Wednesday 6 January 2016

ரதசப்தமி வழிபாடு



ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே.   தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
 

 தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், நாளை முதல் வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட, புராண நூல்கள் சொல்கின்றன.

சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது.

ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு பெயரைப் பெறுகிறான்; தன் ஒளிக்கிரணங்களின் சக்தியை கூட்டியும் குறைத்தும் பயணிக்கிறானென்று புராணம் கூறுகிறது. அதனை அறிவியலும் ஏற்கிறது.

சித்திரை மாதத்தில் விஷ்ணு என்ற பெயரில் 1000 கதிர்களுடனும்;

வைகாசி மாதத்தில் அர்யமான் என்ற பெயரில் 1300 கதிர்களுடனும்;

ஆனி மாதத்தில் விஸ்வஸ் என்ற பெயரில் 1400 கதிர் களுடனும்;

ஆடி மாதத்தில் அம்சுமான் என்று 1500 கதிர்களுடனும்;

ஆவணி மாதத்தில் பர்ஜன் என்ற பெயரில் 1400 கதிர்களுடனும்;

 புரட்டாசி மாதத்தில் வருணன் என்ற பெயரில் 1300 கதிர்களுடனும்,


 ஐப்பசி மாதத்தில் இந்திரன் என்று பெயர் பெற்று 1200 கதிர்களால் ஒளிரச் செய்கிறான்.

கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் பெற்று 1100 கதிர்களையும்;

மார்கழி மாதத்தில் நண்பனாக 1500  கதிர்களுடனும் விளங்குகிறான்.

 தை மாதத்தில் பூஷாவான் என்ற பெயரில் 1000 கதிர் களுடன் ஒளிவீசுபவன்,

மாசி மாதத்தில் பகன் என்ற பெயரில் 1000 கதிர்களுடன் ஒளிவீசுகிறான்.

பங்குனியில் துவஷ்டா என்ற பெயரில் 1100 கதிர்களால் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுகிறான்.

 


இந்த விரதம் எளிமையானது. சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்

ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

இப்படிச் செய்வதால் நாம் 7 பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் குளித்து முடித்த பின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும்.

எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்றது அர்க்கியம் விடுவது. எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல்.

பொங்கல் வைத்து அதை சூடு ஆறும் முன்பாக நைவேத் தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது பலரது வழக்கம்.

இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆராக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சொல்கிறார்கள். ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி,


"ஓம் நமோ ஆதித் யாய... ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா''
 

என்று சொல்லி வணங்கலாம்.


"ஆயிரம் நாமங்கள் கொண்டு எவரொருவர் என்னைத் துதித்து வழிபடுகிறார்களோ. அவர்களின் எண்ணங்களை முழுமையாகப் பூர்த்தி செய்வேன். எனது ஆயிரம் நாமங்களை நினைவுகூர்ந்து ஜெபிக்க இயலாதவர்கள், எனது இருபத்தொரு நாமங்களைக் கொண்டு பூஜித்தாலும் முழுத் திருப்தி அடைவேன்' என்று சூரிய பகவான் கூறிய இருபத்தொரு நாமங்கள்: 

"
ஓம் விகர்த்ததோ விவஸ்வாம்ஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி
லோகப் பிரகாச: ஸ்ரீமாம்
லோக சாக்ஷி த்ரிலோகேச:
கர்த்தா ஹர்த்தா தமிஸரஹ
'
தபனஸ் தாபனஸ் சைவ கசி
:
ஸப்தாஸ்வ வாஹன

கபஸ்தி ஸ்தோஹ ப்ரம்மாச
ஸர்வ தேவ நமஸ்கிருத:"



மேற்கண்ட நாமங்களை சூரிய வழிபாட்டின்போது ஜெபித்தால் சூரிய பகவானின் முழு அருளையும் பெற்று வளமுடன் வாழலாம்.


No comments:

Post a Comment