷ்டஸித்திபலதம்
சிந்தா வினாஸாஸ்பதம்
ஏதி ப்ரஹ்மபதம் நிஜம் நிருபமம்
நிஷ்கல்மஷம் நிஷ்களம்
யோகீன்த்ரைரபி துர்லபம்
புனரயம் சிந்தா வினாஸம் பரம்

இவ்விதம் சந்தானம், சம்பத்து இவற்றை அளிப்பதும், எட்டு வித சித்திகளின் பயனைக் கொடுப்பதும் கவலையைப் போக்கவல்ல முக்கிய ஸ்தானமாயும் ஸ்ரீகமலாம்பிகைக்கு பிரியத்தை உண்டு பண்ணுகிறதுமான, இந்த ஸ்தோத்திரத்தை எப்போழுதும் படிக்கிறவர்கள் அனைவரும் நிகரற்றதும் களங்கமற்றதும் அவயமற்றதும் சிறந்த யோகிகளுக்கும் எட்டாததும் நிரந்தர உற்சாகம் அளிப்பதும் மேன்மையானதுமான தன் ஸ்வரூபமான, பிரம்ம பதத்தையும் அடைவார்கள்.
 
 

Tuesday, 13 September 2016

அனைத்து நலன்களும் அருளும் ஆதித்ய ஹ்ருதயம்!

மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம் கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த  அற்புத ஸ்லோகம் இது.

இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததாலேயே ராமபிரான் ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. இத்துதியை பாராயணம் செய்தால் சூரியனைக் கண்ட பனி போல் பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும். ஆபத்துக் காலங்களிலும் எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும்.

ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதைச்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி:

ராமராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகிப் பின் வருமாறு கூறினார்.

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா... ராமா... போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்.

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும் மிகுந்த புண்ணியத்தை அளிக்கக்கூடியதும் வெற்றியைத் தரக்கூடியதும் அளவற்ற உடல் வலிமையை தரக்கூடியதும் உத்தமமான, மங்களகரமுமான ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்திரத்தை நீ அனுதினமும் ஜபிக்க வேண்டும். இந்த ஸ்தோத்திரம், சூரியனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.

ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம்

எல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்திரங்களுக்கு மேலான மந்திரம் இது. எல்லா பாவங்களையும் போக்கவல்லது. மனக்கவலை, உடற்பிணிகளைத் தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி செய்யும். எல்லா மந்திரங்களை விடவும் சிறந்ததான இந்த ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

ஒளிமிகுந்த கிரணங்களை உடையவனும் நித்தம் உதிக்கின்றவனும் தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்பட்டவனும் எல்லா ஐஸ்வர்யங்களையும் கொண்டவனும் ஒளிமிகச் செய்பவனும் ஈஸ்வரனுமாகிய சூரியனை நீ பூஜை செய்ய வேண்டும்.

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

எல்லா தேவதைகளும் இந்த சூரியனுக்குள் அடக்கம். பிரகாசமாக உடற்பொலிவு கொண்டவர். தன் கிரணங்களாலேயே உலகை ரட்சிப்பவர். தேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த உலகமனைத்தையும் தன்
கிரணங்களால் காப்பாற்றுபவர் இந்த சூரியனே.

ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி:

இவரே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் முருகனாகவும் பிரஜாபதியாகவும் மகேந்திரனாகவும் குபேரனாகவும் காலமாகவும் யமனாகவும் சந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிறார்.

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி: ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர:

இந்த சூரியனே பித்ருக்களாகவும் அஷ்டவசுக்களாகவும் சாத்யர்கள் என்ற தேவர்களாகவும் அச்விநி தேவர்களாகவும் ஸப்த மருந்துகளாகவும் மனுவாகவும் வாயுவாகவும் அக்கினியாகவும் பிரஜைகளாகவும், பிராணனாகவும் பருவ காலங்களை உருவாக்குபவராகவும் ஒளி பரப்புபவராகவும்
திகழ்கிறார்.

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய:  கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண  ஸத்ருசோ பானுர்ஹிரண்யரேதோ திவாகர:

இந்த சூரியனே அதிதியின் புத்திரன். உலகை உண்டுபண்ணுகிறவர். கர்மாக்களைச் செய்யச் செய்பவர். ஆகாயத்தில் சஞ்சரிப்பவர். மழையால் உலகையே வளமாக்குபவர். ஒளிமிகுந்த கிரணங்களைக் கொண்டவர். பொன்னிறமானவர். தங்க மயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர். பகலை சிருஷ்டித்தவர்.

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட  அம்சுமான்

பச்சை குதிரையை வாகனமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான கிரணங்களை உடையவர். ஸப்த என்னும் பெயருள்ள குதிரையை உடையவர். பிரகாசத்துடன் விளங்குபவர். இருளை அழிப்பவர். சுகம் அளிப்பவர். உலகையே ஸம்ஹாரம் செய்பவர். உலகம் தோன்றுவதற்கு முன்னாலேயே
உருவானவர்.

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன:

தங்கமயமான பிரமாண்டத்துக்குரியவர் இந்த சூரியன். காம, க்ரோத, லோப குணங்களைப் போக்குபவர். எரிச்சலைக் கொடுப்பவர். ஒளி மிகுந்தவர். எல்லோராலும் போற்றப்படுபவர். பகலில் அக்கினியைத் தன் கர்ப்பத்தில் வைத்திருப்பவர். அதிதியின் புத்திரன். ஆகாசம் முழுவதும் வியாபித்தவர். பனியை விலக்குபவர்.

வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம:

இவர் ஆகாயத்தை உருவாக்கியவர். இருளைப் போக்குகிறவர். ரிக், யஜுர், ஸாம வேதங்களுடையப் பொழிவான உபநிஷத்துகளால் கொண்டாடப்படுகிறவர். அதிகமான மழையைக் கொடுப்பவர். நல்ல நீர்நிலைகளை உருவாக்குபவர். தட்சிணாயனத்தில் விந்திய மலை வழியாக சஞ்சரிப்பவர்.

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

இவர் வெயிலைக் கொடுப்பவர். வட்டமான பிம்பம் உள்ளவர். நட்புருவானவர். பொன் நிறமுள்ளவர். நடுப்பகலில் அனைவருக்கும் தாகத்தை உண்டுபண்ணுகிறவர். அனைத்து சாஸ்திரங்களையும் உபதேசிப்பவர். உலகத்தை நடத்திச் செல்பவர். தேஜஸ் மிகுந்தவர். எல்லோரிடமும் அன்பு
கொண்டவர். எல்லோருடைய உற்பத்திக்கும் காரணமானவர்.

நக்ஷத்ரக்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே

அஸ்வினி முதலான நட்சத்திரங்கள், நவகிரகங்கள், பிற ஒளிகள் எல்லாவற்றிற்கும் அதிபர் சூரியன். உலகத்தைக் காப்பாற்றுகிறவர். அக்கினி முதலான ஒளிகளுக்கெல்லாம் மேலாக ஒளிர்பவர். பன்னிரண்டு உருவங்களாக இருப்பவர். இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானே நமஸ்காரம்

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம:
கிழக்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். மேற்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே, பகலுக்குத் தலைவனே நமஸ்காரம்.

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

என்றும் ஜெயிப்பவரே, வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே, பச்சை குதிரை வாகனரே நமஸ்காரம். ஆயிரக்கணக்கான கிரணங்களைக் கொண்டவரே, சூரிய பகவானே நமஸ்காரம்.

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

பாவிகளுக்கு பயங்கரமானவரே, சிறந்த வீரரே, விரைந்து செல்பவரே நமஸ்காரம். தாமரைப் பூவை மலரச் செய்பவரே, உலகிலேயே முதலில் உண்டானவரே சூரிய பகவானே, நமஸ்காரம்.

ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயாதித்ய
                                          வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:

பிரம்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே, சூரியனே, ஒளிவடிவானவரே, எல்லா யாகங்களிலும் கொடுக்கப்படும் ஹவிஸை ஏற்றுக்கொள்பவரே, உக்கிரமான சரீரம் கொண்டவரே, நமஸ்காரம்.

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

இருளை விலக்குபவரே, பனியை உருக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே, அளவற்ற ஆற்றல் கொண்டவரே, செய்நன்றியை மறப்பவரை வீழ்த்துபவரே, நட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே,
நமஸ்காரம்.

தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மணே
நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

உருக்கிய தங்கம் போல ஒளிர்பவரே, அக்கினி ஸ்வரூபமானவரே, உலகத்தை உருவாக்கியவரே, அஞ்ஞானத்தைப் போக்குபவரே, பிரகாசம் மிகுந்தவரே, உலகத்துக்கு சாட்சியானவரே, நமஸ்காரம்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

மகாபிரபுவான இந்த சூரியனே பிரளயத்தை உருவாக்குகிறார். மீண்டும் உலகத்தை இவரே சிருஷ்டிக்கிறார். இவரே பாதுகாக்கிறார். இவரே தவிக்கவும் வைக்கிறார். இவரே தன் கிரணங்களால் மழை பொழிய வைக்கிறார்.

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம்

பிற அனைத்து பூதங்களும் உறங்கும்போது, அந்தர்யாமியாக இந்த சூரியன் விழித்துக்கொண்டிருக்கிறார். இவரே யாகம் வளர்க்கும் அக்கினியாகவும் அந்த அக்கினி யாகத்தின் பலனாகவும் திகழ்கிறார்.

வேதாச்ச க்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

வேதங்களாகவும் யாகங்களாகவும் யாகங்களின் பலனாகவும் உலகத்திலுள்ள எல்லா செயல்களுக்கும் மூல காரணனாக இந்த சூரியனே விளங்குகிறார்.

ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ:

ராகவா! எந்த ஆபத்து காலத்திலும் சரி, எந்தவகையான கஷ்டம் நேர்ந்தாலும் சரி, காய்ச்சல் முதலான உடல் நோய்கள் எப்போது ஏற்பட்டாலும் சரி, காடுகளினூடே பயணம் செய்யும்போது எந்த ஆபத்து எதிர்ப்பட்டாலும் சரி, எப்போது பயம் தோன்றினாலும் சரி, அப்போது மேற்கண்ட ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்தால் போதும், எந்தத் துன்பமும் நெருங்க முடியாது, ராகவா!

பூஜயஸ்வை நமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

ஒருநிலைப்பட்ட மனதுடன், தேவர்களுக்கெல்லாம் தேவனான, உலகத்துக்கே அதிபதியும் ஆன இந்த சூரியனை வழிபடுவாயாக. இந்த ஸ்தோத்திரத்தை மூன்று முறை ஜபித்தாயானால், இந்த யுத்தத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

மனிதருள் மாணிக்கமே, இந்தக் கணத்திலேயே நீ ராவணனை வென்று வெற்றிவாகை சூடியவனாகிறாய், என்று சொல்லி, அகத்தியர் ராமனை ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான்

அகத்தியர் கூறியதைக் கேட்ட ராமன் அப்போதே தன் சோர்வு முற்றிலும் நீங்கியவனானான். மிகுந்த சந்தோஷத்துடன், புது உற்சாகத்துடன் மேற்கண்ட ஸ்லோகங்களை ஜபிக்கத் தொடங்கினான்.

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான்

மூன்று முறை நீரெடுத்து ஆசமனம் செய்து, பரிசுத்தனாகி, சூரியனைப் பார்த்து இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்து, புது பலமும், புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடனும் ராமன் தன் வில்லை எடுத்துக் கொண்டார்.

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத்

மகா வீரனான ராமன், வில்லேந்தியவராய் சூரியனை நோக்கி ஜபம் செய்து பரமானந்தத்தை அடைந்தார். திடமான மனோபலத்துடன் ராவணனுக்கு எதிரான போருக்குத் தயாரானார். அவனை வதைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனத்திண்மையாகக் கொண்டார்.

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம்
முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி

அப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான், உவகை பூத்து உள்ளக் களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி, ‘ராவண வதத்தை துரிதமாய் முடி’ என்று உபதேசித்து ஆசிர்வதித்தார்.






 

தடைகள் அகற்றி நலன்கள் பொழியும் தாராதேவி!

தாரா தியானம்!

விச்வவ்யாபக வாரிமத்ய விலஸத் ச்வேதாம்புஜன்மஸ்திதாம்
கர்த்ரீம் கட்க கபால நீலநளினை: ராஜத்கரா மிந்துபாம்
காஞ்சீ குண்டல ஹார கங்கணலஸத் கேயூரமஞ்ஜீரதாம்
ப்ராப்தைர் நாகவரை: விபூஷிததனும் ஆரக்த நேத்ரத்ரயாம்
பிங்காக்ரைகஜடாம் லலத்ஸ்வரஸனாம் தம்ஷ்ட்ராகராளானனாம்
சர்ம த்வைபிவரம் கடௌ விதததீம் ச்வேதாஸ்தி பட்டாளிகாம்
அக்ஷோப்யேண விராஜமான சிரஸம் ஸ்மேரானனாம் போருஹாம்
தாராம் சாவஹ்ருதாஸனாம் த்ருடகுசாம் அம்பாம் த்ரிலோக்யா: ஸ்மரேத்

தாரா காயத்ரி!

ஓம் தாராயை வித்மஹே
மஹோக்ர தாராயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்.

தாரீ என்றால் படகு எனப் பொருள். படகு எவ்வாறு தன்னை நம்பி ஏறி அமர்வோரை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றுகிறதோ அதேபோல் இந்த தாராதேவியும் தன் பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து, முக்தியை அருள்வாள் என ரிக்வேதத்தில் முதல் காண்டத்தில் 99வது அனுவாகத்தின் முதல் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. வேத காலத்திலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ள அற்புத உபாசனை, இந்த தாராதேவியின் உபாசனையாகும்.

கடல் நீரில் வெண் தாமரையில் வீற்றருளி சம்சார சாகர மத்தியில் உயர்ந்துள்ள தூய பிரும்ம ஞானம், தான்தான் என்பதை உணர்த்துபவள். வெண் தாமரையில் திடமாக அமர்ந்தும் நின்றும் அந்த பிரம்ம வித்யையிலேயே நடந்தும் நம்மை ஆபத்தான பந்தத்திலிருந்து காப்பதால் இத்தேவி தாரா எனப்படுகிறாள்.

பிரம்ம வித்யையின் வடிவமாய் இருப்பவர் ஈசன். அவர் தன் பதியானபடியால் அவர் மீது அமர்ந்தும் அவரில் உறுதியாக நின்றும் அவருக்கேற்ற பத்தினியாய்த் துலங்குகிறாள். ஈசனுக்கென்று அந்நியமானதொரு இடமோ பொருளோ இல்லையென்பதால் அவள் அவர் மீதே நடப்பதை உணர்த்து கிறது. நாம்கூட எங்கும் நிறைந்த ஆண்டவன் மீதுதான் நடக்கிறோம், நிற்கிறோம், படுக்கிறோம், வசிக்கிறோம். இவ்வுண்மையை உணர்த்தவே தாராதேவி ஈசன் மீது நின்றருள்வதாகக் கூறுவர்.

 இந்த தாரா தேவியை பல்வேறு மதத்தினரும் போற்றிவழிபடுகின்றனர். ஜைனர்கள் தாராவை ப்ரபாவதீ என்பர். பௌத்தர், தாரா என்பர். கௌலர் சக்ரா என்றும் சீனர் மஹோக்ரா என்றும் ஸ்ரீவித்யா உபாசனையில் மன்மதன் உபாசித்த காதி வித்யா உபாசகர்கள் காளீ என்றும்  லோபாமுத்திரா தேவி உபாசித்த ஹாதி வித்யா உபாசகர்கள் ஸ்ரீசுந்தரி என்றும் இத்தாராவை போற்றி வழிபடுகின்றனர். பராசக்தி எடுத்த தசமகாவித்யா வடிவங்களுள் இரண்டாவது வடிவாகப் பிரகாசிப்பவள் இவள்.

தன் நாதன் பசுபதி மீது நின்றருள்பவள் தாரா. ஆழ்ந்த யோக நித்திரையில் தபோ தியானத்தில் உள்ளபோது பரமசிவன் சவம் போல் அசையாமல் கிடப்பார். அர்த்தநாரீஸ்வரியான தாரா தம் இச்சா, ஞான, க்ரியா சக்திகளால் உலகை அப்போது நடத்துகிறாள். தன் நாதனை விட்டுப் பிரியாமல் அவள் தர்மபரிபாலனம் செய்கிறாள்.

ஈசனின் வலது கால் முட்டிக்குக் கீழே சிறு மணி கட்டப்பட்டுள்ளது. ஈசன் தியானத்திலுள்ள போது சேமிப்பு சக்தியாய் அமைதியாய் இருப்பார். அவரிடமுள்ள பிரம்மஞானம் அவர் அசையும் போது ரகசிய பிரம்ம வித்யையை போதமாக ஒலிப்பதை அந்த மணி குறிக்கிறது.

சிவமே ஆதாரம் என்பது, தாரா அவர் மீது நிற்பதிலிருந்து விளங்கும். மரம் நிற்க பூமி ஆதாரமாயிருப்பது போல், சிவம் சவம் போல் அமைதியாக, யோக நித்திரையில் இருப்பது விளங்கும்.

தேவி அமர்ந்திருப்பது நிலையாயுள்ளதையும் ஸ்திரத்தன்மையையும் குறிக்கும். நிற்பது உலகைக் காக்க சித்தமாவதைக் குறிக்கும். நடப்பது அவள் திருவருள் புரிய வருகிறாள், எங்கும் நடமாடுகிறாள் என்பதைக் குறிக்கும். அதனால்தான் ஆலயங்களில் தேவியை அமர்ந்த கோலத்திலும் நின்றகோலத்திலும் அலங்காரங்கள் செய்கின்றனர்.

குள்ளமான உருவம் கொண்டவள். கோரமான ஆபத்துகளிலிருந்து காப்பதால் மஹோக்ரா எனப்படுகிறாள். இத்தேவி கத்திரிக்கோல், கத்தி, கபாலம், கருங்குவளைப்பூ ஆகியன ஏந்திய நான்கு கரங்கள் கொண்டவள். உணர்வுகள் நசிக்கின்ற பேருணர்வு வடிவினள் என்பதை உணர்த்தவே தன் காலில் சிவத்தை மிதித்த நிலையில் தோற்றமளிக்கிறாள். வாழ்வின் பாச பந்தங்களை நறுக்க கத்திரிக்கோலையும் அகங்காரத்தை நீக்க மண்டை ஓட்டின் கபாலத்தையும் ஞானத்தை ஏற்படுத்துவதில் உள்ள இடையூறுகளை வெட்ட ஞானவாளாகிய வீரவாளையும் இந்த பயங்கரங்களுக்கு ஈடு செய்வது போன்று மற்றொரு கரத்தில் ஆன்ம மலர்ச்சியைக் குறிக்கும் நீலோத்பல மலரையும் தாங்கியுள்ளாள்.

மூவுலகத்தில் உள்ள அறியாமையையும் தன் கபாலத்தில் வாங்கிக் கொண்டு ஒரு நொடியில் நீக்கிவிடும் மகா காருண்யவாரிதி இவள். கடல் பிரயாணங்களை முடித்துத் தரும் காவல் தெய்வமும் இவளே. ஓம் எனும் ப்ரணவமே இவள் பீஜம். பாற்கடல் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உட்கொள்வதற்கு ஈசனுக்குத் துணிவையும் சக்தியையும் தந்தவள் இவளே என தோடல தந்திரம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சந்திரன் போன்ற நிறத்தினள். சிறந்த நாகங்களையே ஒட்டியாணம், குண்டலம், ஹாரம், கங்கணம், தோள்வளை எனும் நூபுரம், பாதச்சலங்கை என்று ஆபரணங்களாகக் கொண்ட திருமேனியள். சிவந்த மூன்று கண்களைக் கொண்டவள். மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறம் கொண்ட முனையையுடைய ஒற்றைச் சடையைக் கொண்டவள். அசையும் நாக்கினள். தெத்திப் பற்களுடன் கூடிய விசாலமான முகத்தினள். இடையில் யானைத் தோலை ஆடையாக அணிந்தவள். முண்டமாலை தரித்தவள். ஒரு காலை முன்னும் ஒரு காலை பின்னும் வைத்தருள்பவள். 5 வெண்ணிற எலும்புகளை அணிந்த நெற்றியினள். இதை ஆதிசங்கரர், ‘‘விசித்ராஸ்திமாலாம் லலாடேகராளாம் கபாலம் ச பஞ்சான்விதம் தாரயந்தீம்’’ எனக் குறிப்பிடுகிறார். இதையே ஸ்ரீவித்யார்ணவ தந்த்ரம் ‘லலாடே ச்வேதாஸ்தி பட்டிகா சதுஷ்டயான்வித கபால பஞ்சகான்விதாம்’ எனக் குறிப்பிடுகிறது. 

அக்ஷோப்யர் எனும் ரிஷி இந்த தாராமந்திரத்தை ஜபித்து, நாகவடிவில் தேவியின் சிரசை அலங்கரிக்கும் வரத்தைப் பெற்றார். அந்த நாகவடிவமான ரிஷி அலங்கரிக்கும் சிரத்தை உடையவள். புன்சிரிப்பு தவழும் முகத்தினள். கடினமான திருமார்பகங்களைக் கொண்டவள். மூவுலகங்களுக்கும் தாயாய் இருப்பவள்.

காளீகாண்டம் 12ம் படலத்தில் இந்த தாராதேவியின் பெருமைகள் பேசப்படுகின்றன. யோகம் என்பது தாரா யோகமே; ஜபம் என்பதும் தாரா ஜபமே; மஹா மந்த்ரம் என்றால் அது தாரா மந்த்ரமே. இந்த மந்திரத்தை உபாசிப்பவனே மகாபாக்கியவான். அவனே ஞானி. அவனே சீலன். அவனே தீட்சை பெற்றவன். அவனே ஆத்ம ஸ்வரூபி. அவனே பிரம்மானந்தத்தில் திளைப்பவன் எனக் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பிறந்த குழந்தைகளுக்கு, பிறந்து மூன்று நாட்களுக்குள்ளாக தாராவின் மற்றொரு எழில் வடிவமான நீல சரஸ்வதியின் மந்திரத்தை தேனில் எழுது குச்சியைத் தொட்டு நாவில் எழுதிய தாய்மார்கள் இருந்ததாகக் கூறப்படுவதுண்டு. அவர்கள் பிற்காலத்தில் காஷ்மீரி பண்டிட் என சிறப்புடன் திகழ்ந்ததற்கு அதுவே காரணம் எனவும் நம்பப்படுகிறது.

லலிதா பரமேஸ்வரியின் 19வதான மனோமயமான பிராகாரத்தில் இத்தேவி வாசம் புரிகிறாள். இந்த மகாசக்தி தன் பதியுடன் சந்தோஷமாக அருளும் இடம் அது. அவளுக்குப் பணிவிடை செய்ய ஆயிரக்கணக்கான தோழிகள் உள்ளனர். செந்நிறம் கொண்ட கப்பல்கள் ஆயிரக்கணக்கில் அங்கு மிதக்கும். அவற்றில் தேவியும் தோழியரும் விளையாடி மகிழ்வர். அந்த இடத்தினுள் யாரும் எளிதில் பிரவேசிக்க முடியாது. மந்திரிணி தேவியும் தண்டினி தேவி எனும் வாராஹியும் அனுமதி தந்தால்தான் தாராவை தரிசிக்க முடியும். அவர்கள் அனுமதி இல்லாமல் முக்கண்ணனால் கூட தாராவை தரிசிக்க முடியாது என லலிதோபாக்யானம் வர்ணிக்கிறது. தாரிணீ எனும் தாரா மந்திரங்கள் சர்வ சித்திகளையும் அளிப்பவை. சாதகன் கவிதா சக்தி பெறுகிறான். வாக்கு வன்மை அளிப்பதில் இந்த தேவியின் மந்திரம் நிகரற்றது.  இவளே பராசக்தி. இவளே நித்யமானவள். இவளே தேவர்களுக்காக ஆவிர்ப்பவித்த காளராத்ரி.

சாக்த தந்திரங்களில் பதினோரு இரவுகள் அம்பிகைக்கு உரியனவாகக் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு மகாசக்திக்கு உரியனவாகும். அந்தந்த ராத்திரிகளில் அந்தந்த சக்திகளை உபாசித்து பேறுகள் பெறலாம். அவை: காளராத்ரி, வீரராத்ரி, மோஹராத்ரி, மஹாராத்ரி, க்ரோத ராத்ரி, கோர ராத்ரி, தாரா ராத்ரி, அபலா ராத்ரி, தாருணா ராத்ரி, சிவராத்ரி, திவ்ய ராத்ரி என்பனவாம். காளராத்ரியில் தாராதேவி தோன்றியதாக கூறப்பட்டுள்ளது.  நரகசதுர்த்தசி, தீபோத்ஸவ தீபாவளி அமாவாசை தொடர்புடைய இரவே காளராத்ரீ எனப்படும். இது காளிக்கும், தாராவிற்கும் பிரியமான இரவாகும். அன்று அவர்களை உபாசித்தால் அதிக வரங்கள் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதே போன்று செவ்வாய்க்கிழமை அமாவாசையும் அன்று கிரகணமும் நேர்ந்தால் அந்த ராத்ரி தாரா ராத்ரியாக போற்றப்படுகிறது.

தாரா தேவியின் புருஷ வடிவமே ராமர் என சாக்த தந்திரம் கூறுகிறது. இதற்கொரு சுவையான புராண சம்பவம் ஒன்றும் உண்டு. ராவணன் கைலயங்கிரியை பெயர்த்தெடுத்தபோது பார்வதி ஈசனை பயத்தால் கட்டித் தழுவினாள். அதனால் மகிழ்ந்த ஈசன் ராவணனை தண்டிக்காமல் விட்டான். அதற்கு பார்வதி ஈசனிடம், ‘‘நான் தங்களைத் தழுவ காரணமான ராவணனை ஏன் தண்டிக்காமல் விட்டீர்கள்?’’ எனக் கேட்க, ‘‘தேவி ஒரு பெண் தானாக ஆலிங்கனம் செய்யும் போது ஒரு புருஷனுக்கு அளவு கடந்த மகிழ்வைத் தரும்’’ என்றாராம். ‘‘அந்த சுகம் எப்படி இருக்கும்?’’ என பார்வதி கேட்க, ‘‘நீ ராவணனை வதம் செய்ய ராமனாக அவதாரம் செய். நான் சீதையாய் பிறக்கிறேன். கர வதத்தின் போது சீதையாக பிறந்த நான் ராமராகப் பிறந்த உன்னை ஆலிங்கனம் செய்வேன். அப்போது நீ அந்த சுகத்தை அறியலாம்’’ என்றாராம். அதன்படி தேவியே ராமராக அவதரித்தார். கரவதம் நிகழ்ந்ததும் சீதை ராமரை ஆலிங்கனம் செய்தது வரலாறு. இதை உறுதி செய்வது போல் வால்மீகி ராமாயணத்திலும் சீதா தேவி ராமரை நீ புருஷ வடிவில் வந்த ஸ்த்ரீ எனப்பொருள்படும் ‘ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்’ எனும் வரி உள்ளது, குறிப்பிடத்தக்கது.

சீதாராமில் உள்ள இடையெழுத்துகளான ‘தாரா’ மங்கள நாமாவாகும். ஹரா சப்த கடையெழுத்தும் உமா சப்த கடையெழுத்தும் சேர்ந்தது ‘ராம’. ராமர் தாராவை வழிபட்டுத்தான் கடல் கடந்து சென்று ராவணனை வென்றார்.

இப்போதும் கடல் கடந்து அயல்நாடு செல்ல பாஸ்போர்ட், விசா வேண்டுவோர் ‘தாராயை நமஹ’ எனும் மந்திரத்தை மனமுருக ஜபித்தால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாஸ்போர்ட், விசா, கிடைக்கும். இத்தேவி மஹாநீலசரஸ்வதி என போற்றப்படுகிறாள்.

அநேக பிரம்மரிஷிகள் இத்தேவியை வழிபட்டு சித்தி பெற்றுள்ளனர். இவளை உபாசிப்பதால் பலவித போகங்கள், வாக்குவல்லமை, கவிபாடும் ஆற்றல், ராஜ வெகுமதி, தனம், தான்யங்கள், அளவற்ற செல்வம், மகோன்னதமான உயர்பதவி போன்றவற்றைத் தந்து ஞானமும் அதனால் வாழ்வின் முடிவில் முக்தியும் பெறலாம்.

வசிஷ்டர் தாராதேவியின் மகிமையை அறிந்து அதை அடைய மகாசீனம் எனும் திபெத்திற்குச் சென்று முறையாக தாரா உபாசனையைக் கற்று கவுகாத்தியில் காமபீடம் அருகே உக்ரதாரா பீடத்தை நிறுவியதாக ருத்ரயாமளம் எனும் தந்த்ர நூலில் குறிப்பிட்டுள்ளது. தாரா மந்திரத்தைத் தெரிந்து கொள்வதாலேயே வெற்றிகள் குவியும் என ஸ்ரீவித்யார்ணவ தந்த்ரம் கூறுகிறது.

வாரணாசி எனும் காசியில் அநேக தாரா ஆலயங்கள் உள்ளன.

பைரவி தந்த்ரம் எனும் நூலில் தாராவின் முக்கியமான 30 நாமாவளிகள் அருளப்பட்டுள்ளன. அவற்றை தினமும் ஜபித்தால் கிட்டாதது எதுவுமே இல்லை என்று அந்த தந்திரம் குறிப்பிடுகிறது.

தாரிணீ, தரளா, தாரா, த்ரிரூபா, தரணிரூபா, ஸத்வரூபா, மஹாஸாத்வீ, ஸர்வஜனபாலிகா, ரமணீயா, ரஜோரூபா, ஜகத் ஸ்ருஷ்டிகரீ, பரா, தமோரூபா, மஹாமாயா, கோரரூபா, பயானகா, காலரூபா, காளிகாக்யா, ஜகத்வித்வம்ஸகாரிகா, தத்வஞானபரா, ஆனந்தா, தத்வஞானப்ரதா, அனகா, ரக்தாங்கீ, ரக்தவஸ்த்ரா, ரக்தமாலாப்ரசோபிதா, ஸித்தலக்ஷ்மீ, ப்ரம்ஹாணீ, பத்ரகாளீ, மஹாலயா என போற்றி தாராவின் தாள்களைப் பணிவோம்.

தடைகள் தகர்ந்துபோக, மங்கலங்கள் தங்க, அந்த மங்கை நல்லாளைத் துதிப்போம்.