Friday 30 October 2015

ஸ்ரீ மங்கள சண்டிகா தேவி ஸ்தோத்திரம்

  


மூலமந்திரம்!



 ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி
மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா!



ஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்!


 ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே

மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே!



 இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே; ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே:
ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே: மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும்
வணங்கத் தக்க மங்கள உருவானவளே: இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே; எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தருபவளே;
புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே;
ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும்
அளித்துக் காத்து அருள்வாயாக.
****
ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது.

முதலில் ருத்திரனும் பின் அங்காரக பகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்து, நினைத்த காரியத்தை அடைந்தனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது.

கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். 









No comments:

Post a Comment